அத்தியாயம் 128: செண்பகத்தின் மீது கொலை முயற்சி (பார்ட் 1)
செண்பகம்: “என் மேல சத்தியம் பண்ணு விஷ்வா. எனக்கு நீ ராகவியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணி குடு.” என்றவள், விஷ்வாவின் முன் தன்னுடைய கையை நீட்டினாள்.
ஒரு நிமிடம் தயங்கிய விஷ்வா இந்நிலையிலும் தன் தம்முடைய அம்மாவிற்கு இந்த சத்தியத்தை செய்யவில்லை என்றால் தான் எல்லாம் ஒரு மனிதனே இல்லை என்று நினைத்தவன் வேறு வழி இன்றி செண்பகத்தின் கைமீது தன்னுடைய கையை வைத்து, “நான் ராகவிய கல்யாணம் பண்ணிக்கிறேன் அம்மா. இது உங்க மேல சத்தியம்.” என்று மனதார சத்தியம் செய்தான்.
விஷ்வாவின் வாயில் இருந்து இந்த வார்த்தைகளை கேட்டவுடன் தான் செண்பகத்திற்கு போனவையில் மீண்டும் வந்ததைப் போல் நிம்மதியாக இருந்தது. அதனால் கண்களில் ஆனந்த கண்ணீருடன் தன்னுடைய மகனின் கையை இறுக்கமாக பற்றி கொண்டவள், “தேங்க்ஸ் விஷ்வா. இப்ப தான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இதுக்கு மேல நான் செத்தாலும் கவலை பட மாட்டேன். எனக்கு இது போதும்.” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசத் தொடங்கினாள். 😥 😢
செண்பகம் மீண்டும் உணர்ச்சி வசப்படுவதால் தன்னுடைய அம்மாவிற்கு ஏதேனும் தவறாக நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து பதறியய விஷ்வா, “ப்ளீஸ் அம்மா ஸ்ட்டேரியின் பண்ணிக்காதீங்க. உங்களுக்காக தான் நான் இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மந்திச்சி இருக்கேன். நீங்க இருந்து இந்த கல்யாணத்த நடத்தி வைச்சு, நாங்க எப்படி வாழ்றோம்னு நீங்க பாக்கணும்.” என்று தன்னுடைய அம்மாவை ஆறுதல் படுத்துவதற்காக சொன்னவன், தனக்கு இந்த திருமணத்தில் முழுமையான சம்மதம் இருப்பதைப் போல் நடித்தான். ஆனால் அவனுடைய இதயம் முழுவதும், நினைவுகள் முழுவதும், ஜான்வி தான் நிறைந்து இருந்தாள்.
இந்த நொடி விஷ்வாவின் மனதில் செண்பகத்தின் உடல் நிலை பற்றிய கவலை மட்டும் அல்லாமல், ஜான்வியின் இடத்தை தன்னால் எப்படி வேறொரு பெண்ணிற்கு கொடுக்க முடியும் என்ற கேள்வியும் அவனை போட்டு அழுத்திக் கொண்டு இருந்தது.
காலை 9: 00 மணி…
விஷ்வாவால் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட வேர்ல்ட் ஃபேமஸ் காட்சியாலஜிஸ்ட் மேத்யூ நாராயணன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். அவனுடைய முகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பதட்டமாகவும், சற்று பயத்துடனும் இருந்தது. விஷ்வா அந்த டாக்டரை வரவேற்பதற்காக மருத்துவமனையின் வாசலுக்கே சென்றான். விஷ்வாவை பார்த்தவுடன் தன்னை சாதாரணமாக காட்டி கொண்ட மேத்யூ, அவனுடன் சகஜமாக சரளமான ஆங்கிலத்தில் உரையாடினான். விஷ்வாவும் பதிலுக்கு அவனுடன் ஆங்கிலத்தில் உரையாடினான்.
மேத்யூவை சீஃப் டாக்டரின் கேபினுக்கு கூட்டிக்கொண்டு வந்த விஷ்வா, செண்பகத்தின் அனைத்து ரிப்போர்ட்டுகளையும் அவனிடம் காண்பித்து அந்த ஆபரேஷனை செய்யலாமா..??? வேண்டாமா…?? என்று ஆலோசனை கேட்டான். அவர்களுடன் நாராயணன் மருத்துவமனையின் ஸ்பெஷல் டாக்டர் டீமும் இருந்தனர். செண்பகத்தின் ரிப்போர்ட்டுகளை நன்கு அலசி ஆராய்ந்த மேத்யூ, “லுக் மிஸ்டர் விஷ்வா, இப்போ உங்க மதர் கொஞ்சம் கிரிட்டிக்கல் ஆன பொசிஷன் -ல தான் இருக்காங்க. இந்த ஆப்ரேஷன் பண்றது இல்ல கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும், நம்ப இத பண்றத தவிர வேற வழி இல்ல.” என்று ஆங்கிலத்தில் சொன்னான்.
அதை கேட்ட விஷ்வா தன்னுடைய மருத்துவர்கள் குழுவை திரும்பிப் பார்த்தான். நாங்களும் அதைத்தானே சொன்னோம் என்பது போல அந்த மருத்துவர்களும் விஷ்வாவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒரு பெருமூச்சு ஒன்றை விட்ட விஷ்வா, சிவாவிற்கு கால் செய்து ஹரி, விஷ்ணு, பிராத்தனா, என அனைவரையும் டாக்டரின் கேபினுக்கு அழைத்து வரும் படி சொன்னான். அவர்கள் அனைவரும் அங்கு வந்து சேர மேத்யூ விஷ்வாவிடம் சொன்னதையே அவர்களிடமும் சொன்னான்.
இந்த ஆப்ரேஷன் செய்தால் செண்பகம் பிழைப்பதற்கு 50% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. என்பதை அறிந்த உடனேயே விஷ்ணுவும், பிராத்தனாவும், அழத் தொடங்கி விட்டனர். 😭😭 😭 அதனால் சிவா அவர்களை வெளியே அழைத்து சென்று விட்டான். இப்போது விஷ்வாவும், ஹரியும், மட்டும் அங்கே இருக்க.. அவர்களை பார்த்த அந்த மருத்துவமனையின் டீன், மற்றும் சீப் டாக்டர், “சார் நீங்க ஓகேன்னு சொன்னீங்கன்னா, நம்ப மேடம்க்கு ஆபரேஷன் பண்ண ஸ்டார்ட் பண்ணிடலாம். ஆல்ரெடி ரொம்ப டிலே ஆயிடுச்சு இதுக்கு மேலயும் டிலே பண்றது ரொம்ப ரிஸ்க் ஆயிடும்.” என்று தயக்கமான குரலில் சொன்னார்கள்.
விஷ்வாவிற்கு இப்போதும் கூட அந்த ஆபரேஷனை தொடங்கி விட சொல்வதற்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனென்று தெரியவில்லை அவனுடைய மனதில் ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று மீண்டும் மீண்டும் தோன்றி கொண்டே இருந்தது. அதனால் எதையெதையோ யோசித்து தயங்கிக் கொண்டே இருந்தான்.
ஹரி: தன் அருகில் அமர்ந்து இருந்த விஷ்வாவின் கையை பிடித்தவன், “எனக்கும் பயமா தான் டா இருக்கு. பட் நமக்கு இப்போ வேற ஆப்ஷனிலேயே…!!! நம்ப இந்த ஆபரேஷன்னால அம்மாவுக்கு ஏதாவது ஆயிடுமோ நெனச்சு இந்த ஆபரேஷன் பண்ணாம விட்டுட்டு அதுக்கப்புறம் அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா; உன்னாலயும், என்னாலையும், நம்பல நம்மளாலயே மன்னிக்க முடியாது விஷ்வா.” என்று சொல்லி உண்மை நிலையை அவனுக்கு விளக்கினான்.
யார் என்ன சொன்னாலும் அவனுடைய மனதில் இருந்து ஏதோ ஒன்று அவனை உடுத்திக் கொண்டே இருந்தது. இருப்பினும் வேறு வழியின்றி இந்த ஆபரேஷன் நடப்பதற்கு சம்மதித்தான் விஷ்வா. பல மணி நேரபல மணி நேர பிரயாணத்திற்கு பிறகு மேத்யூ இப்போது தான் இந்தியாவிற்கு வந்திருப்பதால் அவன் சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும் என்று நினைத்த விஷ்வா, ஆப்ரேஷனை இன்னும் நான்கு மணி நேரம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று தன்னுடைய மருத்துவர்கள் குழுவிடம் சொல்லவன்; இந்த ஆப்ரேஷன் மேத்யூவின் மேற்பார்வையில் நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து வெளியே வந்தான்.
சீஃப் டாக்டர் கேபினில் இருந்து வெளியே வந்த மேத்யூ, தனக்கென ஒதுக்கப்பட்டு இருந்த வி. ஐ. பி. வெயிட்டிங் ரூம்க்கு சென்று விட்டான். வேகவேகமாக தன்னுடைய அறைக்குள் வந்த மேத்யூ அதன் கதவை சாத்தியவன், தன்னுடைய மொபைல் போனை எடுத்து அதில் ஒரு இந்திய மொபைல் எண்ணிற்கு தான் இங்கே வந்துவிட்டதாக ஆங்கிலத்தில் மெசேஜ் செய்தான். அடுத்த கனமே அவனுக்கு ஒரு கால் வந்தது. அந்தக் காலில் அவனிடம் பேசிய மர்ம நபர், “நான் சொன்னது எல்லாமே உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஓவர் ஸ்மார்ட்டா ஏதாவது பண்ணனும்னு நினைச்சீங்கன்னா உன்னோட ஃபேமிலில ஒருத்தரும் உயிரோட இருக்க மாட்டாங்க. நான் சொன்னதை மட்டும் அப்படியே செய். இந்த விஷயத்துல நீ எப்படியும் மாட்டிக்க மாட்ட. எப்படியும் அந்த அம்மா இழுத்துகிட்டு தானே கிடக்குது. அதனால திடீர்னு அந்த அம்மா செத்தாலும், உன் மேல பெருசா யாருக்கும் சந்தேகம் வராது. சோ சத்தம் இல்லாம நாங்க சொன்ன வேலையை செஞ்சு முடிச்சுட்டு வந்தீன்னா, நீ இங்க இருந்து உயிரோட போய் உன்னோட ஃபேமிலியை அங்க பாக்கலாம். நீ கொஞ்சம் சொதப்பினாலும், நீயும் உயிரோட இருக்க மாட்ட. உன்னோட ஃபேமிலியில் யாரும் இருக்க மாட்டாங்க.” என்று ஆங்கிலத்தில் சொல்லி அவனை மிரட்டினான்.
மேத்யூ: “ப்ளீஸ் சார்.. என்னோட ஃபேமலிய எதுவும் பண்ணிடாதீங்க. நான் நீங்க சொன்ன மாதிரி அப்படியே செஞ்சுடறேன். இதுல நான் மாட்டிக்காம நீங்க தான் என்ன பாத்துக்கணும்.” என்று கெஞ்சும் குரலில் ஆங்கிலத்தில் சொன்னான்.
அந்த மர்ம நபர்: “அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். நீ நாங்க சொல்றத மட்டும் செய்.” என்று சொன்னவன் அந்த கால் ஐ கட் செய்து விட்டான்.
அவனுடன் பேசிவிட்டு தன்னுடைய மொபைல் போனை வெறுப்பில் தூக்கி பெட்டில் போட்ட மேத்யூ, அமர்ந்த படி ஒரு சுவரில் சாய்ந்து கொண்டு அளத்தொடங்கினான். 😭 😭 😭 அவன் இதுவரை தன்னுடைய மனசாட்சிக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், ஒரு நல்ல மருத்துவராக பணியாற்றி இருந்திருக்கிறான். ஆனால் இப்போது தன்னை நம்பி இங்கே அழைத்தவர்களுக்கு தான் இவ்வளவு பெரிய துரோகம் செய்யப் போகிறோமே என்று நினைத்தவன், குற்ற உணர்ச்சியில் தவித்தான். 💔 😭 😭 😭
பிளாஷ்பேக்…
தன்னுடைய வீட்டில் இருந்த பிரவீன் எப்படியாவது விஷ்வாவை பழிவாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான். விஷ்வாவிற்கு பதிலடி கொடுக்காமல் அவனால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. அதனால், தனக்கு சாதகமாக ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று 24 மணி நேரமும் விஷ்வாவின் குடும்பத்தினரை சுற்றி கண்காணிக்கும் படி ஆட்களை நியமித்து இருந்தான். அதனால் செண்பகம் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கும் செய்தி அடுத்த சில நிமிடங்களிலேயே அவனை வந்து சேர்ந்தது.
அந்த செய்தி பிரவீனின் காதுகளில் இன்ப தேனாய்பாய்ந்தது. கூடுதல் தகவலாக விஷ்வா தன்னுடைய அம்மாவிற்காக ஜெர்மனியில் இருந்து டாக்டர் மேத்யூவை வரவழைப்பதையும் பற்றி தெரிந்து கொண்ட பிரவீன், அந்த டாக்டரை வைத்தே செண்பகத்தை கொன்று விட திட்டமிட்டான். தன்னுடைய வட்டத்தில் இருக்கும் அவனுக்கு தெரிந்த அடியாட்களை வைத்து, ஜெர்மனியில் இருக்கும் லோக்கல் ரவுடிகளிடம் மேத்யூவின் குடும்பத்தினரை கடத்த சொல்லி, அவர்களை வைத்து அவனை மிரட்டி செண்பகத்தை கொல்லும் படி காண்ட்ராக்ட் கொடுத்தான். இந்தப் பணியை அவன் வெற்றிகரமாக செய்து முடித்த பின்னால் அவனுக்கு மிகவும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், இருந்தது. 😄😃 விஷ்வாவை ஏதாவது செய்து, அவன் உடனே செத்து மடிவதை பிரவீன் விரும்பவில்லை.
ஆதனால் விஷ்வாவிற்கு எப்போதும் பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்க விரும்பியவன், விஷ்வா அதிகம் பாசம் வைத்து இருக்கும் அவனுடைய குடும்பத்தினரை அவனிடம் இருந்து பிரித்தாளோ, இல்லை அவர்களை கஷ்டப்படுத்தினாலோ, அவர்களை விட விஷ்வா தான் கஷ்டப்படுவான் அதனால் அவர்களை டார்கெட் செய்தான்.
இடம் : ஜெர்மனி
விஷ்வா சொன்னதால் மேத்யூவிற்கு கால் செய்த சிவா, செண்பகத்திற்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரை இந்தியாவிற்கு வரும் படி அழைத்தான். அவர் எவ்வளவு பணம் கேட்டாலும் அதைவிட அதிகமாகவே தருவதாகவும் சொன்னான். இதுவரை இந்தியாவிற்கு மேத்யூ வந்ததில்லை என்பதால், அவனுக்கும் இந்தியாவிற்கு செல்ல ஆசையாக இருந்தது. அதனால் மகிழ்ச்சியாக அங்கே வருவதற்கு சம்மதித்தவன், தன்னுடைய பேங்க் அக்கவுண்ட் டீடைல்ஸ்சை சிவாவிற்கு அனுப்பிைத்தான். விஷ்வா தன் அம்மாவின் மீது இருந்த அதிக பாசத்தின் காரணமாக அவன் கேட்டதை விடவே அதிகமாக சில கோடிகளை அவனுடைய அக்கவுண்டிற்கு டிரான்ஸ்பர் செய்து விட்டான்.
தன்னுடைய பேங்க் அக்கவுண்டில் வந்து குவிந்த பணத்தின் எண்ணிக்கையை பார்த்து மகிழ்ந்த மேத்யூ, அடுத்த பிளைட்டை பிடித்து இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து கிளம்பி ஏர்போர்ட்டிற்கு வந்து கொண்டு இருந்தான். அப்போது அவனுக்கு அந்த நாட்டின் லோக்கல் எண்ணில் இருந்து ஒரு கால் வந்தது. அவன் இந்தியாவிற்கு தான் செல்லப் போகும் ஆர்வத்தில் இருந்ததால், தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த கால் ஐ அவன் அட்டென்ட் செய்யவில்லை. பின் அடுத்த சில நொடிகள் இல்லையே அவனுடைய மனைவியின் தொலைபேசி எண்ணில் இருந்து அவனுக்கு ஒரு வீடியோ கால் வந்தது.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)