அத்தியாயம் 127: நான் ரித்திகாவை கல்யாணம் பண்ணிக்கிறேன் மா (பார்ட் 2)
முதலில் அவன் திடீரென்று தன்னை கட்டி பிடித்ததால் அதிர்ந்து போன ராகவி, பின் அவன் பேசியதை கேட்டவுடன்; அவன் நன்றியுணர்வை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்று புரிந்து கொண்டவள், சகஜமானாள். அதனால் அவனுடைய கண்களுக்குள் தன்னுடைய கண்களை கலக்கவிட்டவள், “இட்ஸ் ஓகே சார். நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. நான் பெருசா எதையும் பண்ணிடல. நீங்க பாக்கவே ரொம்ப டயர்டா இருக்கீங்க. முதல்ல நீங்க ஏதாவது சாப்பிட்டு, மத்தவங்களையும் சாப்பிட சொல்லுங்க. நீங்க தண்ணி கூட குடிக்காம இருந்தா எப்படி டிஸ்ஸினஸ் சரியாகும்…??” என்று பொறுமையான குரலில் கேட்டாள். அவளுடைய குரலில் பரிவும், அக்கறையும் இருந்தது.
விஷ்வாவிற்கும் அது தான் சரி என்று பட்டது அதனால் அவள் சொன்னது போலவே செய்ய நினைத்தவன், அவளுடன் கீழே சென்றான். இப்போதும் கூட அவனுக்கு லேசான தலைசுற்றல் இருந்தது. அதனால், ராகவி அவனை கை தாங்கலாக கீழே அழைத்துச் சென்றாள். செண்பகம் அட்மிட் செய்யப்பட்டு இருந்த வார்டுக்கு அருகே அவர்கள் வரும்போது; விஷ்வாவும், ராகவியும், ஒன்றாக வருவதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
அங்கு வந்த விஷ்வா, தர்ஷனையும், சிவாவையும், மட்டும் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு மற்றவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் யாருக்குமே சாப்பிடுவதற்கு மனமில்லை என்றாலும், அனைவரும் விஷ்வாவுடன் இணைந்து அவனுடைய வற்புறுத்தலின் பேரில் ஏனோ தானோ என்று சாப்பிட்டு முடித்தனர். இதற்கு இடையில் விஷ்வா ஜெர்மனியில் இருக்கும் வேர்ல்ட் ஃபேமஸ் கார்டியாலஜிஸ்ட் மேத்யூவை பல கோடிகள் செலவு செய்து அடுத்த பிளைட்டிலேயே அவனை இந்தியாவிற்கு வரவழைத்தான்.
நாராயணன் பேலஸில்….
அந்தப் பெரிய மாளிகையில் யாரும் இல்லாததால் முக்கிய இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களில் இருக்கும் மின்சார விளக்குகள் அனைத்தும் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த நள்ளிரவு வேலையில் அந்த இடமே நிசப்தமாக இருந்தது.
சித்தார்தின் அறையில்…
தன்னுடைய பாட்டி உயிருக்கு மருத்துவமனையில் போராடிக் கொண்டு இருப்பதை அறியாத அந்த மழலை, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். 😴 செண்பகத்தின் உடல் நிலையை மோசமாக இருப்பதால், அதை நினைத்து ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த சுகந்தி தூங்காமல் சேரில் அமர்ந்த படி சித்தார்த்தையே வெகு நேரமாக்க பார்த்துக் கொண்டு இருந்தாள். பின் சில நிமிடங்களில் அவள் வயது மூப்பின் காரணமாகவும், சோர்வின் காரணமாகவும், தன்னை அறியாமல் தூங்கி விட்டாள். இப்படியே சில நிமிடங்கள் கடந்து இருந்தன.
அது வரை மூடப்பட்டு இருந்த அந்த அறையின் ஜன்னல் சட்டு என்று திறந்து கொண்டது. அப்போது சித்தார்த்தின் அருகே திடீரென்று தோன்றிய ஒரு வெள்ளை கவுன் அணிந்து இருந்த இளம் பெண், கட்டிலில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்து சத்தமின்றி அழ தொடங்கினாள். பாவம் அவளுடைய அழுகுரலும் யாருக்கும் கேட்கவில்லை. அவளுக்கு ஆறுதல் சொல்லவும் அங்கே யாரும் இல்லை. 😭 😭 😭
நாராயணன் மருத்துவமனையில்…
அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் செண்பகத்தின் அறைக்கு வெளியே வெயிட்டிங் ஹாலில் வந்து அமர்ந்தனர். அப்போது சிறிது நேரம் கழித்து டாக்டர் செண்பகம் அட்மிட் செய்யப்பட்டு இருந்த அறைக்கு வெளியே வந்தார். டாக்டரை கண்டவுடன் அனைவரும் எழுந்து சென்று அவரை சூழ்ந்து கொண்டு செண்பகத்தின் உடல் நிலையை பற்றி விசாரித்தனர். அந்த கூட்டத்தை தன் அருகில் இருந்து விலக்கிய டாக்டர் நேராக விஷ்வாவின் அருகே சென்று, “சார் மேடம் கண் முழிச்சுட்டாங்க. இப்போ அவங்க கண்டிஷன் ஸ்டேபிளா தான் இருக்கு ஆனா எப்ப வேணாலும் அவங்களுக்கு அகைன் ஸ்ட்ரோக் வரலாம். அதனால அவங்களுக்கு உடனே ஆபரேஷன் பண்ணி ஆகணும்.” என்று சொன்னார்.
விஷ்வா: “ஆனா, டாக்டர் ஏற்கனவே அம்மா வீக்கா இருக்கிறதுனால தானே அவங்களுக்கு ஆபரேஷன் பண்ணாம இருக்கோம். இப்ப நம்ம ஆப்ரேஷன் பண்ணா அவங்களுக்கு எதுவும் ஆயிடாதே…!!!” என்று வருத்தமான குரலில் கேட்டான்.
டாக்டர்: “இந்த ஆப்ரேஷன் ஓட சக்சஸ் ரேட் வெறும் 50% தான். ஒரு வேலை ரொம்ப இந்த ஆபரேஷன் பண்ணாவது அவங்க பிழைக்க ஒரு 50% சான்ஸ் இருக்கு. நம்ம மீதி இருக்கிற அந்த 50% நினைச்சு பயந்து அவங்களுக்கு ஆபரேஷன் பண்ணாம விட்டா அவங்க உயிர் பிழைக்கிறதே கஷ்டம். சோ நம்ப இந்த ஆபரேஷன இப்ப பண்ணி தான் ஆகணும்.” என்று சொல்லி உண்மை நிலையை அவனுக்கு விளக்க முயன்றான்.
விஷ்வாவிற்கும் அது புரிய தான் செய்தது. இருந்தாலும் ஜெர்மனியில் இருந்து வந்து கொண்டு இருக்கும் அந்த கார்டியாலஜிஸ்டின் ஒபினியனையும் கேட்டுவிட்டு முடிவெடுக்கலாம் என்று நினைத்த விஷ்வா, “சார் ஜெர்மனியில இருந்து கார்டியாலஜிஸ்ட் மேத்யூ இங்க வந்துட்டு இருக்காரு. அவர் மார்னிங் இங்க ரீச் ஆகிருவாரு. அவர் வர்ற வரைக்கும் நீங்க இந்த ஆபரேஷன ஹோல்ட் பண்ண முடியுமா…??” என்று கேட்டான்.
டாக்டர்: இட்ஸ் ஓகே சார். நீங்க அவர் கிட்ட செகண்ட் ஒப்பினியன் கேட்க விரும்பினா கேளுங்க. நாங்க தான் பர்ஸ்டுல இருந்தே செண்பகம் மேடம் ஓட பாடி கண்டிஷனை மானிடர் பண்ணிட்டு இருக்கோம். மேத்யூ சார் இங்க வந்தாலும் நான் சொன்னத தான் சொல்லுவாரு. பட் இட்ஸ் ஓகே. வி கேன் வெய்ட். நான் மார்னிங் வரைக்கும் எல்லாத்தையும் பாத்துக்குறேன்.
விஷ்வா: “இல்ல சார் நீங்க எமர்ஜென்சின்னா ஆப்ரேஷன் பண்ணிருங்க. நான் சொல்றதுக்காக நீங்க ஹோல்ட் பண்ணி, அம்மாவுக்கு ஏதாவது ஆயிட போகுது.” என்று சிறு பதட்டத்துடன் சொன்னான்.
டாக்டர்: “நத்திங் டு வரி மிஸ்டர் விஷ்வா. நமக்கு டைம் இல்லனா நானே உங்க கிட்ட வெயிட் பண்ண வேணாம்னு சொல்லி இருப்பேன். அவங்க இப்ப அப்சர்வேஷன்ல இருக்கிறதுனால ஒன்னும் பிரச்சனை இல்ல. அவங்க கண்ணு முழிச்சதிலிருந்து உங்க பேரை சொல்லி தான் புலம்பிக்கிட்டு இருக்காங்க. ஐ திங்க் அவங்க உங்க கிட்ட ஏதோ பேசணும்னு நினைக்கிறாங்க போல, நீங்க போய் அவங்கள பாருங்க.” என்று சொல்ல அதை கேட்ட விஷ்வா அடுத்த கணமே அந்த அறைக்குள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் சென்றான்.
செண்பகத்தின் வாயில் ஆக்சிஜன் தடை இன்றி செல்வதற்காக ட்யூப் பொருத்தப்பட்டு ஆக்சிஜன் ஒரு பயாலத்தின் பையின் வழியாக சென்று கொண்டு இருந்தது. செண்பகம் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டு இருப்பதற்கு சான்றாக அந்த பாலித்தீன் பை சுருங்கியும் விரிந்தும் கொண்டு இருந்தது. விஷ்வாவால் தன்னுடைய அம்மாவை இந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை. ஆனாலும் தன்னுடைய அம்மா முன் உடைந்து போக விரும்பாத விஷ்வா, தன்னை முடிந்தவரை நார்மலாகவே வைத்துக் கொண்டான்.
விஷ்வாவை பார்த்த செண்பகம் தன் அருகில் இருந்த நர்ஷை சைகை செய்து அழைத்து தன் வாயில் இருக்கும் அனைத்து டியூபுகளையும் தன்னுடைய மகனிடம் பேசுவதற்காக அகற்றும் படி சொன்னாள். நர்சும் அதை புரிந்து கொண்டு அவளுக்கு உதவ, விஷ்வாவின் பெயரைச் சொல்லி, அவனை தன் அருகே வரும் படி அழைத்தாள் செண்பகம். அவளின் அருகே சென்ற விஷ்வா ஆஃப் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, செண்பகத்தின் முகத்தின் அருகே குனிந்து; “உங்களுக்கு ஒன்னும் ஆகாது மா பயப்படாதீங்க. ஜெர்மனியில இருந்து ஃபேமஸ் ஹார்ட் சர்ஜன் மேத்யூ இங்கே உங்களுக்காக வந்துட்டு இருக்காரு. சோ நீங்க சீக்கிரம் நார்மல் ஆயிடுவீங்க.” என்று நம்பிக்கையுடன் சொன்னான்.
செண்பகம்: “எனக்கு என்ன ஆகும்னு எல்லாம் எனக்கு கவலை இல்லை விஷ்வா. எனக்கு உன்ன நெனச்சா தான் கவலையா இருக்கு. நான் இப்படியே உன்னை விட்டுட்டு போய் சேர்ந்துட்டா, நீ எல்லாரையும் நல்லா பாத்துப்ப. ஆனா, உன்னை யாரு பாத்துப்பான்னு யோசிச்சா தான் எனக்கு வேதனையா இருக்கு.” என்று வலி நிறைந்த குரலில் பேச முடியாமல் பேசினாள். 💔 😢
செண்பகத்தின் அந்த வார்த்தைகளை கேட்டவுடன் விஷ்வாவின் மனம் வலித்தது. அதனால் கண்ணீர் நிறைந்த கண்களுடன் செண்பகத்தை பார்த்தவன், “உங்களுக்கு ஒன்னும் ஆகாது மா. நீங்க எப்பயுமே என் கூட இருப்பீங்க. நீங்களாவது என் கூட எப்பயுமே இருந்து என்ன பார்த்துக்கோங்க. அப்பா மாதிரி என்னை விட்டுட்டு போயிடாதீங்க.” என்று சிறு குழந்தை போல் செண்பகத்தின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான். 🥺 😥
செண்பகம்: “எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கு. அத மட்டும் நீ எனக்காக நிறைவேத்துவியா..???” என்று விஷ்வாவின் கையை பிடித்துக் கொண்டு கேட்டாள்.
விஷ்வா: “என்னான்னு சொல்லுங்க அம்மா. அது எதுவா இருந்தாலும், நான் உங்களுக்காக அத செய்வேன்.” என்று தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு உறுதியான குரலில் சொன்னான்.
செண்பகம்: “இந்த தடவ எப்படியும் எனக்கு ஆபரேஷன் பண்ண போறாங்கன்னு தான் நினைக்கிறேன். என்னோட கடைசி ஆசை ஒன்னே ஒன்னு தான் விஷ்வா, நீ ராகவிய கல்யாணம் பண்ணிக்கணும். நான் இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி, இது நடக்கணும். ஒரு வேளை நான் உயிரோட மீண்டு வந்தா, உங்க ரெண்டு பேருக்கும் கண் குளிர கல்யாணம் பண்ணி வச்சு அத சந்தோஷமா பாப்பேன். இல்ல நான் போய் சேர்ந்துட்டா, உங்களுக்கே திரும்பியும் பொண்ணா வந்து பொறப்பேன்.” இன்று உணர்ச்சிவசப்பட்டு மூச்சு வாங்க பேசிக் கொண்டு இருந்தாள்.
விஷ்வா: “ப்ளீஸ் அம்மா…!! இப்படி எல்லாம் பேசாதீங்க. உங்களுக்கு எதுவும் ஆகாது. நான் ஆகவும் விட மாட்டேன்.” என்று செண்பகத்தின் கையைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே சொன்னான். 😭 😭 😭
செண்பகம்: “என் மேல சத்தியம் பண்ணு விஷ்வா. எனக்கு நீ ராகவியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணி குடு.” என்றவள், விஷ்வாவின் முன் தன்னுடைய கையை நீட்டினாள்.
ஒரு நிமிடம் தயங்கிய விஷ்வா இந்நிலையிலும் தன் தம்முடைய அம்மாவிற்கு இந்த சத்தியத்தை செய்யவில்லை என்றால் தான் எல்லாம் ஒரு மனிதனே இல்லை என்று நினைத்தவன் வேறு வழி இன்றி செண்பகத்தின் கைமீது தன்னுடைய கையை வைத்து, “நான் ராகவிய கல்யாணம் பண்ணிக்கிறேன் அம்மா. இது உங்க மேல சத்தியம்.” என்று மனதார சத்தியம் செய்தான்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)