அத்தியாயம் 126: நான் ரித்திகாவ கல்யாணம் பண்ணிக்கிறேன் மா (பார்ட் 1)
அதிக தலைசுற்றலின் காரணமாக விஷ்வா மயங்கி மாடியில் இருந்து கீழே விழ போனான். அதை சரியாக கவனித்த ராகவி, அவனை தன் பக்கம் இழுத்தாள்.அப்போது ராகவியின் கழுத்தில் இருந்த அவளுடைய துப்பட்டா, காற்றில் பறந்து விஷ்வாவின் முகத்தில் சென்று விழுந்தது. அது அவனுடைய முகத்தை மறைத்து விட, தடுமாறிய விஷ்வா ராகவியின் மீது விழ, ராகவியோ தரையில் விழப்போனாள். அவனுக்கு இருந்த அரைகுறை சுய நினைவிழும் தன்னை யாரோ ஒரு பெண் காப்பாற்றியதையும்; இப்போது தான் அவள் மேல் விழுவதால் அவள் தரையில் விழப்போவதையும், சுதாரித்துக் கொண்ட விஷ்வா, ஒரு கையால் ராகவியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டவன், தன்னுடைய மற்றொரு கையை அவளுடைய தலைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்த படி அவள் மீது விழுந்தான். இவை அனைத்தும் ஒரு நொடியில் நடந்து முடிந்திருக்க, ராகவியின் மீது படர்ந்திருந்த விஷ்வாவின் உதடுகள் அவளுடைய உதட்டை சந்தித்தது. 😍 😘 ஆனால் அவர்களுடைய அந்த முதல் இதழ் முத்தத்தை முழுமை அடைய விடாமல், ராகவியின் துப்பட்டா அவர்களின் இடையே திரையாக இருந்து சதி செய்து விட்டது. 😘 👩❤️💋👨 விஷ்வாவிற்கு அந்தப் பெண் யார் என்று தெரியவில்லை என்றாலும் ராகவிக்கு அவன் யாரென்று தெரியுமே….!! அதனால், ராகவி உறைந்து போய்விட்டாள்.
அவள் அந்த ஒரு நொடியில் இருந்து வெளியே வர முடியாமல் அதிலேயே சிறை பட்டு கிடக்க, அங்கு பரவி கிடந்த குளிர் அவளுடைய தசைகள் வழியாக, அவளுடைய எலும்புகளுக்குள் கூட ஊடுருவி விட்டதைப் போல்; இதுவரை தான் உணர்ந்திடாத பல ரசாயன மாற்றங்களை🥶 தன்னுள் உணர்ந்தாள் ராகவி. 💗 விஷ்வாவும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தான். ராகவியின் அருகாமை அவனுடைய வேதனைகள் அனைத்தையும் தீர்க்கும் அருமருந்தாக அவனுக்கு தோன்றியது. அவனுடைய கண்களுக்கு தன் முன்னே இருப்பவள், யார் என்று தெரியவில்லை. ஆனால் அவனுடைய மனதிற்கு அவள் மிகவும் பரிச்சயமானவளாக, நெருக்கமானவளாக தோன்றியது.
அந்த தருணம் மீண்டும் பலமாக காற்று வீச, விஷ்வாவின் முகத்தில் இருந்து பரந்த ராகவியின் துப்பட்டா அவளுடைய முகத்தில் விழுந்தது. அதனால் அவர்கள் இருவரும் சுதாரித்துக் கொண்டனர். இப்போதும் விஷ்வாவிற்கு தலை சற்று சுற்றுவது போல தான் இருந்தது. அதனால் எப்படியோ முயற்சி செய்து ராகவியின் மீது இருந்து எழுந்து, அவள் அருகே அமர்ந்தான். ராகவியும் எழுந்து அமர, அவளுடைய முகத்தில் இருந்த துப்பட்டா அவளுடைய முகத்தில் இருந்து நழுவி அவளுடைய மடியில் விழுந்தது. தன்னைக் காப்பாற்றிய பெண் யார் என்று தெரிந்து கொள்வதற்காக திரும்பிய விஷ்வா, அதை கவனித்தான்.
அந்த கரிய இருளில் பௌர்ணமி நிலவின் ஒளி அவளுடைய பொன் போன்ற தேகத்தில் பட்டு மிளிர, ராகவியின் முகம் வெள்ளி நிலவைப் போல் பிரகாசித்தது. 🌝☄️ ✨ அந்த பெண் ராகவியாக இருக்க கூடும் என்று விஷ்வா யோசித்துக் கூட பார்க்கவில்லை. அதனால் அவளைப் பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி அடைந்தான். 🙄 ராகவியும் அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது தான் தன்னுடைய துப்பட்டா இருக்க வேண்டிய இடத்தில் இருக்காமல் தன்னுடைய மடியில் கிடப்பதை கவனித்தவள், உடனே அசோகர்யமாக உணர்ந்தாள். அதனால் மீண்டும் அதை எடுத்து தன்னுடைய தோளில் போட்டுக் கொண்டு; தன்னுடைய மொத்த தைரியத்தையும் திரட்டி விஷ்வாவிடம் பேச தொடங்கினாள்.
ராகவி: “ஆர் யூ ஓகே சார்…???” என்று திக்கிய குரலில் கேட்டாள். 😟
விஷ்வா: “ம்ம்.. நான் நல்லா தான் இருக்கேன். ஓவர் ஸ்ட்ரஸ்னால கொஞ்சம் டிஸ்ஸியா இருக்கு. அவ்ளோ தான். ஆமா உனக்கு என்ன ஆச்சு…!! நீ ஏன் இப்படி திக்கி திக்கி பேசுற…?? முதல்ல இந்நேரத்துல நீ இங்க என்ன பண்ற…???” என்று குழப்பமான குரலில் கேட்டான். 🙄
ராகவி: “நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கிறத நானும் கவனிச்சேன். அதுவும் இல்லாம உடம்பெல்லாம் இப்படி அடிபட்டு அங்கங்க பேண்டேஜ் வேற ஒட்டி இருந்தீங்க. எனக்கு அப்பவே உங்க கிட்ட வந்து என்னாச்சுன்னு கேட்கணும்னுு தான் தோணுச்சு. ஆனா எப்படி பேசறதுன்னு தெரியல. நீங்க இங்க வர்றத பாத்தேன். அதான் உங்க கிட்ட பேசலாம்னு வந்தேன்.” என்று பயந்து.. பயந்து.. பாதி வார்த்தைகளை மென்று விழுங்கிய படி சொல்லி முடித்தாள். 😟
விஷ்வா: “ஓ.. ஓகே.” என்று சிம்பிளாக இரண்டே வார்த்தையில் பதில் சொன்னவன், எழுந்து நின்றான்.
விஷ்வா சட் என்று எழுந்து நின்றதால், பதட்டப்பட்ட ராகவி, அவளும் அவசரமாக எழுந்து நின்றாள். ராகவிக்கு இப்போது தான் அவனிடம் எதையாவது பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அப்போது அவள் வார்த்தைகள் எதுவும் புலப்படாமல் தவித்துக் கொண்டு இருந்தாள். அந்நேரம் திடீரென்று அவளுக்கு சித்தார்த்தின் ஞாபகம் வர, “நானும் வந்ததுல இருந்து பாக்கிறேன், எங்க சித்தார்த்த ஆளையே காணோம்…??? அவன நீங்க கூட்டிட்டு வரலையா சார்…???” என்று மெல்லிய குரலில் கேட்டாள். இப்போது அவனுடைய இருப்பு அவளுக்கு சற்று பழகி இருந்தது.
விஷ்வா: “இல்ல அவன் சுகந்தி அக்கா கூட வீட்ல இருக்கான். இந்நேரம் அவன் நல்லா தூங்கிட்டு இருப்பான். ஏற்கனவே இந்த வயசுலயே அவன் பட கூடாத கஷ்டத்த எல்லாம் பட்டுட்டான். இப்போ அம்மாவ பத்தி சொல்லி அவனை இங்க கூட்டிட்டு வந்து இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு தான், நான் சுகந்தி அக்கா கிட்ட எதுவும் சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டேன். அவனாச்சு நிம்மதியா இருக்கட்டும்.” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான். 🙁 😞
ராகவி: “அதுவும் கரெக்டு தான் சார். அவன் ரொம்ப சென்சிடிவ். நீங்களும் வருத்தப்படாதீங்க. செண்பா அம்மாவுக்கு சீக்கிரம் சரியாயிடும். நீங்க தான் எப்பயுமே இந்த குடும்பத்தை தாங்கி பிடிச்சுட்டு இருக்கீங்கன்னு அம்மா சொல்லுவாங்க.
இப்ப நீங்களே இப்படி மனச உடைஞ்சு போய் இருந்தா, மத்தவங்கள உங்களால எப்படி ஆறுதல் படுத்த முடியும்…??? நான் ஏதோ தேவை இல்லாம ஓவரா பேசுறேன்னு நினைச்சுக்காதீங்க சார். நான் உங்களை பத்தி கேள்விப்பட்ட வரைக்கும் நீங்க ரொம்ப கிரிஸ்பா, கெத்தா, இருப்பீங்கன்னு தான் சொல்லி இருக்காங்க. ஆனா, இப்ப உங்கள இப்படி பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்களே இப்படி இருந்தா, மத்தவங்க நிலைமையை நினைச்சு பாருங்க. நீங்க தானே அவங்கள பாத்துக்கணும்..??” என்று ஏதோ ஒரு குருட்டு மன தைரியத்தில் தன் மனதில் இருந்தவற்றையெல்லாம் அப்படியே ஒரே மூச்சில் பேசி முடித்து விட்டாள். எங்கு தான் பேசியதை கேட்டு விஷ்வா தன் மீது கோபப்பட்டு விடுவானோ, என்ற ஒரு பயம் கூட இருந்தது. 😟
விஷ்வா: ராகவியை பார்த்து ஒரு விரக்தி புன்னகையை சிந்தியவன், “நீ இப்டி என் கிட்ட சொல்ற மாதிரி நானும் தான் நிறைய பேர் கிட்ட சொல்லி இருக்கேன். இந்த மாதிரி மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி. ஆனா அதே சுச்சுவேஷன் நமக்கு வரும்போது, அத ஃபாலோ பண்றது கஷ்டம். நானும் மனுஷன் தானே ராகவி…!!! எனக்கு மட்டும் பீலிங்ஸ் எல்லாம் இருக்காதா…??? யார வேணும்னாலும், எத வேணும்னாலும், நான் நெனச்சா இப்ப ஒரே செகண்ட்ல கண்ட்ரோல் பண்ண முடியும். ஆனா என்னோட ஓன் எமோஷன்சை என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.” 😁 என்றான். இது போன்று அவன் தன் மனதில் இருப்பதை தன்னுடைய குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ, கூட இதுவரை பகிர்ந்ததில்லை.
ஆனால், ஏன் என்று தெரியவில்லை இந்த ராகவியிடம் அவனால் எதையும் மறைக்க முடியவில்லை. அதனால் தன்னை அறியாமல் தன் மனதில் இருந்த அனைத்தையும் அவளிடம் கொட்டி விட்டான். இருப்பினும் அவன் பேசி முடித்த பின் அவனுக்கே இவற்றையெல்லாம் தான் ஏன் இவளிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்…??? இது அவசியமற்றது என்று அவனுக்கே தோன்றியது.
ராகவி: “உங்களோட மைண்ட் செட் என்னான்னு எனக்கு புரியுது சார். உங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு வயசம் இல்ல, தகுதியும் இல்ல, அறிவும் இல்ல. ஆனா என் மனசுல பட்டத நான் உங்க கிட்ட சொல்றேன். நம்மளோட எமோஷன்ச நம்மளால எதுவுமே பண்ண முடியாது. சோ அது கூட போராடி, நம்ம ஏன் தேவை இல்லாம அத கண்ட்ரோல் பண்ணனும்..??? ஜஸ்ட் லெட் இட் பி. அண்ட் டிரை டு அக்சப்ட் இட். நீங்க அத மறக்குறதுக்கோ, நினைக்காம இருக்குறதுக்கோ, ட்ரை பண்ணா தான் அது உங்களுக்கு ஸ்ட்ரெஸ் ஆகும்..
இப்போ இருக்கிற சிச்சுவேஷனுக்கு, நம்ப அம்மா சீக்கிரம் சரியாயிடுவாங்கன்னு நம்பர தவிர நமக்கு வேற ஆப்ஷன் இல்ல. நீங்க கடவுள் மேல நம்பிக்கை வைங்க. நம்ம எல்லாருமே 100% அம்மா சீக்கிரம் சரியாயிடுவாங்கன்னு நம்புனா, அது கண்டிப்பா நடக்கும். நம்பிக்கைக்கு ஒரு சக்தி இருக்கு.” 💪 என்று உறுதியான குரலில் சொன்னாள்.
அவளுடைய குரலில் இருந்த நம்பிக்கையும், உறுதியும், விஷ்வாவையும் தொற்றிக் கொண்டது. ஏன் என்று தெரியவில்லை இந்த சில நிமிடங்கள் ராகவியுடன் பேசிய உடனே அவனுடைய அனைத்து பாரங்களும் குறைந்து அவனுடைய மனம் லேசாகிவிட்டதை போல் உணர்ந்தான் விஷ்வா. ராகவி தன்னுடைய உயிரை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தன்னுடைய மன நிலைமையையும் சரி செய்து விட்டதால்; மகிழ்ந்த விஷ்வா, அவளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அவளை கட்டிப்பிடித்துக் கொண்டான். 😍 🤗
பின் அவளை அனைத்த படியே, “தேங்க்ஸ் ராகவி. நீ இன்னைக்கு என்னோட உயிர காப்பாத்திருக்க. அண்ட் என்னோட ஸ்ட்ரஸையும் பாதி குறைச்சிட்ட. நீ சொன்னது உண்மை தான். நம்ப எல்லாத்தையும் ஏத்துக்க பழகிட்டா, எதுவுமே கஷ்டமா இருக்காது தான். ஆனா எனக்கு அதுவும் ஈஸி இல்ல. பட் நான் ட்ரை பண்றேன். நீ சொன்ன மாதிரி அம்சீக்கிரம் சரியாயிடுவாங்கன்னு எனக்கும் நம்பிக்கை இருக்கு.
மெடிக்கல் சயின்ஸ் எவ்வளவோ வளர்ந்துடுச்சு. நான் எவ்வளவு செலவு பண்ணியாச்சும் இந்த வேர்ல்டிலேயே இருக்கிற பெஸ்ட் டாக்டர் வரநான் எவ்வளவு செலவு பண்ணியாச்சும் நாஎன் அம்மாவை சரி பண்ணுவேன்.” என்றவன் அவளுடைய தோளில் இருந்து எழுந்து, அவளுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்தவன், “முதல்ல நான் நல்லா இருந்தா தான், என் குடும்பத்தை என்னால நல்லா பாத்துக்க முடியும். என்ன காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” என்று தன் மனதில் இருந்து உண்மையாக சொன்னான்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)