Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 123

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 123

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 123: ரித்திகா தான் உன் அம்மா (பார்ட் 2)

செண்பகம்: விளையாட்டாக அவனை அடிப்பதை போல் பாவனை செய்தவள், “இப்ப தானே சொன்னேன் மரியாதையா பேசணும்னு..!!! மறுபடியும் என்ன அவ, இவங்கிற..???” என்று அதட்டலான குரலில் கேட்டாள்.

சித்தார்த்: “அவ எனக்கு அம்மாவா வந்தாலும், அவ எனக்கு பிரண்டு தான் பாட்டி.” என்று சிரித்து கொண்டே சொன்னவன் செண்பகத்தின் மடியில் இருந்து இறங்கி ஓட தொடங்கினான். 😂 😂 😂

“டேய் நில்லு டா ஓடாத.” என்ற செண்பகம் அவனை துரத்தி பிடிக்க முயன்றாள். அதுவரை அங்கு நின்று கொண்டு அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த சீத்தா, “ரொம்ப நல்லா இருக்கு அண்ணி. நீங்க பண்றது எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.” என்று நக்கலாக சொன்னாள். 

அதைக் கேட்ட செண்பகத்திற்கு அவள் பேசிய தோரணையில் அவள் ஏதோ பெரிதாக ஒரு பிரச்சனை செய்ய காத்திருக்கிறாள் என்று தோன்றியது. அதனால் இங்கு இருந்து இதை எல்லாம் சித்தார்த் கேட்க வேண்டாம் என்று நினைத்தவள் சித்தார்த்தை பார்த்து, “அதான் ஹோம் ஒர்க்க முடிச்சிட்டல்ல… உன்னோட ஸ்கூல் பேக் ஐ எடுத்துட்டு உன் ரூமுக்கு போ.” என்று சொல்லி சித்தார்த்தை அங்கு இருந்து அனுப்பி வைத்தாள். 

பின் சீத்தாவை பார்த்த செண்பகம் சோபாவை கை காட்டி, “வா மா சீத்தா. இங்க வந்து உட்காரு. நான் மத்தியானம் வீட்டுக்கு வந்த உடனே உன்ன பாக்குறதுக்கு உங்க ரூமுக்கு வந்தேன். தர்ஷினி தான் நீ மாத்திரை போட்டுட்டு தூங்குறேன்னு சொன்னா. அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு திரும்பி வந்துட்டேன். இப்ப உனக்கு உடம்புக்கு பரவாயில்லையா…???” என்று அக்கறையாக விசாரித்தாள். 

செண்பகத்தை பார்த்து முறைத்த படி வந்து சோபாவில் அமர்ந்த சீத்தா, “ம்ம்ம்.. நல்லா இருக்கேன்… நல்லா இருக்கேன்…!!! நீங்களும் வந்து உட்காருங்க. பேசுவோம். உங்க கிட்ட பேசுறதுக்கு தானே அவ்ளோ தூரத்தில இருந்து வந்து இருக்கேன்…!!!” என்று நக்கலான குரலில் சொன்னாள். இத்தனை வருடங்களில் செண்பகம் இதற்கெல்லாம் நன்கு பழகிப் போயிருந்தாள். அதனால் அவள் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. 

செண்பகம்: சொல்லு மா…

சீத்தா: “நம்ப விஷ்வாவுக்கு ஏதோ சம்பந்தம் பேசி இருப்பீங்க போல..!!!! நம்பலாம் ஒரே குடும்பம்ன்னு தான் பேரு. ஆனா இங்கனகுள்ள நடக்கிறத எனக்கே வேலைக்காரங்க சொல்லி தானே தெரியுது….!!! இந்த குடும்பத்தில வேலைக்காரங்களுக்கு கூட தெரியாம எதுவும் நடக்கிறது இல்லை. ஆனா நீங்க எங்கள மதிச்சு எதுவுமே சொல்றதில்லை. என் அண்ணன் போனதோட எனக்கு இந்த வீட்டில இருந்த மரியாதை எல்லாம் போயிடுச்சு.” என்று காட்டமாக கேட்டாள். 😒 😡

 செண்பகம்: “ஏன் மா இப்டி பேசுற..??? நாங்க உன்ன வேற ஆளா நினைப்போமா…??? இன்ன வரைக்கும் விஷ்வா இந்த கல்யாணம் வேணான்னு தான் அடம் புடிச்சிட்டு இருக்கான். நான் ராகவி வீட்டில  இந்த கல்யாணத்துல அவங்களுக்கு சம்மதமான்னு கேக்க தான் போனேன். அவங்க கிட்ட கேட்டு அவங்க கன்ஃபார்மா சம்மதம்ன்னு சொன்னதுக்கு அப்புறமா எல்லார் கிட்டயும் சொல்லிக்கலாம்னு இருந்தேன். மத்தபடி நான் உங்களுக்கு தெரியாம பண்ணனும்னு எல்லாம் நினைக்கல. 

நாங்க கிளம்பும்போது கூட வீட்ல யாரும் இல்லாம இருந்தா நல்லா இருக்காதுன்னு தான், ஹரிக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி அவன இங்க வர சொன்னேன். ஆனா அவன் தர்ஷன இங்க அனுப்பி வைப்பான்னு நான் என்னத்த கண்டேன். உங்களுக்கு தெரியாததா…??? நான் பெத்த புள்ளைங்கல்ல.. எந்த புள்ள என் பேச்சை கேக்குது சொல்லுங்க…!!!” என்று சொல்லி தன்னுடைய நிலைமையை அவளுக்கு புரிய வைக்க விரும்பினாள். 

சீத்தா: “போதும். சும்மா எதையாவது சொல்லணும்னு சொல்லாதீங்க அண்ணி. எல்லாம் முடிவானதுக்கு அப்புறம் வெளி ஆளுங்களுக்கு சொல்றது சேரி. ஆனா எங்கள மதிச்சு இப்படி ஒரு பேச்சு போயிட்டு இருக்குன்னு நீங்க என் கிட்ட சொல்லி இருக்கணும்ல்ல…??? நீங்க என்ன சொன்னாலும், என் மனசு ஆறவே மாட்டேங்குது. என் அண்ணன் இருந்த வரைக்கும் என்ன முன்னாடி நிக்க வச்சு தான் அவர் எல்லாத்தையும் செய்வாரு. அண்ணியும் அதே மாதிரி இருக்கணும்னு எதிர் பாக்கிறது என்னோட தப்பு தான் போல.” என்று தன் கண்களில் இருந்து வராத கண்ணீரை துடைத்த படியே சொன்னாள். 😐

 செண்பகத்திற்கு தான் சீத்தாவை என்ன சொல்லி சமாதான படுத்துவது என்றே தெரியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தாள். ஆனால் சீத்தாவும் சொன்னதையே மீண்டும் மீண்டும், “எங்க அண்ணனும், என் வீட்டுக்காரரும் போனதுக்கு அப்புறம் முன்ன மாதிரி எங்க குடும்பத்துக்கு ஒரு மரியாதை இல்லாம போயிடுச்சு. நான் இல்லேன்னாலும் நாளைக்கு என் அண்ணனோட குடும்பம் என் பிள்ளைகளை பாத்துப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா நான் இருக்கும்போதே இப்படி எல்லாம் நடக்குதே, நான் ரெண்டு பொம்பள பிள்ளைகளை வேற பெத்து வச்சிருக்கேனே, நான் இல்லைன்னா அதுங்க கதி என்ன ஆகும்…???” என்று சொல்லி ஒப்பாரி வைக்க தொடங்கி விட்டாள். 😭 😭 😭

செண்பகம்: தயவு செஞ்சு இப்டி எல்லாம் பேசாத சீத்தா. எனக்கு கேக்குறதுக்கே கஷ்டமா இருக்கு. நான் உன் புள்ளைங்க வேற என் பிள்ளைங்க வேறன்னு நெனச்சதில்ல. நானே இல்லைன்னாலும் நாளைக்கு என் இடத்தில இருந்து விஷ்வா, எல்லாருக்கும் என்னென்ன செய்யணுமோ அது எல்லாத்தையும் கரெக்டா செய்வான். நீ என்ன நம்பலைனா கூட பரவால்ல. விஷ்வாவும் நீ வளத்த பிள்ளை தானே நீ அவன நம்ப மாட்டியா…???

சீத்தா: ஆமா அண்ணி ஆமா. விஷ்வா நான் வளர்த்த பிள்ளை தான். அதான் என் மக தர்ஷினிய நான் அவனக்கு கல்யாணம் பண்ணி தரணும்னு  ஆசைப்பட்டேன். அவளும் சின்ன வயசுல இருந்து விஷ்வா தான் உலகமேன்னு வாழ்ந்துட்டா. ஆனா விஷ்வா என்ன பண்ணான்..??? ஏதோ ஒரு கம்பெனியில கேவலம் மாச சம்பளம் வாங்குற வடகத்துக்காரிய இழுத்துட்டு வந்து, அவளையே தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நம்ம எல்லார் பேச்சையும் மீறி திடீர்னு அவல கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டுு வந்துட்டான்.

எங்க தர்ஷினிய பத்தி அப்ப யார் யோசிச்சு பாத்தா…??? விஷ்வாவ மறுக்கிறதுக்கு என் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நீங்களும் தானே என் பொண்ண விஷ்வாவுக்கு தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு ஆசை காட்டினீங்க. ஆனா அது எதுவுமே நடக்கலையே…!!!

இப்ப அவ விஷ்வாவ மறந்துட்டு இருக்கான்னு நான் சந்தோஷ படுறதா, இல்ல அவ காதலும் வேணாம், கல்யாணம் வேணாம்னு விரக்தில இருக்குறாளேன்னு நெனச்சு நான் கவலைப்படுறதா…??? நீங்களே சொல்லுங்க…???

செண்பகம்: தர்ஷினிக்கு விஷ்வா பண்ணது தப்பு தான். ஆனா அவ இவன காதலிச்சதும், நம்ப அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நெனச்சதும் அவனுக்குு தெரியாதே…!!! எது எப்படியோ தர்ஷினி இந்த வீட்டு பொண்ணு. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு குடுக்க வேண்டியது எங்க பொறுப்பு. நீங்க பழசை பேசிட்டே இருக்காதீங்க. அடுத்து அவரது என்னான்னு பாக்கலாம். 

சீத்தா: “இப்ப கூட என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு தரேன்னு சொல்றீங்களே தவிர,  ஹரிக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு உங்க வாயில இருந்து ஒரு வார்த்தை கூட வர மாட்டேங்குதே..!!! என் பொண்ணுக்கு சின்ன வயசுலயே படிப்பு ஏறலைன்னு அவ படிக்கல. நானும் நம்ம கிட்ட இருக்குற காசு, பணத்துக்கு, படிச்சா தான் மரியாதையா என்னான்னு.. பரவால்லன்னு விட்டுட்டேன். ஆனா என் பொண்ணு குணத்துல தங்கம். 

 அவளோட மதிப்பு உங்களுக்கே தெரியலன்றது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று உண்மையான வேதனையுடன் சொன்னவரின் கண்களில் இருந்து நிஜமாகவே கண்ணீர் வடிந்தது. 😭 😭 😭

செண்பகம்: என்ன சீத்தா இப்டி பேசுற…!!! நம்ம தர்ஷினிய பத்தி எனக்கு தெரியாதா…???? அவ படிக்கலைன்றத எல்லாம் நாங்க ஒரு குறையா நினைக்கல. எனக்கே ஹரிக்கு தர்ஷினிய கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்ற எண்ணம் இருக்கு. ஆனா ஏற்கனவே விஷ்வாவுக்கு அவளை கேட்டு அந்த கல்யாணம் நடக்காம போனதுனால நீங்க எங்க மேல வருத்தமா இருக்கீங்க. இப்போ ஹரிக்கு பொண்ணு கேட்டா, குடுப்பீங்களான்னு ஒரு தயக்கம். அதான் நான் கேட்கல. உங்களுக்கு சம்மதம்ன்னா சொல்லுங்க. விஷ்வா கல்யாணம் முடிஞ்ச உடனயே ஹரிக்கும், தர்ஷினிக்கும், கல்யாணம் பண்ணி வச்சிடலாம். 

செண்பகம் சொன்னதை கேட்ட சீத்தாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் செண்பகம் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாள் என்று அவள் நினைத்து இருக்கவில்லை.  அதனால், “ரொம்ப சந்தோஷங்க அண்ணி. கட்டிக்கிற முறை இருக்கும்போது, நீங்க நம்ம ஹரிக்கு தர்ஷினிய கேட்டா, நான் என்ன குடுக்க மாட்டேன்னா சொல்லிட போறேன்…!!! நானும் என் புள்ளையை இந்த குடும்பத்துல கட்டித் தரணும்னு ஆசைப்பட்டேன் தானே…!!! அது நடக்க மாட்டேங்குதுன்ற வருத்தம் தான் எனக்கு. இப்ப நீங்க சொன்னத கேட்டவுடனே எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்குன்னு உங்களுக்கு தெரியாது. ஆனா இந்த கல்யாணம் நடக்குமான்னு எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு. ஹரிய கட்டிக்கிறதுக்கு ஆசைப்பட்டு தானே இந்த ஆராதனா இங்கே வந்து உட்கார்ந்து இருக்கா. 

விஷ்வா வேற அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கான். நீங்க என்ன வேணா நினைச்சுக்கங்க, எனக்கு இந்த விஷயத்துல விஷ்வா மேல கோவம் தான். நம்ம வீட்டிலேயே ரெண்டு பொண்ணு இருக்கும்போது அப்படி என்ன இந்த குடும்பத்தை கெடுத்து அழிச்சவன் குடும்பத்தில போய் பொண்ணு எடுக்கணும்னு நமக்கு தலையெழுத்தா..???” என்று சிறு கோபத்துடன் கேட்டாள். 😒 

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured