Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 121

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 121

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 121: நீ தப்பு பண்ணிட்ட ஷாலினி (பார்ட் 2)

விஷ்ணு: “புரியுது இது கஷ்டம் தான். ஆனா நீ இத செய்றது தான் உனக்கு நல்லது. ஆனா மறுபடியும் சொல்றேன், எனக்கும், ஷாலினிக்கும், நடுவுல வரணும்னு மட்டும் நினைக்காத. நீ இன்னொரு தடவை ஏதாவது பண்ணேன்னு எனக்கு தெரிஞ்சதுன்னா, சத்தியமா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். நமக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப்ப நான் அந்த செகண்ட் ல்டே மறக்க வேண்டியது இருக்கும். பாத்துக்கோ..!!!” என்று எச்சரிக்கும் தோணியில் சொன்னான். 😒

வைஷாலி அமைதியாகவே நின்று கொண்டு இருந்தாள். அவள் ஷாலினியிடம் கொடுத்துவிட்டு வந்த பணத்தை தன்னுடைய காரில் இருந்து எடுத்து அவளிடமே கொடுத்த விஷ்ணு, அங்கு இருந்து சென்று விட்டான். விஷ்ணு அங்கு இருந்து சென்ற பின், தன் கையில் இருந்த பணத்தையும் அவன் சென்ற இடத்தையுமே வெறித்து பார்த்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தாள் வைஷாலி. அவளுக்கு இப்போது ஷாலினியின் மீது மிகவும் ஆத்திரமாத்திரமாக வந்தது. தன் கையில் இருந்த பணத்தை அவளுடைய காருக்குள் விட்டெறிந்தவள், “நீ தப்பு பண்ணிட்ட ஷாலினி. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. நான் உனக்கு ஒரு நல்ல ஆஃபர் கொடுத்தேன் அதை அக்செப்ட் பண்ணாம நீயே உன் லைஃபை கெடுத்துக்கபோற. இத்தனை வருஷத்துல என் விஷ்ணு மாமா, என் கிட்ட சும்மா கூட கோவமா பேசுனது கிடையாது. 

இன்னைக்கு அவனவே என்ன கை நீட்டி அடிக்க வச்சுட்டல…!!! இதுக்கு நான் உன்ன சும்மா விட மாட்டேன் டி. நான் சிந்துர ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நீ பதில் சொல்லியே ஆகணும். நான் சொல்ல வைப்பேன். இந்த வைஷாலி கூட மோதணும்னு முடிவு பண்ணிட்டில்ல…!!! அப்ப நான் யாருன்னு உனக்கு காமிக்கிறேன். நீ எப்படி விஷ்ணு கூட நிம்மதியா வாழ்றேன்னு நானும் பார்க்கிறேன்.” என்று தன் மனதிற்குள் நினைத்தவள், ஷாலினியை உதைப்பதாக நினைத்து தன்னுடைய காரை வேகமாக எட்டி உதைத்து அதனால் வந்த கால் வலியுடன் காரை ஸ்டார்ட் செய்து அங்கு இருந்து கிளம்பினாள். 😒

நாராயணன் பேலஸில்…

தன்னுடைய ஹோம் வொர்க் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு சித்தார்த் வழக்கம்போல், அதை தன்னுடைய பாட்டியிடம் காண்பிப்பதற்காக தன்னுடைய ஸ்கூல் பேக்கை எடுத்து கொண்டு ஹாலிற்கு வந்தான். ராகவியின் பெற்றோர்கள் விஷ்வா மற்றும் ராகவியின் திருமணத்திற்கு சம்மதித்து விட்ட மகிழ்ச்சியில்உற்சாகமாக ஹாலில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார் செண்பகம். அவள் போட்ட மாத்திரைகளின் விளைவால், இன்னும் நல்ல தூக்கத்தில் இருந்தாள் சீத்தா. அதனால், அந்த வீடே அமைதியாக இருந்தது. 

தர்ஷினி தன்னுடைய அம்மாவுடன் அவளுடைய அறையிலேயே இருந்து விட்டாள். அப்போது ஹாலிற்கு வந்து செண்பகத்தின் அருகே அமர்ந்தான், சீத்தாவின் மகன் சூர்யா. சூர்யாவிற்கு இந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் அடிக்கடி இங்கே வந்து இவர்களுடன் நன்கு பழகி இருக்காதால், அவனுக்கு அனைவரிடமும் பேசுவதற்கு கூட சிறிது தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. 

சித்தார்த்: தன்னுடைய ஸ்கூல் பேகை செண்பகத்தின் மடியில் வைத்தவன், “ இந்தாங்க பாட்டி பாருங்க. நான் என்னோட எல்லா ஹோம் ஒர்க் -ஐயும் முடிச்சுட்டேன்.” என்று தன்னுடைய மழலை குரலில் அழகாக சொன்னான். 

அவன் கொடுத்த ஸ்கூல் பேக்கை திறந்த செண்பகம், அதில் இருந்த ஹோம் ஒர்க் நோட்டுகளை வெளியில் எடுத்து அதில் அவன் சரியாக எழுதி இருக்கிறானா என்று சரி பார்த்தாள். அப்போது செண்பகத்தின் அருகே அமர்ந்து இருந்த சூர்யா சித்தார்த்தை பார்த்து புன்னகைத்து “ஹாய்” சொன்னான். 😁 😁 சித்தார்த்துக்கு அவன் யார் என்றே தெரியவில்லை. அதனால், அவனை தன்னுடைய குட்டி கண்களை வைத்து குறு குறுவென்று பார்த்தான். 

தான் ஹாய் காட்டியும் சித்தார்த் தனுக்கு பதிலுக்கு ஹாய் சொல்லாததால் அவனுக்கு தன்னை யார் என்று தெரியவில்லை போல என்று நினைத்துக் கொண்ட சூர்யா, “என்ன குட்டி மாப்பிள, என்ன யாருன்னு உனக்கு தெரியலையா…???” என்று சிரித்துக் கொண்டே கேட்டான். 😁 😁 😁

சித்தார்த்: “மாப்பிளையா..!! அது யாரு என் பேரு சித்தார்த். என்ன நீங்க ஏன் அப்படி கூப்பிடுறீங்க…???” என்று சூர்யாவை பார்த்து குழப்பமாக கேட்ட சித்தார்த், “பாட்டி இந்த அண்ணா யாரு புதுசா இருக்காங்க..???” என்று செண்பகத்திடம் கேட்டான்.

அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த செண்பகம், “பாரு டா… இதுக்கு தான் அப்பப்ப இங்க வந்துட்டு போணுன்றது. இவன் பொறந்ததுல இருந்தே நீ இங்க ரெண்டு, மூணு, தடவை தான் வந்திருக்க. அதான் இவனுக்கு நெருங்குன சொந்தக்காரங்கலையே யாருன்னு தெரியல.” என்று சூர்யாவிடம் சொன்னவள் சித்தார்த்தை பார்த்து, “உனக்கு வைஷு அத்தை, தர்ஷினி அத்தை, எல்லாம் இருக்காங்கல்ல…!!! இவன் அவங்களோட கடைசி தம்பி. உனக்கு மாமா. இவன் பேரு சூர்யா.” என்று சொல்லி அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

செண்பகம் சொன்னதைக் கேட்டு, சித்தார்த் தன் முகத்தை சோகமாக வைத்து  கொண்டான். 😞 அதை கவனித்த செண்பகம், “என்ன ஆச்சு ஏன் முகத்தை இப்படி வச்சு இருக்க..!!! அதான் ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டல்ல..??? என் சித்து குட்டிக்கு ஏதாவது வேணுமா…??” என்று அவனுடைய தாடியை பிடித்து கொண்டு பாசமாக கேட்டாள். 

செம்பக்கம் கேட்டதற்கு தனக்கு எதுவும் வேண்டாம் என்பது போல் தன் தலையை ஆட்டிய சித்தார்த் சூர்யாவை கைகாட்டி, “இந்த அண்ணா அழகா பெருசா ஹெயிட்டா வளர்ந்து இருக்காங்க. நான் இவங்கள மாமான்னு கூப்பிட்டா நல்லா இருக்கும். ஆனா நான் இன்னும் சின்ன பையன் தானே…!! இன்னும் நான் ஸ்கூல்லே படிச்சு முடிக்கல. அதுக்குள்ள இவங்க ஏன் என்ன மாப்பிள்ளைன்னு கூப்பிடுறாங்க..??? அது நல்லாவே இல்ல.” என்று தன்னுடைய உதட்டை பிதுக்கிக்கொண்டுு சொன்னான்.

சூர்யா: அவன் சொன்னதை கேட்டு சிரித்தவன், “சரி…!!! சாரி கோச்சுக்காத டா குட்டி பையா. நானும் உன்ன மாதிரி சின்ன பையன் தான். நான் நிறையா பூஸ்ட், காம்ப்ளேன், எல்லாம் குடிப்பன்னா… அதனால கொஞ்சம் ஹைட் ஆயிட்டேன். அதனால இனிமே நீயும் என்ன அண்ணான்னு கூப்பிடு. அப்போ நான் உன்ன மாப்பிளைனு கூப்பிட மாட்டேன். உனக்கு டீல் ஓகேவா..???” என்று கேட்டவன் டீலை ஓகே செய்வதற்கு கைகுலுக்க வேண்டி சித்தார்த்தின் முன் தன்னுடைய ஒரு கையை நீட்டினான். 

சித்தார்த்துக்கு இந்த டீலிங் பிடித்து இருந்தது. அதனால் அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தவன், “எனக்கு டீல் ஓகே.” என்று சொல்லிவிட்டு அவனுடன் தன்னுடைய கையை கோர்த்து கை குலுக்கினான். சூர்யா தன்னை சிறிய பையன் தான் என்று சொல்லி இருந்ததால் அவன் ஏதோ பள்ளியில் தான் படிக்கிறான் போல என்று நினைத்த சித்தார்த், “நீங்க எந்த ஸ்டாண்டர்ட் படிக்கிறீங்க..??? என்னோட ஸ்கூலா… நான் உங்கள பாத்ததே இல்லையே…!!!” என்று கேட்டான்.

செண்பகம்: “ஆமா சூர்யா..!!! நானும் உன் கிட்ட கேட்கலாம்னு இருந்தேன்… மறந்துட்டேன். இந்த வருஷமாச்சு 12த் பாஸ் பண்ணினாயா..??? இல்லையா…??? உனக்கும், பிரார்த்தனாவுக்கும், ஒரே வயசு தானே…!!! அவளும் உன் கூட தான் 12த் எழுதினா. இப்ப அவ காலேஜ் பர்ஸ்ட் இயரே முடிக்க போறா. உனக்கு எப்ப காலேஜ் சேருரதா ஐடியா..???” என்று கேட்டாள். 

செண்பகம் பிரார்த்தனாவின் பெயரை சொன்னவுடனேயே சூர்யாவின் முகம் பிரகாசமானது. 😍 அதனால் சிறிது வெட்கத்துடன், “நான் பாஸ் ஆயிட்டேன் அத்தை. நான் அங்கேயே இருந்தா காலேஜ்ல கூட போய் ஒழுங்கா படிக்க மாட்டேன்னு தான், அம்மா என்ன இங்க பிராத்தனா படிக்கிற காலேஜிலயே சேர்ந்து படிக்க சொல்லி கூட்டிட்டுட்டு வந்தாங்க. நானும் பிரார்த்தனா மாதிரி பி. பி. ஏ. தான் படிக்கலாம்னு இருக்கேன்.” என்றான்.

செண்பகம்: “அதுவும் சரி தான். நீ அங்கயே இருந்தா, கண்ட பசங்க கூட செட்டு சேர்ந்து சுத்திட்டு இருப்ப. இங்கயே இருந்து படி. பிராத்தனா எடுத்த குரூப்பே நீயும் எடுத்து படிச்சீன்னா, உனக்கு ஏதாவது தெரியலேனாலும் அவளை சொல்லிக் குடுப்பா.” என்றாள்.

செண்பகம் சொன்னதை கேட்டு மகிழ்ந்த சூர்யா, “ம்ம்ம்… ஆமாங்க அத்தை. நானும் வந்ததுல இருந்து பாக்கிறேன் பிராத்தனாவ ஆளையே காணோமே…!!! இவ்ளோ நேரம் ஆச்சு இன்னுமா அவ வீட்டுக்கு வரல..???” என்று அவளை பார்க்கும் ஆர்வத்துடன் கேட்டான். 😍 

செண்பகம்: “என்னான்னு தெரியல சூர்யா. திடீர்னு அவளுக்கு ஸ்போர்ட்ஸ் மேல ஆர்வம் வந்துருச்சு. தினமும் காலேஜ் முடிஞ்ச உடனே புட்பால் ப்ராக்டிஸ் பண்றேன்னு கிரவுண்டுக்கு போயிடுறா. விஷ்வாவும் அவ கேட்ட உடனே அவளுக்கு ஒரு பர்சனல் ட்ரைனர் அரேஞ்ச் பண்ணி குடுத்துட்டான். நானும் வீட்டிலயே கிரவுண்ட வச்சிக்கிட்டு எதுக்கு டி வெளியில போய் விளையாடுறன்னு நிறைய தடவ கேட்டு பாத்துட்டேன். நம்ப சொன்னா அவ எங்க கேக்குற..?? டெய்லியும் அவ கூட போற பாடி கார்டுகளையும் சேத்துக்கிட்டு அவங்க கூட சேந்து ஃபுட்பால் விளையாடுறா. படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையாப்பா நீயே சொல்லு…???” என்று தன் மனதில் தன் மகளைப் பற்றி இருந்த ஆதங்கத்தை எல்லாம் அவனிடம் கொட்டி கொண்டு இருந்தாள்.

சூர்யா: “ஃபுட் பால் விளையாடுறதுல ஒன்னும் தப்பில்லையே அத்தை..!!!! ஆனா அத போய் எதுக்கு வெளி ஆளுங்களை வச்சு கத்துக்கணும்…??? நம்ம வைஷு தான் இருக்காளே, அவள கேட்டா அவளே சொல்லி தர போறா…!!! இப்ப நானும் இங்க வந்துட்டேன். நாங்க சொல்லி தர மாட்டமா..???” என்று கேட்டான். 

செண்பகம்: “அட ஆமால்ல.. நான் இத மறந்துட்டேன் பாரு..!!! இத பத்தி அவ கிட்ட பேசுறதெல்லாம் வேஸ்ட்டு. நான் விஷ்வா கிட்ட பேசி பாக்கிறேன். நீங்க வீட்டுக்குள்ள நம்ம கிரவுண்ட்லயே விளையாடுங்க.” என்று கேஷுவலாக சொன்னாள். 

அதை கேட்ட சூர்யாவோ, ரெக்கை இன்றி வானில் பறக்க தொடங்கினான். 😍 😁 😁 😁

– நேசம் தொடரும்.

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured