Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 120

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 120

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 120: நீ தப்பு பண்ணிட்ட ஷாலினி (பார்ட் 1)

“நீ என்ன கல்யாணம் பண்ணிக்கலன்னா கூட பரவால்ல மாமா. எனக்கு நீ நல்லா இருந்தா போதும். இந்த ஷாலினி மாதிரி ஒரு மோசமானவள கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னோட லைஃப ஸ்பாயில் பண்ணிக்காத.” என்று விஷ்ணுவின் வாழ்க்கையில் தனக்கு மட்டும் தான் அக்கறை இருக்கிறது என்பது போல, உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டு இருந்தாள் வைஷாலி.

இதற்கு மேலும் விஷ்ணுவால் அவள் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அவளுடைய  கன்னத்தில் “பளார்” என்று அறைந்தான். தனக்கு இருந்த கோபத்தில் விஷ்ணு அடித்த அடி வைஷாலியின் கன்னத்தில் இடியாக இறங்கியது. அவன் அடித்த அடியில் வைஷாலியின் வாயில் இருந்து ரத்தமே வந்து விட்டது. 🥺

அதனால் கோபமாக அவனை பார்த்த வைஷாலி, “அந்த ஷாலினி எல்லாம் ஒரு ஆளுன்னு போயும் போயும் அவளுக்காக நீ என்னவே அடிக்கிறாயா விஷ்ணு…??? இத மட்டும் நான் அத்தை கிட்ட சொன்னா, என்ன ஆகும்னு நீ யோசிச்சு பாரு.” என்று தன் பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள். 😒 😡 🙁

விஷ்ணு: “போய் சொல்லு. நானும் உங்க அத்தை கிட்ட அவங்க ஆசை மருமக என்ன பண்ணி வச்சிருக்கான்னு சொல்றேன். அப்புறம் அம்மா என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்.” என்று கேஷுவலாக சொன்னவன், “நீ இப்டி   இருப்பன்னு நான் நினச்சு கூட பாத்தது இல்ல. ஒரு வேளை இது தான் உன்னோட ஒரிஜினல் கேரெக்டர் ஆவே இருந்திருக்கு போல, நான் தான் அத தெரிஞ்சுக்காம ஃப்பூல் ஆ இருந்து இருக்கேன். 

இப்ப கூட தப்பு பண்ணிட்டேன்னு உனக்கு கொஞ்சம் கூட கில்ட்டி ஃபீலிங்கே இல்ல. வாய் கூசாம அப்படியே ஷாலினி மேல பழிய போடுற. நீ என்ன பண்ணாலும் நாங்க எல்லாம் உன்ன மன்னிப்போம்ன்னு நினைச்சியா..??? இங்க பாரு…!!! ஏதோ இந்த ஒரு தடவ உன்ன போனா போதும்னு மன்னிச்சு விடுறேன். இன்னொரு தடவ நீ எனக்கும் ஷாலினிக்கும் நடுவுல ஏதாவது பிரச்சனை பண்ணனும்னு நினைச்சீங்கன்னா, அம்மா கிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன்; டைரக்டா விஷ்வா அண்ணா கிட்ட சொல்லிடுவேன்.

அவருக்கு உன் மேல இருக்கிற பாசத்துல உன்னோட இந்த தார்ட் ரேடட் பிகேவியர் எல்லாத்தையும்  சப்போர்ட் பண்ணுவாருன்னு மட்டும் நினைக்காத.” என்று கோபமான குரலில் சொல்லி வெளிப்படையாக அவளை மிரட்டினான். 😒 😡

இது வரை நல்லவளை போல் நடித்துக் கொண்டு இருந்த வைஷாலி, அது தான் தன்னுடைய குட்டு வெளிபட்டுவிட்டதே, இதற்கு மேல் தான் என் தன்னுடைய   நடிப்பை தொடர வேண்டும் என்று நினைத்தவள், “ப்ளீஸ் விஷ்ணு இத பத்தி நீ மாமா கிட்ட சொல்லிடாத. அப்புறம் அவரு என்ன தப்பா நினைச்சுருவாரு. நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் ஒண்ணும் கெட்ட பொண்ணு இல்ல டா. ஷாலினிய ஹெர்ட் பண்றது என்னோட இன்டென்ஷன் இல்ல். நான் அவளுக்கு அவளோட இடம் என்னன்னு புரிய வைக்கணும்ன்னு மட்டும் தான் நினைச்சாங்க போனேன். 

அவளுக்கு  ஹெல்ப்பா இருக்கட்டுமேன்னு நினைச்சு தான் அந்த பணத்தைை குடுத்துட்டு வந்தன். நீ அவள பத்தி இவ்ளோ யோசிக்கிறியே..!!! ஆனா, ஏன் என்ன பத்தி அதுல பாதி கூட யோசிக்க மாட்டேங்குற..??? இத்தன வருஷமா நான் உன்னையே நினைச்சுக்கிட்டு, உன் பின்னாடியே சுத்திட்டு இருந்திருக்கனே மாமா… அது எல்லாத்தையும் நீ ஒரு நிமிஷத்துல மறந்துட்டியா…??? இத்தன நாளா நான் உன் கிட்ட அத சொல்லலேன்னாலும் உனக்கே அது தெரிந்திருக்கும்ன்னு நான் நினைச்சேன். உனக்கும் என்ன பிடிக்கும்ன்னு நம்புனேன். 

திடீர்னு அதெல்லாம் இல்லைன்னு ஆனா, என்னால எப்டி அத தாங்க முடியும்…??? நீ ஷாலினிய லவ் பண்றேன்னே.. வச்சுக்கலாம். அவள உனக்கு இப்ப கொஞ்ச மாசமா தானே தெரியும்…!!! நான் பொறந்ததில இருந்து நான் உன்னை பாத்து வளந்து இருக்கேன் விஷ்ணு. எத்தனையோ பேர் எனக்கும் ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க, அவங்க அத்தன பேரையும் நான் உனக்காக ரிஜெக்ட் பண்ணி இருக்கேன். என் லைஃப்ல எனக்கு உன்னையும், ஸ்போர்ட்ஸ் -ஐயும் தவிர வேற எதுவும் இம்போர்ட்டண்டா இருந்ததே இல்லை. இதுக்கு வேலையும் இருக்காது. 

எனக்கு தெரிஞ்சு நான் பண்ண ஒரே தப்பு, நான் சொல்லாமயே என் மனசு உனக்கு புரியும்ன்னு நம்புனது தான். நான் எப்ப உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சனோ,  அத அப்பவே உன் கிட்ட சொல்லி இருக்கணும். ஆனா அந்த தப்புக்கு எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையை குடுக்காத. என்னால நீ இல்லாம வாழ முடியாது டா மாமா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ சோ மச். ப்ளீஸ் என்ன விட்டு போயிடாத.” என்று தரையில் மண்டியிட்டு தன்னுடைய இரு கையையும் அவன் முன்னே கூப்பி அழுத்த படி சொன்னாள். 🙏 😭 😭 😭

அவள் சொல்வது அனைத்தும் உண்மை தான் என்று விஷ்ணுவால் புரிந்து கொள்ள முடிந்தாலும், ஏனென்று தெரியவில்லை அவனுடைய மனம் அதை ஏற்றுக்கொள்ளள மறுத்தது. அதனால் அவளை சற்று கோபத்துடனே முறைத்து பார்த்தவன், “என்ன முதல்ல ஷாலினிய மிரட்டி பாத்த, இப்போ என் கிட்ட கெஞ்சி டிராமா போடுறியா…??? முதல்ல இந்த மாதிரி சீன் போடுறத நிறுத்து. நீ எத சொன்னாலும் அது உண்மைன்னு என்னால நம்பவே முடியல.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.😒 🤨

அவன் சொன்னதைக் கேட்டு மனம் உடைந்து எழுந்து நின்ற வைஷாலி, “ஓ…!!! உனக்கு ஷாலினி மேல எனக்கு இருக்கிற கோபம் புரியுது. நான் பேசிட்டு வந்ததுனால, அவ ஹர்ட் ஆனது புரியுது. நான் உன் கிட்ட பொய் சொன்னது கூட ஈஸியா கண்டுபிடிச்சிட்ட. ஆனா, நான் உன் மேல வச்சு இருக்கற லவ் மட்டும் உனக்குக்கு புரியவில்லையா..??? இல்ல புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறியா…??

ஷாலினிக்காக நீ எப்படி உன்ன பத்தின உண்மைய மறச்சியோ, அதே மாதிரி உனக்காக, நான் அவ வீட்டுக்கு போனத உன் கிட்ட மறைச்சேன். நீ பண்ணது சரின்னா, நான் பண்ணுதும் சரி தான். நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் மாதிரி இருக்கிற ஒன்னோட காதல் உனக்கு பெருசுன்னா, இத்தன வருஷமா கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஊத்தி நான் வளத்த என்னோட காதல் எனக்கும் பெருசு தான். 

நான் உன் கிட்ட பொய் சொல்லிட்டேன், ஏமாத்திட்டேன்னு, என்ன பத்தி நீ என்ன வேணாலும் சொல்லு. ஆனா, என்னோட லவ் மட்டும் ஃபேக்ன்னு சொல்லிடாத. இப்ப சொல்லு…!!! நீ ஒரு வார்த்தை சொன்னா உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். நான் வேணா ஷாலினி கிட்ட சாரி கேட்கட்டுமா..??? நானே அவ கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேக்கிறேன். நீ என்ன அக்செப்ட் பண்ணிக்கிறேன்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லு விஷ்ணு. நம்மளே அந்த ஷாலினிக்கு ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். என்னால உன்ன யாருக்கும் விட்டுக் குடுக்கக முடியாது. உன்ன வேற ஒருத்தி கூட பாக்குற சக்தி எனக்கு இல்ல டா.” என்று விஷ்ணுவின் தோள்களை பற்றிஎன்று விஷ்ணுவின் தோள்களை பற்றிக்கொண்டு உலுக்கிய படி சொன்னவள் அவனுடைய தோள்களில் சாய்ந்து கொண்டுஅழுதாள். 😭😭 😭

இம்முறை அவளுடைய குரலில் இருந்த உண்மையையும், நேர்மையையும், விஷ்ணுவால் உணர முடிந்தது. அதனால், அவனால் வைஷாலியை கடிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் வைஷாலி அவனுடைய பார்வையில், ஒரு சிறு பெண் ஆக தான் இருந்து இருக்கிறாள். அதனால் இப்போது அவனுக்கு அவள் செய்தது கூட அறியாமல் ஏதோ அவள் செய்த தவறு போல தான் என்று தோன்றியது. 

அதனால் அவளை தன் மீது இருந்துு பிரித்தவன், பாவமாக அவளைப் பார்த்தான். 😟 அழுது அழுது வைஷாலியின் முகம் நன்கு சிவந்து போய் இருந்தது. இதில் அவன் அவளை அதிக கோபத்தில் அறைந்து இருந்ததால், அவளுடைய கண்ணம் வீங்கி இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அதை கண்ட விஷ்ணு, குற்ற உணர்ச்சியில் தவித்தான். 😣 எப்போதும் வைஷாலியை ஒரு போல்டான ஆளாக பார்த்துப் பழகிய விஷ்ணுவிற்கு இப்போது அவளை இப்படி பார்ப்பது மிகவும் வருத்தமாகவும், சங்கட்டமாகவும், இருந்தது.

விஷ்ணு: அவளைப் பாவமாக பார்த்தவன், “நீ பண்ணது தப்பு தான். அதுக்காக உன்ன அடிச்சு, நானும் அதே மாதிரி ஒரு தப்ப பண்ணிருக்கக் கூடாது. ஐ அம் சாரி.” என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.

தன்னுடைய கண்களில் இருந்து வகிந்த கண்ணீரை துடைத்த படியே அவனை பார்த்த வைஷாலி, “பரவால்ல மாமா. என்ன அடிக்கிறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ திருப்பியும் கூட எத்தன தடவை வேணாலும் என்ன அடிச்சுக்கோ. ஆனா என்ன விட்டு மட்டும் போயிடாத ப்ளீஸ்…!!!” 🚶 என்று உடைந்த குரலில் கேட்டாள். 💔 😥

அவள் சொன்னதை கேட்டு ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டு விஷ்ணு, “இங்கே பாரு வைஷு; ஒருத்தருக்கு நம்ம மேல கெஞ்சி, கோபப்பட்டு, மிரட்டி, எல்லாம் லவ் வர வைக்க முடியாது. நீ சொன்னது கரெக்டு தான். உன்னோட லவ் சீப் ஆனது கிடையாது தான். உனக்கு உன்னோட லவ் பெஸ்ட்டா தான் தெரியும்.

ஆனா அந்த லவ் ரெண்டு பக்கமுமே இருக்கணும். அப்படி இல்லைனா அதை ஹோல்ட் ஆன் பண்ணனும்னு நினைக்கிறது நமக்கு கஷ்டத்த மட்டும் தான் குடுக்கும். ஒரு வேளை நான் ஷாலினியை லவ் பண்ற மாதிரி அவ என்ன லவ் பண்ணாம, வேற யாரையோ லவ் பண்ணி இருந்தா; எனக்கும் கஷ்டமா தான் இருந்து இருக்கும். ஆனா, நான் உன்ன மாதிரி எதுவும் பண்ணியிருக்க மாட்டேன். அவன் நல்லவனா இருந்தா நானே ஷாலினி கூட அவன சேத்து வைப்பேன். ஷாலினி அவன் கூட வாழ்றத பார்த்து நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். 

லவ் -ன்னா அப்படி தான் இருக்கணும். லவ்ல யாரும் யாரையும் போர்ஸ் பண்ண கூடாது.ஒரு வேளை அவங்க நம்ம கூட வாழ்ந்தா சந்தோஷம், அப்படி அவங்களுக்கு நம்ம கூட இருக்க பிடிக்கலைன்னா கூட; எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லிட்டு விட்டுட்டு போயிடனும். நான் லவ் பண்றவங்க என் கூட மட்டும் தான் சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைக்கிறது லவ்வே இல்ல. முதல்ல இங்க இருந்து கிளம்பி நீ ஊருக்கு போ. என்ன மறந்துட்டு உன்னோட வேலையில போகஸ் பண்ண ட்ரை பண்ணு. இல்லைனா அப்ராட்ல போய் எம். பி.ஏ. படி. நான் வேணா அண்ணா கிட்ட பேசுறேன்.” என்று நிதானமான குரலில் சொன்னான்.

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured