Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 119

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 119

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 119: வைசாலியை அடித்த விஷ்ணு (பார்ட் 2)

‌கோபமாக அங்கு இருந்து உள்ளே சென்ற விஷ்ணு, மதனின் தங்கையுடன் இருந்த வைஷாலியை; “நான் உன் கூட கொஞ்சம் பேசணும் வா.” என்று சொல்லி அவளுடைய கையைப் பிடித்து இழுத்து:கொண்டு, பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தான். 

“இந்த ஷாலினி அடங்கவே மாட்ட போல. அங்கு நடந்த எல்லாத்தையும் பக்காவா இவன் கிட்ட போட்டு குடுத்து இவன நமக்கு எதிரா திருப்பி விட்டு அனுப்பி இருக்கா. பரவால்ல சமாளிப்போம்.” என்று நினைத்த ஷாலினி அப்பாவி போல் தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு, “என்னாச்சு மாமா ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க..???” என்று தேனொழுக கேட்டாள்.

விஷ்ணு: “நீ என்ன மாமான்னு மட்டும் கூப்பிடாத. நீ என்ன அப்படி கூப்பிட்டாலே, எனக்கு எரிச்சலா்சலா வருது.” என்று கடுப்பான குரலில் சொன்னான். 😒 அப்போது தான் அவன் வைஷாலியின் ஆடையை கவனித்தான். 

விஷ்ணு ஷாலினிக்கு வாங்கி கொடுத்து இருந்த அதே புடவையைப் போல்; சேம் கலர் மற்றும் பாட்டனில் இருந்த ஒரு புடவையை தேடி பிடித்து அதை வாங்கி கட்டி வந்து இருந்தாள் வைஷாலி. இனி எப்படியும் ஷாலினி தன்னுடைய வழியில் குறுக்கிட மாட்டாள் என்று நம்பிக்கையில் இருந்த வைஷாலி, ஷாலினி இருக்க வேண்டிய இடத்தில், விஷ்ணு ஆசைப்பட்டதை போல் இந்த பங்க்ஷனில் அவனுடன் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து இங்கு வந்தாள். வைஷாலி எப்போதும் புடவையை விரும்பி அணிபவள் அல்ல. அதனால் அவளை இந்த புடவையில் பார்த்த உடனேயே அவளுடைய எண்ணத்தை தெளிவாக புரிந்து கொண்ட விஷ்ணுவிற்கு அவள் மீது இன்னும் அதிகமாக கோபம் வந்தது. 

விஷ்ணு: கூர்மையான கண்களுடன் வைஷாலியை பார்த்தவன், “நான் அவளுக்கு வாங்கி குடுத்த மாதிரி அதே ஒரு புடவைய தேடி கண்டுபிடிச்சு கட்டிட்டு வந்துட்டா நீ என்னோட ஷாலினி ஆயிடுவியா…???” என்று நக்கலாக கேட்டான். 😂😂 😂

 விஷ்ணுவின் வார்த்தைகளும், அவனுடைய ஏளனமான பார்வையும் வைஷாலியின் இதயத்தை நெருஞ்சி முள்ளாக தைத்தது. அவன் “என்னோட ஷாலினி” என்று அழுத்தி சொன்னது அவளுடைய காதுகளில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. இருந்தாலும், வைஷாலி விஷ்ணுவின் முன் உடைந்துவிட விரும்பவில்லை. 

வைஷாலி: சாதாரணமாக அவனைப் பார்த்தவள், “என்னாச்சு விஷ்ணு மாமா உனக்கு..??? ஏன் இப்படி எல்லாம் என் கிட்ட பேசுற..??? நான் இன்னைக்கு ஒரு ஃபங்ஷனுக்கு வெளியில போனும்னு சொன்னதுனால, அம்மா தான் இந்த புடவைய குடுத்து கட்டிட்டு போன்னு சொன்னாங்க. அதான் கட்டிட்டுு வந்தேன். இதுல என்ன தப்ப நீ கண்ட…???” என்று எதுவும் தெரியாத அப்பாவி போல் தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு நடிப்பை போட்டாள்.

 இப்போது கூட தன்னிடம் பொய் சொல்லிக் கொண்டு இருக்கும் வைஷாலியை பார்த்த விஷ்ணுவிற்கு அவள் மீது அதிகமாக கோபமும், வெறுப்பும், வந்தது. ஏனென்று தெரியவில்லை; இது வரை அவன் பார்த்து பழகிய வைஷாலிக்கும், இப்போது அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் வைஷாலிக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்று அவனுக்கு தோன்றியது.

விஷ்ணு: “சும்மா நடிக்காத சரியா, நீ ஷாலினி வீட்டுக்கு போய் அவ கிட்ட பேசுனது எல்லாமே எனக்கு தெரியும்.” என்று கோபமாக சொன்னான்.😡 🔥

வைஷாலி: “சரி மாமா. அதான் உனக்கே நான் அங்க போனது தெரிஞ்சிருச்சுல்ல…!!! இனிமே உண்மைய உன் கிட்ட மறைச்சுு பிரயோஜனம் இல்ல. இத பத்தி உன் கிட்ட சொன்னா நீ வருத்த படுவியேன்னு நினைச்சு தான் நான் மறச்சேன். ஆனா இப்ப நீயே என்ன இப்படி சந்தேகமா பாக்கும்போது நான் அத சொல்லாம இருக்க முடியாது.” என்று பெரியதாக பில்டப் செய்து ஏதோ ஒரு கதையை சொல்வதற்கு தயாரானாள். 

“நீ உருட்டு. உன் வாய்; உன் உருட்டு.” என்பதுபோல, வைஷாலி என்ன தான் சொல்லப் போகிறாள் என்று கேட்போம் என்று நினைத்த விஷ்ணு அமைதியாகவே இருந்தான். 

வைஷாலி: நீ ஷாலினிய லவ் பண்றேன்னு எனக்கு இன்னைக்கு தான் தெரிய வந்துச்சு. நான் சின்ன வயசுல இருந்து உன்ன லவ் பண்றேன் மாமா. அத இத்தன வருஷமா உன் கிட்ட சொல்லாம இருந்தது, என்னோட தப்பு தான்னு தோணுச்சு. அதான் அந்த ஷாலினி ஓட வீட்டு அட்ரஸ்ஸ கண்டுபிடிச்சு அவ கிட்ட போய், நான் என் விஷ்ணு மாமாவ ரொம்ப லவ் பண்றேன் ஷாலினி. என்னால அவன் இல்லாம இருக்க முடியாது. ப்ளீஸ் நீ எங்களுக்கு நடுவுல வராதுன்னு அவ கிட்ட கெஞ்சி் கேட்டேன். நீ யாருன்ற உண்மையையும் அவ கிட்ட சொன்னேன். எப்படியாவது அவ என்ன புரிஞ்சிக்குவான்னு நம்பி தான் நான் அத எல்லாம் சொன்னேன்.

ஆனா அவ நீ நினைக்கிற அளவுக்கு நல்லவை இல்ல விஷ்ணு. உன்ன பத்தின உண்மை அவளுக்கு தெரிஞ்ச உடனே, நீ அவ்ளோ பெரிய பணக்கார குடும்பத்துல மருமகளா வாழ போக உனக்கு அந்த வாய்ப்ப சும்மா விட்டுக் குடுக்கிறதுக்கு நான் என்ன லூசான்னு என்ன பாத்து கேட்டா. 

அவ அப்டி பேசுவான்னு நான் எதிர் பாக்கவே இல்லை. சரி அவ கேட்கிற காசு குடுத்தாவது உன்னை இந்த மாதிரி ஒரு பொண்ணு கிட்ட இருந்து காப்பாத்தலாம்னு நினைச்சு அவ கிட்ட எவ்ளோ காசு வேணும்ன்னு கேட்டேன்.

அவ மனசாட்சியே இல்லாம என் கிட்ட ரெண்டு கோடி வேணும்ன்னு கேட்டா. அவ்ளோ காசு என் கிட்ட இல்லைன்னு நான் எவ்வளவோ சொல்லி பாத்தேன். 

ஆனா அவ அதையும் அக்செப்ட் பண்ணிக்கவே இல்ல. எனக்கு இப்போ 15 லேக்ஸ் இம்மீடியேட்டா வேணும். நீ பேலன்ஸ அப்புறம் குடுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா. அதான் நானும் வேற வழி இல்லாம அரேஞ்ச் பண்ணி குடுத்துட்டேன்.

நீ அவள ட்ரூவா லவ் பண்ணிட்டு இருக்க. ஆனா, அவ இவ்ளோ சீப்பானவளா இருக்கான்னு உனக்கு தெரிஞ்சா; நீ அத தாங்க மாட்டேன்னு தான் நான் இத உன் கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன் மாமா. ஐ அம் சாரி. இப்ப அவ நடந்ததை உன் கிட்ட எந்த மாதிரி மாத்தி சொல்லி இருக்கான்னு எனக்கு தெரியல. ப்ளீஸ்…!!! நீ என் மேல கோபப்படாத. நான் இத எல்லாம் உன் நல்லதுக்காக தான் செஞ்சேன்.” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் விஷ்ணுவை பார்த்து ஒரு பெரிய பொய்யை அப்படியே உண்மை போல் சலனமின்றி சொல்லி முடித்தாள். 😥😣 அவளுடைய முக பாவங்களையும், அவள் சொன்ன விதத்தையும் வைத்துப் பார்த்தால், அவள் சொன்னது பொய் தான் என்று ஒருவராலும் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு நேர்த்தியான நடிகையாக இருந்தாள் வைஷாலி. 

 விஷ்ணு ஷாலினியை பற்றி மட்டும் முழுவதுமாக அறிந்து இருக்கவில்லை என்றால், வைஷாலி சொல்வது தான் உண்மை என்று அப்படியே நம்பி இருப்பான். ஆனால் விஷ்ணுவிற்கு ஷாலினியின் மீது பரிபூரணமான நம்பிக்கை இருந்தது. 

விஷ்ணு: ஏளனமாக வைஷாலியை பார்த்தவன், “அப்ப ஷாலினி தான் உன் கிட்ட காசு வேணும்னு கேட்டா…????” என்று நக்கலாக கேட்டான். 😂

தான் சொன்ன பொய்யில் உறுதியாக இருந்த வைஷாலி, “ஆமா அவ தான் கேட்டா. இல்லனா நான் ஏன் அவளுக்கு காசு தர போறேன்..!!!” என்று அப்பாவியாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு சொன்னாள். 

விஷ்ணு: ஓ..!!! ஆமாம்மா. அதுவும் உன் கிட்ட அவ ரெண்டு கோடி கேட்டு இருக்கால்ல…????

அவனை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்த வைஷாலி ஆமாம் என்று தன்னுடைய தலையை ஆட்டினாள். அதோடாவது அவள் அமைதியாக இருந்து இருக்கலாம்; அப்போதும் சும்மா இருக்காமல் சனி பகவான் அவர்களுடைய நாக்கில் இருந்து கொண்டு விளையாடுவதைப் போல, “நீ என்ன கல்யாணம் பண்ணிக்கலனா கூட பரவால்ல மாமா. எனக்கு நீ நல்லா இருந்தா போதும். இந்த ஷாலினி மாதிரி ஒரு மோசமானவள கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னோட லைஃப ஸ்பாயில் பண்ணிக்காத.” என்று விஷ்ணுவின் வாழ்க்கையில் தனக்கு மட்டும் தான் அக்கறை இருக்கிறது என்பது போல, உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டு இருந்தாள். 

இதற்கு மேலும் விஷ்ணுவால் அவள் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அவளுடைய  கன்னத்தில் “பளார்” என்று அறைந்தான். தனக்கு இருந்த கோபத்தில் விஷ்ணு அடித்த அடி வைஷாலியின் கன்னத்தில் இடியாக இறங்கியது. அவன் அடித்த அடியில் வைஷாலியின் வாயில் இருந்து ரத்தமே வந்து விட்டது.

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured