Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 117

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 117

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 117: எனக்கே உன் மேல கோபம் வருது (பார்ட் 2)


ஷாலினியின் வீட்டில்…

விஷ்ணு அங்கு இருந்து சென்ற பின் கதவை கூட சாத்தாமல், ஒரு ஓரமாக சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்த ஷாலினி, அழுது கொண்டு இருந்தாள். 😭😭 😭 அப்போது யாரோ தன்னுடைய வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வருவதை கவனித்த ஷாலினி அது விஷ்ணு தான் என்று நினைத்து, “நான் தான் உன்ன பாக்க புடிக்கலைன்னு சொன்னேன்ல, அப்புறம் ஏன் திரும்ப திரும்ப வந்து என் முன்னாடியே நிக்கிற..?? போ…!!!” என்று நிமிர்ந்து கூட பார்க்காமல் சத்தமாக கத்தினாள்.

அவளுடைய பேச்சை புறக்கணித்த ரித்திகா அவள் அருகே வந்து, “விஷ்ணு கிளம்பிட்டான்.” என்றாள் மெல்லிய குரலில். அவளுடைய குரலை வைத்தே வந்திருப்பது ரித்திகா தான் என்று உணர்ந்து கொண்ட ஷாலினி, உடனே எழுந்து ஓடிச் சென்று அவளை கட்டி பிடித்து கொண்டு, “எனக்கு மட்டும் ஏன் அக்கா இப்படி எல்லாம் நடக்குது..??? கௌசல்யாவோட அம்மா எப்பயுமே என்ன ராசி கெட்டவன்னு சொல்லி திட்டிக்கிட்டே இருப்பாங்க. அவங்க என் மேல இருக்குற கோவத்துல சொல்றாங்கன்னு தான் நினைச்சேன். இப்ப எனக்கே அது உண்மை தானோன்னு தோணுது.” என்று அழுது கொண்டே சொன்னாள். 😭 😭 😭

அவளுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்ட ரித்திகா, “நீ ரொம்ப லக்கி ஷாலு. அதான் உனக்கு விஷ்ணு, மாதிரி ஒரு பையன் கிடைச்சு இருக்கான். உனக்கு கிடைக்க இருக்கிற நல்ல லைஃப நீயே கெடுத்துக்காத. அவன பத்தி அவன் உன் கிட்ட சொல்லாதது   மட்டும்  தானே உன்னோட கோபத்துக்கு காரணமா ..??? 

நீயே யோசிச்சு பாரு.  சிலர் அவங்க கிட்ட எதுவுமே இல்லைன்னாலும்; என் கிட்ட அது;இருக்கு, இது இருக்குனு, சொல்லி லவ் பண்ணி ஏமாத்திட்டு இருக்காங்க…??? அவன் என்ன அந்த மாதிரியா பண்ணனான் சொல்லு..??? அவன்  கிட்ட எதுவுமே இல்லைன்னு நம்ம கிட்ட ஒரு நாள் கூட பொய் சொன்னதே இல்ல. அவன் யாருன்னு நம்ம கிட்ட சொல்லாமல் மறச்சிட்டான் அவ்ளோ தான்.” என்று பொறுமையாக சொல்லி அவளுக்கு விஷ்ணுவின் சூழ்நிலையை விளக்க முயன்றாள். 

ஆனால், ஷாலினியோ எதையும் புரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. அதனால் ரித்திகாவை  கோபமாக பார்த்தவள், “அப்ப நீங்க எனக்காக வரலையா..??? அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறதுக்கு தான் நீங்க இப்ப இங்க வந்தீங்களா…??? உங்களுக்கு கூட என்னோட நிலைமை புரியவிலைல்ல அக்கா..???” என்று விரக்தியான குரலில் கேட்டாள். 😒 😖

ஷாலினி தன் மீது கோபப்பட்டாலும், ரித்திகா பொறுமையாகவே அவளிடம் பேசினாள். 

ரித்திகா: உன்னோட மைண்ட் செட் எங்க எல்லாருக்கும் நல்லா புரியறதுனால தான் உன் கிட்ட வந்து இவ்ளோ பொறுமையா இப்ப பேசிட்டு இருக்கோம். அவன் செஞ்சது தப்பே இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன். நீ புரிஞ்சுக்க வேண்டியது ரெண்டே விஷயம் தான். ஒன்னு இது மன்னிக்க முடியாத அளவுக்கு பெரிய தப்பு இல்லை. அப்புறம், இத அவன் உனக்காக தான் பண்ணி இருக்கான். உன்ன ஏமாத்துறதுனால அவனுக்கு பத்து பைசாக்கு கூட பிரயோஜனம் இல்ல ஷாலினி, நீ அத முதல்ல புரிஞ்சுக்கோ. 

அவன் உன்ன லவ் பண்றான். எங்க ஸ்டார்டிங்லயே அவன பத்தி உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா, நீ அவன் கிட்ட நார்மலா பழக மாட்டியோன்ற பயத்துல அவன் அவன பத்தி சொல்லாம விட்டுட்டானன் அவ்ளோ தான். அதுக்காக நீ ஏதோ அவன ஒரு கிரிமினல் மாதிரி ட்ரீட் பண்றது ரொம்ப தப்பு. 

ஷாலினி: சரி அத விடுங்க. அந்த வைஷாலி என் கிட்ட வந்து எப்படி பேசிட்டு போனா தெரியுமா அக்கா..??? என்னோட லவ்வுக்கு அவ விலை பேசுறா… என்னால எப்டி அத டாலரேட் பண்ண முடியும்…??? இதுல விஷ்ணுவை லவ் பண்றதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு என் கிட்டயே கேட்கிறா.

ரித்திகா: “உனக்கு வைஷாலி உன் கிட்ட பிகேவ் பண்ணது புடிக்கலைன்னா, நீ அவ மேல கோபப்படு. அவ கிட்டட பேசாம இரு. அத விட்டுட்டு உனக்கு அவ மேல இருக்கிற கோபத்த எதுக்கு இப்ப விஷ்ணு மேல காமிக்கிற…??” என்று சற்று அழுத்தமான குரலில் கேட்டாள். 

ரித்திகாவின் பேச்சு ஷாலினியிடம் சரியாக வேலை செய்தது. ஒரு வேளை தன் மீது தான் தவறு இருக்குமோ, என்ற கோணத்தில் ஷாலினி அமைதியாக யோசித்து கொண்டு இருந்தாள்.

ரேவதி: “ஷாலினியின் கையை பிடித்து கொண்டு, “நீயும் எனக்கு ரித்திகா மாதிரி தான். விஷ்ணு ரொம்ப நல்ல பையன் ஷாலினி. இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்துக்காக அவன் மேல கோபப்பட்டு, நீ அவனை மிஸ் பண்ணிராத. உங்களோட பினான்சியல் ஸ்டேட்டஸ் -லாம் பத்தி யோசிச்சு உன்ன நீ ரொம்ப கன்ஃபியூஸ் பண்ணிக்கிற. விஷ்ணு கிட்ட இப்ப என்ன இருக்கோ, அது எல்லாமே அவனோட குடும்ப சொத்து. அவன் அந்த மாதிரி ஒரு குடும்பத்தில பிறந்ததும், நீ இந்த மாதிரி ஒரு குடும்பத்தில பிறந்ததும், நம்ம கைல ஒன்னும் இல்லையே…!!! 

எத எல்லாம் நம்மளால நம்ம லைஃப்ல கண்ட்ரோல் பண்ண முடியாதோ, அத பத்தி எல்லாம் யோசிச்சு கவலை பட கூடாது. லவ்வும் அப்படி தான்.  நமக்கு எப்ப யார் மேல லவ் வரும்னு நம்ம யாருக்குமே தெரியாது. அப்போ, விஷ்ணுவுக்கு உன் மேல வந்த லவ்வ நம்ம எப்படி தப்புன்னு சொல்ல முடியும்..??? அவன் உன்ன ட்ரு ஆ தானே லவ் பண்றான்… உன்ன ஏமாத்தணும்னு அவன் நினைக்கவே இல்லையே..!!! அந்த மாதிரியான ட்ரூ லவ்வ நீ ரெஸ்பெக்ட் பண்ணி செலிப்ரேட் பண்ண வேண்டாமா…???? நீ ஏன் இவ்ளோ இம் மெச்சூர்ட் ஆ பிஹேவ் பண்ற…???” என்று தாய் ஸ்தானத்தில இருந்து தன்னுடைய மகளுக்கு அறிவுரை வழங்கினாள்.

ரித்திகா“ஆமா அம்மா சொல்றது கரெக்ட் தான். நீ எப்படி ஈஸியா விஷ்ணுவ விட்டு குடுக்கிறதுக்கு ரெடி ஆயிட்ட..??? இப்போ அந்த வைஷாலியவே பாரு…!!! அவ சின்ன வயசுல இருந்து விஷ்ணுவ லவ் பண்ணி இருக்கா. ஆனா விஷ்ணு அவள கண்டுக்காம இப்ப உன்ன லவ் பண்றான். ஆனா, அதுக்காக அவ விஷ்ணு வேணான்னு யோசிக்கவே இல்லையே…!!! உன்ன எப்படியாவது விஷ்ணு கிட்ட இருந்து பிரிக்கணும்ன்னு தானே நினைக்கிறா..?? நீ இப்படியே பிகேவ் பண்ணிட்டு இருந்தேன்னா, நீயே ஈஸியா அவளுக்கு ரூட்ட கிளியர் பண்ணி குடுக்குற மாதிரி ஆயிடும். விஷ்ணு யாருன்னு எப்பவோ எனக்கு தெரியும் ஷாலினி.” என்றாள்.

ஷாலினி: “அப்ப நீங்களும் அவன் கூட சேர்ந்து  என்ன ஏமாத்திட்டீங்களா அக்கா..???” இன்று வருத்தமான குரலில் கேட்டாள். 😕 😢

ரித்திகா “நீ திரும்ப திரும்ப அதவே சொல்லிட்டு இருக்காத. எனக்கே உன் மேல கோவம் வருது. என்னா சும்மா அதையே சொல்லிட்டு இருக்க…!!! அப்படி உன்ன ஏமாத்தி நாங்க என்னத்த டி சாதித்ச்சுட்டோம்..???” என்று கடுப்பான குரலில் கேட்டவள், விஷ்ணுவை பற்றிய உண்மைகள் அனைத்தும் தனக்கு எப்போது தெரிந்தது என்பது முதல்; இறுதியாக அவளும் விஷ்ணுவும் ஷாலினி பற்றி பேசியது வரை அனைத்தையும் தெளிவாக அவளிடம் சொன்னாள். 

“நீ என்னமோ, விஷ்ணு உன்ன பொய் சொல்லி ஏமாத்திட்டான்னு நினைச்சுட்டு இருக்க. ஆனா உங்க லவ்வ பத்தி அவனோட அண்ணன் வருனுக்கே தெரியும். அத பத்தி உனக்கு தெரியுமா…??? நாங்க எப்ப உன்ன பத்தி பேசினாலும், “நீங்க எப்படியாவது என்னையும், ஷாலினியையும், சேத்து வச்சுருங்கன்னு தான் அவன் கேட்டு கிட்டே இருப்பான். இந்த மாதிரி அவன் உனக்காக எவ்வளவோ பண்ணி இருக்கான். நீ அவனுக்காக எதுவுமே பண்ணலேன்னாலும் பரவாயில்லை. அவன   இப்படி எல்லாம் கஷ்ட படுத்தாமையாவது இரேன்…!!!” என்று சற்று எரிச்சலுடன் சொன்னாள். 😒

ஷாலினி: அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள், “என்ன அக்கா சொல்றீங்க..!! வருண் சாருக்கு அவன் என்ன லவ் பண்றத பத்தி தெரியுமா..???” என்று கேட்டாள். 😳

ரித்திகா: “ம்ம்… அதுலாம் அவருக்கு எப்பவோ தெரியும்.” என்று உறுதியான குரலில் சொன்னாள். 

ஷாலினி: அப்ப இதுக்காக அவரு விஷ்ணு மேல கோவப்படலையா..???

ரித்திகா “லூசா டி நீ..??  தான் அன்னைக்கே உன் கிட்ட கோயில்ல சொன்னேன்ல…!! அவரே லவ் மேரேஜ் தான் பண்ணி இருக்காரு. அப்புறம் எப்படி அவரு லவ்வ ஆப்போஸ் பண்ணுவாரு..??” என்று பாயிண்ட் ஆக கேட்டாள்.

ஷாலினி: “அப்ப நானும், விஷ்ணுவும், கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிரச்சினையும் வராதா..???” என்று அப்பாவியாக கேட்டாள்.

ரித்திகா“அதுலாம் வராது டி. அப்படியே வந்தாலும் அவனோட அண்ணனும், நானும், பாத்துக்க மாட்டமா..??? நீயும், நானும், ஒரே வீட்டுக்கு மருமகளா போ போறேன்னு நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..?? உனக்கு அந்த சந்தோஷமே இல்லையா..???” என்று சோகமாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு கேட்டாள். 😞

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured