அத்தியாயம் 114: என்னை உன் மனம் அறியாத (பார்ட் 1)
ஷாலினியின் வீட்டில்…
பாவம் அந்த பேதைக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட அங்கே யாரும் இல்லை. “நீ என்ன ஏமாத்திட்டல்ல விஷ்ணு…!!!” என்று மீண்டும் மீண்டும் சொல்லி புலம்பிய படியே அழுது கொண்டு இருந்தாள். விஷ்ணுவின் மீதும் தன்னுடைய விதியின் மீதும் தனக்கு இருந்த கோபத்தை அவளால் தன் மீது மட்டுமே காட்டிக்கொள்ள முடிந்தது. 😭 😭 😭 😭
ஷாலினி புடவை கட்டி இருப்பதால், அவளுக்கு மேட்ச் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்த விஷ்ணு; அவள் கட்டி இருக்கும் புடவை கலருக்கு மேட்ச் ஆக அதே கலரில் சர்வாணி அணிந்து வந்து இருந்தான். ஷாலினியின் வீட்டின் முன் வந்து நின்றவன், அவளோடு முதல் முறையாக இது போன்ற பங்ஷனுக்கு அவளோடு முதல் முறையாக செல்ல போகும் மகிழ்ச்சியிலும், அந்த புடவையில் பார்க்கும் ஆர்வத்திலும் இருந்தவன்; காலிங் பெல்லை இரண்டு மூன்று முறை வேகமாக அடித்தான்.
அந்த காலிங் பெல்லின் சத்தம் ஷாலினியை எரிச்சல் ஊட்டியது. 😒 அதனால் அவளுடைய காதுகளை தன்னுடைய இரு கையாலும் இறுக்கமாக மூடியவள், தரையில் மண்டியிட்டு அமர்ந்து தன்னுடைய முகத்தை தன்னுடைய கால்களுக்குள் புதைத்துக் கொண்டாள். அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. 😭 😭 😭 ஷாலினி வந்து கதவை திறக்காததால், மீண்டும் மீண்டும் காலிங் பெல்லை அடித்து கொண்டே இருந்தான் விஷ்ணு.
ஒரு கட்டத்தில் ஷாலினியால் அவளுக்கு இருந்த மன வேதனையில், அந்த சத்தத்தை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லைை. 😒 இப்போது விஷ்ணுவை பார்ப்பதற்கே அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவன் ஏன் தன்னை எப்படி ஏமாற்றினான்…?? என்று அவனுடைய சட்டையை பிடித்து நாலு வார்த்தை நன்றாக கேட்க வேண்டும் என்று அவளுடைய உதடுகள் துடித்தது. 😡 அதனால் அவன் மீது அதிக கோபத்துடன் எழுந்து சென்றவள், கதவை திறந்தாள். புது பட்டு சேலை உடுத்தி அழகு பதுமையாக இருக்கும் ஷாலினியை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்த விஷ்ணு, அவள் இருந்த கோபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். 😳
இது போன்ற கைவிட பட்ட நிலையில், ஷாலினியை அவன் பார்ப்பது இது மூன்றாவது முறை. அதனால் அவனுடைய மனம் வலித்தது. 💔 சற்று நேரத்திற்கு முன் தன்னுடன் சந்தோஷமாக பேசியவளுக்கு, அதற்குள் என்னானது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லைை. அதனால் பதட்டத்துடன் ஷாலினியை அழைத்துக்கொண்டு அவளுடைய வீட்டிற்குள் சென்றவன், கதவை சாத்திவிட்டு அவளுடன் பேச தொடங்கினான்.
விஷ்ணு: “ஏய்…!!! என்ன ஆச்சு டி..??? உன்ன ஃபங்ஷனுக்கு போவதற்கு கிளம்பி ரெடியா இருக்க தானே சொன்னேன். இப்ப ஏன் இப்படி இருக்க..??? திரும்பவும் உன் ஃபேமிலில இருந்து வந்து அவங்க ஏதாவது பிரச்சனை பண்ணாங்களா…???” என்று பதட்டமாக கேட்டான். 😟
ஷாலினி அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவளுடைய கூந்தல் அவளுடைய முகத்தில் விழுந்து அதை மறைத்து இருந்தது. ஷாலினியின் அருகே சென்று அவருடைய முகத்தில் இருந்த முடியை ஒதுக்கி விட்டவன், “ப்ளீஸ்…!!! என்னாச்சுன்னு சொல்லு டி. நீ இப்டி அமைதியா இருக்க… இருக்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று கலங்கிய கண்களுடன் வலி நிறைந்த குரலில் சொன்னான். 🥺 😥 💔
ஷாலினி: தன் மீது இருந்த அவனுடைய கையைத் தட்டி விட்டவள், “நான் இப்ப இப்டி இருக்கன்னா.. அதுக்கு நீ தான்… நீ மட்டும் தான் டா காரணம்…!!!” என்று தன்னுடைய ஆள் காட்டி விரலை விஷ்ணுவின் நெஞ்சில் வைத்து குத்தி ஆக்ரோஷமான குரலில் சொன்னாள். 😡 🔥 அப்போது விஷ்ணுவின் கண்களில் இருந்து வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் ஷாலினியின் கைகளில் விழுந்தது. 😥
ஆனால் அவனை எரித்து விடும் கோபத்தில் இருந்த ஷாலினி, அதை எல்லாம் கவனிக்கவில்லை. ஷாலினியை வலி நிறைந்த கண்களோடு பார்த்த விஷ்ணு, “நீ என் மேல தான் கோவமா இருக்கேன்னு எனக்கு புரியுது. ஆனா ஏன் இவ்ளோ கோவமா இருக்கேன்னு சொல்லு டி ப்ளீஸ்..!!! உனக்கு என் மேல என்ன கோபம் இருந்தாலும், அத என் மேல காட்டு. என்ன அடி, திட்டு, சண்டை போடு, பரவால்ல.
ஆனா, இப்படி இருக்காத. என்னால உன்ன இப்படி பாக்க முடியல ஷாலினி. என்ன ஆச்சுன்னு சொல்லி தொல டி.” என்று கேட்டான். 🥺 😢
ஷாலினி: அவனைப் பார்த்து விரக்தி புன்னகை ஒன்றை சிந்தியவள், அழுது கொண்டே மூச்சு வாங்க சிறு விசும்பல்களுடன்; வைஷாலி அங்கே வந்ததிலிருந்து அவள் தன்னிடம் பணத்தை கொடுத்துவிட்டு சென்றது முதல் அனைத்தையும் சொல்லி கதறி அழுதாள். 😭 😭 😭
அவள் பேசியதை கேட்ட விஷ்ணுவிற்கு வைஷாலியின் மீதும், தன்னால் தானே மீண்டும் ஒரு முறை ஷாலினி இவ்வளவு வேதனை பட்டுவிட்டாளே என்று தன் மீதும் கூட கோபம் வந்தது. 😡 அதனால் ஷாலினியின் முன் மண்டியிட்டு அமர்ந்த விஷ்ணு, “அவ பேசுனதுக்கு நான் உன் கிட்ட சாரி கேட்டுக்குறேன் டி. அவ என்ன லவ் பண்றதே, எனக்கு நீ இப்ப சொல்லி தான் தெரியும். அதுக்காக அவ பண்ணது பெரிய தப்பு தான். அண்ட் என்னையும் முடிஞ்சா மன்னிச்சிரு.
நான் உன் கிட்ட என்னோட உண்மையான ஐடென்டிவிட்டிய பத்தி மறைச்சே ஆகணும்னு பிளான் பண்ணி எல்லாம் செய்யல ஷாலினி. நான் அன்னைக்கு கூட ஸ்கூல் -க்கு சேர்மனா சும்மா ஒரு விசிட் பண்ணிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன். எனக்கு ஒரே இடத்தில உட்கார்ந்து கிடடு பாக்குற வேலையெல்லாம் சுத்தமா பிடிக்காது. அதனால தான் நான் ஸ்கூல் பக்கமே வராம இருந்தேன். அன்னைக்கு நான் உன்ன பாத்த உடனே, என்னோட லைஃப்க்கு ஒரு அர்த்தம் கிடைச்ச மாதிரி இருந்துச்சு. ஏன்னு தெரியல, அப்பவே எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருச்சு.
அப்ப திடீர்னு, நீ என் கிட்ட என்ன யாருன்னு கேட்ட. அப்புறம் நீயா நான் டீச்சர்ரான்று கேட்ட. ஒரு வேளை நான் தான் இந்த ஸ்கூல் ஓட சேர்மன்னு உன் கிட்ட சொல்லி இருந்தா, உனக்கு என் மேல மரியாதையும், பயமும், தான் வந்து இருக்குமே தவிர லவ் வந்திருக்காது. நானே உன் கிட்ட வந்து அப்ப லவ்வ சொல்லி இருந்தா கூட, இன்னைக்கு நடந்தது அன்னைக்கே நடந்திருக்கும். எங்க நான் உன்ன இழந்துருவேனோன்ற பயத்துல தான் நீ என்ன டீச்சரான்னு கேட்டவுடனே, நான் ஆம்மான்னு சொல்லிட்டேன்.
மத்த படி நான் உன்ன ஏமாத்தணும்ன்னு எல்லாம் நினைக்கல. ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ. நான் உன் கிட்ட எப்பவுமே பொய் சொல்லல. உண்மைய மறைச்சேன் அவ்ளோ தான்.” என்று வலி நிறைந்த குரலில் சொன்னவன் தன் பக்க நியாயத்தை அவளுக்கு விளக்க முயன்றான். 🥺 💔
இருக்கு..???? நீ யாருன்னே தெரியாம தானே நான் உன்ன லவ் பண்ணேன். ஆனா இப்போ நான் எல்லாத்தையுமே காசுக்கு ஆசைப்பட்டு பண்ண மாதிரி ஆயிடுச்சு இல்ல..??? ராகவி அக்கா உங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லும் போதே, உங்கள மத்தவங்க காசுக்காக ஆசைப்பட்டு தான் இந்த கல்யாணத்தை நீங்க பண்ணிக்கிறீங்கன்னுனு தப்பா பேசுவாங்க அக்கா. இந்த கல்யாணம் வேணாம்ன்னு நான் சொன்னேன். இப்ப என்னால எப்படி உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியும்…???” என்று விரக்தியில் அவனைப் பார்த்து கேட்டவள், வைஷாலி தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற பணத்தையும், விஷ்ணு தனக்கு வாங்கி கொடுத்த புடவையையும், மொத்தமாக வாரிசுருட்டி எடுத்தவள் அதை அவனுடைய முகத்தில் விட்டெறிந்து, “இந்த இதையெல்லாம் இங்க இருந்து எடுத்துட்டு போ. முதல்ல…!!! இதுல 15 லட்சம் இருக்காம்… உன்னோட ஆசை அத்தை பொண்ணு என் காதல விலைபேசி இத வச்சுக்கிட்டு நான் உன்ன விட்டு போயிடனும்ன்னு அவ சொல்றா…!!! இன்னும் நான் எவ்ளோ கேட்டாலும், அவ எனக்கு பணம் தரத்துக்கு ரெடியா இருக்கலாம்.
அவ அப்படி பேசறத எல்லாம் கேட்கும் போது எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்துச்சு தெரியுமா…??? ஆனா என்னால அவ கிட்ட ஒரு வார்த்தை கூட பதில் பேச முடியலையே…!!! நான் வேணா வேணான்னு சொல்ல சொல்ல, வலுக்கட்டாயமா என் கையில குடுத்துட்டு எகத்தாளமா கிளம்பி போயிட்டா. இதே நீயும், நானும், ஈக்குவல் ஸ்டேட்டஸ்ல இருந்து இருந்தா; அவ என் கிட்ட அப்டி பிஹேவ் பண்ணதுக்கு நான் அவளை சும்மா விட்டுருப்பனா..???
உனக்கு புரியாது விஷ்ணு. இப்போ எனக்கு எப்படி இருக்குன்னு உனக்கு புரியாது. அவ முன்னாடி நான் எல்லாம் ஒரு ஆளே இல்லைன்னு என்ன நினைக்க வச்சுட்டு போயிட்டா. என்னால இத ஏத்துக்கவே முடியல. நீ என் கண்ணு முன்னாடியே நிக்காத. ப்ளீஸ். இத எல்லாம் எடுத்துக்கிட்டு இங்க இருந்து போயிரு. போயிரு…!!!” என்று சொல்லி கொண்டே தரையில் அமர்ந்து அழுதாள். 😭😭 😭
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)