அத்தியாயம் 111: வைஷாலியின் திட்டம் (பார்ட் 2)
விஷ்ணு: சோகமாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டவன், “என்ன அக்கா…. இப்படி கிண்டல் பண்றீங்க..???” என்றான். 😒
ரித்திகா சரி விடு அழுவாத. நீ இப்ப எங்கேஜ்மென்ட் -க்கு போற ஓகே. அதுக்கு நான் இப்ப என்ன பண்றது..??? 😂 😂 😂
விஷ்ணு: “நீங்க ஒன்னும் பண்ண வேணாம் அக்கா.” என்று சிறு வெட்கத்துடன் சொன்னான்.
ரித்திகா“அப்புறம் எதுக்கு டா அத பத்தி என்கிட்ட பேசுற…???” என்று அவனைப் பார்த்து முறைத்த படி கேட்டாள். 😒 🤨
விஷ்ணு: “கோச்சுக்காதீங்க அக்கா.” என்று சிரித்துக்கொண்டே சொன்னவன் 😂 😂 😂 “என்னோட பிரெண்ட்ஸ்ல பாதி பேருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. மத்தவங்க எல்லாரும் கமிட்டட். நான் மட்டும் அங்க சிங்கிளா போனா நல்லா இருக்காது. அப்புறம் நான் அவங்களுக்கு அங்க போய் கப்புல் போட்டோகிராபர் வேலை தான் பார்க்கணும். அதனால….” என்று இழுத்தான்.
ரித்திகா: அவனை பார்த்து முறைத்த படியே, “அதனால… நான் என்ன பண்ணனும்..???” 😒 🤨
விஷ்ணு: “கம்பெனிக்கு உங்க தங்கச்சிய என் கூட அனுப்பி வைங்க.” என்று சிறு வெட்கத்துடன் சொன்னான். ☺️
ரித்திகா: “உனக்கு அவள கூட்டிட்டு போகணும்னா நீயே அவ கிட்ட கேட்க வேண்டியது தானே..??? என்னமோ என்ன அவள உன் கூட அனுப்பி வைக்க சொல்ற..??? என்ன பாத்தா உனக்கு எப்படி டா தெரியுது..??? என்ன நீ அக்கா.. அக்கானு… கூப்பிட்டு இப்ப என்ன வேலை பாக்க சொல்ற..??” என்று பொய்யான கோபத்துடன் கேட்டாள். 😕
ஷாலினி: “அவங்களே சொன்னாலும், நான்லாம் உன் கூடட வரமாட்டேன் போ.” என்று அவசரமான குரலில் சொன்னாள்.
விஷ்ணு: “பாருங்க அக்கா..!!! நீங்க சொன்னாலே.. அவ வர மாட்டேங்குற. இதுல நான் சொன்னா இந்த ராட்சசி கேப்பாளா..??? இப்படி ஆம்பள பசங்கள கெஞ்ச விடுறது எல்லாம் பெரிய பாவம். அதெல்லாம் பண்ண கூடாதுன்னு. உங்க தங்கச்சிக்கு சொல்லி புரிய வச்சு அனுப்பிவைங்க.” என்று பாவமாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். 😟 😞
ரித்திகா“ஏன் டி போயிட்டு தான் வாவேன்…???” என்று மெதுவாக ஷாலினியின் அருகே குனிந்து கேட்டாள்.
ஷாலினி: “ஐயையோ..!!! நான் எப்படி அவன் கூட தனியா போறது..?? எனக்கு பயமா இருக்கு. வேணா நீங்களும் என் கூட வாங்க.” என்று அவளும் மெதுவான குரலில் பதில் சொன்னாள்.
ரித்திகா அடியே அங்க நான் எதுக்கு டி..???
ஷாலினி: இல்ல அக்கா. எனக்கு பயமா இருக்கு நான் போக மாட்டேன்.
ரித்திகா ஒழுங்கா அவன் கூட போயிட்டு வா. நீ இப்படியே பயந்துட்டே இருந்தின்னா.. எப்ப அவன் கிட்ட உன்னோட லவ்வ சொல்ல போற..??? இது ஒரு நல்ல சான்ஸ். சோ வேஸ்ட் பண்ணாத.
ஷாலினி: அப்படின்றீங்க..????
ரித்திகா: அட அப்படி தான் டி.
ஷாலினி: “அப்ப இன்னைக்கு சொல்லிடவா…???” என்று தயக்கமான குரலில் கேட்டாள்.
ரித்திகா: அவள் பேசியதை கேட்டு கடுப்பானவள், “ஆமா இன்னைக்கு தான். ஒழுங்கா போய் சொல்லி தொல. இல்லேன்னா உன்ன அந்த வைஷாலி ஓவர் டேக் பண்ணிட்டு போயிடுவா.” என்று காட்டுமாக சொன்னாள். 😒
ஷாலினி: என்ன அக்கா திட்டுறீங்க..??? 🙄
ரித்திகா: பின்ன உன்ன கொஞ்சுவாங்களா..??? லவ் பண்ண மட்டும் தெரியுதுல்ல… அது சொல்றதுக்கு உனக்கு என்ன பயம்..??? 😒
ஷாலினி: “சரி… சரி … அக்கா. டென்ஷன் ஆகாதீங்க. நான் இன்னைக்கே சொல்லிடறேன்.” என்று தயக்கமான குரலில் சொன்னாள்.
ராகவி: “குட் கேர்ள்.” என்று அவளைப் பார்த்து சொல்லிவிட்டு சிரித்தவள் விஷ்ணுவை பார்த்து, “அவ வருவா. நீ கூட்டிட்டு போ. நைட்டு ரொம்ப நேரம் லேட் ஆகாம பாத்துக்கோ. பத்திரமா போயிட்டு சீக்கிரமா வாங்க.” என்று அக்கறையுடன் சொன்னாள்.
விஷ்ணு: “தேங்க்ஸ் அக்கா. என் ஆள நான் பத்திரமா பாத்துப்பேன். யூ டோன்ட் வரி.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😁 😁 😁
ரித்திகா: “ஓகே… ஓகே..!!! நாங்க அப்ப கிளம்பறதா…????” என்றவள், தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
விஷ்ணு: “அக்கா… அக்கா… ஒரு நிமிஷம் இருங்க. கிளம்பிடாதிங்க.” என்றவன், தன்னுடைய பைக்கில் அவன் வைத்து இருந்த ஏதோ ஒரு கவர் ஐ எடுத்து ரித்திகாவிடம் கொடுத்து அதை ஷாலினியிடம் கொடுக்கச் சொன்னான்.
ரித்திகா: “பார்றா…!!! கலக்குறியே விஷ்ணு… என்ன கிப்ட்டா..???” என்ன இருக்கு உள்ள என்று ஆர்வமான குரலில் கேட்டாள்.
விஷ்ணு: சரீ அக்கா. அவள வரும்போது இத கட்டிட்டு வர சொல்லுங்க
ஷாலினி: “ரித்திகாவின் கையில் இருந்து அந்த கவர் ஐ வாங்கியவள், “இப்படி சேரி திடீர்னு குடுத்து கட்டிட்டு வான்னா… நான் எப்படி கட்டிட்டு வர்றது..??? இப்ப மேட்சிங் பிளவுஸ்க்கு நான் எங்க போவேன்…??? ?” என்று விஷ்ணுவிடம் கேட்டாள். 😒
விஷ்ணு: “உன்னோட இத்துனூண்டு மூளைய வச்சுக்கிட்டு நீயே இத எல்லாம் யோசிக்கும்போது, நான் அத யோசிக்க மாட்டேனா..??? பிளவுஸ் எல்லாம் ஸ்டிச் பண்ணி ரெடியா தான் இருக்கு டி. நீ சாரிய மட்டும் கொஞ்சம் சாரி மாதிரி கரெக்டா கட்டிட்டு வந்தா போதும்.” என்று சிரித்துக் கொண்டே நக்கலாக சொன்னான். 😂 😂 😂
ஷாலினி: “அவன் சொன்னதைக் கேட்டு கோபப்பட்டவள், “போதும் வாய மூடு. உனக்கு தான் அப்படியே எல்லாம் தெரியும்ன்ற மாதிரி பேசாத. இதெல்லாம் கரெக்டா மெஷர்மென்ட் குடுத்தாலே… ஒழுங்கா தைக்க மாட்டாங்க. நீ என் மெசர்மென்ட் தெரியாம எப்படி தைத்து ஒழுங்காகா வாங்கிருப்ப..???” 😒 என்று தான் எதைப்பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று யோசிக்காமல் பட்டென்று கேட்டுவிட்டாள்.
விஷ்ணு: அவளைப் பார்த்து குறும்பாக சிரித்தவன், “அணைக்கு உனக்கு டிரஸ் வாங்குறதுக்கு நீயும், நானும், ஒன்னா தானே ஷாப்பிங் போனோம்.!!! அப்ப உன் கூட வந்த எனக்கு உன்னோட சைஸ் தெரியாதா…???” என்று வெட்கமின்றி சொல்லி சிரித்தான். ☺️ 😁/😁
ரித்திகா : அடேய்..!!! உங்க கமிட்டட்ஸ் அலப்பறை எல்லாம் நீங்க தனியா இருக்கும்போது பண்ணுங்க டா. உங்களுக்கு நடுவுல சிங்கிள் ஒருத்தி நான் மாட்டிகிட்டு முழிக்கிறேன். என்னையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க. 😂 😂 😂
ரித்திகாவின் முன் அவன் இதை பற்றி பேசியது ஷாலினிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இதற்கு மேலும் நாம் இங்கே இருந்தால் இவன் என்னென்ன சொல்வானோ என்று நினைத்து பயந்தவள், “அக்கா அவன் ஒரு லூசு. அவன் இப்படி தான் எதையாச்சும் உளறிட்டு இருப்பான். நீங்க அத எல்லாம் கண்டுக்காதீங்க. நீங்க ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணுங்க. நம்ம கிளம்பலாம்.” என்று அவசரமான குரலில் சொன்னாள்.
ரித்திகா: ஓய் நடிக்காத டி. இப்ப அவன் கூட அந்த ஃபங்ஷனுக்கு போக சொன்னதுக்கு ஓவரா பிகு பண்ண… ஆனா, அவன் கூட ஷாப்பிங் எல்லாம் போயிருக்க இதை பத்தி என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா…??? 🤨
ஷாலினி: “அட சும்மா இருங்க அக்கா. ஏன் கா நீங்க வேற..!!” என்று சிறு வெட்கத்துடன் சொன்னாள். ☺️
விஷ்ணு: “நாளைக்கு நீங்க என் அண்ணன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்களும் அவர் கூட அங்க, இங்கன்னு, சுத்த தானே போறீங்க… அப்போ நீங்க மட்டும் அத பத்தி எங்க கிட்ட சொல்றீங்களான்னு நான் பார்க்கிறேன்.” என்று கேஷுவலாக சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரித்திகா, எங்கே அவள் விஷ்ணுவின் அண்ணனை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று ஷாலினி இடம் விஷ்ணு உளறி விடுவானோ என்று நினைத்து பயந்தாள்.
ஷாலினி: அவன் சொன்னதை சரியாக கவனித்தவள், “அவங்க எதுக்கு உன் அண்ணன் கூட வெளியில போகணும்..??” என்று குழப்பமாக கேட்டாள். 🙄
அப்போது தான் என்ன உளறி வைத்து இருக்கிறோம் என்று புரிந்து கொண்ட விஷ்ணு, “அது ஒன்னும் இல்ல… இப்ப நம்ம ரித்திகா அக்காவ அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவர் நமக்கெல்லாம் அண்ணன் தானே..!! அத தான் அப்படி சொன்னேன்.” என்று தன் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தான்.
ஷாலினி: “ஆனா அப்படிப் பார்த்தாலும் அக்காவோட ஹஸ்பண்ட் மாமா தானே…!!! அண்ணா எப்படி வரும்…??” என்று சரியாக கேட்டாள்.
விஷ்ணு: “ராட்சசி… ராட்சசி… முக்கியமானத எதபத்தியாச்சு சொன்னா, அப்ப அத புரிஞ்சுக்காம டியூப்லைட் மாதிரி இருப்பா. இப்ப பெரிய அறிவு ஜீவி மாதிரி கரெக்டா பாயிண்ட புடிச்சு கொஸ்டின் கேட்கிறாளே…!!!” என்று தன் மனதிற்குள் நினைத்தவன், “இப்ப உனக்கு என்ன டி பிரச்சன..??? நான் என் அக்கா புருஷன அண்ணன்னு தான் கூப்பிடுவேன். அவங்களே கம்முனு இருகாங்க. உனக்கு என்ன..???” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
அவன் பேசியதை கேட்டு கடுப்பான ஷாலினி அவனுக்கு ஏதோ பதில் சொல்ல வந்தால் அதற்குள் அவளை தடுத்து நிறுத்திய ரித்திகா, “நீங்க இப்படியே மாத்தி மாத்தி சண்டை போட்டுட்டு இருந்தீங்கன்னா என்கேஜ்மென்ட் -க்கு இல்ல, ஸ்ட்ரெயிட்டா கல்யாணத்துக்கு தான் போக முடியும். நாங்க கிளம்புறோம் விஷ்ணு. பை..!!!” என்றவள், தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினாள்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)