அத்தியாயம் 105: ரித்திகாவின் வீட்டிற்கு சென்ற செண்பகம்
வருண் தனக்கு அருகில் இருந்த தண்ணீர் கிளாசை எடுத்தவன், தண்ணீர் குடிப்பதற்காக அதை தன்னுடைய வாயை நோக்கி கொண்டு சென்றான். அப்போது அவனுடைய கை நடுங்கியது. அதனால் தன்னை அறியாமல், அந்த கண்ணாடி டம்ளர் ஐ கீழே தவற விட்டு விட்டான். அது பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது.
திடீரென்று தனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று யோசித்து குழம்பினான் விஷ்வா. அவன் அப்படி யோசித்துக் கொண்டே இருக்கயிலேயே… அவன் மயங்கி கீழே சரிந்தான். அவன் தன் முன்னே இருந்த கண்ணாடி மேதையின் மீது விழுந்ததால், அந்த மேஜை அவனுடைய பாரத்தை தாங்க முடியாமல் பலத்த சத்ததுடன் உடைந்து நொறுங்கியது. அந்த சத்தம் சேர்மன் ஆபிசில் வேலை செய்யும் அனைவருக்கும் தெளிவாக கேட்டது. அதனால் விஷ்வாவிற்கு என்ன ஆனதோ என்று நினைத்து பதறியவர்கள், விஷ்வாவின் அறைக்குள்ளே வந்து பார்த்தனர்.
அவர்கள் உள்ளே வரும்போது அந்த கண்ணாடி மேஜையின் மீது மயங்கி விழுந்து கிடந்து இருந்தான் விஷ்வா. விஷ்வாவின் உடலில் ஆங்காங்கே அந்தக ண்ணாடி துண்டுகள் குத்தி இருந்ததால், அவனுக்கு ரத்தம் வந்து கொண்டு இருந்தது. அதைக் கண்ட விஷ்வாவின் ஊழியர்கள் பயந்து, சிவாவிற்கு தகவல் தெரிவித்தனர். விஷ்வாவின் அருகே சென்று அவனைத் தூக்குவதற்கு கூட அங்கிருந்தவர்களுக்கு பயமாக இருந்தது. அதனால் அவனை நெருங்க யாரும்ம் துணியவில்லை.
விஷ்வா மயங்கி கீழே விழுந்த செய்தியை கேட்டு அங்கே விரைந்து ஓடி வந்த சிவா, விஷ்வா இருந்த காட்சியைக் கண்டு அதிர்ச்ச அடைந்தான். 😳 தங்களுடைய முதலாளி இப்படி ஒரு மோசமான நிலையில் இருக்கும்போது அவருக்குு உதவாமல், அனைவரும் அவரை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது இன்னும் சிவாவின் கோபத்தை அதிகப்படுத்தியது. அதனால், “உங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா..??? ஒரு மனுஷன் இப்படி அடிபட்டு மயங்கி விழுந்து கிடந்தா வந்து என்ன ஏதுன்னு பாத்து தூக்க மாட்டீங்களா…???” என்று அவன் உச்ச சூதியில் கத்த, அதற்குப் பின் சில ஊழியர்கள் பயந்து போய் விஷ்வாவை தூக்க சிவாவிற்கு உதவினர்.
விஷ்வாவின் ஆபீஸ் ரூமில் இருந்த ஒரு சிறிய பெட்ரூம் இருக்கு அவனை அழைத்துச் சென்ற சிவா அங்கே இருந்த கட்டிலில் அவனை படுக்க வைத்து விட்டு டாக்டருக்கு கால் செய்தான். இதற்கு இடையில் விஷ்வாவின் உடலில் சொருகி இருந்த சிறிய கண்ணாடி துண்டுகளை, அவனால் முடிந்தவரை சிவா அகற்றி விட்டான். சில நிமிடங்களிலேயே அங்கு வந்து சேர்ந்த டாக்டர் விஷ்வாவை பரிசோதித்து பார்த்துவிட்டு, மீதம் இருந்த கண்ணாடி துண்டுகளை நீக்கி அந்த இடத்தை சுத்தம் செய்து, பேண்டேஜ் போட்டுவிட்டார்.
விஷ்வா மயங்கி விழுந்த செய்தி உடனே ஹரிக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனால், அவனும் அங்கே வந்து இருந்தான். விஷ்வாவிற்கு என்ன ஆனதோ என்று நினைத்து மிகுந்த பதட்டத்தில் இருந்த ஹரி, “விஷ்வாவுக்கு என்னாச்சு டாக்டர்..!! ஏன் திடீர்னு அவன் மயக்கம் போட்டு விழுந்தான்..??? எனிதிங் சீரியஸ்..???” என்று வருத்தமான குரலில் கேட்டான்.
டாக்டர்: “டோன்ட் வரி மிஸ்டர் ஹரி. இப்போதைக்கு இவர் நல்லா தான் இருக்காரு. ஆனா இவர் இனிமேலும் இப்படியே இருந்தாருன்னா.. இவரோட கண்டிஷன் ரொம்ப சீரியஸ் ஆயிடும். இவரு ரொம்ப வீக்கா இருக்காரு. இவருக்கு இப்ப வந்த மயக்கம், ஏதோ ஒரு மெடிசனோட சைட் எஃபெக்ட் மாதிரி தெரியுது. ரீசெண்டா இவர் ஏதாவது ஹை பவர் இருக்கிற மாதிரி மெடிசன்ஸ் ஏதாவது எடுத்துகிட்டாரா..??” என்று கேட்டான்.
ஹரி: “அவன் அப்படி எதுவும் மெடிசின்ஸ் எடுத்து கிட்ட மாதிரி எனக்கு தெரியலையே..!!” டாக்டர் என்றான். என்றான் குழப்பமாக. 🙄
சிவா: “இல்ல சார். அவரு எடுத்துக்கிட்டாரு. ஆனா அதுக்கு இவ்ளோ சைட் எஃபக்ட்ஸ் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல.” என்றான் சோகமான குரலில்… 😞 😟
ஹரி: என்ன டா சொல்ற…!!! அவன் எதுக்கு மெடிசின்ஸ் எடுத்துக்கிட்டான்..???
சிவா: அதான் அவரு அன்னைக்கு சைக்காட்ரிஸ்ட் டாக்டர் அருண் ஐ மீட் பண்ணத பத்தி மீட்டிங்ல உங்க கிட்ட எல்லாம் சொன்னாருல்ல… இன்சாமியா -காக அருண் பிரிஸ்கிரைப் பண்ண டேப்லெட்ஸ் ஐ தான் விஷ்வா சார் சாப்பிட்டு இருக்காரு இப்போ.
டாக்டர்: அது என்ன டேப்லட்ஸ்னு உங்களுக்கு தெரியுமா..???
சிவா: “தெரியும்.” என்றவன், தன் மொபைலில் அவன் போட்டோ எடுத்து வைத்து இருந்த டாக்டர் அருண் எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷனை எடுத்து காட்டினான்.
டாக்டர்: “இது ரொம்ப பவர்ஃபுல்லான மாத்திரை ஆச்சே…!!! 💊 இது ரொம்ப எமர்ஜென்சி வேற வழியே இல்லைனா மட்டும் தான் சாப்பிடணும். இதவா விஷ்வா சார் டெய்லியும் சாப்பிட்டு இருக்காரு..??? எப்படி அருண் இவ்ளோ கேரளாஸா இந்த டேப்லெட்டை ப்ரிஸ்கிரைப் பண்ணாருன்னு எனக்கு தெரியல.” என்றான் அதிர்ச்சியாக. 🙄
சிவா: “இது அவரோட மிஸ்டேக் இல்லை சார். விஷ்வா சார் ஆல்ரெடி நிறைய நார்மல் பவர் இருக்கிற ஸ்லீப்பிங் பில்ஸ் ஐ ட்ரை பண்ணிட்டாரு. ஆனா எத சாப்பிட்டாலும் அவருக்கு தூக்கமே வரல. அத அவர் கிட்ட சொல்லி பவர்ஃபுல்லான டேப்லட் வேணும்ன்னு விஷ்வாஷ் அது தான் கேட்டாரு. அதான் அருண் இத பிஸ்கிரைப் பண்ணாரு. அப்பாவும் அவரது ரெகுலரா சாப்பிட கூடாதுன்னு அட்வைஸ் பண்ணி தான் குடுத்தார். ஆனா விஷ்வா சார் அத கேட்காம ரெகுலரா சாப்பிட்டு இருக்காரு போல… நானும் இத கவனிக்காம விட்டுட்டேன் சாரி.” என்று சொன்னவனின் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது.
ஹரி: “விடு டா. நீ பீல் பண்ணாத. நீயே போய் அவன் கிட்ட இத சாப்பிடாதன்னு சொல்லி இருந்தா கூட அவன் அத கேட்காம, நல்லா தூங்குனா போதும்னு கண்டிப்பா சாப்பிட்டு இருப்பான்.” என்று சிவாவிடம் சொன்னவன் டாக்டரை பார்த்து, “இப்ப என்ன டாக்டர் பண்றது..???” என்று கேட்டான்.
டாக்டர்: அவர் ஃபர்ஸ்ட் இந்த டேப்லெட் சாப்பிடுறதை ஸ்டாப் பண்ணனும். அப்புறம் கொஞ்ச நாளைக்காவது ஹெல்தியான டயட் ஃபாலோ பண்ணனும். அப்புறம் ரெகுலரா எக்ஸசைஸ் பண்றவரா இருந்தா, கொஞ்சம் நாளைக்கு அதெல்லாம் வேணாம்னு சொல்லுங்க. முடிஞ்ச வரைக்கும் அவர நல்ல பீஸ்ஃபுல்லான என்விரான்மென்ட்ல வச்சுக்கோங்க. அவர் மெண்டலி நல்லா இருந்தாலே நல்ல தூக்கம் வரும். அவர் டெய்லியும் நல்லா தூங்கினாலே சீக்கிரம் சரியாயிடுவாரு.
ஹரி: ஆனா அவன் ரொம்ப நாளா டிப்ரசன்ல இருக்கானே அவனை எப்படி அதில இருந்து வெளியே கொண்டு வர்றது..??? அவன் அதில இருந்து வெளியில வந்தா தானே நிம்மதியா தூங்குவான்..!!!!
டாக்டர்: “என்னால அவரோட உடம்ப மட்டும் தான் பாத்துக்க முடியும். அவரோட மனச ஒன்னு அவரே நல்லா பாத்துக்கணும். இல்ல வேற யாராவது அவர நல்லா பாத்துக்கணும். ஐ திங்க் யுவர் சிங்கிளா இருக்கிறனால மேபி லோன்லியா பீல் பண்றாரு நினைக்கிறேன். இஃப் இட் இஸ் பாசிபிள் இவரை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க. நம்ம கூட சோல் பேட்னு ஒருத்தவங்க இருக்கிறதே பெரிய ரிலாக்ஸேஷன் தான்.” என்றவர், விஷ்வாவிற்கு இரண்டு, மூன்று, ஊசிகளை போட்டுவிட்டு, அவனுக்கு சில சத்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு, “பாத்துக்கோங்க. ஏதாவது எமர்ஜென்சி -ன்னா கூப்பிடுங்க என்று சொல்லிவிட்டு சென்றான்.
டாக்டர் அங்க இருந்து சென்ற சில நிமிடங்களிலேயே… கண் விழித்த விஷ்வா, தனக்கு என்ன ஆனது என்று சிவாவிடம் கேட்டு தெரிந்துு கொண்டான். “அருண் சொல்லிட்டு போன மாதிரி தான் இப்ப வந்து டாக்டரும் சொல்றாரு. நீங்க செகண்ட் மேரேஜ் பண்றத பத்தி கொஞ்சம் கன்சிடர் பண்ணி பாருங்க சார்.” என்றான் சிவா.
விஷ்வா: ஆல்ரெடி எனக்கு ரொம்ப தலை வலிக்குது டா. இப்போ இத பத்தி பேசி என்ன இன்னும் டென்ஷன் பண்ணாத. என்னால என் ஜான்விய மறந்துட்டு எல்லாம் வேற எவளையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. வேணா மைண்ட் ரிலாக்ஸியேஷன் காக எங்கையாவது சித்தார்த்த கூட்டிக்கிட்டு அப்ராட் டூர் போயிட்டு வரேன். அவன் நான் இது வரைக்கும் பெருசா வெளியிலயே எங்கேயும் கூட்டிட்டு போனதே இல்ல.
குறைந்தபட்சம் அவன் இதை செய்வதற்காகவாவது ஒத்துக்கொண்டானே என்று நினைத்துு மகிழ்ந்த சிவா, “ஓகே சார் போயிட்டு வாங்க.” என்றான்.
நாராயணன் பேலஸில்…
இன்று நல்ல நாளாக இருந்ததால் ராகவியின் பெற்றோர்களிடம் விஷ்வா மற்றும் ராகவியின் திருமணத்தை பற்றி பேசிவிடலாம் என்று நினைத்த செண்பகம், சுகந்தியுடன் அங்கே செல்வதற்காக கிளம்பி கொண்டு இருந்தாள். அப்போது செண்பகத்திற்கு கால் செய்த வைஷாலியின் அம்மா சீத்தா, தான் தன்னுடைய பிள்ளைகளுடன் அங்கே வந்து கொண்டு இருப்பதாக இன்பார்ம் செய்தாள். தன்னுடைய நாத்தனார் இங்கே வரும்போது வீட்டில் யாருமே இல்லை என்றால் கண்டிப்பாக அவள் தன் மீது கோபப்படுவாள் என்று நினைத்த செண்பகம், என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
இப்போது ராகவியின் பெற்றோர்களிடம் சம்பந்தம் பேசுவதற்காக கிளம்பி விட்டு, அங்கே போகாமல் இருப்பதை செண்பகம் விரும்பவில்லை. இதைப் இதை பற்றி யோசித்து கொண்டு இருந்தவளுக்கு, நேற்று வைஷாலி தன்னிடம் தன்னுடைய அம்மா ஹரிக்கு வைஷாலியின் அக்கா தேவ தர்ஷினியை திருமணம் செய்து தர விரும்புவதாக சொன்னது ஞாபகம் வந்தது. அதனால் அதைப் பற்றி பேச தான் சீத்தா இங்கே வந்து கொண்டு இருக்கிறாள் போல என்று நினைத்த செண்பகம், ஹரிக்கு கால் செய்து தான் ராகவியின் வீட்டிற்கு அவளை விஷ்வாவிற்கு சம்பந்தம் பேசுவதற்காக செல்வதாக சொன்னவள்; அவனுடைய அத்தை சீத்தா இங்கே வருவதற்குள் வீட்டிற்கு வந்து விடுமாறு அவனிடம் அறிவுறுத்தினாள்.
ஆராதனா ஏற்கனவே வைஷாலி தன்னுடைய அக்காவை தான் ஹரிக்கு நாங்கள் திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்று சொல்லி தன்னை மிரட்டியதாக ஹரியிடம் சொல்லி வைத்து இருந்தாள். அதனால் தன்னுடைய அத்தை இங்கே வந்தால் அதைப்பற்றி தன்னிடமே நேரடியாக பேசிவிட கூடும் என்று நினைத்து பயந்த ஹரி, தன்னுடைய அம்மாவிடம் தான் கண்டிப்பாக வீட்டுக்கு சென்று விடுவதாக பொய் சொன்னவன், அவன் வீட்டிற்கு செல்லாமல் அவனுடைய மேனேஜர் தர்ஷனை தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய அத்தையிடம் தனக்கு நிறைய வேலை இருப்பதால் தன்னால் அங்கே வர முடியவில்லை என்று தான் மன்னிப்பு கேட்டதாக சொல்லிவிடும் படி சொல்லி அனுப்பி வைத்தான்.
ராகவியின் வீட்டில்…..
சுதாகரும், ரேவதியும், ஹாலில் இருந்து சோபாவில் அமர்ந்து தங்களுடைய மகளின் வாழ்க்கையைப் பற்றி பேசிக கொண்டு இருந்தனர். அப்போது “நான் உள்ள வரலாமா..???” என்று வாசலில் நின்ற படி கேட்டாள் செண்பகம். செண்பகத்துடன் சுகந்தியும், அவளுடைய அசிஸ்டன்ட் தாராவும், பாடி கார்ட் சோபியாவும், வந்து இருந்தனர். சுதாகரும் ரேவதியும் இதற்கு முன் செண்பகத்தை பார்த்ததில்லை என்பதால் அவள் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
அதனால் குழப்பமாக செண்பகத்தை பார்த்த ரேவதி, “நான் இப்படி கேட்கிறேன்னு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க மா. நாங்க இதுக்கு முன்னாடி உங்கள பாத்ததில்லை. யார் நீங்க..???” என்றாள்.
செண்பகம்: “இதுல தப்பா நினைக்கிறதுக்கு என்ன மா இருக்கு..??? திடீர்னு தெரியாதவங்க யாராவது வீட்டு வாசல்ல வந்து நின்னா, யாரு என்னன்னு கேட்காம எப்படி உள்ள வர சொல்ல முடியும்…??? நானே என்ன அறிமுகப்படுத்துகிறேன். நான் விஷ்வாவோட அம்மா செண்பகம். உங்க கிட்ட விஷ்வா, ராகவி கல்யாணத்தைப் பத்தி பேசுவதற்கு வந்து இருக்கேன்.” என்றாள், சிறு புன்னகையுடன். 😁 😁 😁
– நேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)