அத்தியாயம் 104: மயங்கி விழுந்த வருண் (பார்ட் 2)
ரித்திகா: “ஆனா இப்ப நான் தான் இங்க இருக்கேன்ல அக்கா…!!! நான் சித்தார்த்த சாப்பிட வைக்க மாட்டேனா..??? இனி மேல் நான் அவன பார்த்துக்கிறேன். நீங்க ஸ்கூலுக்கும், வீட்டுக்கும், அலையாதீங்க. டைமுக்கு கரெக்டா செண்பகம் அம்மா கூட சேர்ந்து சாப்பிடுங்க.” என்றாள் உரிமையாக.
சுகந்தி: ரித்திகாவை பாசமாக பார்த்து சிரித்தவள், “அது சரிதாங்க சின்ன எஜமானி அம்மா. ஆனா சித்தார்த் பொறந்ததுல இருந்து அவன நான் தான் பாத்துக்குறேன். அதனால, அவன என்னால அப்படியே விட்டுட்டு போக மனசு வரமாட்டேங்குது மா.” என்றாள். 😁😁 😁
ரித்திகா: சுகந்தி தன்னை சின்ன எஜமானி அம்மா என்று சொன்னதை கேட்டு பதறியவள், “ஐயோ, அக்கா நான் சொன்னதுக்கு நீங்க கோச்சிக்கிட்டிங்களா…??? நான் சும்மா கேஷுவலா தான் சொன்னேன். அதுக்காக ஏன் என்ன எஜமானியம்மா அப்படி இப்படின்னு எல்லாம் சொல்லி அந்நிய படுத்துறீங்க..??? ப்ளீஸ் நீங்க எப்பயும் போலவே என் கிட்ட நார்மலா பேசுங்க.” என்றாள் அவசரமான குரலில்…
சுகந்தி: இப்ப எதுக்கு மா நீ பதட்டப்படுற..??? நான் உன்ன தப்பா நெனச்சு எல்லாம் அப்படி பேசல. நீ எங்க வருண் தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டா… நீ எங்க வீட்டு சின்ன எஜமானி அம்மா தானே…!!! அதனால தான் அப்படி சொன்னேன். நீ சித்தார்த்த நான் பாத்துக்குறேன்னு சொல்றத கேட்கும் போது, நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. நான் இத செண்பகம் அம்மா கிட்ட சொன்னா, அவங்களும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க.” என்று முகம் எல்லாம் பல்லாக விரிந்த புன்னகையுடன் சொன்னாள். 😁 😁 😁
ரித்திகா: “சரி..!! சரி..!! அக்கா. நீங்க சட்டுனு அப்படி சொல்லவும் நான் பயந்துட்டேன்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னவள் தன்னுடைய லஞ்ச் பாக்ஸை திறந்து சாப்பிட போனாள், அப்போது சித்தார்த் தன்னுடைய லஞ்ச் பாக்ஸை திறக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டு இருப்பதை கவனித்தவள், அதை அவனிடம் இருந்து வாங்கி திறந்து கொடுத்தாள்.
ரித்திகாவை நன்றியுடன் பார்த்த சித்தார்த் அழகாக புன்னகைத்தவன், பின் சாப்பிட தொடங்கினான். 😁 😁 😁 அமைதியாக அவர்களை கவனித்த படி ஷாலினியும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
ரித்திகா தான் கொண்டு வந்திருந்த புளி சாதத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். அதை கவனித்த சித்தார்த் அவளுடைய லஞ்ச் பாக்ஸை கை காட்டி, “இது என்ன சாப்பாடு..???” என்று ஆசையாக கேட்டான். 😍
ரித்திகா: அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள், “இதுவா…!!! இது புளி சாதம்.” என்றாள். 😁 😁 😁
சித்தார்த்: அவள் சொன்னதைக் கேட்டு தன்னுடைய முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டவன் ரித்திகாவை பார்த்து, “புலின்னா அது அனிமல் தானே…!!! அப்ப அத கொன்னு தான் இந்த சாப்பாட்ட செய்வாங்களா…??? பாவம் அந்த புலி.” என்று சோகமான குரலில் அப்பாவியாக தன் முகத்தை வைத்து கொண்டு சொன்னான். 😕 😣
ரித்திகா: அவன் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவள், “இது அந்த புலி 🐅 இல்ல. இது வேற புளி. இத இங்கிலீஷ்ல டாமரின்ட் -ன்னு சொல்லுவாங்க. இன்னைக்கு நீ வீட்டுக்கு போனதுக்கு அப்புறம், கிச்சனுக்கு போய் சுகந்தி அக்கா கிட்ட புளி எப்படி இருக்கும்ன்னு உன் கிட்ட எடுத்து காமிக்க சொல்லு.” என்றாள். 😂 😂 😂
சித்தார்த்: ரித்திகா சொன்னதை கேட்டு மகிழ்ந்தவன், “அப்ப அந்த புலி சாகலையா ரித்தா..???” என்று கேட்டான். 🐅 🐯 😁 😁
ரித்திகா: “நோ. புலிய யாரும் கொள்ள மாட்டாங்க. டைகர் தான் நம்மளோட நேஷனல் அனிமல். அத கொல்றது க்ரைம். அதனால, அத யாரும் கொள்ள கூடாது.” என்று அவனுக்கு புரியும் படி விளக்கமாக சொன்னாள்.
சித்தார்த்: ஓ அப்ப டைகர் தான் இந்த புலியா..??? 🙀
ரித்திகா: “ஆமா…!!! நீ சீக்கிரம் சாப்பிடு. லஞ்ச் பீரியட் முடிஞ்சிரப்போகுது…!!!” என்றாள்.
சித்தார்த்: “எனக்கு இந்த புளி சாப்பாடு எப்படி இருக்குன்னு சாப்பிட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கு. நீ எனக்கு அந்த சாப்பாடு ஊட்டி விடுறியா ரித்தா…???” என்று கேட்டவன், ரித்திகாவின் லஞ்ச் பாக்ஸை கை காட்டினான். 😍
“சரி நான் ஊட்டி விடுறேன் இங்க வா.” என்ற ரித்திகா, சித்தார்த்தை தன் அருகில் அமர வைத்து அவனுக்கு தன்னுடைய உணவை ஊட்ட தொடங்கினாள். இதற்கு முன்பும் சித்தார்த் இதே உணவை பல முறை சாப்பிட்டு இருக்கிறான். சாப்பிட அடமும் பிடித்தும் இருக்கிறான்.
ஆனால், இன்று அதே உணவை ரித்திகா அவனுக்கு ஊட்டி விடும்போது அந்த உணவு அவனுக்கு இன்னும் ருசியாக தெரிந்தது. அதனால் தான் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கூட கவனிக்காமல், சமத்தாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் சித்தார்த்.
“பசிக்குதுன்னு நான் சொன்னா…!!!
உன் பசி மறந்து என் பசிப்போக்கும் என் தாயே…!!!
இந்த அறியாத வயசுல, என்ன பெத்த தாய் அவள் முகத்த நான் மறந்து, என் அம்மா யாருன்று தெரியாம… தாய் பாசம்ன்னா என்னான்னு புரியாம நான் நிக்க…. 😣
என்ன பெத்த அப்பன் கிட்ட தாலி வாங்கி, எனக்கு தாயாகும் முன்னாடியே… தாய்மை உணர்வோடு என்னை தாங்கும் என் தாயே…!!!
சாமி எப்படி இருக்கும்ன்னு யாரு கண்டா..??? பேச்சுக்கு கூட என்ன பூச்சாண்டி கிட்ட புடிச்சு தர மாட்டா என்னோட ஆத்தா…!!!” 😍 ❤️
இதற்கு முன்பும் பல முறை சித்தார்த்துக்கு ரித்திகா உணவை ஊட்டி விட்டு இருக்கிறாள். ஆனால், இம் முறை அவன் தன்னுடைய மகன் என்ற எண்ணம் அவளுடைய மனதில் ஏற்பட்டதாலோ என்னமோ தெரியவில்லை, இப்போது அவனுக்கு உணவு ஊட்டும் போது அவள் இதுவரை உணர்ந்திடாத ஒரு புது மாதிரியான உணர்வை உணர்ந்தாள். அவள் காலையில் கிளம்பும்போது அவசரத்தில் சரியாக சாப்பிடாமல் வந்து இருந்ததால், இப்போது அவளுக்கு அதிக பசி எடுத்தது. ஆனால், அவள் சித்தார்த்துக்கு தன்னுடைய உணவை ஊட்டி கொண்டு இருக்கும்போது அவளுடைய பசி, இருந்த இடம் தெரியாமல் மாயமானது.
தான் ஊட்டும் உணவை திருப்தியாக உண்டு கொண்டு இருக்கும் சித்தார்த்தின் முகத்தை பார்க்கும் போது அவளுடைய வயிறும், மனமும், நிறைந்தது. இந்த கணம் அவளுக்கும், சித்தார்த்திற்கும், இருக்கும் விவரிக்க முடியாத ஆழமான பந்தத்தை ரித்திகாவால் உணர முடிந்தது. சித்தார்த் ரித்திகாவின் லஞ்ச் பாக்ஸில் இருந்த உணவுகள் அனைத்தையும் கிட்டத்தட்ட உண்டு முடித்து விட்டான்.
அதை திடீரென்று கவனித்தவன், “அச்சோ சாரி ரித்தா. நான் உன்னோட சாப்பாட எல்லாம் சாப்பிட்டேன். உனக்கு இப்ப பசிக்கும் இல்ல…???” என்று சோகமாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு கேட்டான்.
அவனுடைய தலையை செல்லமாக வருடிய ரித்திகா அவனை பாசமாக பார்த்தவள், “பரவால்ல டா என் புலி குட்டி. நீ சாப்பிட்டதே எனக்கு சந்தோஷம். நான் வெளியில வேற ஏதாவது வாங்கி சாப்பிடுகிறேன்.” என்றாள். 😁 😁 😁
தன்னால் ரித்திகா இப்போது பசியாக இருக்கிறாள் என்று தன்னுடைய தலையை சோகமாக கீழே குனிந்து கொண்ட சித்தார்த், தன்னுடைய லஞ்ச் பாக்ஸில் இருந்த சாப்பாட்டை கவனித்தவன், அதை வேகமாக தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு ரித்திகாவை பார்த்து, “ரித்தா நீ எனக்கு உன் சாப்பாட்டை ஊட்டி விட்ட மாதிரி, நானும் உனக்கு என் சாப்பாட்டை ஊட்டி விடுறேன்.” என்றவன், தன்னுடைய ஸ்பூனை பயன்படுத்தி அதில் உணவை எடுத்து ஊட்ட தெரியாமல் பாதி கீழேயும், மேலேயும், சிந்திய படி ரித்திகாவிற்கு ஊட்டி விட்டான்.
அவனுடைய அன்பில் நெகிழ்ந்து போன ரித்திகா, மகிழ்ச்சியாக தன்னுடைய மகன் தனக்கு ஊட்டும் உணவை சாப்பிட்டாள். ☺️ 🥰 ❤️ அவர்களிடையே இருக்கும் பாச பிணைப்பை பார்த்த சுகந்திக்கும், ஷாலினிக்கும், கூட அந்த தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. ஷாலினிக்கு கூட சித்தார்த்திற்காக ரித்திகா வருணை திருமணம் செய்து கொள்ள எடுத்த முடிவு, இப்போது சரி என்று தான் பட்டது. இப்படி ஒரு பாசமான குழந்தைக்கு யார் தான் அம்மாவாக விரும்ப மாட்டார்கள்..?? அதற்கு ரித்திகா மட்டும் விதிவிலக்கா என்ன என்று நினைத்துக் கொண்டாள் ஷாலினி. 😁 😁 😁
ரித்திகாவின் அலுவலக அறையில்…
மிகவும் சோர்வாக உணர்ந்த வருண், தான் வெகு நேரமாக உணவு உண்ணாததால் தான் தனக்கு இப்படி இருக்கிறது போல என்று நினைத்தவன், சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று நினைத்து சாப்பிடுவதற்காக அமர்ந்தான். ஆனால் அதுவரை கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனுடைய தலை சுற்றுவதை போல் அவன் உணர்ந்தான். அதனால் தனக்கு அருகில் இருந்த தண்ணீர் கிளாசை எடுத்தவன், தண்ணீர் குடிப்பதற்காக அதை தன்னுடைய வாயை நோக்கி கொண்டு சென்றான்.
அப்போது அவனுடைய கை நடுங்கியது. அதனால் தன்னை அறியாமல், அந்த கண்ணாடி டம்ளரை கீழே தவற விட்டு விட்டான். அது பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது. திடீரென்று தனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று யோசித்து குழம்பினான் வருண். அவன் அப்படி யோசித்துக் கொண்டே இருக்கையிலேயே… அவன் மயங்கி கீழே சரிந்தான்.
அவன் தன் முன்னே இருந்த கண்ணாடி மேஜையின் மீது விழுந்ததால், அந்த மேஜை அவனுடைய பாரத்தை தாங்க முடியாமல் பலத்த சத்ததுடன் உடைந்து நொறுங்கியது.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)