அத்தியாயம் 101: நான் உன்ன லவ் பண்றேன் ரித்திகா (பார்ட் 1)
ரித்திகா: “உங்க கிட்ட இத சொல்லாம மறைக்கணும்ன்னு எல்லாம் நான் நினைக்கல. எல்லாம் கன்ஃபார்ம் ஆனதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். இப்ப நான் போய் யார்கிட்டயாவது இத பத்தி சொன்னா கூட, யாராவது இத நம்புவாங்களா…?? நீங்களே சொல்லுங்க…!!!” என்று தன் பக்க நியாயத்தை அவனுக்கு விளக்க முயன்றாள்.
கௌத்தம்: “அப்ப நானும் மத்தவங்களும் ஒன்னா உனக்கு..?? ஷாலினி கிட்ட சொல்லணும்ன்னு உனக்கு தோனிருக்குல்ல.. அப்புறம் ஏன் என் கிட்ட சொல்லணும்னு தோணல..??? முதல்ல நீ ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட..??? இந்த கல்யாணம் நடக்க கூடாது ரித்திகா.” என்று கோபமாக சொன்னான்.
ரித்திகா: அவன் பேசியதை கேட்டு அதிர்ந்தவள், “ஏன் இப்டி சொல்றீங்க..??? இந்த கல்யாணத்துல உங்களுக்கு என்ன பிரச்சனை..??” என்று குழப்பமாக அவனைப் பார்த்து கேட்டாள். 🙄
கௌத்தம்: “ஆமா எனக்கு பிரச்சனை தான். என் பிரச்சினை என்னான்னு தான் உனக்கு புரிய மாட்டேங்குதே…!!! ஆனா நீ அவர கல்யாணம் பண்ணிக்கிட்டா நிறைய பிரச்சனை வரும்.” என்று சிடுசிடுவென்று பேசினான். 😒
ரித்திகா: இப்போது இவனுக்கு என்ன ஆனது என்பது போல அவனை குழப்பமாக பார்த்தவள், “இப்ப நீங்க எதுக்காக இவ்ளோ ரியாக்ட் பண்றீங்கன்னே எனக்கு புரியல. நான் அவரை கல்யாணம் பண்றதுல உங்களுக்கு என்ன ஆக போகுது..??? எனக்கு என்ன பிரச்சனை வரும்ன்னு சொல்றீங்க..??” என்று கேட்டாள். 🙄
கௌத்தம்: “அவர கல்யாணம் பண்ணா நீ நிம்மதியா இருக்க முடியாது ரித்திகா. இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம். சொன்னா புரிஞ்சுக்கோ..!!!” என்று கெஞ்சும் தோனியில் சொன்னான். 😟
ரித்திகா: இதே வார்த்தைகளை தான் ரேவதியும் அவளிடம் சொன்னாள். ஒரு தாயாக தன்னிடம் ரேவதி பேசியதை ரித்திகா, பெரியதாக நினைக்கவில்லை. ஆனால் கௌத்தம் இப்படி அவளிடம் பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவனை கோபமாக பார்த்தவள், “நீங்க டான்சர்னு தான் நான் நினைச்சேன். ஆனா உங்களுக்கு அஸ்ட்ராலஜி கூட தெரியும் போல…!!! அதான் என்னோட லைஃப்ல அடுத்து என்ன நடக்கும்னு நீங்க பிரிடிக்ட் பண்ணி சொல்லிட்டு இருக்கீங்களா..????” என்றாள். 😒
கௌத்தம்: அவனுக்கும் அவளின் மீது கோபம் வந்தது. “அவர பத்தி உனக்கு என்ன தெரியும்னு நீ தைரியமா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட..??” என்று அவளைப் பார்த்து முறைத்த படியே கேட்டான். 😒 🤨
ரித்திகா: “சரி எனக்கு தெரியாதுன்னே வச்சுப்போம். உங்களுக்கு மட்டும் என்ன ரொம்ப தெரியமா? என்னமோ அவரை பத்தி உங்களுக்கு மட்டும் தான் தெரியும்ன்ற மாதிரிரி பேசுறீங்க..???” என்று சீறினாள். 😕
கௌத்தம்: “தெரியும். அதனால தான் இவ்ளோ கான்ஃபிடன்ட்டா சொல்றேன். அவர் என்னோட காலேஜ் சீனியர். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் சிவா தான் இப்ப அவரோட மேனேஜரா இருக்கான். அவர் லைஃப்ல நடந்த எல்லாத்த பத்தியும் எனக்கு நல்லா தெரியும்.” என்று தன் நெஞ்சை நிமிர்த்து கொண்டு திமிராக சொன்னான். 😕
ரித்திகா: “இங்க பாருங்க.. முதல்ல ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கோங்க. நான் இந்த கல்யாணத்தை சித்தார்த்துக்காக மட்டும் தான் பண்ணிக்கிறேன். வருண் சாரை பத்தி எனக்கு கவலை இல்லை. அப்படி இருக்கும் போது, அவர் எப்படி இருந்தா எனக்கு என்ன.??? அவரோட வாழ்க்கையில என்ன நடந்து இருந்தா எனக்கு என்ன..???” என்று அவனுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்த படி கேட்டாள். 🤨
கௌத்தம்: அவள் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல் மீண்டும், “அவருடைய எக்ஸ் ஒய்ஃப் ஜான்வி எப்படி இறந்து போனாங்கன்னு உனக்கு தெரியுமா..???” என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு கேள்வியை அவளிடம் கேட்டான்.
ரித்திகா: அவன் ஜான்வியை பற்றி பேசியதால் சற்று அமைதி அடைந்தவள், “தெரியும், அவங்க ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. செண்பகம் அம்மா அத பத்தி எல்லாம் என் கிட்ட கிளியரா எல்லாத்தையுமே சொல்லிட்டாங்க.” என்றாள் உறுதியான குரலில்…
கௌத்தம்: “ஓஒ….!!! அப்ப உன்னோட செண்பகம் அம்மா அது ஆக்சிடென்ட் இல்ல ப்ரீ பிளான்ட் மர்டர் -ன்னு உன் கிட்ட சொன்னாங்களா..???” என்று நக்கலாக கேட்டான். 😒
ரித்திகா: இந்த விஷயம் அவளுக்கு புதியது என்பதால் அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், இது என்னடா புதுக் கதையா இருக்கு…..!!! என்பது போல அவனைப் பார்த்து, “என்ன சொல்றீங்க..???” என்று ஆச்சரியமான குரலில் கேட்டாள். 🙄
கௌத்தம்: “அன்னைக்கு அவங்க போன கார ஓட்டிட்டு போன டிரைவர் ஹை ஸ்பீட் -ல காரை ஓட்டிட்டு போய் அதை ஏதோ ஒரு இடத்துல கொண்டு போய் இடிக்கிற மாதிரி விட்டுட்டு, அவன் கார்ல இருந்து கதவை திறந்து கீழ குதிச்சு தப்பிச்சிட்டான். ஏதோ லக் இருந்ததுனால அதுல இருந்து வருண் அண்ணாவும், சித்தார்த்தும், தப்பிச்சுட்டாங்க.
இப்ப வரைக்கும் அந்த கார் டிரைவர் யார் சொல்லி அதை செஞ்சான்னு வருண் அண்ணாவால கண்டுபிடிக்கவே முடியல. நீ ரீசண்டா பிரசாத் குரூப்ஸ் ஓட சேர்மன் பிரவீன் ஐ குவாலிட்டி இல்லாத ப்ராடக்ட் சாங்குவாலிட்டி இல்லாத ப்ராடக்ட் ஐ மேனுஃபேக்சர் பண்ணி இருக்கான்னு அரெஸ்ட் பண்ணி அவன ஜெயில்ல போட்டு இருக்காங்கன்னு நீ நியூஸ்ல பார்த்து இருப்பில்ல…
அந்த பிரவீன் தான் அவங்க குடும்பத்தோட பரம எதிரி. அவன் தான் அந்த ஆக்சிடென்ட் -கும் காரணம் என்ன வருண் அண்ணாவுக்கு சந்தேகம் இருக்கு. ஆனா அவருக்கு சந்தேகம் இருந்து மட்டும் என்ன பிரயோஜனம்..?? இப்ப வரைக்கும் அவரால் அவனை எதிர்த்து எதுவுமே பண்ண முடியலையே…??? அன்னைக்கு மானசா இங்க இருந்த சிலையை ஆள வச்சு திருடிட்டு போயிட்டான்னு மட்டும் நானே உங்க எல்லாருக்கும் தெரியும், அந்த சிலையை யார் சொல்லி திருடனா தெரியுமா..???” என்று கேட்டவன், தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும் ரித்திகாவை முறைத்துப் பார்த்தான். 😒 🤨
ரித்திகா அவன் பேசியவற்றை ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தவள் திடீரென்று அவன் இடை நிறுத்தியதால், “சொல்லுங்க அவ யார் சொல்லி இத எல்லாம் பண்ணா…??” என்று கோபமாக கேட்டாள். 😠
கௌத்தம்: அந்த பிரவீன் சொல்லி தான். என்றவன் வருண் பிரவீன் சதியை கண்டுபிடித்து முதல், அவனுக்கு கொடுத்த பதிலடி வரை அனைத்தையும் அப்படியே ரித்திகாவிடம் தெளிவாக சொன்னான்.
ரித்திகா அவன் சொன்னதை கேட்டவளுக்கு பயம், அதிர்ச்சி, வியப்பு, என கலவையான உணர்ச்சிகள் வந்து சென்றன. அவள் அன்றாட வாழ்க்கையில் பார்த்து எளிதாக கடந்து செல்லும் தொலைக்காட்சிகளில் வரும் சாதாரண செய்திகளின் பின்னே இப்படியான சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்க கூடும் என்று அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் இன்னொரு பக்கம் பிரவீன் செய்த வேலைக்கு, வருண் அவனுக்கு கொடுத்த பதிலடி சரிதான் என்றும் அவளுக்கு தோன்றியது. இப்படியே அவள் சித்தார்த்தை பற்றியும், வருணை பற்றியும், பிரவீனை பற்றியும், மாத்தி மாத்தி யோசித்துக் கொண்டு இருந்தாள்.
கௌத்தம்: “இதனால தான் டி உனக்கு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றேன். பணக்காரங்களோட வாழ்க்கை நம்ம வெளியில இருந்து பார்க்கிற அளவுக்கு ரொம்ப சாதாரணமானது கிடையாது. ஒருத்தர் கிட்ட எந்த அளவுக்கு பணம் அதிகமா இருக்கோ அந்த அளவுக்கு அவர் கிட்ட நிம்மதி இருக்காது. தேவைக்கு அளவா காசு பணம் வச்சிருக்கவன் கிட்ட மட்டும் தான் நிம்மதி இருக்கும்.
சரி, நிம்மதிய விடு. முதல்ல உன் உயிருக்கு உத்தரவாதம் இருக்கான்னு பார்க்கணும் இல்ல…!!! ஜான்வி சிஸ்டரோட உயிருக்கு ஆபத்து வந்த மாதிரி ஒன்னோட உயிருக்கும் நீ அவரை கல்யாணம் பண்ணா ஆபத்து வராதுன்னு என்ன்ன நிச்சயம்…???? எல்லா சமயமும் வருண் அண்ணாவால உன்ன ப்ரொடெக்ட் பண்ணிக்கிட்டே இருக்க முடியாது. ஏற்கனவே அவருடைய டிரைவர் -னால அவங்க உயிருக்கு ஆபத்து வந்ததுனால இப்ப வரைக்கும் யார் மேலயும் நம்பிக்கை இல்லாம, அவரே அவருடைய காருக்கு டிரைவர் வச்சுக்காம செல்ப் டிரைவ் பண்ணிட்டு போயிட்டு இருக்காரு.
இதுல அவர் இன்னும் அவரோட எக்ஸ் வொய்ஃபா மறக்கல. அவர் ஜான்வி சிஸ்டரை எவ்வளவு லவ் பண்றாருன்னு எனக்கு தெரியும். அவங்களோட இடத்த வேற யாருக்கும் அவரு குடுக்க மாட்டாரு. சோ நீ அவர கல்யாணம் பண்ணா ஆபத்த தவிர வேற எதுவும் உனக்கு கிடைக்காது. உன் லைஃப்ல நிம்மதின்னு ஒன்னு இருக்கவே இருக்காது.” என்று அவளுடைய கண்களை நேராக பார்த்த படி தீர்க்கமாக சொன்னான்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)