அத்தியாயம் 1: புதிய தொடக்கம்
அழகான காலை பொழுதில்…சுதாகர், ரேவதி தம்பதியரின் வீட்டிற்கு முன் வேகமாக வந்து நின்றது ஒரு லாரி. அதில் இருந்து கீழே இறங்கிய டிரைவர் மணி, சுதாகரின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவருக்கு போன் செய்தார்.
உடனே காலை அட்டன்ட் செய்த சுதாகர், “ஏன் டா மணி உன்னை எப்ப வர சொன்னேன்? இன்னுமா வரல? எப்பையும் சொன்ன டைம் க்கு வரது இல்ல. ஆனா காசு மட்டும் கரெக்டா கேளு நீ” என்று பொரிந்து தள்ளினார். அதை கேட்டு சிறிது கடுப்பான மணி… “சார் நான் உங்க வீட்டு வாசல்ல தான் சார் நிற்கிறேன்” என்று வேகமாக சொன்னான்.
“சரி.. சரி..இப்ப எதுக்கு கத்துற? தேவை இல்லாம பேசிட்டு இருக்காத திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி ரெடியா தான் இருக்கு. எடுத்துட்டு போயி லாரி ல வை என்றார் சுதாகர்.“என்னது நான் கத்துறேன? நீ தான் யா வீட்டுக்கு வந்துட்டேன்; வாசல் லா தாண் நிக்கிறேன்ன்னு சொல்றதுக்கு கால் பண்ணதுக்கு என்ன கழுவி கழுவி உத்துன.. இப்ப என்ன கத்துரேன்னு சொல்றியா?” என்று மணி ஃபோன் காலை கூட கட் செய்யாமல் மைண்ட் வாய்ஸில் புலம்பி கொண்டு இருக்க..மறு முனையில்.. இருந்த சுதாகர், “என்னடா மார்னிங்கே மைண்ட் வாய்ஸ் ஆ? போடா போய் வேலையை பாரு” என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தார். வீட்டுக்குள்ளே வந்த மணி சலிப்பாக.. முன்னே அடுக்கி வைத்திருந்த பொருட்களை பார்த்துவிட்டு, ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு லாரியில் ஏற்றினான்.அப்போது சமையல் அறையில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து கொண்டு வெளியே வந்த ரேவதி; “மணி பாக்ஸ் குள்ள என்ன இருக்குன்னு தெரியாம நீ பாட்டுக்கு அப்படியே எடுத்துட்டு போய் லாரி ல போற்றாத. கிளாஸ் ஐடம்ஷ் எல்லாமே போட்டு வச்சிருக்கிற பாக்ஸ் மேல ரெட் கலர்ல மார்க் பண்ணி இருக்குகேன். அதை எல்லாம் பார்த்து எடுத்துட்டு போய் பத்திரமா வை என்றார்.“சரி மா…!! அது எல்லாம் நான் பாத்துக்குறேன்.” என்று சொன்ன மணி; “ரித்திகா பாப்பா எங்க மா ஆளையே காணோம்..” என்று ரேவதியிடம் கேட்க….”அவ இன்னைக்கு காலையில ரொம்ப சீக்கிரமா எந்திரிச்சு வெளியிலகிளம்பி போய்ட்டா. அவ இங்க வேலை பார்த்த ஸ்கூல்ல ரிலீவிங் ப்ராசஸ் எல்லாம் பண்ணிட்டு, அப்படியே அவ பிரண்ட்ஸ் எல்லாரையும் பாத்துட்டு… அப்படியே நேரா பஸ் புடிச்சு ஈரோட்டுக்கு வந்துடுறேன்னு சொல்லிட்டா. நம்ம இங்க இருந்து கிளம்பி அங்கே போறதுக்குள்ள அவ போயிருப்பா.” என்று ரேவதி சொல்ல…அதை கேட்ட மணி.. “அப்ப அங்க போய் தங்குவதற்கு வீடு எல்லாம் ஏற்கனவே பாத்துட்டீங்களா மா? என்று கேட்டான்.அதற்க்கு,“இல்ல மணி நம்ம தனியா வீடு பார்க்க தேவையில்லை.
இப்போ ரித்திகா வேலை பாக்க போற ஸ்கூல்லயே.. தங்குவதற்கு வீடுஅரேஞ்ச் பண்ணி கொடுத்து இருக்காங்க. அங்க வேலை பார்க்கிற எல்லா ஸ்டாப்ஸ் வும் அங்கதான் தங்குவாங்கலாம். நாங்களும் அங்க தான் தங்க போரோம்” என்றார் ரேவதி.“அப்படி எல்லாமா பண்ணறாங்?வேலை பாக்குறவங்களுக்கு பொண்ணுகளுக்கு தனியா, பசங்களுக்கு தனியா, ஹாஸ்டல் மாதிரி இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன். ஃபேமிலியோட போயிட்டு தங்குற மாதிரி வீடே வா இப்ப எல்லாம் கொடுக்குறாங்க? ” என்று கேட்டான் மணி.“இப்ப எல்லாம் சிஸ்டமே மாறிடுச்சு. முன்னாடி எல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் சம்பளம் நிறைய குடுக்கறாங்கன்னு எல்லாரும் கவர்மெண்ட் ஸ்கூலுக்கு டீச்சர் ஆகணும்னு ஆசை பட்டாங்க. ஆனா இப்போ எல்லாம் அப்படி இல்ல. நிறைய பிரைவேட் ஸ்கூல்ளையும் கவர்மெண்ட் ஸ்கூல்ல குடுக்கற சம்பளத்தை விட அதிகமா சம்பளமும், இந்த மாதிரி சலுகையும் கொடுக்கறாங்க. இப்ப ரித்திகா வேலைக்கு போக போறதும் ரொம்ப பெரிய ஸ்கூல் தான். அந்த ஸ்கூல் ஓட ஓனர் இந்தியாவிலேயே பெரிய பணக்காரனாம். அவருக்கு நிறைய பிசினஸ் இருக்காம்.
இந்த ஸ்கூலே அவருடைய பையனுக்காக தான் கட்டினாராம். அப்படின்னா பாத்துக்கவே எவ்ளோ பெரிய பணக்காரனா இருக்கணும்னு.. அந்த ஸ்கூல்ல படிக்கிற எல்லா பிள்ளைகளுமே பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தானாம் லட்ச லட்சமா ஃபீஸ் வாங்குறாங்க. அதான் அவங்க கிட்ட வேலை பார்க்கிற வங்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கறாங்க போல..” என்று தன் மகள் வேலை பார்க்கப் போகும் பள்ளியை பற்றி பெருமையாக மணியிடம் சொன்னாள் ரேவதி.“ஓ அப்படியா மா.. அவ்ளோ பெரிய ஸ்கூல்ல நம்ம ரித்திகா பாப்பாக்கு வேலை கிடைச்சது சந்தோசம்…. நம்ம எல்லாம் நம்ம பிள்ளைங்களை படிக்க வைக்கவே கஷ்டப்பட்டோம். நம்ம இருக்கிற இதே உலகத்தில தான் புள்ளைங்களை படிக்க வக்கிரதுக்காக ஒரு ஸ்கூலே கற்றவங்களும் இருக்கிறாங்க.” என்று மணி சொல்ல..“ஆமா மணி. அந்த கடவுள் அப்படித்தான் ஒருத்தருக்கு அதிகமாக கொடுக்கிறது; இன்னொருத்தருக்கு எதுவுமே கொடுக்கிறது இல்ல.. என்ன பண்றது?” என்று சோகமாக சொன்னாள் ரேவதி..“சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்து வை மணி. நம்ப அவளை அங்க வெயிட் பண்ண வைக்காம நேரமா போகனும்” என்றார்.எப்படியோ ஒரு வழியாக.. அனைத்து பொருட்களையும் லாரியில் எடுத்து போட்டு விட்டனர். வீட்டில் வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்று ஒரு முறை செக் செய்து, எந்த பொருளும் இல்லை என்று உறுதி படுத்தி கொண்ட ரேவதி; வீட்டை பூட்டி விட்டு அந்த சாவியை பக்கத்து வீட்டில் கொடுக்க சென்றார்.பக்கத்து வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு “ஜானகி” என்று கூப்பிட ரேவதி,
ஜானகி வரும் வரை காத்திருந்தார். காலிங் பெல்லின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ஜானகி.. ரேவதியை பார்த்தவுடன்; “ரேவதி அக்கா நீங்களா? உள்ள வாங்க..” என்று அழைத்தாள்.தன்னுடைய வீட்டிற்கு வந்த ரேவதியை அழைத்து தங்கள் வீட்டின் சோபாவில் அமர வைத்த ஜானகி; அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா அக்கா? என்று கேட்டாள். “ஆமாம் ஜானகி நாளைக்கே வந்து ஸ்கூல்ல ஜாயின் பண்ணனும்னு ரித்திகாக்கு அந்த ஸ்கூல்ல இருந்து கால் வந்துச்சு அதனால தான் இவ்ளோ அவசர அவசரமா கிளம்பறோம். ” என்றார் ரேவதி.
ஜானகி : எங்க கா ரித்திகாவை கானோம்?ரேவதி: ஆமா மா. நாங்க இங்க இருந்து கிளம்பி போறதுக்குள்ள எங்களுக்கு முன்னாடியே.. அவ போனா தானே அங்க போயி அந்த ஸ்கூல்ல ஜாயின்ட் பண்றதுக்கான வேலை எல்லாம் பார்த்துட்டு.. அங்க நாங்க தங்க போற வீட்டோட அட்ரஸ் என்னன்னு கேட்டுட்டு அந்த வீட்டு சாவிய வாங்கிட்டு வர முடியும். அதான் காலையிலே நேரமா எந்திரிச்சு போயிட்டா.ஜானகி: அப்படியா.. சரி க்கா. தெரியாத ஊருக்கு பொம்பள பிள்ளைய வச்சுகிட்டு தனியா போறீங்க பத்திரமா பாத்துக்கோங்க. ரித்திகா ரொம்ப பொறுப்பான பொண்ணு தான் இருந்தாலும் நீங்க தான் அவளை நல்லா பாத்துக்கணும். இந்த காலத்துல ரித்திகா வயசுல இருக்குற பொண்ணுங்க எல்லாம் காதல், கல்யாணம்ன்னு ஆசைப்படும். ஆனா இவ வேலை வேலைன்னே இருக்கா. அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்க என்றார் ஆதங்கத்துடன்.ரேவதி: அதை ஏன் கேக்குற ஜானகி.. இந்த பொண்ணோட கல்யாணத்தை நினைச்சாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. அவளுக்கும் இருபத்தி நாலு வயசு ஆயிருச்சு. நான் மாப்பிள்ளை பாக்குரேன்ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. சரி உனக்கு புடிச்ச பையன் யாராச்சும் இருந்தா கூட்டிட்டு வா அவனையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னும் சொல்லி பாத்துட்டேன். அப்படி யாரும் இல்லைன்னு சொல்றா. இவளை வச்சு கிட்டு என்ன தான் பண்றதுன்னே எனக்கு தெரியல. அவ என்ன நினைக்கிறன்னும் புரியல.ஜானகி: அவ எதுவும் சொல்ல மாட்டேங்குறான்னு நம்ம அவளை அப்படியே விட்டுற முடியாதுல அக்கா.. சீக்கிரம் ஏதாவது பார்த்து பண்ணுங்க.ரேவதி: அவ என்ன சொல்றது.. நான் முடிவு பண்ணிட்டேன். இன்னும் ஒரு வருஷத்துல நான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சே தீருவேன் என்றார் உருதியுடன்.ஜானகியுடன் பேசி கொண்டிருந்த ரேவதி.. தன் கையில் இருந்த சாவியை ஜானகியிடம் கொடுத்து“இந்தா இதை பத்திரமா வச்சுக்கோ. இது நம்ம வீட்டு சாவி. நம்ம சொந்த காரன் ஒருத்தன் புரோக்கர் இருக்கான் ல.. அவன்கிட்ட வீட்டை வாடகைக்கு விடும்படி கேட்டு இருந்தேன். அவன் வந்து கொஞ்ச நேரம் கழிச்சு சாவியை வங்கிப்பான். இந்த சாவிய குடுத்திரு. யாரோ வீட்டை பாக்க வராங்கன்னு சொன்னான். யாரு என்னான்னு நீ பத்துக்கோ. நான் மத்தது லாம் பேசுறேன் சரியா..” என்று சொல்ல,“அந்த புரோக்கர் பையன் தானே.. அவன் என் தம்பியோட ஃபிரண்டு தான். நான் பாத்துக்குறேன் அக்கா. நீங்க கவலைப்படாதீங்க போயிட்டு வாங்க.” என்று ரேவதியை வழியனுப்பி வைத்தார் ஜானகி.
ஜானகியிடம் விடைபெற்ற ரேவதி தன் கணவர் சுதகருடன்.. தங்களுடைய பொருட்களை எல்லாம் லாரியில் ஏற்றிக்கொண்டு ஈரோட்டை நோக்கி பயணத்தை தொடங்கினர்.லாரியில் ஏரிய ரேவதி.. சிறிது நேரம் கழித்து தன்னுடைய மகள் ரித்திகாவுக்கு போன் செய்தார். பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து ஈரோட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ரித்திகா; காற்றில் பறந்து கொண்டிருந்தத தன்னுடைய நீண்ட சுருள் முடியை ஒரு க்லிப்க்குல் அடக்க போராடி கொண்டு இருந்தாள்.
அப்போது தன் தாயின் அழைப்பை கண்ட ரித்திகா.. மொபைலை எடுத்து காலை அட்டன் செய்த ரித்திகா..ரேவதி பேசுவதற்குள் .. சொல்லு மா வீட்டுல இருந்து எல்லா திங்க் செய்யும் எடுத்துட்டு கிளம்பிட்டீங்களா? என்று கேட்டாள் ரித்திகா.ரேவதி: ஏய்..!!! நான்தாண்டி உனக்கு கால் பண்ணுனேன். நான் என்ன சொல்றேன்னு கேட்காம நீ பாட்டு என்னை கேள்வி கேட்டுட்டு இருக்கியா?ரித்திகா: பாவம் எல்லாத்தையும் கஷ்டப்பட்டு எடுத்துட்டு வந்துட்டு இருப்பீங்களேன்னு ஒரு அக்கறையில கேட்டா என்னம்மா நீ இப்படி பேசுற… என்று ராகம் பாடினாள்.ரேவதி: போடி..நீயும், உன் அக்கறையும் என்னன்னு எனக்கு தெரியாது? அவளோ அக்கறை இருக்குறவ என்ன ஆச்சு கிளம்பிட்டீங்களான்னு.. நீயா கால் பண்ணி கேட்டிருக்க்னும்.
நான் கால் பண்னோனே அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்க கூடாது… நீயே கால் பண்ணி எதையும் இன்ஃபார்ம் பண்றது இல்ல. நான் கால் பண்ணாலும் எடுக்கிறது இல்ல. என்ன தான் நீ நினைச்சுட்டு இருக்க? நீ வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்து ரொம்ப பண்ணிக்கிட்டு இருக்க. இது எல்லாம் நல்லதுக்கு இல்ல அவ்வளவு தான் சொல்லுவேன் என்று காட்டமாக பேசினாள்.ரித்திகா: அச்சோ.. சாரி மா. இப்ப எதுக்கு என்ன திட்டிகிட்டு இருக்க? பாப்பா பாவம் தானே… குட்டி பாப்பா இல்ல சோ மன்னிச்சு விற்று.. என்று செல்லமாக கொஞ்சினால் .ரேவதி: யாரு நீ பாப்பா வா? ஏழு கழுதை வயசு ஆகுது இவ பாப்பாவாம்… காலாகாலத்துல இந்நேரம் உனக்கு கல்யாணம் பண்ணி இருந்தா உனக்கே ஒரு பாப்பா வந்திருக்கும். நீ உன்ன பாப்பான்னு சொல்லிட்டு இருக்கிறியா? எல்லாம் உங்க அப்பா குடுக்குற இடம் டி நடிப்பு நடிக்காத சரியா.. என்றவாறுரித்திகாவை அர்ச்சித்துக் கொண்டே இருந்தாள்..“என் ரித்தி பாப்பாவை திட்டாத அம்மு” என்ற சுதாகரின் குரல் இடையில் கேட்டது. அதை கேட்ட ரித்திகா.. மா ஃபோன ஸ்பீக்கர்ல போடு நான் அப்பா கிட்ட பேசணும் என்றாள்.”இப்ப எதுக்கு ஃபோன ஸ்பீக்கரில் போடனும்? உங்க அப்பா உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கிட்டு என்ன வெச்சு ஓட்டுவீங்க… அதுக்கு தானே ஸ்பீக்கர்ல போட சொல்ற.. முடியாது போ டி” என்றார் ரேவதி.
நேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)