அத்தியாயம் 7: அமுதா தான் அழகு
அமுதா தான் Pass ஆக வேண்டும் என்று அரச மரப் பிள்ளையாரை சுற்றி வேண்டி கொண்டு இருக்கிறாள். அப்போது அவளை தேடி கொண்டு அங்கே ஓடி வந்த அவளது தோழி கலைச்செல்வி அமுதா தேர்வில் பாஸ் ஆகிவிட்ட செய்தியை அவளிடம் சொல்ல, மகிழ்ந்தாள் அமுதா. “நீ பாஸ் ஆன விஷயம் மட்டும் உங்க அண்ணனுங்களுக்கு தெரிஞ்சா, அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்ல?” என்று கலை கேட்க,
“ஆமா எங்க அண்ணனுங்க ரெண்டு பேருக்கும் இது தெரிஞ்சா சந்தோஷத்துல இத இதை திருவிழா மாதிரி கொண்டாடிடுவாங்க.” என்று சிரித்த முகமாக சொன்ன அமுதா “வா.. வீட்டுக்கு போலாம்.” என்று சொல்லி கலைச்செல்வியை அழைத்துக் கொண்டு இயற்கை எழில் சூழ ரம்யமாக இருந்த பகுதியில் காலார நடந்து தனது வீட்டிற்கு சென்றாள்.
வயல் வெளிகளை எல்லாம் கடந்து கிராம பகுதியில் உள்ள தங்களது வீட்டை நோக்கி அமுதா கலைச்செல்வியுடன் நடந்து சென்று கொண்டு இருக்க, அவர்கள் இருவருக்கும் தூரத்தில் சரவெடி வெடிக்கும் சத்தம் கேட்டது.
அதனால் “என்ன டி உங்க வீட்டு பக்கம் தான் சத்தம் கேட்குது! அதுக்குள்ள உங்க அண்ணனுங்க திருவிழா கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்களா?” என்று அமுதாவின் கையைப் பிடித்துக் கொண்டு கலை கேட்க, “அது எப்படி? எனக்கே இப்ப நீ சொல்லி தான் தெரியும். அதுக்குள்ள அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?” என்று குழப்பமாக அமுதா கேட்க, “வா, இன்னும் உள்ள போய் பாத்தா தெரிஞ்சிரும்.” என்ற கலைச்செல்வி அமுதாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு துள்ளி குதித்து ஓடினாள்.
ஓட்டமும் நடையுமாக அவளுடன் சென்ற அமுதா “ஏய் செத்த இரு டி மெதுவா போகலாம். அதான் வீட்டு கிட்ட வந்துட்டோமே!” என்று மூச்சு வாங்க சொல்லிக் கொண்டு இருக்க, கலைச்செல்வி அமுதாவை இழுத்துக் கொண்டு அவளது வீட்டின் முன்னே சென்று நின்றாள்.
அங்கே பாசமலர் ஏற்கனவே அமுதாவிடம் சொன்னதைப் போலவே அவளது அண்ணன்கள் இருவரும் தங்கள் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆயிரம் வாலா சரவெடியை வாசலில் வைத்து வெடித்துக் கொண்டு இருக்க, அவளது பெரிய அண்ணன் மணிகண்டன் “எங்க குடும்பத்திலேயே மொத மொத படிச்சு பட்டம் வாங்குனது எங்க ஆத்தா அமுதா தான்.
இந்தாங்க எல்லாரும் இனிப்பு எடுத்துக்கோங்க. மத்தியானம் வீட்ல விருந்து ஏற்பாடு பண்ணி இருக்கோம். எல்லாரும் வந்துருங்க. நம்ம ஊர் காரங்க எல்லாரும் இன்னிக்கி நம்ம வீட்ல தான் வந்து திருப்தியா சாப்பிட்டு போகணும்.” என்று சத்தமாக சொல்லி அனைவருக்கும் ஒரு பெரிய தாம்பூலத்தில் விதவிதமான இனிப்பு வகைகளை வைத்து அதைக் கொடுத்து விருந்திற்கு வரச் சொல்லி அழைத்துக் கொண்டு இருந்தார்.
அமுதா ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்து இருக்கிறாள் அவ்வளவு தான். அவள் முதல் மதிப்பெண் கூட எடுக்கவில்லை.
ஆனால் அதற்கே அவளது குடும்பத்தில் உள்ளவர்கள் அவள் ஏதோ சாதனை செய்துவிட்டு வந்ததைப் போல, கொண்டாடி கொண்டு இருக்க, “இந்த மாதிரி என்ன தங்கத்தட்டுல வச்சு தாங்குற குடும்பத்தில பொறந்ததுக்கு நான் ரொம்ப குடுத்து வெச்சி இருக்கணும்.” என்று நினைத்து அமுதா கண் கலங்க, அவளது தாய் மாமன்கள் இருவரும் பெரிய பெரிய பேனரில் அமுதாவின் புகைப்படத்தை போட்டு அவள் பாஸ் ஆனதற்கு குடும்பத்தார்கள் அனைவரும் வாழ்த்துவதாக அதில் போட்டு கையில் அதை தூக்கிக் கொண்டு வந்து அமுதாவின் பெரிய அண்ணன் மணிகண்டனை பார்த்து
“யோவ் மாமா நீ சொன்ன மாதிரி பேனர் எல்லாம் அடிச்சிட்டு வந்துட்டோம். இங்க வீட்டுக்கு முன்னாடி ஒன்னு வச்சுட்டு, பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒன்னு வச்சுட்டு வந்துடவா?” என்று கேட்டான் அமுதாவின் முதல் தாய் மாமன் சந்திரன்.
அப்போது அங்கே அமுதா கலைச் செல்வியுடன் ஓரமாக நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த சந்திரனின் தம்பி வெற்றி “அதோ நம்ம அமுதாவே வந்துருச்சே! அந்தப் புள்ளக் கிட்டேயே பேனரை எங்க வைக்கலாம்னு கேளுங்க.” என்று சொல்ல, அமுதாவுடன் வந்திருந்த கலை, “கொண்டு போய் கலெக்டர் ஆபீசுக்கு முன்னாடியும், போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடியும் வைங்க. நம்ம ஊருக்கார பயலுக எல்லாம் நீங்க வைக்கிற பேனரை பார்த்தாவது இந்த மாதிரி படிச்சு உருப்படட்டும்.
வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு சும்மா வெட்டியா ஊருக்குள்ள சுத்திகிட்டு இருக்க கூடாதுன்னு நினைச்சு திருந்துவானுங்கல்ல!” என்று வெற்றியை மனதில் வைத்து கிண்டலாகச் சொன்னாள்.
“அடியே கலை.. நாலு எழுத்து படிச்ச உடனே உனக்கு திமிரு ஏறி போயிடுச்சா? இந்த நக்கலுக்கு ஒன்னும் உனக்கு குறைச்சல் இல்ல டி.” என்ற வெற்றி, “இந்த புள்ள அமுதா.. முதல்ல இவ சங்கார்த்தத்த கட் பண்ணு டி. இந்த வாயாடி கூட சேர்ந்தினா, இவ உன்னையும் அவளை மாதிரியே மாத்திவிட்டுவா.” என்று சொல்ல,
“ஆமா என் கூட எல்லாம் சேராத. ஒன்ற மாமன் காரன் மாதிரி படிச்சு பத்து பட்டம் வாங்குனவன் கூட எல்லாம் டெய்லியும் பத்து நிமிஷம் பேசு. நீ உருப்படுவ.” என்று கிண்டலாக சொல்லிவிட்டு கலை சிரிக்க,
“உங்க ரெண்டு பேருக்கும் எப்பவும் சண்டை போடுறது தான் வேலையா? கொஞ்ச நேரம் சும்மா இருங்க.” என்றாள் அமுதா.
“இதுங்களுக்கு வேற வேலை இல்ல. நீ வந்து நில்லு மா. மாமா பூசணிக்காய் வாங்கிட்டு வர சொன்னாரு. இரு, அக்காவை சுத்தி போட சொல்றேன். ஊரு கண்ணு மொத்தமும் உன் மேல தான் இருக்கு. இதுல பேனர் எல்லாம் வச்சுட்டா,
இந்த ஊர்க்காரிக எல்லாம் ஒளத்தியே மூலையில உட்கார வச்சிருவாளுங்க.” என்ற சந்திரன் மணிகண்டனின் மனைவியை அழைத்து தன் கையில் இருந்த பூசணிக்காயை அவளிடம் கொடுத்து அமுதாவிற்கு சுத்தி போடச் சொல்ல, அவள் அருகில் சென்று நின்று கொண்ட கலைச்செல்வி ஓரக்கண்ணால் வெற்றியை பார்த்து “இங்க நிறைய நெகட்டிவ் எனர்ஜி இருக்கு. அதெல்லாம் என்னையே வேற உத்து பார்த்துட்டு இருக்கு. எனக்கும் சேர்த்து சுத்துங்க அக்கா.” என்றாள்.
அவர்களை சிரித்த முகமாக பார்த்த அன்னபூரணி ஊரு கண்ணு, உறவு கண்ணு எல்லாம் போகணும் என்று சொல்லி அவர்கள் இருவருக்கும் சேர்த்தவாறு சுற்றி போட்டாள்.
அந்த அனைத்து அலப்பறைகளும் முடிந்த பின்பு அமுதா கலைச் செல்வியுடன் தன் வீட்டிற்குள் நுழைய, அவளது அண்ணன்கள் மணிகண்டனும், பாஸ்கரனும் சேர்ந்து அவளுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டார்கள்.
“அண்ணா எனக்கு?“ என்று கலை பாசத்துடன் கேட்க, “உனக்கு இல்லாததா! நீயும் எங்களுக்கு அமுதா மாதிரி தான் கண்ணு.” என்ற மணிகண்டன் அவளுக்கும் ஊட்டி விட்டார். “எப்படி தான் 13 சப்ஜெக்ட்ல fail ஆயிட்டு வெக்கமே இல்லாம இப்படி எல்லாம் ஸ்வீட் திங்க முடியுதோ!” என்று வெற்றி கிண்டலாக சொல்ல, “ஏய் உன் மாமங்காரனை வாய மூடிட்டு சும்மா இருக்க சொல்லு டி. சந்திரன் அண்ணா சொன்னதுக்கு அப்புறம் நான் சும்மா தானே இருக்கேன்! இவன் தான் வந்து தேவை இல்லாம பேசி என் கிட்ட வம்பு இழுக்கிறான்.” என்று கோபமாக அமுதாவிடம் சொன்னாள் கலைச்செல்வி.
“ஏன் மாமா.. நீ எப்ப பாத்தாலும் அவகிட்ட ஒரண்டை இழுத்துகிட்டே இருக்க?” என்று அமுதா வெற்றியை பார்த்து கேட்க, “நீயே சொல்லு அம்மு… நீ என்னை மாமானு கூப்பிடும்போது அப்படியே என் காதுல தேன் வந்து பாயுற மாதிரி இருக்கும் தெரியுமா..
அதுவே இவ வாய தொறந்தாலே எனக்கு அப்படியே எரிச்சலா இருக்கு. இவ வாயில இருந்து ஏதாவது ஒரு வார்த்தை நல்லதா வருதா? அவளை முதல்ல எல்லார் கிட்டயும் ஒழுங்கா பேசி பழக சொல்லு. அப்புறம் அவ என்ன குறை சொல்லலாம்.” என்றான் வெற்றி.
“எல்லாருக்கும் அவங்க அவங்க மாமன் மக பேசினா அப்படியே காதுல தேன் வந்து தான் பாயும். மத்தவங்க பேசினா ஈயத்தை காய்ச்சி ஊத்துற மாதிரி தான் இருக்கும்.
அதுக்கு நான் என்ன பண்றது? உன் கிட்ட நயனமா மாமா மாமான்னு பேசுறதுக்கு நான் உன் அத்தை மகளா பொறந்து இருக்கணும். அமுதா மாதிரி எல்லாம் எனக்கு பேச வராது சாமி.” என்றாள் கலைச்செல்வி.
“ஐயோ நல்லவேளை இந்த மாதிரி ஒரு கருவாச்சி எனக்கு அத்தை மகளா வந்து பிறக்கல. எங்க அமுதா எவ்ளோ அம்சமா இருக்கானு பாரு டி!” என்று கிண்டலாக வெற்றி சொல்ல, அவன் தன் நிறத்தை வைத்து தன்னை கிண்டல் செய்ததால் மனம் உடைந்த கலைச்செல்வி கலங்கிய கண்களுடன் “போ டா. நீ உங்க அத்தை மகளோட அழகான மூஞ்சியவே ஒக்காந்து குறுகுறுன்னு பாத்துட்டு இரு. நான் போறேன்.” என்று உடைந்த குரலில் சொன்னவள், அழுது கொண்டே வாசலை நோக்கி ஓடினாள்.
“டேய் நீ மட்டும் என்ன அரவிந்தசாமி கலரா? எதுக்கு டா அந்த புள்ளைய இப்படி அழ வைக்கிற?” என்று மணிகண்டன் வெற்றியை அதட்ட,
“இல்ல மாமா! நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். அதுக்கு அந்த குந்தாணி கோச்சிக்கிட்டு போவான்னு நான் என்ன கனவா கண்டேன்!” என்று சாதாரணமாக சொன்னான் வெற்றி.
“அட போ வெற்றி.” என்று சலிப்பாக சொன்ன அமுதா “அடியே கலை நில்லு டி. சாப்பிட்டு நம்ம காலேஜுக்கு போலாம்.” என்று கத்தியபடி வாசலை நோக்கி ஓடினாள்.
காலைப்பொழுது விடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் போதை தெளியாமல் தனது கெஸ்ட் ஹவுஸில் உள்ள மினி பாரில் பல காலியான மது பாட்டல்களுக்கு நடுவே தரையில் விழுந்து கிடந்தான் விஜய்.
காலையில் நேரமாக எழுந்து கிளம்பி அங்கே வந்திருந்த அவனது மேனேஜர் அவனை எழுப்பலாமா வேண்டாமா என்று யோசித்தபடி அங்கேயே காத்திருந்தான். அவன் சென்று விஜயை எழுப்பினால்,
“டேய் ஏன் டா தூங்குறவன எழுப்பி டிஸ்டர்ப் பண்ற? மூடிட்டு போ டா அந்த பக்கம்.” என்று சொல்லி கத்துவான். அவனாக எழுந்து கொள்ளட்டும் என்று நினைத்து அவன் விஜய்யை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால்,
“டேய் மயிறு நான் பாட்டு தூங்கின.. நீ அப்படியே உனக்கு என்னனு விட்டுடுவியா? எனக்கு எவ்ளோ வேலை இருக்கு.. அறிவில்லையா உனக்கு?” என்று கேட்டு அதற்கும் திட்டுவான். அதனால் அவன் தன் தலையை பிய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
– காதல் மலரும் 🌹