அத்தியாயம் 64
விஜய், “ச்ச்.. நான் தானே பிஸியா இருக்கேன்.. என் படத்துல நடிக்கிறதுக்கு கமிட் பண்ணவங்க எல்லாருக்கும் அதை செய்யறத விட வேற என்ன வேலை? நான் இல்லாம வர்ற சீன்ஸ் எல்லாத்தையும் அந்த ஆள எடுக்க ஸ்டார்ட் பண்ண சொல்லு. இன்னும் ஆறு மாசத்துல இந்த படம் மொத்தமா ஷூட் பண்ணி முடியனும். இந்த மூவி என்னோட தீபாவளி ரிலீஸ். அது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று தினேஷை பார்த்து கோபமாக கத்தி கேட்டான்.
“என்ன பாஸ் மார்னிங் டைம்லையே இவ்ளோ டெரரா இருக்காரு!” என்று நினைத்து ஒரு நொடி பயந்து போன தினேஷ் “ரிலாக்ஸ் பாக்ஸ்.. ரிலாக்ஸ்.. நம்ம பிளான் பண்ண டேட்ல கண்டிப்பா ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம். யூ டோன்ட் வரி, நான் இப்பவே டைரக்டருக்கு கால் பண்ணி மத்த சீன்ஸ் எல்லாத்தையும் ஷூட் பண்ண ஸ்டார்ட் பண்ண சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் விஜய் ஏதாவது சொல்லி தன்னை திட்டத் தொடங்கி விடுவானோ என்ற எண்ணத்தில் அங்கிருந்து வேகமாக வெளியேறி கார்டன் ஏரியாவுக்கு சென்று ஸ்ரீகாந்த்திற்கு கால் செய்தான்.
வழக்கம்போல் அமுதா விடிந்தது தெரியாமல் தன் வீட்டில் பப்பரக்கா வென்று படுத்து தூங்கிக் கொண்டு இருக்க, அவளது ரூம் கதவை அவள் பெயரைச் சொன்னபடி வந்து தட்டினான் வெற்றி. உடனே தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த அமுதா “அட இரு டா.. ஏன் தட்டிக்கிட்டே இருக்க.. வந்து கதவை திறக்க வேண்டாமா?” என்று கேட்டபடி அரை தூக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.
நேற்று நடந்த கலவரத்தில் அவள் அப்படியே புடவையோடு படுத்து உறங்கி இருந்ததால், இப்போது தூங்கி எழுந்து வந்ததில் அது லேசாக கலைந்து இருக்க, அவளது மஞ்சள் இடுப்பின் வளைவுகளும், முன்னழகின் வனப்புகளும் லேசாக வெளியில் எட்டிப் பார்த்தது. அவளிடம் பேச வேண்டும் என்று பரபரப்புடன் அங்கே வந்த வெற்றி அவளை அப்படி பார்த்தவுடன் பேச முடியாமல் வாயடைத்து நின்று விட்டான்.
அவளது கவர்ச்சியான உடல் அவனை ஒரு நிலையில் இருக்க விடவில்லை. பிறந்ததில் இருந்து பார்த்து பழகியவளை ஏறிட்டு பார்க்கவே தயங்கிய வெற்றி தலை குனிந்து நிற்க, கொட்டாவி விட்டபடி அவனை பார்த்த அமுதா “என்ன வெற்றி தூங்கிட்டு இருந்தவள கதவ தட்டி எழுப்பி விட்டுட்டு இப்ப என்னமோ சமஞ்ச பொண்ணு மாதிரி தரையை பார்த்துட்டு நிக்கிற!” என்று கிண்டலாக கேட்க, உடனே வராத இரும்பலை வரவழைத்து லொக் லொக் என்று இரும்பி தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்த வெற்றி “அசிஸ்டன்ட் டைரக்டர் கால் பண்ணாரு. இன்னைக்கு ஷூட்டிங் இருக்காம். ஆனா ஸ்பாட் எங்கன்னு இன்னும் டிசைட் பண்ணல. நீங்க எப்பயும் போல கிளம்பி ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்துருங்கன்னு சொன்னாரு.
பெரிய மாமா இன்னிக்கி கல்யாணத்துக்கு பந்தக்கால் ஊனலாம்னு பேசிட்டு இருந்தாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல நல்ல நேரம் வந்துரும். அந்த வேலையை எல்லாம் ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கப்புறம் வீட்டை விட்டு நம்ம வெளிய போகணும்னு சொன்னாலும் உன்னையும் என்னையும் விட மாட்டாங்க. அதனால சீக்கிரம் கிளம்பு. நம்ம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உடனே போகணும்.” என்று ஒரே மூச்சாக சொன்னான்.
இந்த வீட்டில் இருந்து தொடர்ந்து திருமணம் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் கூத்தை எல்லாம் பார்த்து பார்த்து சலித்து போய் இருந்த அமுதாவிற்கு “இங்க இருக்கிறதுக்கு பேசாம சூட்டிங்கே போகலாம்.” என்று தோன்றியதால் “ஓகே ஓகே, நம்ம சீக்கிரம் போகலாம். நீயும் போய் கெளம்பு. இங்க உக்காந்து சாப்பிட்டுட்டு கூட டைம் வேஸ்ட் பண்ண கூடாது. வெளிய சாப்பிட்டுக்கலாம். நானும் போய் கிளம்புறேன்.” என்ற அமுதா தனது ரூமிற்கு சென்று விட்டாள்.
அவள் தன் கண்களை விட்டு மறைந்த பிறகும் தான் கண்ட காட்சியை மறக்க முடியாமல் காதல் போதை தலைக்கு ஏறி தவித்துக் கொண்டு இருந்த வெற்றி “டேய் என்ன டா நீ இப்படி இருக்க? அவ நம்ப அமுதா.. நீ அவள போய் இப்படி எல்லாம் அப்படியே முழுங்கற மாதிரி பாக்கலாமா?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டு கிளம்புவதற்காக தனது ரூமை நோக்கி திரும்பினான். அப்போது அவன் மனசாட்சி அவனிடம் “ஆமா அவன் நம்ம அமுதா தான். அப்படி சொல்றதை விட உன் அமுதான்னு சொல்லணும். இன்னும் ரெண்டு மூணு நாள்ல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆக போகுது. அவ மேல உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு. அப்படி இருந்தும் நீ அவளை பார்க்க கூடாதா என்ன?” என்று அவனிடம் கேள்வி கேட்க, “ம்ம்.. உரிமை எல்லாம் இருக்கு தான். அதுக்காக கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரே வீட்ல இருந்துகிட்டு இப்படி பண்றது எல்லாம் தப்பு.” என்று நினைத்து தனது மனதை ஒருநிலைப்படுத்தி தனது வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினான் வெற்றி.
விஜய் வேண்டா வெறுப்பாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, குளித்து கிளம்பி அவசர அவசரமாக அவனுக்கு பிடித்ததைப் போல புடவை கட்டி தயாராகி கீழே வந்த அனாமிகா அவன் தள்ளிவிட்டதில் இன்னும் அவள் இடுப்பு வலித்துக் கொண்டு இருப்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் சிரித்த முகமாக சென்று விஜய்க்கு எதிரில் உள்ள சேரில் அமர்ந்தாள். அவளை கண்டு கொள்ளாமல் தனது மொபைல் ஃபோனை பார்த்தபடி அவன் பாட்டிற்கு சாப்பிட்டு கொண்டு இருக்க, வனிதாவை பார்த்து புன்னகைத்த அனாமிகா “ஹலோ ஆன்ட்டி குட் மார்னிங்! How is your health now? இப்ப பெட்டர்ரா ஃபீல் பண்றீங்களா? உங்களுக்கு அகைன் உடம்பு சரி இல்லாத மாதிரி ஃபீல் ஆச்சுன்னா, உடனே என் கிட்ட சொல்லுங்க. நம்ம ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வந்துடலாம்.” என்று அன்பொழுக பேசினாள்.
“எனக்கு மட்டும் இவள பத்தி முழுசா தெரியலைனா, என் மேல இந்த பொண்ணுக்கு இவ்வளவு பாசமான்னு நானே ஒரு செகண்ட் இவளோ நம்பி இருப்பேன்.” என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட வனிதா “I am alright Anamika. இப்படி என் புள்ளைங்க எல்லாரும் ஒரே வீட்ல இருக்கும்போது எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது? இப்ப தான் நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். உங்க அங்கிள் தான் பிசினஸ் விஷயமா எப்ப பாத்தாலும் அப்ராட் போயிட்டு வந்துட்டு இருக்காரு. எனக்கு உடம்பு சரி இல்லாம போனது கூட இன்னும் அவருக்கு தெரியாது.
அவரும் கொஞ்ச நாள் இங்க வந்து நம்ம கூடருந்தா நான் இன்னும் சந்தோஷப்படுவேன். அவரை மிஸ் பண்றது தான் உள்ளுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மத்தபடி I am completely alright and happy.” என்று சொல்ல, “டாடிய இன்னுமா ரீச் பண்ண முடியல? அப்படியா அவர் என்ன பண்ணிட்டு இருக்காரு? என் கிட்ட கூட அவர் எங்க இருக்காருன்னு இப்ப வரைக்கும் சொல்லல. பிசினஸ் பக்கம் நான் முழுசா வராம இருக்கேன்னு எனக்கு தெரியாம அவர் ஏதாவது பண்றாரா மம்மி? உங்க கிட்ட ஏதாவது சொன்னாரா? லாஸ்ட் டைம் மாதிரி ஏதாவது ப்ராப்ளம்ல போய் மாட்டிக்க போறாரு! அவர் என்ன பண்றாருன்னு அப்பப்ப நோட் பண்ணி எனக்கு சொல்லுங்க.” என்று அவர்கள் பேசியதை கேட்டுவிட்டு சொன்னான் விஜய்.
“இல்ல இல்ல விஜய்.. அந்த மாதிரி மறுபடியும் அவர் எப்பவும் பண்ண மாட்டாரு. போன தடவை அவர் கூட சேர்ந்து வேலை பார்த்தவங்க அவரை ஏமாத்தி அப்படி பண்ண வச்சிட்டாங்க. இந்த வீட்ல சின்னதாவோ பெருசாவோ எந்த தப்பு நடந்தாலும் நம்ம பிசினஸ் சர்க்கில்ல அது பெரிய இன்பாக்ட் கிரியேட் பண்ணும். அதை விட உன்னோட பேர் கெட்டுப் போயிடும். உங்க அப்பாவுக்கு அதெல்லாம் நல்லாவே தெரியும்.
அதனால இந்த விஷயத்துல நீ கண்டிப்பா அவரை நம்பலாம். அவர் போய் இருக்கிற இடத்துல ஏதோ சுனாமி எல்லாம் வந்துச்சுன்னு கேள்விப்பட்டேன். அதனால பாதுகாப்பா இருக்கணும்னு பக்கத்துல இருக்கிற ஐலேண்ட்ல போய் தங்கி இருக்காங்களாம். அதான் நம்மளால அவரை ரீச் பண்ண முடியல. அவராவே அவரோட சேட்டிலைட் போன்ல இருந்து கால் பண்ணி பேசினா தான் உண்டு. நீ சொன்ன மாதிரி எனக்கும் உள்ளுக்குள்ள அவரை நினைச்சு பக்கு பக்குன்னு இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும் நம்ம குடும்பத்துக்கு ப்ராப்ளம் வர்ற மாதிரி அவர் எதுவும் பண்ண மாட்டாருன்னு நான் நம்புறேன்.” என்று வனிதா சொல்ல,
“எல்லாம் கரெக்டா இருந்தா சரி தான். நான் என் ஆளுங்கள வச்சு அவரை ரீச் பண்ண முடியுதான்னு பார்க்கிறேன்.” என்ற விஜய் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து செல்ல முயற்சி செய்தான். அப்போது அவன் கையை பிடித்துக் கொண்டு பாவமாக அவனை பார்த்த அனாமிகா “இன்னைக்கு நைட் நீயும் நானும் டினருக்கு எங்கேயாவது வெளியே போலாமா? ப்ளீஸ் பேபி வேண்டாம்னு சொல்லாத! நீ என்னை எவ்ளோ ஹர்ட் பண்ணாலும், நான் மறுபடியும் மறுபடியும் உன் முன்னாடி தானே வந்து நிற்கிறேன்.. அப்ப கூட உனக்கு என் ஃபீலிங்ஸ் புரியலையா?” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள்.
“காலையில தானே என் பக்கத்துல வராதேன்னு சொல்லி இவளை உதச்சு தள்ளுனேன்! அதுக்குள்ள கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம எப்படி தான் இவளால இப்படி எல்லாம் கேட்க முடியுதோ தெரியல!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட விஜய் அவளிடம் கோபமாக ஏதோ சொல்ல வர, அதற்குள் முந்தி கொண்ட வனிதா “ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் நீங்க ஒன்னு சேர்ந்து இருக்கீங்க. உங்களுக்குள்ள மனசு விட்டு பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரிலேஷன்ஷிப்ல என்ன பிரச்சனை வந்தாலும் அதை உங்களுக்குள்ள நீங்களே சரி பண்ணிக்கிறது தான் முக்கியம். அவ தான் ஆசையா கேட்கிறாளே விஜய்.. டின்னருக்கு தானே அவளை கூட்டிட்டு போயிட்டு வாப்பா!” என்றாள்.
உடனே அவளையும் அனாமிக்காவையும் மாறி மாறி பார்த்த விஜய் வனிதாவின் பேச்சை மீற முடியாது என்பதால், அவள் பிடித்து இருந்த தன் கையை உதறிவிட்டு “சரி வந்து தொலைகிறேன். நைட்டு கால் பண்றேன்.” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு அவள் முகத்தைக் கூட ஏறெடுத்து பார்க்காமல் “டேய் தினேஷ் என்ன டா பண்ணிட்டு இருக்க! எங்க போய் தொலைஞ்ச?” என்று தனது கணீர் குரலில் கேட்டபடி வெளியில் சென்றான்.
– காதல் மலரும் 🌹