அத்தியாயம் 62
“நீங்க 50/50 பாஸ்.” என்றான் தினேஷ். நல்ல போதையில் இருந்த விஜய் “50/50 ஆ? நான் தானே குடிச்சிருக்கேன்.. நீ என்ன டா லூசு மாதிரி உளறிட்டு இருக்க? 50/50-ன்னா, பிஸ்கட் தானே.. என்னை பார்த்தா உனக்கு பிஸ்கட் மாதிரி இருக்கா? பிச்சுப்புடுவேன் உன்னை..!!” என்றான் கோபத்துடன்.
“அய்யய்யோ பாஸ் டென்ஷன் ஆகாதீங்க. நான் அந்த 50-50 சொல்லல. நீங்க பாதி ஹீரோ பாதி வில்லன். உங்கள ஜட்ஜ் பண்ண முடியாது பாஸ். நீங்க எப்ப எப்படி இருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியாது. அப்புறம் நான் எப்படி சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்க?” என்ற தினேஷ் அவசரமான குரலில் கேட்க, “அது சரி.. எனக்கு தெரியலன்னு நான் உன் கிட்ட கேட்டா, உனக்கே உன்ன பத்தி தெரியாதப்ப எனக்கு எப்படி டா தெரியும் லூசு பயலேன்னு கேக்குறியா நீ?” என்று உடனே கேட்டான் விஜய்.
“ஐயையோ இவர் நம்ப என்ன சொன்னாலும் அதுலயும் ஏதாவது ஒரு தப்பு கண்டுபிடிச்சு சண்டைக்கே வராறே.. oh God please.. ஏதாவது பண்ணி இவர் கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க.” என்று நினைத்த தினேஷ் “பாஸ் ப்ளீஸ் பாஸ்… எனக்கு செமையா தூக்கம் வருது. உங்களோட கேரக்டரை பத்தி எல்லாம் நம்ம நாளைக்கு ரிசர்ச் பண்ணலாமா? ஆல்ரெடி சரியா தூங்காம இருக்கறதுனால ரொம்ப ஹேர் fall ஆகுது. இப்படியே போயிட்டு இருந்துச்சுன்னா அப்புறம் என் மண்டையில ஒரு முடி கூட இருக்காது பாஸ். நீங்களாவது ஒன்னுக்கு இரண்டு தடவை கல்யாணம் பண்ணிட்டீங்க. பட் நான் இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் பண்ணல. இருக்கிற கேர்ள் ஃபிரண்டும் விட்டுட்டு ஓடிட போறா! இன்னிக்கு ஒரு நாள் மட்டும் என்ன விட்டுருங்க பாஸ் ப்ளீஸ்!” என்று அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
கடவுளிடம் அவன் வேண்டியது உண்மையாகவே கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ விஜயின் குட்டி பிசாசு அனாமிக்காவிற்கு நன்றாக கேட்டிருந்தது. அவனைத் தேடிக் கொண்டு அனாமிகா அங்கே வந்து சேர்ந்தாள். அவன் யாரிடமோ இன்னும் தூங்காமல் நடு இரவில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டென்ஷனான அனாமிகா “இன்னும் ரூமுக்கு வந்து தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க பேபி? நீ ஒரு ஸ்டார். உனக்கு அது ஞாபகம் இருக்கா இல்லையா? இப்படி சரியா சாப்பிடாம தூங்காம குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டா, உன்னோட ஹாட்டான பிசிக்கை எப்படி உன்னால மெயின்டைன் பண்ண முடியும்? யார்ட்ட பேசிட்டு இருக்க நீ? முதல்ல அந்த கால கட் பண்ணு.” என்று விஜயிடம் சொல்லிவிட்டு கையோடு அவன் மொபைல் ஃபோனில் பிடுங்கி தினேஷின் நம்பரை பார்த்துவிட்டு காலை கட் செய்தாள்.
ஃபோனில் அனாமிகா பேசியதை கேட்ட தினேஷ் “என்ன கடவுள் வந்து காப்பாற்றுவாருன்னு பார்த்தா கடைசியில சைத்தான் வந்து காப்பாத்துது!” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டு மீண்டும் இழுத்து போர்த்தியபடி படுத்துக் கொண்டான்.
விஜயின் அருகில் சென்ற அனாமிகா அவன் கையைப் பிடித்து இழுத்தவாறு “இப்போ டைம் என்னன்னு தெரியுமா? நைட் ஷிஃப்ட் ஒர்க் பண்றவங்களை தவிர மத்தவங்க எல்லாரும் இந்நேரம் தூங்க போயிருப்பாங்க. மிட் நைட்ல கோஸ்ட் சுத்துற டைம்ல குடிச்சிட்டு உன் அசிஸ்டன்ட்டுக்கு கால் பண்ணி புலம்பிட்டு இருக்க.. இப்படி ஒரு பியூட்டிஃபுல் வைஃப் உன் பக்கத்துல இருக்கும்போது, இப்படி எல்லாம் நைட் டைமை வேஸ்ட் பண்ணலாமா பேபி?” என்று குழைவான குரலில் கேட்க, அவள் கையை உதறிவிட்ட விஜய் “இது பேய் வர்ற நேரம்ன்னு ஒரு பேயை சொல்றத இப்பதான் பார்க்கிறேன். ச்சீ.. போ அந்த பக்கம்.. உன் மூஞ்சிய பார்க்க பிடிக்காம தானே இங்க வந்து தனியா குடிச்சிட்டு இருக்கேன்.. இங்கயும் வந்து எதுக்கு டி என்ன டிஸ்டர்ப் பண்ற?” என்று கோபமாக போதை ஏறிய குரலில் கேட்டான்.
“நீ இப்படி என்னை கேவலமா பேசி ஹார்ட் பண்ணும் போது எல்லாம் உன் மேல வர கோபத்துக்கு அப்படியே உன் கழுத்தை நெரிச்சு கொன்னுடலாம் போல தான் இருக்கு விஜய். பட் அப்பயும் இந்த அழகான முகம் தான் என்ன மறுபடியும் மறுபடியும் உன்னை லைக் பண்ண வைக்குது. உனக்கு மட்டும் இந்த மாதிரி பிளஸ் பாயிண்ட் எல்லாம் இல்லாம இருந்தா, நான் மட்டும் இல்ல வேற யாரும் உன்னை மதிக்க மாட்டாங்க.” என்று நினைத்த அனாமிகா தனது கோபத்தை உள்ளுக்குள் வைத்து வழக்கம் போல மறைத்துவிட்டு அவனை சிரித்த முகமாக பார்த்தபடி, “என்ன பேபி நீ என் கிட்ட இப்படியெல்லாம் பேசலாமா சொல்லு? உனக்கு என் மேல நிறைய கோபம் இருக்கு. I agree.. உனக்கு என் மேல கோபப்பட உரிமையும் இருக்கு. பட் அதுக்காக எப்பவும் கோபப்பட்டுக்கிட்டே இருப்பியா என்ன? போதும் யா.. எனக்கு உன் கூட சண்டை போட்டு டயர்ட் ஆயிடுச்சு.
இன்னிக்கி நம்ம லைஃப்ல ரொம்ப இம்போர்ட்டண்ட் ஆன டே. மறுபடியும் நம்ம இன்னைக்கு ஒண்ணா இருக்கோம். இதை நம்ம செலிப்ரேட் பண்ணனுமே தவிர, இன்னைக்கு கூட இப்படி சண்டை போட்டு டைம் வேஸ்ட் பண்ண கூடாது. எத்தன தடவ நீ என்ன போக சொல்லி துரத்திவிட்டாலும் நாம் மறுபடியும் உன் முன்னாடி தான் வந்து நிற்பேன் விஜய்.
எனக்கு அந்த அளவுக்கு உன்னை பிடிக்கும். I really love you so much. இன்னைக்கு நீயே பாத்தில்ல.. உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்த வனிதா ஆன்ட்டிக்கு நம்ம டிவர்ஸ் நடக்கலன்னு தெரிஞ்ச உடனே எல்லாமே சரியாயிடுச்சு. அட்லீஸ்ட் அவங்களுக்காகவாவது நீ என் கூட சேர்ந்து வாழ்றத பத்தி யோசிக்கலாம் இல்ல? என்னால நீ இல்லாம வாழவே முடியாது பேபி. Try to understand me!” என்று சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டு வராத கண்ணீரை வரவழைத்து அழுது நடித்தாள்.
அவள் வனிதாவைப் பற்றி பேசிய பிறகு விஜயால் அனாமிக்காவை ஒதுக்க முடியவில்லை. தான் இவளை கண்டுகொள்ளவில்லை என்று இவள் நேராக சென்று வனிதாவிடம் சொல்லி மீண்டும் அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? என்று நினைத்து அவளை ஒதுக்க தயங்கிய விஜய், நாளை ஆபீஸ் செல்ல வேண்டும் என்று தினேஷ் சொன்னதையும் மனதில் வைத்து அமைதியாக அவளுடன் சென்று தனது ரூமில் படுத்தான்.
அனாமிகாவும் விக்ரமாதித்தன் உடன் இருக்கும் வேதாளத்தை போல அவனை ஒட்டிக் கொண்டு அவனுடனே படுத்துக்கொள்ள, இந்த பீடையை இப்போதைக்கு துரத்த முடியாது என்பதால் சகித்துக் கொண்டு சிறிது காலம் வாழ்ந்து தொலைவோம் என்று நினைத்த விஜய் இருந்தபோதையில் அப்படியே தன் கண்களை மூடி உறங்க தொடங்கினான்.
போன வாரம் வரையிலும் துப்பாக்கியை காட்டி தன்னை கொன்று விடுவேன் என்று சொல்லி அவன் வாழ்க்கையில் இருந்து செல்ல சொல்லி கொண்டு இருந்த விஜய் இன்று தன்னை போதையில் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து இருக்கிறான். இதுவே தனக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று நினைத்த அனாமிக்காவிற்கு சந்தோஷத்தில் உள்ளுக்குள் குளுகுளுவென இருந்தது.
அதே வீட்டில் உள்ள அறையில் தன் கண்களைத் தவிர வேறு எதையும் அசைக்க முடியாத நிலையில் படுத்துக் கொண்டு சீலிங்கை பார்த்தபடி ஒரு நடுத்தர வயது பெண்மணி படுத்து இருந்தாள். அவளது கண்கள் எதிரில் உள்ள சுவற்றில் பெரிதாக மாற்றப்பட்டு இருந்த விஜயின் ஃபோட்டோவிற்கு சென்றது. அந்த ஃபோட்டோ ஏதோ ஒரு அவார்ட் பங்க்ஷனில் விஜய் விருது வாங்கும்போது எடுக்கப்பட்டது. அவனுடைய அந்த ஆள் உயர புகைப்படத்தை ஆசை தீர பார்த்த அந்த பெண்மணியின் கண்களில் இருந்து பொல பொலவென கொட்டியது கண்ணீர்.
மறுநாள் காலை தூக்கத்தில் இருந்து கண்விழித்த விஜய் தன் மீது ஏதோ பாரமாக இருப்பதைப் போல உணர்ந்தான். அவன் குனிந்து பார்க்க, அனாமிகா அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு அவளது ஒற்றை காலை தூக்கி அவன் மீது போட்டுக் கொண்டு படுத்திருந்தாள். காலையில் தூங்கி எழும்போதே இவள் முகத்திலாக பொழுது விடிய வேண்டும்? என்று நினைத்த விஜய் வந்த கடுப்பில் “ஏய்.. போ டி அந்த பக்கம்.” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தி சொன்னபடி அனாமிகாவின் தோள்களில் கை வைத்து அவளை தன்னை விட்டு பிடித்து தள்ளினான்.
அவன் தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து அவளை தள்ளியதில் கட்டிலை விட்டு இரண்டடி தள்ளி சென்று தரையில் விழுந்த அனாமிகா, அவளுடைய இடுப்பை பிடித்துக் கொண்டு வலியில் “ஆஆஆ.. மம்மி! ரொம்ப வலிக்குது. இப்ப எதுக்கு விஜய் என்னை தள்ளிவிட்ட? உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?” என்று கலங்கிய கண்களுடன் கேட்க, அவளை ஏளனமாக பார்த்த விஜய் “மனசாட்சியா? அதெல்லாம் எனக்கு இல்லைன்னு இன்னுமா உனக்கு தெரியல? ஏண்டி அன்னைக்கே உன் கிட்ட நான் என்ன சொல்லிட்டு வந்தேன்! இனிமே கனவுல கூட என் கூட சேர்ந்து வாழணும்னு உனக்கு ஒரு தாட் வரக் கூடாதுன்னு சொல்லி நான் மிரட்டிட்டு வந்தும் எவ்வளவு தைரியம் இருந்தா கோர்ட்ல போய் என் கூட சேர்ந்து வாழ விருப்பம்னு சொல்லி இருப்ப?
மம்மிக்கு உடம்பு சரி இல்லாம அவங்க ஹாஸ்பிடல்ல இருக்கும்போது உன் கூட நான் மறுபடியும் சண்டை போட்டுட்டு இருந்தா, அத பாத்து அவங்களுக்கு மறுபடியும் சரியில்லாம போயிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சு நான் கொஞ்சம் சைலன்டா இருந்தேன். அதுக்காக விஜய் சொம்பை ஆகிட்டான். இனிமே நம்ம இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைச்சுட்டியா நீ? இன்னைக்கே உன்ன சிம்பிளா ஒரு ஸ்கெட்ச் போட்டு தூக்கவா? நீ செத்து மேல போனதுக்கப்புறம் உன் கூட என்ன சேர்ந்து வாழ சொல்லி எவன் கேட்கிறான்னு நானும் பாக்கிறேன்.” என்று திமிராக சொன்னான்.
“நீ இப்படி என்னை கஷ்டப் படுத்துறதுக்கு எல்லாம் கண்டிப்பா நான் உன்ன பழி வாங்குவேன் விஜய். உனக்கு ரெண்டே ஆப்சன் தான். நீ ஹாப்பியா வாழனும்னா, அது என் கூட மட்டும் தான் இருக்கணும். இல்லைனா விஜய்னு ஒருத்தன் இந்த உலகத்திலயே இருக்கக் கூடாது. நீ எது எல்லாம் உனக்கு முக்கியம்னு நினைக்கிறியோ அது எல்லாத்தையும் ஒன்னு ஒன்னா நான் உன் கிட்ட இருந்து பரிச்சிடுவேன்.” என்று நினைத்து தனக்குள் வில்லத்தனமாக புன்னகைத்தாள் அனாமிகா.
அவளை வீட்டை விட்டு துரத்துவானா விஜய்? வெற்றி அமுதாவின் திருமணம் என்னவாகும்?
-காதல் மலரும் 🌹