அத்தியாயம் 49
எப்படியோ ஒரு வழியாக அமுதா மற்றும் வெற்றியின் எங்கேஜ்மென்ட் விழா சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. கலைச்செல்வி வாடிய முகத்துடன் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றாள். அனைத்தும் முடிந்து சோர்வான முகத்துடன் தனது ரூமிற்கு சென்ற அமுதா அவள் அணிந்திருந்த பட்டுப்புடவையை கழட்டி போட்டுவிட்டு நைட்டிக்கு மாறினாள்.
அவள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்துமே திடீர் திடீர் என்று அவளுக்கே சப்ரைஸ் கொடுக்கும் அளவிற்கு நடப்பதால், இதையெல்லாம் என்ன நினைப்பது? எப்படி எடுத்துக்கொள்வது என்று அவளுக்கு தெரியவில்லை. அதனால் புத்தன்று போய் தனது கட்டிலில் விழுந்த அமுதா “என் லைஃப்ல நான் என்ன நினைக்காம இருக்கணும் அதுதான் கண்டிப்பா நடக்குது.. சோ எதையாவது யோசித்து டென்ஷன் ஆகிறத விட்டுட்டு என்னமோ நடக்கட்டும்னு இருக்குறதே பெட்டர்.” என்று நினைத்து சீலிங்கை பார்த்து புரண்டு படுத்தாள்.
தன் தலைக்கு மேலே சுற்றிக் கொண்டு இருந்த சீலிங் fanஐ பார்த்த பிறகு அவளுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் கையில் மைக்குடன் “start camera.. and action!” என்று சொன்னது தான் ஞாபகம் வந்தது. கூடவே இன்று செட்டில் நடந்ததும் அவளுக்கு ஞாபகம் வர, அவளையும் மீறி அவளுடைய முகம் வெட்கத்தில் குங்குமமாக சிவந்தது.
எனக்கு அருகில் கிடந்த தலைவணையை இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி திரும்பிப் படுத்த அமுதா “நான் அவர் மேல கால் வழுக்கி தடுக்கி விழுந்ததினால தெரியாம அவரை கிஸ் பண்ணிட்டேன். பட் அவர் அப்படி தெரியாம பண்ண மாதிரி தெரியலையே..!! அப்புறம் எதுக்காக அப்படி பண்ணி இருப்பாரு? ஒருவேள இந்த சீன்ல இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சு பண்ணி இருப்பாரா? ஆனா அசிஸ்டன்ட் டைரக்டர் அக்கா அந்த சீன் படத்துல இல்லாததுனால போட மாட்டாங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்களே! என்னமோ.. வழக்கம்போல எனக்கு எதுவுமே புரியல.” என்று நினைத்து தன் கண்களை மூடி உறங்க முயற்சி செய்தாள்.
அவள் அப்படி தன் கண்களை மூடும்போது கூட, விஜய் அவளை முத்தமிட்ட காட்சி தான் அவளது மனக்கண்களில் பணமாக ஓடி அவளுக்கு தொடர்ந்து அவனை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. என்ன தான் இருந்தாலும், ஒரு சூப்பர் ஸ்டார் தனக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார்.. அதுவும் அவராக விருப்பப்பட்டு கொடுத்திருக்கிறார்.. என்று நினைக்கும்போது அந்த சிறிய பெண்ணின் மனம் அதை நினைத்து சந்தோஷப்பட தானே செய்யும்!
அப்படியே தொடர்ந்து விஜயைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த அமுதா தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள். இதற்கிடையில் தன் கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை பற்றியோ, வெற்றியைப் பற்றியோ அவள் ஒரு நொடி கூட யோசித்துப் பார்க்கவில்லை.
தனது பங்களா வீட்டிற்கு சென்று இருந்த விஜய் அங்கே உள்ள மினி பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கையில் சிறு வயது முதலே நடந்த அனைத்தும் அவனுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. நாளை கோர்ட்டில் அவனுக்கும் அனாமிக்காவிற்கும் டிவர்ஸ் ஆகப்போகிறது. ஆனால் முக்கியமாக அவன் மனம் என்னவோ பிரியாவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது.
அவள் செய்த குற்றத்திற்காக கொடுமைப்படுத்தியே அவளை சாகடித்தது அவன் தான். ஆனால் இப்போது நித்தமும் தன் வாழ்க்கையின் நிம்மதியை தொலைத்து விட்டு அவளை நினைத்து இவன் அல்லவா செத்து கொண்டிருக்கிறான்! இதை போய் யார் அவனிடம் சொல்லி புரிய வைப்பது? கொஞ்ச நேரத்தில் மூக்கு முட்ட குடித்த விஜய் வழக்கம் போல பிரியா பிரியா என்று அவள் பெயரை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.
அதை கவனித்த தினேஷ் வேகமாக அவன் அருகில் சென்று அவனிடம் இருந்த ஆல்கஹால் பாட்டிலை பிடுங்கி ஓரமாக வைத்துவிட்டு, “பாஸ் நாளைக்கு மார்னிங் நம்ம கோர்ட்டுக்கு போனும்.. மறந்துட்டீங்களா? நீங்க இவ்ளோ குடிச்சா உங்களுக்கு தெளியுறதுக்கு டைம் ஆகும். அப்புறம் எப்படி நீங்க கோர்ட்டுக்கு டைமுக்கு போவீங்க? நீங்க மட்டும் நாளைக்கு கோர்ட்டுக்கு போகலைனா, இந்த டிவோர்ஸ் கேஸ் இன்னும் இழுத்துக்கிட்டே போகும்ன்னு நம்ம அட்வகேட் சொன்னத மறந்துட்டீங்களா?” என்று கேட்டான்.
“அது இருந்துட்டு போகட்டும் போடா.. என் லைஃப்ல என்னென்னமோ போயிருச்சு.. இப்ப அவ இருந்தா என்ன செத்தா எனக்கென்ன? என்ன டிவோர்ஸ் நடக்கலனா என் லைஃப்ல பெருசா எதுவும் மாறிடாது.” என்று கோபமாக சொன்ன விஜய் மீண்டும் குடிப்பதற்காக ஆல்கஹால் பாட்டிலை எடுத்தான்.
“Shit.. நான் என்ன சொன்னாலும் கேட்காம இவரு இப்படி அடம் பிடிச்சா நான் என்ன பண்றது? இப்ப இருக்கிற போதையில எது நடந்தாலும் பரவாயில்லைன்னு இவரே சொல்லுவாரு.. அப்புறம் டுமாரோ மார்னிங் ஏன் டா நான் குடிச்சா நீ என்ன சாப்பிட மாட்டியா? இந்த கோர்ட் கேஸ் எனக்கு ரொம்ப இம்பார்டன்ட்னு உனக்கு தெரியாதுன்னு என்னையே கேட்பாரு!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட தினேஷ் வலுக்கட்டாயமாக விஜயின் கையில் இருந்த பாட்டிலை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு அவனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
செல்லும் வழி எல்லாம் விஜய் “ஏய் தினேஷ்.. என்னை விடு டா.. நான் குடிக்கிறேன்.. குடிச்சு குடிச்சு சாகிறேன்.. இதுல உனக்கு என்ன டா பிரச்சனை? என்ன விடு தினேஷ்!” என்று புலம்பிக் கொண்டே இருக்க, அதை காதில் வாங்காமல் அவனை இழுத்துச் சென்று அவனது அறையில் படுக்க வைத்த தினேஷ் “பாஸ் இன்னிக்கு மட்டுமாவது சீக்கிரமா தூங்குங்க. நான் மார்னிங் வந்து உங்களை பார்க்கிறேன். குட் நைட்.” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
போதையில் இருந்த விஜய் “நான் நம்புனா எல்லாரும் எனக்கு துரோகம் மட்டும் தான் பண்ணிட்டு இருக்காங்க.. இங்க பாரு இப்ப இந்த தினேஷ் கூட என்னை குடிக்க விடாமல் சதி பண்றான்.. உன்ன மாதிரியே என் மேல யாருக்குமே பாசம் இல்ல பிரியா! உன்ன மாதிரியே எல்லாரும் cheatersஆ இருக்கிறாங்க! நான் பாக்குற, என் கூட பழகுற எல்லாரும் இப்படியே இருந்தா நான் எப்படி தான் இந்த வேர்ல்ட்ல வாழ்றது?” என்று சீலிங் பார்த்து பிரியாவை மனதில் நினைத்து அவளிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.
பின் அவன் திரும்பி படுத்து தன் கண்களை மூடும்போது அவனுக்கு திடீரென்று அமுதாவின் ஞாபகம் வந்தது. அந்நேரம் அவனுக்கும் அவன் அவளை முத்தமிட்ட காட்சி ஞாபகம் வந்தது. அவன் தான் அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து அப்போது முத்தமிட்டு இருந்தான். இப்போது அவன் மூளை அவன் ஏன் அதை செய்தான் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு பதிலாக, அந்த முத்தம் எத்தனை இனிமையாக இருந்தது.. மீண்டும் அப்படி ஒரு இதமான முத்தம் அவளிடம் இருந்து தன்னால் பெற முடியுமா? என்று எல்லாம் வில்லத்தனமாக யோசிக்க தொடங்கியது.
அவன் தான் சினிமாவில் மட்டும் அல்லாமல் பர்சனல் லைஃப்லும் ரொமான்டிக் சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருக்கிறானே.. பிரியா இறந்த பிறகு அவனுக்கு எந்த பெண்ணின் மீதும் காதலோ அன்போ வரவே இல்லை. மாறாக அவனுக்கு பெண்களின் மீது இருக்கும் பெரும் கோபத்தை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் பெண்கள் வெறும் மோக பொருள் மட்டும் தான் என்று நினைக்க தொடங்கி விட்டான்.
அவன் நினைத்தால் அவனது காலடியில் வந்து விழுந்து கிடக்க எத்தனையோ பெண்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் எதுவும் தெரியாத இளம் வயது அப்பாவி பெண்களின் மீது அவன் கண்கள் எப்போதும் சென்றதில்லை. விருப்பம் இல்லாதவர்களை அவன் சூழ்நிலை அமைந்தால் கூட நெருங்கியதே கிடையாது.
அமுதாவை பார்த்தவுடனேயே அவள் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த நல்ல பெண் என்று நினைத்தான் விஜய். அதனால் அந்த மாதிரியான ஒரு தவறான எண்ணம் ஒருபோதும் அவனுக்கு அவள் மீது வந்ததே இல்லை. அப்படி இருக்கும்போது, அவன் ஏன் அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டான்? அவனுக்கு இருக்கும் குழப்பமான மனநிலையில், அந்த கேள்விக்கு அவனுக்கே பதில் தெரிய வாய்ப்பில்லை தான்.
அமுதாவிற்கு தான் கொடுத்த திடீர் முத்துத்தைப் பற்றி யோசித்தபடி தூங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு திடீரென ஒரு கனவு வந்தது. அதில் அமுதா ஒரு அழகிய லாவண்டர் நிற டிசைனர் சேரியை கட்டிக் கொண்டு ஒரு மேடையில் நிற்கிறாள். அவள் சிரித்த முகமாக தன் முன்னே இருந்தவர்களை பார்த்துக் கொண்டு இருக்க, படிகளில் ஏறி அவள் அருகில் சென்ற விஜய் காற்றில் அசைந்தாடி கொண்டிருந்த அவளது கூந்தலையும், சிரிக்கும்போது அவள் கன்னத்தில் விழும் குழியையும் கண்டு ரசித்தபடி அவள் அருகில் சென்றான்.
விஜயை பார்த்தவுடன் அவனை அருகில் சென்று கட்டி அணைத்த அமுதா “உங்க கையால நான் இந்த அவார்ட் வாங்குறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று சொல்ல, தன் கையில் இருந்த அவார்டை அவளிடம் கொடுத்த விஜய் “என் கூட இருந்து என்னோட ஆக்டிங் ஸ்கில்ஸ் உனக்கும் கொஞ்சம் வந்திருச்சுன்னு நினைக்கிறேன். அதான் இவ்ளோ சீக்கிரம் என் கையாலேயே நீ அவார்டு வாங்குற.. ஆல் தி பெஸ்ட் அதிதி.” என்றான்.
அவன் கைகளில் இருந்து அந்த விருதை வாங்கிக் கொண்ட அமுதா அவனுடன் சேர்ந்து மேடையை விட்டு கீழே இறங்கினாள். அவர்கள் இருவரும் கை கோர்த்தபடி அந்த விழா அரங்கை விட்டு வெளியேறினார்கள். அதன் பிறகு தினேஷ் கார் ஓட்ட, விஜய் அமுதா இருவரும் காரின் பார்ட்டிசனை ஆன் செய்துவிட்டு பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.
தனது மொபைல் ஃபோனை ஆர்வமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அமுதா “இங்க பாருங்க.. எல்லாரும் நம்மள பத்தி தான் பேசிட்டு இருக்காங்க.. இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துட்டு வந்து இருக்கலாம். நீங்க தான் அவார்டு வாங்கினதுக்கு அப்புறம் எதுக்கு இங்க இருக்கனும்னு என்னையும் சேர்த்து கூட்டிட்டு வந்துட்டீங்க.. சோ எல்லாரும் நானும் உங்கள மாதிரியே பிஹேவ் பண்றேன்னு என் போஸ்ட்க்கு கீழே கமெண்ட்ஸ் போட்டுட்டு இருக்காங்க!” என்று விஜய்யிடம் சொல்ல,
“எனக்கு உன் கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்குன்னு உன்னை அவசரமா நான் அங்க இருந்து கூட்டிட்டு வந்தா, நீ என்ன டி இங்க வந்து நம்மள பத்தி பேசறத விட்டுட்டு கமெண்ட்சை பார்த்து ஃபீல் பண்ணிட்டு இருக்க!” என்று அவளிடம் கேட்டான் அவன்.
உடனே தனது மொபைல் ஃபோனை வைத்துவிட்டு அவனை திரும்பி பார்த்த அமுதா “ம்ம்.. சொல்லுங்க கேட்போம்.. நம்மள பத்தி பேசுறதுக்கு இப்ப என்ன இருக்கு?” என்று கேட்க, “நிறைய இருக்கு.. இங்க பக்கத்துல வா சொல்றேன்..!!” என்ற விஜய் அவள் இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்து அவளை தனது மடியில் அமர வைத்து அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான்.
– காதல் மலரும்