Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 41

சாபமாய் வந்த என் உயிரே CH 41

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 41 

இரண்டு நாட்களுக்கு பிறகு..

பிரசிடெண்ட்டை உருட்டி மிரட்டி  எப்படியோ தன் ஆட்களை வைத்து பேசி கண்வின்ஸ் செய்த விஜய்  அவருடைய தோட்டத்தில் சூட்டிங் செய்ய மீண்டும் அனுமதி வாங்கி விட்டான். இப்போது செகண்ட் ஹீரோயின் கேரக்டரில் அமுதா நடிக்க இருப்பதால், வேறு வழியில்லாமல் அமுதாவின் தோழியாக அபிநயா நடிக்க வேண்டியதாயிற்று. 

இவளது கேரக்டர் படத்திற்கு பெருமளவில் தேவைபடாது என்பதால் அவளுக்கு வந்திருந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கூட சரியாக அமைக்கப்படவில்லை. அதனால் கொதிக்கும் எண்ணெயில் போட்ட பிராய்லர் கோழி போல கோபத்தில் கொதித்து தானாகவே சிவந்த முகத்துடன் இருந்த அபிநயா எளிமையாக இருந்தாலும் அழகிய ப்ளூ நிற தாவணி பாவாடையில் இருந்த அமுதாவிற்கு மற்றவர்கள் எல்லாம் கொடுக்கும் கவனிப்பை பார்த்து பார்த்து பொங்கிக் கொண்டிருந்தாள். 

அவள் அப்பா என்ன தான் அவளை எச்சரிக்கை செய்து  இருந்தாலும் கூட, சுலபமாக தன் இடத்தை இடையில் வந்து அமுதா பிடுங்கிக் கொண்டாள் என்ற எண்ணம் அபிநயாவின் மனதில் இருந்து அகலவே இல்லை. எதையாவது செய்து மீண்டும் அந்த கேரக்டரை தானே பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றே அவளது கிரிமினலான மூளை யோசித்துக் கொண்டிருந்தது. 

அமுதாவிற்கு என்று தனிக் கேரவன் கொடுக்கப்பட்டு இருந்ததால் ஆடை மாற்றிக் கொண்டு வந்த அமுதா மேக்கப் போட வெளியில் அமர்ந்து இருந்ததால் அவளை ஒரு நொடி கூட தனியாக விடக் கூடாது என்று நினைத்து வெற்றி அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான். வாழ்நாள் முழுவதும் தனது இரு கண்களைப் போல அவளை காக்க விரும்பும் வெற்றிக்கு, அவளை கவனித்துக் கொள்ளும் வேலை தான் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. 

அதற்கு ஆயிரக்கணக்கில் விஜய் சம்பளமும் கொடுக்கிறான். கரும்பு தின்ன கூலியா? என்பதைப் போல அமுதாவுடன் இருப்பதை நினைத்து சந்தோஷமாக இருந்த வெற்றி மேக்கப் எல்லாம் முடிந்து பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் முன்பு இருந்த அமுதாவின் அழகை மேக்கப் ஆர்டிஸ்ட் டெடிகேட்ரியவுடன் இன்னும் அவள்  மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத பேரழகியாக தெரிவதாக நினைத்தான் வெற்றி.  

அமுதாவின் கேரவன் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற அசிஸ்டன்ட் டைரக்டர் “எல்லாமே ரெடியா இருக்கு. விஜய் சார் கூட ஸ்பாட்டுக்கு வந்துட்டாரு. மேடம் ரெடியா?” என்று கேட்க, உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்ற அமுதா “நான் ரெடி சார் போகலாம்.” என்றாள். 

இதற்கு முன் அபிநயாவை வைத்து அவர்கள் சூட் செய்ய முயற்சி செய்த அதே பாடல் காட்சியை தான் இப்போது அமுதாவை வைத்து அவர்கள் ஷூட் செய்ய போகிறார்கள். அன்று தன் போக்கிற்கு அந்த பாடலையும் கொட்டும் மழையையும் ரசித்து மயில் போல தனது இயற்கையான அழகுடன் நடனமாடி விஜயின் மனதை வென்ற அமுதா,  இன்று அவள் காலை வந்ததில் இருந்து அந்த பாடலை பாடலைக் கேட்டு தன் மனதில் பதிய வைத்துக் கொண்டு, டான்ஸ் கோரியோகிராபர் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸ் அனைத்தையும் ப்ராக்டிஸ் செய்து பக்காவாக ரெடி ஆகி இருந்தாள். 

அமுதா தனது கேரவனில் இருந்து வெற்றியுடன் கீழே இறங்கி செல்ல, ஷூட்டிங் நடக்கும் இந்த இடமே தங்களுக்கு சொந்தமானது என்பதால், சைடு ரோலாக இருந்தாலும் தனக்கும் கேரவன் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கி இருந்த அபிநயா தானும் தயாராகி தன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவளுடைய கேரவனில் இருந்து கீழே இறங்கினாள். 

இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் நடிப்பதை தாண்டி அவன் தான் இந்த படத்தின் ப்ரொடியூசர் என்பதால், இந்த சீனில் தான் தேர்வு செய்த அமுதா எப்படி பர்ஃபாம் செய்கிறாள் என்று பார்ப்பதற்காகவே முன் கூட்டியே தயாராகி ஓரமாக ஒரு சேரில் அமர்ந்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். அவனுக்கு குடை பிடித்தபடி 4,5 கருப்பு யூனிஃபார்மில் இருந்த பவுன்சர்ஸ்கள் அவன் பின்னே நின்று கொண்டிருந்தார்கள். 

வெளியில் வந்தவுடன் முதல் வேலையாக தன் கண்களால் விஜய்யை தேடிய அமுதா அவனும் மேக்கப் எல்லாம் போட்டு பக்காவாக ரெடி ஆகி தனக்கு முன்னே அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு ஆர்வமான முகத்துடன், “ஏய்.. வெற்றி அங்க பாரேன்.. விஜய் சார் ரெடியாகி உட்கார்ந்து இருக்காரு! இந்த படத்துல வர கேரக்டர்ல அவர் பணக்காரர் தான். இருந்தாலும் கொஞ்சம் நார்மலா தான் டிரஸ் பண்ணி இருக்காரு. ஆனா இதுல கூட பாக்குறதுக்கு என் ஹீரோ செமையா இருக்காரு பாரு!

நான் அவரை மேக்கப் இல்லாம பார்த்து இருக்கேன். அப்போ அவர் கொஞ்சம் வேற மாதிரி அழகா இருந்தாரு. இப்போ பக்காவா ஒரு ஹீரோ எப்படி இருக்கணுமோ அதே மாதிரி கெத்தா ஸ்டைலா எப்படி ராஜா மாதிரி உட்கார்ந்து இருக்காரு பாரு! ராஜா மாதிரி என்ன இவர் தான் ராஜா‌. 

The king of Tamil cinema. No no the king of Indian cinema. இவர் ஏதோ அமெரிக்கன் மூவில நடிக்கப் போறார் என்று நான் கேள்விப்பட்டேன். ஐயோ அப்படி மட்டும் நடந்துருச்சுன்னு வையேன்.. இப்படி ஒரு இன்டர்நேஷனல் ஸ்டார் கூட நானும் நடிச்சு  இருக்கின்றது எனக்கு எவ்ளோ பெரிய பிளசிங் தெரியுமா? இன்னும் நடக்கிறத எல்லாம் என நம்பவே முடியல.. எல்லாமே கனவு மாதிரி இருக்கு. யாரும் நான் தூங்கிட்டு இருக்கேன்னு சொல்லி என்னை எழுப்பி இந்த கனவை கலைக்காம இருந்தா நல்லா இருக்கும்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 

அவள் பேச பேச பொறாமையில் வெற்றியின் முகம் சுருங்கியது. அவனும் ஓரக் கண்ணால் விஜயை திரும்பி பார்த்தான். சினிமாவில் வருவதைவிட நேரில் பார்க்க இன்னும் விஜய் அழகாக இருப்பதாக அவனுக்கு தோன்றியது. இவனுக்கு ஜோடியாக அமுதா நடிக்க போகிறாள்.. இவன் வேறு இத்தனை அழகாக இருக்கிறான்.. ஒருவேளை தன்னை விட அமுதாவிற்கு அவனை பிடித்து விட்டால் என்ன செய்வது? என்று எல்லாம் அவன் மூளை என்னென்னவோ யோசிக்க தொடங்கியது. 

ஆனால் அதற்கு எல்லாம் நேரம் கொடுக்காமல் டைரக்டர் அமுதாவையும்,  அபிநயாவையும் அழைத்து எடுக்கப் போகும் சீனை விளக்கி அவர்கள் இருவரையும் சேர்ந்து ஒன்றாக பேசி சிரித்தபடி நடந்து வர சொன்னார். அபிநயாவை அவளுக்கு ஏற்கனவே நன்றாக தெரியும் என்பதால், அவளுடன் சேர்ந்து நடிப்பது அவளுக்கு ஈசியாக இருந்தது. அதனால் அமுதா நார்மலாக அவளுடன் பேசி சிரிப்பதை போல சுலபமாகவே நடிக்க, கேமராவின் அருகில் அமர்ந்திருந்த விஜய் மானிட்டரில் தெரிந்த அமுதாவின் முகத்தை ஜூம் செய்து பார்த்தான். 

முதன் முதலில் அவள் ஆடும் போது அவன் அவளை பார்க்கும்போது அமுதா அவன் கண்களுக்கு எத்தனை அழகாக தெரிந்தாளோ, அதை விட அதிகமாக இப்போது அவன் கண்களுக்கு அவள் பேரழகியாக தெரிந்தாள். அதனால் கண் இமைக்காமல் அவன் மானிட்டரில் தெரிந்த அமுதாவின் கண்கள், சிவந்த மூக்கு, அவளது விரிந்த புன்னகை என அனைத்தையும் இன்ச் இன்சாக அவளைப் பார்த்து ரசித்தான் விஜய். 

அவர்கள் பேசியபடி நடந்து வந்து கொண்டிருக்கும்போது அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மழை வருவதைப் போல செட்டிங் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. அதை கவனித்த அமுதா எதார்த்தமாக அபிநயாவிடம் சிரித்த முகமாக “இப்போ நம்ம மேல மழை வர்ற மாதிரி தண்ணி விட்ட பிறகு தானே.. அவங்க அப்படி பண்ணா, போட்ட மேக்கப் எல்லாம் தண்ணில போயிறதா? அப்புறம் ஸ்கிரீன்ல நான் எப்படி அழகா தெரிவேன்?” என்று கேட்க, தனது கேரக்டரை மறந்து விட்டு அமுதாவை முறைத்து பார்த்த அபிநயா “அப்படியே இங்க தண்ணிக்கு பதிலா அவங்க ஆசிட் ஊத்தி மொத்தமா நீ அதுல எரிஞ்சு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு போயிட்டா நல்லா இருக்கும் டி!” என்று நினைத்து விட்டு, “அப்படியெல்லாம் நடந்தா டச்சப் பண்ணுவாங்க. இந்த பேசிக் டிடைல்ஸ் கூட தெரியாம நீங்க எல்லாம் எந்த தைரியத்துல நடிக்க வந்த? விஜய் சார் உன்ன டைரக்டா ரெக்கமண்ட் பண்ணி இந்த படத்துல போட்டுட்டா உனக்கு அறிவு வேண்டாமா?

உனக்கு எல்லாம் ஹீரோயின்  ஆகுறதுக்கு என்ன தகுதி இருக்க அமுதா? முன்ன பின்ன கேமரா முன்னாடி நின்னு அட்லீஸ்ட் ரீல்சாவது பண்ணி இருக்கியா நீ? என் இடத்தை ஈசியா புடிச்சிட்டு என் கிட்டயே எதுவும் தெரியாத மாதிரி பேசி நல்லவ மாதிரி நடிக்கிறியா?” என்று கோபமாக கேட்டாள். 

அவள் அப்படி சொன்னவுடன் அமுதாவின் முகம் சோகத்தில் வாடியது. அவளது வீட்டில் உள்ளவர்கள் கூட அவளது பாதுகாப்பை மனதில் வைத்து தான் அவளை நடிக்க வேண்டாம் என்றார்களே தவிர, அவள் அழகில் குறை அவளுக்கு நடிக்க தகுதி இல்லை என்றெல்லாம் யாரும் சொல்லவில்லை. அபிநயா பொறாமையில் பேசுகிறாள் என்று அவள் மூளைக்கு புரிந்தாலும் அந்த நொடி அவள் பேசியது அவள் மனதை கஷ்டப்படுத்தியது. 

உன்னிப்பாக மானிட்டரை கவனித்துக் கொண்டிருந்த விஜய் அவர்கள் பேசிக் கொள்வதை லிப் மொமெண்ட் வைத்து புரிந்து கொண்டு தன் கையில் இருந்த மைக்கில் “கட் கட் கட்!” என்று கோபமாக தனது அடி தொண்டையில் இருந்து கத்தினான். அவனுடைய இனிமையான குரல் இப்போது கோபத்தால் மைக்கில் கனீர் என்று ஒலிக்க, அதைக் கேட்டு அமுதா, அபிநயா இருவருமே பயந்து சட்டென்று அவனை திரும்பி பார்த்தார்கள். 

அபிநயாவை முறைத்துப் பார்த்த விஜய் “இத்தனை பேர் உங்கள சுத்தி சீன் கரெக்டா வரணும்னு எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி வச்சுட்டு பக்காவா வெயிட் பண்ணிட்டு இருந்தா, நீங்க ரெண்டு பேரும் அங்க உங்க சொந்த பிரச்சனையை பேசி சண்டை போட்டு இருக்கீங்களா? இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். ஒழுங்கா பின்னாடி போய்ட்டு ஃபர்ஸ்ட்ல இருந்து நடந்து வாங்க.  மறுபடியும் தப்பா பண்ணீங்கன்னா எனக்கு கோவம் வந்துரும் பாத்துக்கோங்க! அப்புறம் நான் ஏதாவது சொல்லிட்டேன்னு சொல்ல கூடாது.” என்று அவர்களை எச்சரிக்கும் தோரணையில் சொல்ல, உடனே அமுதாவும், அபிநயாவும் கோரசாக ஓகே சார் என்று சொல்லிவிட்டு மீண்டும் முதலில் இருந்து நடந்து வந்தார்கள். 

அந்த காட்சிகள் அனைத்தையும் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்த வெற்றி தன் அருகில் நின்ற அசிஸ்டன்ட் டைரக்டர்களில் ஒருவனிடம் “சார் ஷூட்டிங் எப்ப முடியும்?” என்று கேட்க, “என்ன ப்ரோ நீங்க இப்ப தான் எல்லாமே ஸ்டார்ட் ஆயிருக்கு.‌.. அதுக்குள்ள ஷூட்டிங் எப்ப முடியும்னு கேக்குறீங்க? நீங்க அமுதா மேடம் மேனேஜர் தானே.. அவங்களை வச்சு இன்னைக்கு ஒரு ஃபுல் சாங் எப்படியாவது ஷூட் பண்ணிடனும்னு விஜய் சார் டைரக்டர் கிட்ட பேசிட்டு இருக்காரு‌. அந்த சாங் ஃபுல்லாவே இந்த தோட்டத்தை சுத்தி எடுக்கிற மாதிரி தான் இருக்கும். அதனால எப்படியும் இன்னிக்கி ஈவினிங் வரைக்கும் கண்டிப்பா ஷூட்டிங் போகும்.” என்றான் அவன். 

“என்னது ஈவினிங் வரைக்கும் நடக்குமா? இப்பவே கண்ணை கட்டுதே!” என்று நினைத்த வெற்றி பாவமாக விஜயையும், அமுதாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். 

– காதல் மலரும்

You may also like

Leave a Comment

About Me

Featured