Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 40

சாபமாய் வந்த என் உயிரே CH 40

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 40 

அமுதா விஜயை அனுப்பிவிட்டு தன் வீட்டிற்கு செல்ல, அங்கே நடு வீட்டில் கூடியிருந்த அவளுடைய குடும்பத்தினர்கள் அவளை அவளுடைய ரூமிற்கு செல்ல விடாமல் சூழ்ந்து கொண்டார்கள். வடிவு அமுதாவை பார்த்து “நாங்க இங்க இத்தனை பேர் நீ வர்றதுக்காக காத்து கிடக்கிறோம்! எங்களை கண்டுக்காம நீ பாட்டுக்கு உள்ள போனா என்ன அர்த்தம்?” என்று கேட்க, “அவ்வளவு தான் சோலி முடிஞ்சுது. எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க.. இதுக்கு மேல நம்மளால ஒன்னும் பண்ண முடியாது.” என்று நினைத்த அமுதா  “அப்படி எல்லாம் இல்லைங்க அத்தை.. நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க? எனக்கு வெளியே போயிட்டு வந்தது டயர்டா இருந்துச்சு. அதான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாமேனு என் ரூமுக்கு போனேன். வேற ஒன்னும் இல்ல.” என்று சொல்லிவிட்டு வடிவை பார்த்து  தனது அனைத்து பற்களும் தெரியும்படி இழித்தாள். 

“அது எல்லாம் அப்புறம் ரெஸ்ட் எடுத்துக்கலாம். உங்க அத்தை எல்லார் கிட்டயும் முக்கியமான விஷயம் பேசணுமாம். இங்க வந்து நில்லு.” என்று மணிகண்டன் அவளிடம் அதட்டலாக சொல்ல, “இன்னைக்கு அத்தை ஒரு சம்பவம் பண்ணாம தூங்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல. இந்த கல்யாண பேச்சு அப்படியே முடிஞ்சு போயிடும்னு தான் சாமி கிட்ட வேண்டிக்கலாம்னு நான் கோவிலுக்கே போகலாம்ன்னு நினைச்சேன். பட் நடக்கிறது எல்லாத்தையும் பார்த்தா என் விஷயத்துல அந்த மாரியம்மன் இன்னும் மனசு வைக்கல மாதிரி தெரியுதே!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட அமுதா வெற்றி அங்கே ஓரமாக நிற்பதை பார்த்துவிட்டு வேகமாக சென்று அவன் அருகில் நின்றாள். 

அவள் என்னவோ தனக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் வெற்றி கண்டிப்பாக தனக்காக பேசி தன்னை அதில் இருந்து காப்பாற்றுவான் என்ற எண்ணம். ஆனால் அதைக் கண்ட மணிகண்டனோ அமுதாவிற்கு அந்த அளவிற்கு வெற்றியை பிடித்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். 

அதனால் அவர் “நீயே என்னன்னு எல்லார் கிட்டயும் சொல்லு அத்த” என்பதைப் போல வடிவை பார்க்க, அதற்காகவே காத்திருந்த வடிவு “என் பையன் வெற்றிக்கும், எங்க அண்ணன் மவ அமுதாவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு அவங்க சின்ன புள்ளைங்களா இருக்கும்போதே நம்ம பேசி வச்சது தான். இப்ப தான் இந்த புள்ள படிப்பு முடிச்சிருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம்னு நானும் அமைதியா இருந்துட்டேன். 

ஆனா இதுக்கு மேலயும் அப்படி அமைதியா இருந்தா சரிப்பட்டு வராதுன்னு தோணுது. நம்ம வீட்டு பிள்ளைகளை சும்மா வெளியூருக்கு வேலைக்கு அனுப்புறதே நமக்கெல்லாம் பெரிய விஷயம். இதுல இந்த புள்ள படத்துல நடிக்க போறேன் சினிமா ஹீரோயின் ஆகப்போறேன்னு பேசிட்டு இருக்குது. இது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராதுன்னு சொன்னாலும் அவ கேட்கிற மாதிரி இல்ல. 

சரி நம்ம புள்ள ஆசைப்படுது செஞ்சு வச்சுருவோம்னு எல்லாரும் அதையும் ஒரு மனச ஏத்துக்கிட்டாச்சு. ஆனா நாலு பேர் கூட வெளியூருக்கு எல்லாம் போய் நடிக்க போற பிள்ளைக்கு பாதுகாப்பு வேணும்ல.. இப்ப எல்லாம் காலம் கெட்டு கிடக்குது.. அதனால வர திங்கட்கிழமை நம்ம ஊரு மாரியம்மன் கோவிலிலயே என் பையன் வெற்றிக்கும், அமுதாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.‌ அதுக்கு அப்புறம் சின்னஞ்சிறுசுங்க அவங்க வாழ்க்கையை அவங்களே பாத்துக்கிட்டோம்னு எப்படியோ போங்கன்னு நம்ம விட்டுரலாம். அவங்க நல்லா இருந்தா நமக்கு அதுவே போதும். ஏற்கனவே நானும் மணியும் எல்லாமே பேசிட்டோம். ஒரு வார்த்தை எல்லாரையும் கூப்பிட்டு வச்சு சொல்லிட்டா நல்லா இருக்கும்னு தான் இங்கே உங்கள வர சொன்னோம்.” என்றாள். 

இவ்வளவு விரைவாக தனது திருமணம் வெற்றியுடன் நிச்சயிக்கப்படும் என்று அமுதா எதிர்பார்க்கவில்லை. அதனால் அவள் ஷாக் ஆகி மற்றவர்களையும் வெற்றியையும் மாறி மாறி பார்க்க, இனி அமுதா தனக்கு கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று நினைத்து சந்தோஷமாக இருந்த வெற்றி அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தான். 

அவனது புன்னகையில் விரிந்த பிரகாசமான முகத்தை பார்த்தவுடன் “இனிமே இந்த விஷயத்தை பற்றி இவன் கிட்ட பேசி பிரயோஜனமே இல்லைன்னு நல்லா தெரிஞ்சிருச்சு. இவனும் எப்படா இது நடக்கும்னு வெயிட் பண்ணிட்டு இருந்த மாதிரி, எவ்ளோ சந்தோஷமா அத்தை சொன்னதை கேட்டு சிரிக்கிறான்.. அப்ப நான் நினைச்சது கரெக்ட் தான். இவனுக்கும் என் மேல ஒரு ஃபீலிங்ஸ் இருந்திருக்கு. எது எப்படியோ நடக்கிறது நடக்கட்டும். இதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது.” என்று நினைத்த அமுதா எதுவும் பேச முடியாமல் தன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அப்படி நின்றாள். 

அவளுக்கு கண்டிப்பாக திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அறிந்திருந்த வெற்றி அவளது வாடி போனை முகத்தை பார்த்து “இன்னைக்கு நீ என்ன வேண்டா வெறுப்பா வேற வழி இல்லாம ஏத்துக்கிட்டாலும், ஒரு நாள் என் மனசுல உன் மேல இருக்கிற லவ் உனக்கு கண்டிப்பா புரியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு டி. என்னை ஒரு நாள் புரிஞ்சுகிட்டு நீ என் கூட சந்தோஷமா வாழ்வேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அது வரவரைக்கும் கண்டிப்பா உனக்காக நான் எத்தனை வருஷம் வேணாலும் வெயிட் பண்ணுவேன். 

பட் நீ என் பொண்டாட்டியா இருந்தா, எப்பயும் நீ என்ன விட்டுப் போக மாட்டேன்னு எனக்கு ஒரு நம்பிக்கை கிடைத்த மாதிரி இருக்கும். அதுக்காக மட்டும் தான் உனக்கு விருப்பமே இல்லை என்றாலும் இந்த கல்யாணத்தை நான் பண்ணிக்க ஓகே சொல்லி இருக்கேன். உனக்கு நான் இருக்கேன் டி அம்மு. நீ என்ன ஆசைப்பட்டாலும் உனக்காக அது எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் நான் செய்வேன்.” என்று தன் மனதிற்குள் அவளிடம் சொன்னான். 

அதைத் தொடர்ந்து வெற்றி அமுதாவின் திருமண வேலை மின்னல் வேகத்தில் நடக்க தொடங்கியது. தினேஷ் உடன் தான் தங்கி இருந்த பங்களா வீட்டிற்கு சென்ற விஜய் அந்த நாள் முழுவதும் நடந்த அனைத்தையும் பற்றி யோசித்துப் ‌ பார்த்தான். பெரிய சினிமா ஸ்டார் ஆன அவனை அமுதா ஒரு சாதாரண நபரை போல நடத்தியது இப்போதும் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. 

ஆனால் அனைத்தும் முடிந்த பிறகு அதை நினைத்துப் பார்க்கும்போது என்னவோ இன்று அவன் தன்னையும் அறியாமல் சந்தோஷமாக இருந்ததைப் போல அவனுக்குள் ஒரு உணர்வை ஏற்பட்டது. அதைப் பற்றி யோசிக்க விஜய் அவளுடன் கோவிலுக்கு சென்றதை நினைவு கூர்ந்தான். அந்த சிந்தனை சிறு வயதில் அவனுக்கு அவன் அம்மாவுடன் கோவிலுக்கு சென்றதும், அப்போது அவன் அம்மா அவனிடம் “இந்த உலகத்துல எல்லாமே கடவுள் நினைக்கிறதுனால தான் நடக்குது விஜய். உன்ன சுத்தி இருக்கிறவங்க எல்லாரையும் விட அந்த கடவுளை நீ நம்பு. அவர் தான் உனக்கு நல்ல வழியை காட்டுவாரு. பியூச்சர்ல நீ ரொம்ப தைரியமான பையனா இருக்கணும். சாமிய நல்லா கும்பிட்டுக்கோ.” என்று சொன்னது இப்போது அவனுக்கு ஞாபகம் வர,

“கடவுளை நம்பனும். சுத்தி இருக்கிறவங்களை நம்ப கூடாதுன்னு சொல்லிட்டு கடைசில உன்னையே நான் நம்ப முடியாத மாதிரி பண்ணிட்டியே மா.. எப்படி என்னால உன்னை முன்னாடி மாதிரி மனசார வாயத் தொறந்து அம்மான்னு கூப்பிட முடியும்? எனக்கு உன்ன நினைச்சாலே வெறுப்பா இருக்கு. என்னை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு இருந்தா நீ அப்படி பண்ணி இருப்பியா?” என்று எங்கேயோ இருக்கும் அம்மாவிடம் அவன் தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். 

வழக்கம்போல அவன் மனதிற்குள் இருக்கும் கேள்விகளுக்கு எல்லாம் இப்போதும் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் சோகமான விஜய் குடிக்கலாமா என்று யோசித்து அவனது கபோர்ட்டில் இருந்த மது பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்தான். பின் அவனே “வேண்டாம் எப்ப நான் குடிச்சாலும் ஏதாவது ஒரு பெரிய பிரச்சனையில போய் மாட்டிக்கிறேன்.. அப்புறம் அதைப் பற்றி யோசிக்கிறது, அதை சால்வ் பண்றதுன்னே டைம் போகுது. நான் ஷூட்டிங்காக தானே இங்கே வந்தேன்.. முதல்ல வந்த வேலையை பாக்கணும். அத விட்டு இந்த அமுதா மாதிரி லோ கிளாஸ் ஆளுங்க கூட சேர்ந்து நான் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.” என்று நினைத்து டைரக்டர் ஸ்ரீகாந்துக்கு கால் செய்து ஷூட்டிங் சம்பந்தமாக பேச தன்னை நேரில் வந்து அவன் தங்கி இருக்கும் இடத்தில் பார்க்கச் சொன்னான். 

கடந்த இரண்டு நாட்களாகவே விஜய்யை பார்க்க துடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் இப்போது அவனாகவே தந்தை வரச் சொல்லி அழைத்ததால் இரவு நேரம் என்று கூட பார்க்காமல், தன் காரை எடுத்துக் கொண்டு அவன் சொன்ன இடத்தை நோக்கி பயணப்பட்டார். 

பிரசிடெண்ட் கோபமாக நின்று கொண்டு இருக்க, “இப்ப எதுக்கு அப்பா நீங்க கூப்பிடுறீங்க? என்ன தாண்டி அவ முன்னாடி போய்க் கிட்டே இருப்பா.. நான் அவ வளர்ச்சிய வேடிக்கை பார்த்துட்டு இருக்கனும்னு சொல்றீங்களா? நீங்களும் அவளை ஏதாவது பண்ணனும்னு யோசிட்டு இருந்தீங்க! 

நீங்க சும்மா அதை ஏன் யோசிச்சிட்டு இருந்தீங்களே தவிர எதுவும் பண்ற மாதிரி எனக்கு தெரியல. நீங்க லேட் பண்ணிக்கிட்டே இருந்தா ஷூட்டிங் ஸ்டார்ட்டாகி அவ ஹீரோயினே ஆயிடுவா.. அதுக்கு அப்புறம் அவளுக்கு என்ன ஆனா என்ன? என்னால அவ விஜய் சார் கூட சேர்ந்து நடிக்கிறதை எல்லாம் பார்க்கவே முடியாதுப்பா! அதான் இப்படி பண்ணேன். 

இந்த விஷயத்துல நீங்க என் மேல கோவப்பட்டா கூட பரவால்ல. அவ இந்த படத்துல நடிக்காமல் இருப்பதற்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். அப்டி நான் எதாவது பண்ணி உங்களுக்கு தெரிஞ்சதுன்னா இந்த மாதிரி அத பத்தி கேட்டு என்ன குற்றவாளி மாதிரி நிக்க வச்சு கேள்வி கேட்காதீங்க.. எனக்கு நீங்க இப்படி பண்றது சுத்தமா பிடிக்கல.” என்றாள் அபிநயா. 

“இப்படித் தான் லூசுத் தனமா யோசிச்சு உன்னை ஏதாவது செய்ய வேண்டாம்னு சொல்றேன் அபி. அந்த பொண்ணு படத்துல நடிக்கிறது எனக்கும் தான் பிடிக்கல. அதை தடுக்குறதுக்கு அதுக்குன்னு இப்படி தான் பண்ணனுமா? அது அதுக்கு ஆயிரம் வழி இருக்கு. எவனோ தெருவுல போறவன வச்சு இவ்ளோ பெரிய விஷயத்தை பண்ண பார்த்து இருக்க.. 

அவன் செய்ய தெரியாம எதையாவது செஞ்சு சொதப்பினா நீயும் தான் மாட்டுவ.. அதுவும் இல்லாம ஒரு பொம்பள புள்ளைய நீ ஒரு பொண்ணா இருந்துகிட்டு இப்படி பண்ண நினைச்சது  என்ன சொன்னாலும் தப்பு தான் அபி. அந்தப் பிள்ளையையும் சரி அவ குடும்பத்தையும் சரி யாரையுமே எனக்கு சுத்தமா பிடிக்காது. அதுக்காக நான் கூட இந்த அளவுக்கு கொடூரமா யோசித்தது இல்லை. இந்த எண்ணத்தை இதோட விட்டுடு. அமுதா விஷயத்துல வேற என்ன பண்ண முடியும்ன்னு நான் பார்க்கிறேன். நீ பொறுமையா இரு. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்.” என்று அவளை எச்சரிக்கும் தோரடையில் சொன்ன பிரசிடெண்ட் கோபமாக சென்று விட்டார். 

இந்த விஷயத்தில் தன் அப்பா தன் பக்கம் நிற்காமல், அபுதாவிக்காக தன்னிடம் பேசிவிட்டு செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபத்தின் ஒத்த உருவமாக அங்கே நின்று கொண்டிருந்த அபிநயா “உன்னால அடுத்தடுத்து எனக்கு எல்லாமே தப்பு தப்பா நடக்குது அமுதா. எங்க அப்பாவுக்கு என்னை திட்ட வச்சுடல.. உன்ன சும்மா விட மாட்டேன் டி‌.” என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். 

-காதல் மலரும்

You may also like

Leave a Comment

About Me

Featured