Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 4

சாபமாய் வந்த என் உயிரே CH 4

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 4: குள்ளநரி கூட்டம்

குடிபோதையில் விஜய் ஒரு வயதானவரை ஆக்சிடென்ட் செய்து விடுகிறான். பின் அவரை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் அவன் ஆம்புலன்ஸ்க்கு கால் செய்துவிட்டு காத்திருக்கையில், அதற்குள் அங்கே கூட்டம் கூடி போலீசார்கள், மீடியா ஆட்கள் என அனைவரும் வந்து குவிய, விஜய்க்கு எதிராக ஒரு குடும்பம் கேஸ் கொடுக்க தயாராக இருந்ததால், அது தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் அவனது அசிஸ்டன்ட் தினேஷிடம் விஜய் ஜ போலீஸ் ஸ்டேஷனுக்கு தன்னுடன் வர சொல்கிறான்.

கண்டிப்பாக இப்படி ஒரு கேஸ் -க்காக போலீஸ் ஸ்டேஷன் செல்வதை தனக்கு கௌரவ குறைச்சலாக நினைத்து விஜய் வரமாட்டான் என்று நன்கு அறிந்திருந்த தினேஷ் எவ்வளவோ அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம், “ நான் தான் இந்த ஆக்சிடென்ட் ஜ பண்ணினேன்னு சரண்டர் கூட ஆகுறேன் சார். விஜய் சார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் வர மாட்டாரு.” என்று சொல்லி எவ்வளவோ கெஞ்சி பார்த்து விட்டான். ஆனால் அதைக் கேட்டு கடுப்பான இன்ஸ்பெக்டர்,

“என்ன சார் சீரியஸ்னஸ் புரியாம இப்படி பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க! இன்னும் கொஞ்ச நேரத்துல நான் விஜய் சாரோட போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பலனா, இங்க பத்து பேர் Board ஜ புடிச்சுக்கிட்டு நீதி வேணும் நியாயம் வேணும்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அப்ப தான் இன்னும் விஜய் சாரோட பெயர் கெட்டுப் போகும். அவர ஸ்டேஷனுக்கு மட்டும் வர சொல்லுங்க. மத்தது எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.” என்ற இன்ஸ்பெக்டர் அங்கே இருந்த கூட்டத்தை விளக்கச் சொல்லிவிட்டு, 

ஒரு கான்ஸ்டபிள் ஐ அனுப்பி அடிபட்ட அந்த முதியவர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்து வரச் சொன்னார்.

தன் காரில் கிளம்புவதற்கு தயாராக இருந்த விஜய் இடம் எப்படி இதை சொல்வது என்று நினைத்து தயங்கியபடியே அவன் அருகே வந்த தினேஷ், “சார் இன்ஸ்பெக்டர் உங்க கிட்ட பேசணும்னு சொல்றாரு.” என்று மட்டும் சொல்ல,

“நான் செம்ம கடுப்புல இருக்கேன் தினேஷ். நான் இப்ப யார்கிட்டயும் பேசுற Mood -ல இல்ல. இருக்கிற டென்ஷன்ல அடிச்ச போதை எல்லாம் அப்படியே இறங்கிடுச்சு. அந்த ஆள் அப்படியே கடந்து சாகட்டும்ன்னு நான் போயிருக்கணும். தேவை இல்லாம ஆம்புலன்ஸ் -க்கு கால் பண்ணி அது வர வரைக்கும் வெயிட் பண்ணி இங்க இருந்தன் பாத்தியா அது.தான் நான் பண்ண மிஸ்டேக். நான் வீட்டுக்கு போறேன், நீ இங்க இருந்து என்னன்னு பாரு.” என்று எரிச்சலுடன் சொன்ன விஜய் அவனது கார் ஐ ஸ்டார்ட் செய்ய போக, “ஒன் மினிட் சார்.” என்ற தினேஷ் அவனைத் தடுத்தான்.

அதனால் இன்னும் எரிச்சல் அடைந்த விஜய், “ஏய் ஏன் டா நீயும் என் உயிரை வாங்குற?” என்று தினேஷ் ஐ பார்த்து கத்த, “சார் கொஞ்சம் மெதுவா பேசுங்க. இங்க நிறைய நியூஸ் சேனல்ஸ் -ல இருந்து வந்திருக்காங்க. அவங்க எல்லாரும் உங்கள தான் Focus பண்ணிட்டு இருக்காங்க.” என்று தினேஷ் சொல்ல, “இப்ப என்ன என்னதான்டா பண்ண சொல்ற?” என்று விஜய் கேட்க, “சார் ஒரே ஒரு தடவ போலீஸ் ஸ்டேஷன் மட்டும் போயிட்டு வந்துடலாம் சார் ப்ளீஸ். அங்க வச்சு எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம்னு இன்ஸ்பெக்டர் சொல்றாரு.” என்று பயந்த குரலில் தினேஷ் சொல்ல, 

அவனை அடிக்க கை ஓங்கிய விஜய், “என்னடா நீயும் அந்த ஆளும் சேந்துகிட்டு விளையாடுறீங்களா? இந்த விஜய் குருமூர்த்தி உங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன் போகணுமா?” என்று தன் பல்லை கடித்துக் கொண்டு கண்களில் கோப தீ எறிய கேட்க, “இந்த ஆக்சிடென்ட் ஐ நேரில பாத்ததா சொல்லி கம்ப்ளைன்ட் குடுத்திருக்காங்க சார்.” என்று தினேஷ் சொல்ல, 

“குடுத்தா கொடுக்கட்டும். அதெல்லாம் நான் என் லாயர் ஐ வச்சு கோர்ட்ல பாத்துக்கிறேன். என்னால போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் வர முடியாது.” என்று சொன்ன விஜய் காரை ஸ்டார்ட் செய்ய; வேகமாக உள்ளே சென்று அமர்ந்த தினேஷ், 

“சார் ப்ளீஸ் சார் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இந்த கேஸ் கோர்ட் வரைக்கும் வந்து அப்ப அத நம்ப ஹேண்டில் பண்ணா கூட, நீங்க பணத்தை வச்சு எல்லாத்தையும் சமாளிச்சுட்டீங்கன்னு தான் பேர் வரும். இது just enquiry தானே அங்க போயிட்டு வந்தா, இதோட இந்த பிரச்சனை முடிஞ்சிடும்.” என்று சொல்ல, அமைதியாக அது பற்றி யோசித்துக் கொண்டு இருந்தான் விஜய்.

அப்போது விஜயின் மொபைல் போன் -க்கு அவனது அப்பாவின் இரண்டாவது மனைவியான வனிதா குருமூர்த்தியிடம் இருந்து கால் வந்தது. அவளது நம்பரை அம்மா என்று Save செய்து வைத்திருந்த விஜய், 

“அம்மா நியூஸ் பார்த்திருப்பாங்க போல!” என்று நினைத்தவன் அதை அட்டென்ட் செய்து சாதாரணமாக, “சொல்லுங்க மா!” என்று அவன் கேட்க, “என்ன சொல்ல சொல்ற விஜய் நியூஸ்ல உன்னை பத்தி எப்படி எல்லாம் வந்துட்டு இருக்கு தெரியுமா? உன் கூட அவார்டு ஃபங்ஷனுக்கு தான் வர முடியல. நீ அவார்ட் வாங்குவதை டிவில காமிப்பாங்க பார்க்கலாம்னு நினைச்சு நான் ஆசையா வந்து பாத்தா, 

நீ எவனையாே ஆக்சிடென்ட் பண்ணிட்டு தப்பிச்சு போக பாக்குறன்னு நியூஸ் சேனல்லையும் மாத்தி மாத்தி போட்டு காட்டிட்டு இருக்கான். அங்க என்ன நடக்குது பா?” என்று வனிதா பதட்டத்துடன் கேட்க, “பெருசா ஒன்னும் இல்ல மா. நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன். 

நீங்க என்ன நினைச்சு கவலைப்படாதீங்க.” என்று விஜய் சொல்ல, “இந்த விஷயம் இன்னும் உங்க அப்பாவுக்கு தெரியல விஜய். ஏதோ அவர் வெளிநாட்டில இருக்கிறனால இன்னும் இந்த விஷயம் அவர் காதுக்கு போகாம இருக்கு. அவருக்கு இத பத்தி எல்லாம் தெரியறதுக்குள்ள நீ எப்படியாவது இந்த பிரச்சனையை சரி பண்ணிடு. உன்ன அவருக்கு அப்புறம் சேர்மன் ஆக்கணும்னு உங்க அப்பா Share Holders கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்கிறது உனக்கு தெரியும் தானே! இந்த நேரத்துல இந்த பிரச்சனை எல்லாம் தேவையா விஜய்?

நம்ம குடும்பத்துக்கு உன்னோட பேரும் புகழும் ரொம்ப முக்கியம். கோர்ட்டு கேஸ்னு போகாம வெளியவே வச்சு முடிக்க பாரு.” என்று அவள் சொல்ல, 

“சரிங்க மா நான் பாத்துக்கறேன்.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்த விஜய், எரிச்சலுடன் தன் தலை முடியை அழுந்த கோதினான்.

கிட்டத்தட்ட அங்கிருந்த அனைவரையும் அந்த இடத்தை விட்டு கலைத்து அனுப்பி இருந்த போலீஸார்கள் விஜயின் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க தயாராக இருப்பதாக சொன்ன குடும்பத்தை தங்களது போலீஸ் ஜிப்பில் ஏற்றி கொண்டு, விஜயின் காரின் அருகே வந்து இன்ஸ்பெக்டர் அவனைப் பார்த்து, “ஸ்டேஷனுக்கு வாங்க சார், அங்க வச்சு பேசிக்கலாம்.” என்று அவனைப் பார்த்து சொல்ல, இப்போது அவனுக்கும் இதை இப்போதே முடிக்க வேண்டும் என்று தோன்றியதால் வேறு வழி இல்லாமல், சரி என்று தலையாட்டிவிட்டு தன் கார் ஐ ஸ்டார்ட் செய்து அவர்களது ஜீப் ஐ பின் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்.

தன் அம்மா பேசுவதை எரிச்சலான முகத்துடன் அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த அவளது மகன் சஞ்சய் அவள் விஜய் இடம் பேசிவிட்டு போனை வைத்த பின், “என்ன மா நீங்க விஜய்க்கு அம்மாவா நடிச்சு நடிச்சு அவனுக்கு உண்மையான அம்மாவாவே மாறிட்டீங்களா?” என்று கோபமாக கேட்க, “ச்சீ வாய மூடு சஞ்சய். நான் அவனுக்கு அம்மாவா இருக்கிறதுக்கு தான் உன்னையும் சஞ்சனாவையும் கஷ்டப்பட்டு பெத்துக்கிட்டனா!” என்று வனிதா கோபமாக கேட்க,

“பிண்ண என்ன மா, நானே அவன சேர்மன் ஆக விடக்கூடாதுன்னு ராப்பகலா யோசிச்சு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கேன். இது ஒரு நல்ல சான்ஸ் தானே! பாருங்க உங்க பையன் குடிச்சிட்டு ரோட்ல போய் யாரையோ ஆக்சிடென்ட் பண்ணி இருக்கான்னு இந்நேரம் டாடி கிட்ட நீங்க போட்டு குடுத்திருந்தா அவனோட இமேஜ் Spoil ஆகி இருக்கும். அத விட்டுட்டு அவனுக்கு இதிலிருந்த தப்பிக்க ஐடியா குடுக்குறீங்க?” என்று சஞ்சய் கேட்க, “உனக்கு இருக்கிற அறிவுக்கு உன்னால இவ்ளோ தான் யோசிக்க  முடியும். So உன்னோட useless Brain ஜ வச்சி தேவையில்லாம யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாத. நான் சொல்றத மட்டும் செய். நம்ம ஆளுங்கள வச்சு விஜய் இப்ப என்ன பண்றான்னு Watch பண்ண சொல்லு. நான் என்ன பண்ணனும்னு அப்புறமா சொல்றேன்.” என்று சொன்ன வனிதா வில்லத்தனமாக சிரித்தாள். 

விஜய் மற்றும் அவன் மீது கம்ப்ளைன்ட் கொடுப்பதாக சொன்னவர்கள் இப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்க, இன்ஸ்பெக்டர் இன் அறையில் அவரது முன்னே இருந்த Chair இல் விஜய் அமர்ந்திருக்க, கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தவர்கள் வெளியே நின்று கொண்டு இருந்தார்கள்.

அப்போது இன்ஸ்பெக்டரால் ஹாஸ்பிடலுக்கு அந்த முதியவரின் உடலிலேயே Check செய்துவிட்டு வருவதற்காக சென்று இருந்த கான்ஸ்டபிள் உள்ளே வந்து அவர்களிடம், “அந்த வயசானவருக்கு கை, கால்ல இருக்கிற எலும்பெல்லாம் முறிஞ்சிடுச்சாம். அதுக்கு ட்ரீட்மென்ட் குடுத்தாலும் சரியாகவே ரொம்ப நாள் ஆகும்னு சொல்றாங்க. அவருக்கு தலையில அடிபட்டு 2, 3 தையல் போட்டு இருக்காங்க. எப்படி பார்த்தாலும் அவர் வயசுக்கு இனிமே எந்திரிச்சு நடக்கிறது எல்லாம் வாய்ப்பே இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு.” என்றார். 

அதுவரை அமைதியாக இருந்த விஜய், “அந்தக் கிழவனுக்கு Family ரிலேட்டிவ்ஸ் -ன்னு யாராவது இருக்காங்களா?” என்று கேட்க, “அப்படியெல்லாம் யாரும் இருக்கிற மாதிரி தெரியல சார் அந்த கிழவன் ஒண்டிக்கட்டை தான்.” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல,

“இங்க பாருங்க இன்ஸ்பெக்டர் மறுபடியும் சொல்றேன் இந்த ஆக்சிடென்ட் ஐ நான் பண்ணல. இருந்தாலும் நான் அவருக்கு ஹெல்ப் பண்ணனும்னு நெனச்சேன். அதுக்கு தான் இப்போ இங்க வந்து நான் உட்கார்ந்து இருக்கேன். Still அவருக்கு ஹெல்ப் பண்ண ரெடியா இருக்கேன். தூரத்தில இருந்து அந்த சின்ன பொண்ணு ஒழுங்கா பாக்காம என் மேல பழி போடறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது. 

அந்தக் கிழவனை என் கெஸ்ட் ஹவுஸ் -ல வச்சு அவருக்குன்னு தனியா நர்ஸ் அப்பாயிண்ட் பண்ணி அவர் சாகுற வரைக்கும் அவருக்கு ஆகர ட்ரீட்மென்ட் செலவுல இருந்து எல்லா செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன். இது இல்லாம அவருக்கு Monthly 50,000 குடுக்க நான் ரெடியா இருக்கேன். 

அந்த பொண்ணோட family  கிட்டையும் பேசுங்க. அவங்களுக்கும் அவங்க எவ்ளோ எதிர்பார்க்கிறாங்களோ அத குடுத்திடலாம். நீங்க எல்லாத்தையும் எனக்கு கரெக்டா முடிச்சு குடுத்துட்டீங்கன்னா, உங்களுக்கு சேர வேண்டியது உங்க வீட்டுக்கு கரெக்டா வந்து சேர்ந்திடும்.” என்று விஜய் சொல்ல, வாயெல்லாம் பல்லாக அவனைப் பார்த்து ஈழித்த அந்த இன்ஸ்பெக்டர்,

“ஓகே சார், இங்க இருந்து அந்த ஹாஸ்பிடல் பக்கம் தான். ஒரு அரை மணி நேரம் மட்டும் வெயிட் பண்ணுங்க. நான் போய் அந்த கிழவன நேரில பாத்து பேசிட்டு வந்துடறேன்.” என்று சொல்ல விஜய் தலையாட்ட, 

அந்த கான்ஸ்டபிள் ஐ அழைத்துக் கொண்டு வெளியே வந்து அங்கே இருந்த இன்னொரு லேடி கான்ஸ்டபிலிடம் “விஜய் சாருக்கு என்ன வேணும்னு கேட்டு அரேஞ்ச் பண்ணி குடுங்க. பிரஸ், மீடியா -ன்னு எவனும் நம்ப போலீஸ் ஸ்டேஷன் இருக்கிற பக்கம் வந்துட கூடாது. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு அந்த சிறுமியின் தந்தையிடம், “நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கிற வரை தான் பார்க்க போறேன் நீங்களும் என் கூட வாங்க.” என்று சொல்லி அவரை மட்டும் கான்ஸ்டபிள் உடன் அழைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் தன் ஜிப் இல் ஹாஸ்பிடல் ஐ நோக்கி விரைந்தார்.

– காதல் மலரும்🌹

You may also like

Leave a Comment

About Me

Featured