Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 35

சாபமாய் வந்த என் உயிரே CH 35

by Thenaruvi Tamil Novels
144 views

அத்தியாயம் 35 

விஜயுடன் அமுதாவும் கலைச்செல்வியும் ஒன்றாக நடந்து கோவிலை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.‌ 

தனக்கு பாதுகாப்பாக விஜய் தன்னுடன் வருகிறான் என்று நினைக்கும் போதே அமுதாவிற்கு உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தது. 

“எனக்காக விஜய் சார் இப்படி எல்லாம் பண்ணாருன்னு மட்டும் அவரோட ஃபேன்ஸ்க்கு தெரிஞ்சதுனா அவ்ளோ தான் என் நிலைமை.. 

எனக்காக அவர் ரிஸ்க் எடுக்கணுமான்னு எல்லாரும் எனக்கு எதிரா திரும்பிருவாங்க..!!” என்று நினைத்து தனக்கு சிரித்துக் கொண்ட அமுதாவிற்கு அப்போது தான் “அவர் தானே அந்த ஆசிட் பாட்டிலை தட்டிவிட்டாரு..

அதுல அவருக்கு ஏதாவது காயம் பட்டுடுச்சான்னு நாம கேட்காமயே விட்டுட்டோமே.. 

ச்சே.. நான் ரொம்ப செல்பிஷ்னு ‌ அவர் நம்மள பத்தி தப்பா நினைச்சிருப்பாரு.” என தோன்ற சட்டென விஜய்யின் கையை பிடித்து “சார் உங்களுக்கு ஏதாவது அடிபட்டு இருக்கா? 

ஆசிட் ரொம்ப டேஞ்சரானது. அது உங்க மேல ஒரு ட்ராப் பட்டு இருந்தாலும் அதனால பெரிய பிராப்ளம் ஆகிடும். 

நீங்க செக் பண்ணீங்களா? எல்லாம் ஓகே தானே!” என்று அவனிடம் அக்கறையுடன் கேட்டாள். 

தனது கூர்மையான விழிகளால் அவளை மேலும் கீழும் பார்த்த விஜய் “பரவாயில்லையே இவளுக்கு என் மேல கொஞ்சம் அக்கறை இருக்கு போல..!! 

என்ன பத்தி பேசும்போது இவளுக்கு கண்ணெல்லாம் கலங்குது..!!” என்று யோசித்தவன், 

“அவ சொல்ற மாதிரி முதல்ல எனக்கு ஏதாவது அடிபட்டு இருக்கான்னு பார்க்கணும். 

நான் இந்த பிரீமியம் குவாலிட்டி fully covered jacket போட்டுருக்கனால எப்படியும் என் மேல எதுவும் பட்டிருக்காது. 

அது மட்டும் இல்லாம ஆசிட் பட்டு இருந்தா  கண்டிப்பா வழிச்சிருக்குமே!” என்று நினைத்து தன் கை கால்களில் ஏதாவது ஆசிட் துளிகள் தெரிந்து இருக்கிறதா என்று செக் செய்து பார்த்தான். 

அவனோடு சேர்ந்து அமுதாவும்  செக் செய்தாள். அப்போது தான் அவனது கண்கள் சிவந்து இருப்பது அவள் கண்களில் பட்டது. 

உடனே பதறிப்போன அமுதா “அச்சச்சோ சார் உங்க கண்ணுக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ ரெட்டா இருக்கு?” என்று கேட்க, 

அதுவரை சாதாரணமாக நின்று கொண்டிருந்த விஜய் “அது ஒன்னும் இல்ல நான் ஒரு வாரமாகவே சரியா தூங்கல. அதான் இப்படி ரெட்டாகி இருக்கும்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே திடீரென்று அவன் கண்கள்  திபு தீபுவென்று எறிய தொடங்கியது. 

இருப்பினும் அந்த இரண்டு பெண்களின் முன்னே தன் வலியை காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்த விஜய், தன் கலங்கிய கண்களை அவர்களிடம் இருந்து மறைக்க முயற்சி செய்தான். 

ஆனாலும் அவனுக்கு கண்களில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் புரிந்து கொண்ட அமுதா, “சார் அதான் உங்களுக்கு கண்ணுல இரிடேஷன் இருக்குல்ல..!! 

அப்புறம் ஏன் இல்லைன்னு பொய் சொல்லி மறைக்க பார்க்கிறீங்க?

நம்ம பாடியிலேயே ஐ ரொம்ப சென்சிட்டிவான ஏரியா. அங்க விசிபிளா ஒரு ப்ராப்ளம் தெரியும்போது, நம்ம அதை இக்னோர் பண்ண கூடாது. 

ஒருவேளை அந்த ஆசிட் டிராப் உங்க கண்ணுல பட்டு இருந்தா என்ன ஆகிறது சொல்லுங்க?

எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார். மதுரையில நல்ல ஐ ஹாஸ்பிடல் இருக்கு. 

ப்ளீஸ் என் கூட வாங்க இப்பவே போயிட்டு வந்துரலாம். நான் கேப் புக் பண்றேன்.” என்று அவனிடம் கெஞ்சும் குரலில் சொல்ல, 

“நம்ம விட்டாலும் இவ விட மாட்டா போலையே.. ஆனா கண்ணும் வேற ரொம்ப எரியுது. 

இவள காப்பாத்த போய் நமக்கு கண்ணுல பிரச்சனையாகி கண்ணு போய்ட்டா என்ன பண்றது?

இந்த வெட்டி கௌரவத்தை எல்லாம் பார்க்கிறதா விட்டுட்டு பேசாம இவகிட்ட கண்ணு எரியுதுன்னு உண்மைய சொல்லிடலாமா?” என்று யோசித்த விஜய்,

“நீ கேட்கிற வரைக்கும் நான் நார்மலா தான் இருந்தேன். தூங்காம இருந்தா கண்ணு லைட்டா எரியுமே அந்த மாதிரி தான் இருந்துச்சு.. 

இப்ப நீ கேட்டதுக்கு அப்புறம் தாண்டி என்னமோ நெருப்ப அள்ளி கொட்டுன மாதிரி திபு திபுனு எரியுது. 

உண்மையை சொல்லு நீ தானே எனக்கே தெரியாம ஏதோ பண்ணிட்ட!” என்று அப்போதும் திமிராக அவளிடம் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினான். 

அவன் சொன்னதைக் கேட்டு பயந்து போன அமுதா “சார் என்ன சார் இப்படி சொல்றீங்க? 

என்னையே நீங்க தானே காப்பாத்துனீங்க.. அப்புறம் என்னால உங்களை என்ன பண்ண முடியும்? 

உங்க கண்ணுல இருந்து தண்ணி வந்துகிட்டே இருக்கு.. நான் கேப் புக் பண்றேன். 

ப்ளீஸ் வேண்டாம்னு சொல்லாம என்‌ கூட ஹாஸ்ப்பிட்டல் வாங்க.” என்று கேட்க, தன் கண்களை தேய்த்துக் கொண்டு இருந்த விஜய் “எனக்கு இந்த பெயின் எல்லாம் ரொம்ப சாதாரணமானது. 

இதுக்காக எல்லாம் நான் ஹாஸ்பிடல் போகமாட்டேன்.‌ இருந்தாலும் நீ இவ்ளோ தூரம் கெஞ்சி கேட்கிறதுனால போனா போகுதுன்னு உனக்காக வரேன். 

என்னோட நம்பர் சீக்ரெட் ஆனது. என்னால கேப் புக் பண்ண முடியாது. 

நீயே உன் நேம்ல புக் பண்ணிடு. மத்த செலவு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” என்றான். 

இப்போது தான் கலோரி படித்து முடித்த அமுதாவிடம் செலவு செய்ய எப்படி காசு இருக்கப் போகிறது?

அவளிடம் இருந்த சில ஆயிரங்களை வைத்து அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க முடியுமா என்று கூட அவளுக்கு தெரியவில்லை. 

அதனால் அவன் சொன்னதற்கு உடனே சரி என்று தலையாட்டிய அமுதா தனது மொபைல் ஃபோனில் இருந்து ஹாஸ்பிடலுக்கு செல்வதற்காக கேப் புக் செய்தாள். 

அங்கே வெயில் மண்டையை பொளந்து கொண்டு அடித்துக் கொண்டிருந்ததால் அவர்கள் புக் செய்த கார் வரும்வரை உச்சி வெயிலில் ஏற்கனவே வலியில் சிரமப்பட்டு கொண்டு இருக்கும் விஜயை நிற்க வைக்க கூடாது என்று நினைத்த அமுதா, 

“சார் பக்கத்துல ஒரு அய்யனார் கோவில் இருக்கு‌. அங்க கொஞ்ச நிழலா இருக்கும். 

கேப் வர்ற வரைக்கும் நம்ம அங்க போய் வெயிட் பண்ணலாமா?” என்று அவனிடம் கேட்க, அவன் என்னவோ போருக்கு செல்பவனை போல தன்னை யாரும் பார்த்துவிடக் கூடாது அடையாளம் கண்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே பல அடுக்குகள் கொண்ட ஆடைகளை அவன் அணிந்து கொண்டு வெளியில் வந்திருந்தான். 

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அவனால் ஒரு நொடி கூட அங்கே இருக்க முடியவில்லை. அதனால் அமுதா கேட்டவுடன் உடனே அவளுடன் சென்று அந்த அய்யனார் கோவிலின் படிக்கட்டில் அமர்ந்தான். 

அவன் கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்க, அவன் தன்னால் தான் இப்படி உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறான் ‌ என்ற அளவிற்கு யோசித்து அவனுக்காக வருத்தப்பட்ட அமுதா கலங்கிய கண்களுடன், 

“அழுகாதீங்க சார்.. உங்களுக்கு சீக்கிரம் சரியாகிவிடும். ஹாஸ்பிடல் போகிறதுக்கு மேக்ஸிமம் அரை மணி நேரம்தான் ஆகும். 

இங்க கேப் புக் பண்ண வர்றதுக்கு ஒரு பத்து நிமிஷம் ஆகும். உங்களுக்கு ரொம்ப முடியலன்னு சொல்லுங்க. 

நான் வெற்றிக்கு கால் பண்ணி எங்க அண்ணனோட ஜிப்பை எடுத்துட்டு வர சொல்றேன். நம்ம அதுலயே ஹாஸ்பிடல் போய்டலாம்.” என்று சொல்ல, 

உடனே வந்த கோபத்தில் அவளை அடிப்பதற்காக கை ஓங்கிய விஜய் இருந்த கடுப்பில் “ஏது.. நான் அழுகிறேனா?

என்ன பாத்தா உனக்கு இது எல்லாம் ஒரு விஷயம் இதுக்காக உட்கார்ந்து வலிக்குதுன்னு அழுகிற சின்ன பையன் மாதிரியா இருக்கு? 

இந்த விஜய் சூப்பர் ஹீரோ டி. அதை மறந்துடாத. ஏதோ கண்ணுல பட்டு தொலஞ்சுருச்சு. 

அதனால என்னமோ வாட்டர் ஃபால்ஸ்ல தண்ணி ஊத்தற மாதிரி அதுவே தானா தண்ணி வடியுது. அதுக்காக நான் அழுகிறேன்னு சொல்லி நீ என்னை அசிங்க படுத்துவியா?” என்று ஆத்திரம் பொங்க கேட்டான். 

அவன் எங்கே தன்னை அடித்து விடுவானோ என்று நினைத்து பயந்த அமுதா “சாரி சாரி  சாரி சார்.. நான் அப்படி சொல்லி இருக்க கூடாது. 

நீங்க எனக்கு ரியல் லைஃப்ல கூட ஹீரோ தான். நான் உங்களை அப்படி சொன்னது தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க.” என்று உடனே மன்னிப்பு கேட்க, 

அவளது கலவரமான முகத்தை உற்று பார்த்த விஜய் அவனுக்கு இருந்த கடுமையான வலியை பொறுத்துக் கொண்டு “ஓகே ஓகே டென்ஷன் ஆகாத.  எனக்கு ஒன்னும் இல்ல. 

நீ முன்னாடி மாதிரி ஏதாவது சொல்லி இல்லாத வியாதி எல்லாம் வரவச்சுராத.” என்றான். 

அப்போது அவனது மொபைலுக்கு தினேஷிடம் இருந்து கால் வந்தது.‌ 

ஸ்கிரீனில் தெரிந்த அதன் பெயரைப் பார்த்தவுடன் “இவனுங்க கொஞ்ச நேரம் கூட என்னை தனியாவே விட மாட்டாங்க போல!” என்று நினைத்து எரிச்சல் அடைந்த விஜய், 

உடனே அந்த காலை அட்டென்ட் செய்து “ஏண்டா நான் வீட்டை விட்டு கிளம்பி வந்து எவ்வளவு நேரம் ஆகுது.. 

நான் அங்கே இல்லைன்றதையே நீங்க இப்பதான் கண்டுபிடிச்சீங்களா? 

உங்களை எல்லாம் நம்பி என் செக்யூரிட்டிக்கு வேலைக்கு வச்சிருக்கனே.. என் நிலைமை என்ன டா ஆகுறது?” என்று கடுபடிக்க, 

“பாஸ் என்ன பாஸ்.. நீங்களே எங்கையாவது யார் கிட்டயும் சொல்லாமல் தொலைந்து போயிடரீங்க..

நாங்க உங்கள தேட ட்ரை பண்ணாலும், உங்க கிட்ட பேச ட்ரை பண்ணாலும் நான் தான் உங்கள டிஸ்டர்ப் பண்றதா சொல்லி என்ன திட்டுறீங்க. 

நெஜமாவே உங்களை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்கு தெரியல பாஸ். 

நீங்க எப்ப என்ன மனநிலையில இருப்பீங்க, உங்க கிட்ட என்ன சொல்லி உங்களை சமாதானப்படுத்தணும்னு கண்டுபிடிக்கிறதுக்கே தனியா நான் ஒரு கோர்ஸ் போய் படிக்கணும் போல.” என்று உள்ளுக்குள் புலம்பிய தினேஷ்,

“நோ நோ பாஸ் ரொம்ப நேரமா நாங்க எல்லாரும் உங்களை தான் தேடிட்டு இருக்கோம். 

உங்களுக்கு கால் பண்ண ட்ரை பண்ணா மொபைல் நாட் ரீச்சபிள் லொகேஷன்ல இருந்துச்சு. 

நம்ம ஆளுங்க கிட்ட சொல்லி உங்க நம்பர் எங்க இருக்குன்னு டிராக் பண்ண கூட சொல்லி இருக்கேன். 

சரி எதுக்கும் ஒரு தடவை கால் பண்ணி பார்க்கலாமேன்னு கால் பண்ணு ரிசீவ் ஆயிடுச்சு. 

நீங்க இப்ப எங்க இருக்கீங்க பாஸ்? உங்களுக்கு கூட செக்யூரிட்டிக்கு யாருமே இல்லாம நீங்க தனியா போறது safe இல்ல. 

நீங்க இப்பவே உங்க லைப் லொகேஷன் அனுப்புங்க. நான் காரை எடுத்துக்கிட்டு கிளம்பி வரேன்.” என்று பணிவுடன் சொன்னான்.‌ 

தன் அருகில் அமர்ந்திருந்த அமுதாவை ஓரக் கண்ணால் பார்த்தான் விஜய். 

அவனுக்கு என்னவோ அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு அவளுடனே ஹாஸ்பிடல் செல்லலாம் என்று தோன்றியது. 

அதனால் நடந்த எதைப் பற்றியும் தினேஷிடம் சொல்லாமல் “ம்ம்.. என் பக்கத்துல ராணி லட்சுமி பாயும், முத்துலட்சுமியும் இருக்காங்க. 

எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அவங்க என்ன பாத்துப்பாங்க. சோ நீ என்ன பத்தி கவலைப்படாம வழக்கம் போல மூடிட்டு இரு.

நான் எனக்கு எப்போ அங்க திரும்பி வரணும்னு தோணுதோ அப்ப‌ தான் வருவேன்.

அண்ட் எப்பயும் சொல்றது தான்.‌ நான் எங்க இருக்கேன்னு கண்டுபிடிச்சு கிளம்பி வந்து என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தீங்கன்னா.. 

யார் யார் எல்லாம் வரீங்களோ அவங்க எல்லாரையும் டைரக்டா மேல அனுப்பி வச்சிருவேன்.”  என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை தூண்டித்தான். 

– காதல் மலரும் 

***

You may also like

Leave a Comment

About Me

Featured