Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 31

சாபமாய் வந்த என் உயிரே CH 31

by Thenaruvi Tamil Novels
161 views

அத்தியாயம் 31

 அனாவிகா மீடியாவில் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டதால் ஓரளவிற்கு விஜய் தன்னை பற்றிய வதந்திகளை அவனுடைய PR team ஐ வைத்து சரி செய்து விட்டான். 

இரண்டு நாட்களுக்கு பிறகு ஷூட்டிங் பழையபடி ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று விஜய் தனது அசிஸ்டன்ட் தினேஷிற்க்கும், டைரக்டர் ஸ்ரீகாந்திற்க்கும் உத்தரவிட்டிருந்தான்.‌ என்ன தான் உள்ளுக்குள் அமுதா தன் மகள் மோனிஷாவிற்கு போட்டியாக வந்துவிட்டாள் என்று நினைத்தாலும், விஜய் இந்த படத்தின் ஹீரோ மட்டும் அல்லாமல் அவன் தான் ப்ரொடியூசர் என்பதால் அவனது பேச்சை கேட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஸ்ரீகாந்த் பிரசிடெண்ட் ஏதாவது செய்வார் அவரை வைத்து அபுதாவிற்கு முடிவு கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஷூட்டிங் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினான். 

வெற்றிக்கு கால் செய்த அசிஸ்டன்ட் டைரக்டர் இரண்டு நாட்களுக்கு பிறகு ஷூட்டிங் தொடங்க இருக்கிறது என்று சொன்னதால் அதை நேராக சென்று அமுதாவிடம் சொன்னான் வெற்றி. உடனே சந்தோஷப்பட்ட அமுதா, “எனக்கு தெரியும். எந்த பிரச்சனை வந்தாலும் என் தலைவன் அதையெல்லாம் அசால்டா சமாளிச்சு மீண்டு வருவாருன்னு எனக்கு தெரியும்.‌ 

அவருக்கு அனாமிகா மேடம் கொஞ்சம் கூட பொருத்தமே இல்ல. எனக்கும் அந்த போஸ்ட் பாக்கும்போது இதெல்லாம் அவங்களே செட் பண்ண தான் இருக்கும்னு தான் தோணுச்சு. கடைசியில அவங்களே அதெல்லாம் உண்மை இல்லைன்னு இப்போ எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டாங்க. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. விஜய் சார் மாதிரி ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இன்னொரு சூப்பர் ஸ்டார் தான் வைஃப் ஆ இருக்கணும். அப்பதான் அவங்களுக்கு செட்டாகும். 

சரி அத விடு, ரெண்டு நாள் கழிச்சு நம்ம சூட்டிங் போகும்போது நான் எப்படி போகணும்? எனக்கு மேக்கப் போட தெரியாதே! ஷூட்டிங்ல நடிக்கணும்னா அதுக்கு காஸ்டியூம் எல்லாம் வேணுமே.. அதுக்கு நம்ம என்ன பண்றது வெற்றி? அந்த அசிஸ்டன்ட் டைரக்டர் அண்ணா என்ன பத்தி ஏதாவது சொன்னாரா?” என்று அவனிடம் ஆர்வமாக கேட்டாள் அவள். 

“ம்ம்.. நானும் இத பத்தி யோசிச்சேன். அதான் அவர் கிட்ட நீ எப்படி ரெடி ஆகி வரணும்னு கேட்டேன். இந்த படத்துல செகண்ட் ஹீரோயினா வர்ற பொண்ணு நம்ம ஊர்க்கார பொண்ணு கதைப்படி தான்.  அதனால தானே நீ இந்த கேரக்டருக்கு கரெக்டா இருப்பேனு உன்ன செலக்ட் பண்ணி இருக்காங்க! அதனால நீ எப்பயும் எப்படி இருப்பியோ அப்படியே வந்தா போதுமாம். மேக்கப் எல்லாம் அங்க போய் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாரு. நம்ம கிளம்பி போனா மட்டும் போதும்.” என்று வெற்றி சொல்ல சொல்ல, 

கேமராவின் முன்னே நின்று அவள் விஜய்யுடன் சேர்ந்து நடித்து அந்த படம் ரிலீஸ் ஆகி அவளையும் மற்றவர்கள் ஒரு ஹீரோயினாக பார்க்கப் போகிறார்கள் என்று நினைக்கவே அமுதாவின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பரப்பதைப் போல அவளுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது.

அதனால் இருந்த சந்தோஷத்தில் வேகமாக எழுந்து வெற்றியின் அருகே சென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அமுதா, “ஹே வெற்றி.. உன்னால இதை நம்ப முடியுதா? நான் ஹீரோயினாக போறேன் டா. அதுவும் விஜய் சார் கூட நடிக்க போறேன். அவங்க இதையெல்லாம் சொல்லிட்டு போகும்போது கூட எனக்கு எங்கேயோ ஒரு பக்கம் இதெல்லாம் நடக்குமான்னு ஒரு பயம் இருந்துச்சு. 

சும்மா ஒரு பேச்சுக்கு இப்படி சொல்றாங்கன்னு கூட நினைச்சேன். ஆனா விஜய் சார் இங்க வந்து நின்னு எனக்காக பேசினார் பாரு.. அப்பதான் எனக்குள்ள நம்பிக்கை வந்துச்சு. இதுக்கு முன்னாடி என் வாழ்க்கையில நான் ஒரு செகண்ட் கூட ஹீரோயின் ஆகனேம் படத்தில நடிக்கணும்ன்னு  எல்லாம் நான் நினைச்சதில்ல.

பட் இப்போ விஜய் சாரால என் மனசுல அந்த ஆசை வந்துருச்சு. பெரிய ஹீரோயின் ஆகணும் சம்பாதிக்கணும்னு எல்லாம் நான் நினைக்கல. என்னோட சூப்பர் ஹீரோ விஜய் சார் கூட இந்த ஒரு படம் நல்லபடியா நடிச்சு முடிச்சா கூட போதும். ஆனா இந்த படம் முழுசா ஷூட்டிங் முடிஞ்சு ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் தான் நமக்கு நிம்மதியாக இருக்கும் இல்ல!” என்று கண்களில் ஆர்வம் பொங்க அவனைப் பார்த்து கேட்டாள். 

அந்த மயிட்ட அழகிய கருவிழிகளில் ஒரு நொடி தொலைந்துப்போன வெற்றி “நீ சந்தோஷப்படுவதை நினைத்து எனக்கு சந்தோசமா தான் இருக்கு ‌ அம்மு.‌ ஆனா நீ உயரமா போக போக என்ன விட்டு தூரமா போயிடுவியோனு எனக்கு பயமா இருக்கு. அத நான் எப்படி உன் கிட்ட சொல்றது?” என்று நினைத்து உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும் வெளியில் செத்த முகமாக அவளிடம், 

“எல்லாமே நல்லபடியா நடக்கும் அம்மு. நான் உன் கூட இருந்து நடத்தி கொடுப்பேன். எதுவா இருந்தாலும் நம்ம சேர்ந்து பாத்துக்கலாம். உன் கூட நான் இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு அவளது கைகளை இறுக்கமாக பிடித்தான். சிறுவயதில் இருந்தே அவனை நல்ல தோழனாக பார்த்து பழகி இருந்த அமுதாவிற்கு அவனது செயல் புது நம்பிக்கையை கொடுத்தது. 

அவர்கள் இருவரும் ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அங்கே நின்று கொண்டிருக்க, அப்போது தனது கணவன் வீட்டு வழி உணவுக்கார பெண் ஒருத்தியின் திருமணத்திற்கு ஒரு வாரம் ஊருக்கு சென்று இருந்த வெற்றியின் அம்மா வடிவு அப்போது தான் கையில் பையுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். 

அவளின் கண்களில் முதலில் தென்பட்ட காட்சி வெற்றியும் அமுதாவும் ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நிற்பது தான். அதுவரை இறுக்கமான முகத்துடன் இருந்த வடிவு அந்த காட்சியை பார்த்தவுடன் கொஞ்சம் நார்மலாகி “ஏட்டி.. என் அண்ணன் மகளே.. எப்படி டி இருக்கிற?” என்று கேட்டபடி அவர்கள் அருகில் சென்றாள்‌. 

வடிவின் குரலை கேட்டவுடன் அவர்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகி நின்றார்கள். தன் அம்மாவை கண்டவுடன் பதட்டமான வெற்றி “என்னமா நீ அதுக்குள்ள வந்துட்ட? இன்னும் கொஞ்ச நாள் சித்தப்பா வீட்ல இருந்துட்டு வரேன்னு சொன்ன..!” என்று கேட்க, “ஏன்டா நீ பேசுவதை பார்த்தால் நான் வந்ததுல உனக்கு கொஞ்சம் கூட சந்தோஷமே இல்ல போல! இந்த வீட்ல இவ்ளோ நடக்கும்போது நான் எதுக்கு டா அடுத்தவங்க வீட்ல போய் உக்காந்துட்டு இருக்கணும்?” என்று கேட்டாள் லடிவு. 

உடனே சுதாரித்துக் கொண்ட வெற்றி “சேச்சே.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல மா. நான் எதுக்கு அப்படி நினைக்க போறேன்?” என்று அவசரமான குரலில் கேட்க, தன் அத்தயையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த அமுதா “இவங்க பேசுற மாடுலேஷனே சரியில்லையே.. இங்கே என்னென்னமோ நடக்குதுன்னு சொல்றாங்க.. அப்போ நான் ஹீரோயின் ஆகப்போற விஷயத்தை வைத்து இவங்க ஒரு ப்ராப்ளம் கிரியேட் பண்ணுவாங்களோ! இப்ப தான் அண்ணனுங்க ரெண்டு பேரும் அத பத்தி பேசுறது விட்டுட்டு வெற்றியால ஆஃப் ஆகியிருக்காங்க. இப்ப மறுபடியும் அத்தை ஏதாவது சொன்னா இவன் என்ன பண்ண போறானோ! கடவுளே நீதான் எங்க ரெண்டு பேரையும் காப்பாத்தணும்.” என்று நினைத்தாள். 

“போதும் போதும்டா இங்க இருக்குற எல்லாரும் பத்தியும் எனக்கு தெரியும். நான் பெத்த மவன் உன்ன பத்தி எனக்கு தெரியாதா? நீ தேவை இல்லாம பேசாத. நான் என் மருமகள் கிட்ட பேசணும்னு தான் முக்கியமா இவ்ளோ சீக்கிரம் கிளம்பி ஊருக்கு வந்தேன்.” என்று வடிவு சொல்ல, “போச்சு நம்ம நெனச்சது கரெக்ட் தான். இவங்க நம்ம கரியருக்கு ஆப்பு வைக்க தான் வந்திருக்காங்க.” என்று நினைத்த அமுதா பயத்துடன் தன் அத்தையை பார்த்தாள். 

“என்ன புள்ள புதுசு புதுசா நீ என்னென்னமோ பண்றேன்னு கிளம்பி இருக்கியாம்! உனக்கு இதைப் பத்தி இந்த அத்தை கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலை பத்தியா!” என்று வடிவு அவளிடம் கேட்க, “அப்படியெல்லாம் இல்லை அத்தை. நான் சொல்ல கூடாதுன்னு நினைக்கல.  நான் படத்துல நடிக்கிறது இங்கே யாருக்குமே பிடிக்கல. வெற்றியை தவிர எனக்கு யாருமே சப்போர்ட் பண்ணல. அப்புறம் நான் உங்க கிட்ட என்னன்னு சொல்றது?” என்று தயங்கி தயங்கி சொன்னாள் அமுதா. 

உடனே வேகமாக வடிவு அவளிடம் ஏதோ சொல்ல தன் வாயை திறக்க, “அம்மா இப்ப தானே வந்த.. அதுக்குள்ள இதை பத்தி பேசியே ஆகணுமா உனக்கு? முதல்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. பசிக்கலையா உனக்கு? வா‌‌.. நீ வந்து சாப்பிட்டு தூங்கு வா.” என்ற வெற்றி தன் அம்மாவிடம் இருந்து அமுதாவை காப்பாற்றுவதற்காக வடிவின் கையை பிடித்து தங்களது அறைக்கு வரச் சொல்லி அழைத்தான். 

“டேய் முதல்ல என் கைய விடு டா. நான் என் மருமகள் கிட்ட பேசிட்டு இருந்தா உனக்கு என்ன வலிக்குதாம்? எதுக்கு இப்ப என்ன உள்ள போக சொல்லி பரபரன்னு பறக்குற? எல்லாம் எனக்கு தெரியும். நீ மூடிட்டு நில்லு.” என்ற வடிவு அமுதாவின் கையை பிடித்து அவளை அழைத்து சென்று ஆளில் உள்ள சோஃபாவில் அமர்ந்து, “ஏன் கண்ணு உனக்கு இந்த வீட்ல யாரு என்ன குறை வச்சாங்க சொல்லு? நம்ம வீட்ல இருக்கிற எல்லாருக்குமே நீ பண்றது புடிக்கலைன்னு தெரிஞ்சும் எதுக்கு இப்படி பண்ணனும்னு நினைக்கிற?” என்று நிதானமான குரலில் அவளிடம் கேட்டாள். 

“அவ என்ன பண்ணா உனக்கு என்ன மா? நான் பெரிய மாமா கிட்ட எல்லாத்தையும் பேசிட்டேன். அவரும் விஜய் சார் கிட்ட அமுதா வந்து படத்துல நடிப்பானு வாக்கு கொடுத்துட்டாரு. இதுக்கு மேல அதெல்லாம் யார் என்ன நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது. இவ அவங்க கம்பெனி எடுக்கிற படத்துல நடிச்சு கொடுப்பான்னு அக்ரிமெண்ட் போட்டு காசு வாங்கியாச்சு. எல்லாம் முடிஞ்சு போனதுக்கு அப்புறம் நீ முதலில் இருந்து ஆரம்பிக்காத.” என்று இப்போதும் அமுதாவை முந்திக் கொண்டு வெற்றி பதில் சொல்ல,

“அப்ப நீங்களே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டீங்க.. இந்த வீட்ல நாங்க பெரியவங்கன்னு பெயருக்கு தான் இருக்கோம். ஆப் பண்ணிடு இந்த வீட்ல எனக்கு எந்த மரியாதையும் இல்ல. அப்படி தானே!” என்று கோபமாக கேட்டாள் வடிவு.

வடிவு செய்யப்போகும் வேலையில் அமுதாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நடக்கும்? அவள் ஹீரோயின் அவளா? 

காதல் மலரும் 🌹 

***

You may also like

Leave a Comment

About Me

Featured