அத்தியாயம் 30
“நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிற விஜய். ப்ளீஸ் எப்படி பண்ணாத. இதுக்கு அப்புறம் உன் பேச்சை மீறி நான் எதுவுமே செய்ய மாட்டேன்.” என்று அனாமிகா விஜயின் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதபடி இருந்தாள்.
“நான் லாஸ்ட் வார்னிங் கொடுக்கிறேன்னு சொல்லும்போது, அப்போ உனக்கு என் மேல பயம் இல்ல. என்னால என்ன பண்ணி கிழிச்சிட முடியும்னு நெனச்சு தானே உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருந்த! இப்ப எதுக்குடி பம்புற?” என்ற விஜய் அவளை மீண்டும் உதைத்து தள்ள, அப்போதும் அவள் வெறுப்பை சம்பாதிக்கக் கூடாது என்று நினைத்த அனாமிகா தவழ்ந்து அவன் அருகில் வந்து மீண்டும் அவன் கால்களை பிடித்துக் கொண்டு, “நீ என்னை வேற என்ன வேணாலும் பண்ணிக்கோ. நான் உன்னை எதுவுமே கேட்க மாட்டேன். நீ எனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும்னு ஆசைப்பட்டால் அதுக்கு எவ்வளவு வழி இருக்கு விஜய். அதை விட்டுட்டு பப்ளிக்ல மட்டும் என்ன அசிங்கப்படுத்திடாத. அது உன்னையும் சேர்த்து தான் டேமேஜ் பண்ணும் ப்ளீஸ் நான் சொல்றத புரிஞ்சுக்கோ!” என்று கெஞ்சினாள்.
இம்முறை அமைதியாக அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த விஜய், “இவ சொல்றதும் ஒரு விதத்துல கரெக்ட்டு தான். ஏற்கனவே அந்த ஆக்சிடென்ட் கேஸ்ல டேமேஜ் ஆன என் நேம் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆயிட்டு இருக்கு. இந்த டைம்ல நான் இவளை பத்தி தப்பா பேசி மீடியால நியூஸ் கொடுத்தாலும் கூட, என்னை இருந்தாலும் என் பொண்டாட்டிய பத்தி நானே இப்படி பேச கூடாதுன்னு எனக்கு எதிரா எவனாவது ஏதாவது பேசிட்டு தான் இருப்பான்.
சோ இந்த விஷயத்துல டைரக்டா நம்ம இறங்காம இவள வச்சே இந்த பிரச்சனையை முடிக்கிறது தான் நல்லது. இவளுக்கு இதுக்கப்புறம் லாஸ்ட் சான்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது. இந்த பிரச்சினையை இவளே முடிச்சு வச்சுட்டா, போனா போகுதுன்னு இதோட இவளை மன்னிச்சு விடலாம்.” என்று நினைத்து,
“நான் உன் கிட்ட அப்ப ஃபோன்ல என்ன சொன்னேனோ அத செய். போனா போகுதுன்னு உன்னை உயிரோட விட்றேன். பட் இதுக்கு அப்புறம் என் லைஃப்ல உனக்கு செகண்ட் சான்ஸ் தேர்ட் சான்ஸ் எல்லாம் எப்பயும் கிடைக்காது. எந்த பிரச்சனையும் பண்ணாம ஒழுங்கு மரியாதையா எனக்கு கோர்ட்ல டிவர்ஸ் கொடுத்துட்டு ஓடிடு.
நெக்ஸ்ட் மந்த் ஹியரிங் நடக்கும்போது, நீயே என்கூட வாழ விருப்பம் இல்லைன்னு சொல்லணும். இந்த மியூச்சுவல் டிவோர்ஸ் கேஸா மாறனும். இந்த தடவையும் நான் சொல்றத நீ ஒழுங்கா கேக்கலனா, அப்புறம் உன் உசுருக்கு என்னால உத்தரவாதம் கொடுக்க முடியாது. நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். உனக்கு எது நல்லதோ அதை பண்ணு. இந்த சிச்சுவேஷன் எவ்வளவு மோசமானாலும் என்னால என்ன காப்பாத்திக்க முடியும். அது உனக்கும் தெரியும். Get Lost! இனிமே என் லைஃப்ல நான் உன் மூஞ்சிய பார்க்கவே கூடாது.” என்று கடுமையான குரலில் சொல்லி அவளை எச்சரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.
அவன் சென்ற பிறகு தரையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்த அனாமிகா “ச்சே.. ச்சே.. நான் நினைச்சது எல்லாம் ஒரே செகண்ட்ல இப்படி ஆப்போசிட்டா நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. இவனுக்கு அப்படி என்ன அந்த அளவுக்கு என் மேல கோபம்? எப்பயோ இவன ஏமாத்திட்டு இன்னொருத்தன் கூட போன ப்ரியாவை இன்னும் இவன் லவ் பண்றானா என்ன?
அவ என்ன என்னை விட அழகா இருக்காளா? இல்ல யாருக்கும் தெரியாம இன்னும் விஜய் அவ கூட டச்ல இருக்கானா? Shit.. ஒன்னும் புரியல. இவன எப்படி கரெக்ட் பண்றதுன்னே தெரிய மாட்டேங்குது. இதுக்கு மேல இவன் என் வழிக்கு வருவான்னு சுத்தமா எனக்கு நம்பிக்கையே இல்லை. அவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சு போச்சு. இனிமே என்னால மிஸ்ஸஸ் விஜயா இருக்க முடியாது.” என்று புலம்பியவள், வந்த பாத்திரத்தில் எழுந்து நின்று அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தாள்.
பதட்டமான முகத்துடன் தனது ஆட்களுடன் கீழே நின்று கொண்டு இருந்த தினேஷ் மேலே அனாமிக்காவின் அறையில் இருந்து கேட்கும் விசித்திரமான சத்தங்களால் கலவரமான முகத்துடன் இருந்தான்.
தன் துப்பாக்கியை கையில் வைத்து சுற்றியபடி படிகளில் இறங்கி கீழே வந்த தினேஷை ஓரக்கண்ணால் பார்த்தபடி தன் கையில் இருந்த துப்பாக்கியை அவன் மீது தூக்கிப்போட்டு, “அவ்ளோ தான், வந்த வேலை முடிஞ்சிருச்சு. இனிமே எந்த பிரச்சனையும் இல்ல. வா போகலாம்.” என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக கூலாக விசில் அடித்தபடி வாசலை நோக்கி நடந்தான் விஜய்.
அவன் தூக்கிப்போட்ட துப்பாக்கியை கேட்ச் பிடித்த தினேஷ் உடனே அதில் அனைத்து குண்டுகளும் சரியாக இருக்கிறதா என்று பதட்டமான முகத்துடன் செக் செய்து பார்த்தான். விஜயின் சந்தோஷத்திற்கான காரணம் அனாமிகாவின் மரணமாக மட்டும் இருக்கக் கூடாது என்று அவன் தெய்வங்களிடமெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான். நல்ல வேலையாக அந்த தவறு நடக்கவில்லை. துப்பாக்கியில் உள்ள அனைத்து குண்டுகளும் சரியாக அப்படியே இருந்தது.
அதைக் கண்டு பெருமூச்சு விட்ட தினேஷ் “பாஸ் நில்லுங்க தனியா போகாதீங்க. நான் உங்களுக்கு சீக்ரெட்டா தங்கறதுக்கு நம்ம ஸ்கூட்டிங்ஸ் ஸ்பாட் பக்கத்துலையே ஒரு பிளேஸ் ரெடி பண்ணி இருக்கேன்.” என்றபடி விஜய்யை பின் தொடர்ந்து வேகமாக வெளியே சென்றான்.
விஜய் வெளியே சென்று விட்டதால் உடனே அவனது ஆட்களும் அந்த பங்களாவை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். அவர்களுடன் காரில் ஏறி தினேஷ் அவனுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த இடத்தை நோக்கி பயணிக்க தொடங்கினான் விஜய் கால் வந்து கொண்டே இருந்தது.
தினேஷ் அந்த ஆளின் காலை கட் செய்து கொண்டே இருந்தாலும் கூட, அவன் விடாமல் இவனுக்கு கால் செய்து கொண்டே இருந்தான். அதை கவனித்து கடுப்பான விஜய் “இப்ப என்ன இவனுக்கு? எதுக்கு இந்த ஆளு சும்மா சும்மா கால் பண்ணிக்கிட்டே இருக்கான்?” என்று கேட்க,
“பஸ் சோசியல் மீடியால அனாமிகா மேடம் போட்ட போஸ்ட்டை பார்த்துட்டு இவர் உடனே கிளம்பி உங்கள பாக்குறதுக்கு நீங்க ஸ்டே பண்ணி இருந்த ஹோட்டலுக்கு வந்திருக்காரு. அங்க பிரஸ் பீப்பிள் நிறைய இருந்ததுனால நம்ம ஆளுங்கள நான் போட்டு வச்சிருந்தேன். சோ அவரால உள்ள வந்து உங்கள பாக்க முடியவில்லையாம்.
அதுக்கு அப்புறமும் அவர் உங்கள ரீச் பண்ண ட்ரை பண்ணாராம். உங்க மொபைல் ஃபோன் ஸ்விட்ச் ஆப்ல இருக்குன்னு உங்க கிட்ட பேசணும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும்னு மாத்தி மாத்தி எனக்கு கால் பண்ணி அனாமிகா மேடமை பத்தியே விசாரிச்சிட்டு இருக்காரு. அவருக்கு உங்களுக்கும் மேடமுக்கும் நடுவுல என்ன ஆச்சுன்னு தெரியலன்னா தலையே வெடிச்சிடும் போல. அது அவருக்கு தெரியிற வரைக்கும் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டாரு.
உங்க கிட்ட கேட்காம நான் எப்படி அவர் கிட்ட பதில் பேச முடியும்? அதான் அவர் காலை நான் அவாய்ட் பண்றேன். அதை கூட புரிஞ்சுக்காம இந்த மனுஷன் திரும்பத் திரும்ப எனக்கு கால் பண்றாரு.” என்று சலிப்புடன் சொன்னான் தினேஷ்.
“ச்ச்ச்.. எல்லாருக்கும் என் வாழ்க்கை மேல ஒரு கண்ணு இருக்கத்தாண்டா செய்யுது. அதுவும் இந்த ஆளு எப்படியாவது அவன் பொண்ணு மோனிஷாவை என் தலைல கட்டிடணும்னு பார்க்கிறான். அவனும் அவளை அனுப்பி என்னன்னமோ பிட்டு போட்டு பார்த்தான். இதுவரைக்கும் ஒன்னும் நடக்கலைல, அதான் அனாமிகா நியூஸ பார்த்து ஷாக் ஆகி என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்கறதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான்.
நீ அவனை எல்லாம் கண்டுக்காத. எனக்கு இவனுங்கள எல்லாம் பத்தி யோசிச்சாலே தலை வலிக்குது. நீ சீக்கிரம் அந்த கெஸ்ட் ஹவுஸ்க்கு போ. நம்ம அங்க ரீச் ஆகுறதுக்குள்ள செக்யூரிட்டி பக்காவா இருக்கணும். மறுபடியும் உன்னால ஏதாவது தப்பு நடந்துச்சு, அப்புறம் இப்படி என் பக்கத்துல உயிரோட உட்கார்ந்து நீ பேசிட்டு இருக்க மாட்ட பார்த்துக்கோ!” என்ற விஜய் அவனுக்கு தலை மிகவும் வலித்ததால் அப்படியே ஜன்னல் பக்கமாக சாய்ந்து படுத்து தன் கண்களை மூடினான்.
அவன் அருகில் அமர்ந்திருந்த தினேஷ் யாருடனும் ஃபோனில் பேச வேண்டும் என்றால் கூட சத்தமாக பேசி விஜயை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக தனது மொபைல் ஃபோனை சைலண்டில் போட்டுவிட்டு தனது ஆட்களுக்கு மெசேஜ் செய்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று விசாரிக்க தொடங்கினான்.
இரண்டே மணி நேரங்களுக்கு பிறகு அனாமிகா ஒரு சாதாரண சுடிதாரை அணிந்து கொண்டு லேசான மேக்கப்புடன் தன் வீட்டில் இருந்து ஒரு வீடியோவை ரெகார்ட் செய்து அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டாள். அதில் அவள் சற்று முன் பதிவிட்ட ஃபோட்டோக்கள் அனைத்தும் போலியானது. அதை அப்படி சொல்வதைவிட, அவனும் அவளும் சேர்ந்து வாழும் போது சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. அவளுக்கு விஜயை பிரிய மனம் இல்லை என்பதால் தான் அவனை தக்க வைத்துக் கொள்ள இப்படி ஒரு வேலையை செய்ததாக அவளை உண்மையை ஒப்புக்கொண்டாள்.
அது மட்டும் இன்று இதன் மூலமாக விஜயின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும், தன்னைப் போன்ற ஒரு பெண் எப்போதும் விஜய்க்கு பொருத்தமானவளாக இருக்க மாட்டாள் என்பதால் தானே விருப்பத்துடன் அவனுக்கு விவாகரத்து கொடுப்பதாகவும் வாக்குமூலம் கொடுத்து வீடியோ பதிவிட்டாள்.
அந்த வீடியோ அவள் அதற்கு முன் போட்ட வீடியோவை விட நொடிப் பொழுதில் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. அதைப் பார்த்துவிட்டு விஜயின் ரசிகர்கள் அனாமிகாவே தன் தவறை ஒப்புக் கொண்டிருந்தாலும், அவள் மோசமானவள் இவளை போல ஒருத்தி தங்கள் தலைவனுக்கு மனைவியாக தகுதியற்றவள் என்று அவளுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டார்கள்.
விஜயை போல பிரபலமாக இருக்கும் வேறு சில நடிகர்களின் ரசிகர்கள் எப்படி இருந்தாலும் விஜய்யுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் இப்படி செய்த அனாமிகா திடீரென்று இவ்வளவு சீக்கிரமாக ஏன் தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும்? அப்படி என்றால் அதற்கு பின்னாடி காரணம் ஏதோ ஒன்று இருக்க வேண்டுமே! அந்த காரணம் விஜயை தவிர வேறு என்னவாக இருக்கும்? அவன் தான் தன் ஆட்களை வைத்து அவளை மிரட்டி இப்படியெல்லாம் பொதுவெளியில் பகிரங்கமாக அவளை மன்னிப்பு கேட்க சொல்லியிருக்க வேண்டும் என்று பேச தொடங்கினார்கள்.
தனது கெஸ்ட் ஹவுஸுற்க்கு வந்து சேர்ந்த விஜய் அவன் நேற்றில் இருந்து சரியாக சாப்பிடாததால் முதலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு சென்று தலைவலி மாத்திரையை போட்டுவிட்டு படுத்தான். அனாமிகாவின் வீடியோ வந்தவுடன் அதைப்பற்றி விஜய் இடம் சொன்ன தினேஷ் அது தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பற்றியும் அவனிடம் விவரித்தான்.
அதைக் கண்டு சளிப்படைந்த விஜய் “அட போடா..!! இவனுங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்ல. நான் என்ன பண்ணாலும் இவனுங்களுக்கு ஏதாவது ஒன்னு சொன்னா தான் தூக்கம் வரும். இவனுங்க என்னமோ சொல்லிட்டு போகட்டும். டேப்லெட் போட்டது எனக்கு தூக்கம் வருது, நான் தூங்குறேன். உள்ள வந்து மறுபடியும் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்கோ.” என்று சொல்லிவிட்டு படுத்தான்.
“எப்பயும் மக்கள் மனசுல நம்ம ஒரு ஸ்டாரா தான் இருக்கணும்னு ஆசைப்படுறவரு இன்னைக்கு என்ன இப்படி சலிப்பா பேசுறாரு? அந்த அளவுக்கு இவர் இந்த விஷயத்துல ஃபீல் பண்றாரா என்ன? ஆனா இவரை பார்த்தா அனாமிகா மேடமை நெனச்செல்லாம் டென்ஷனா இருக்குற மாதிரி தெரியல. ஒருவேளை இன்னும் இவர் பிரியா மேடம் பத்தி யோசிச்சிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்.
அவங்க உயிரோட இருக்கும்போது இவரே அவங்களை கொடுமைப்படுத்தி கொன்னுட்டு இப்ப அவங்கள நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்காரு. இதுக்கு என்னத்த சொல்றது? அனாமிகா மேடம் இவர் லைஃப்ல இருந்து போனதுக்கு அப்புறமா மறுபடியும் ப்ரியா மேடம் மாதிரி ஒரு பொண்ணு இவர் லைஃப்ல வரணும். அப்ப தான் இவர் ஹேப்பியா இருப்பாரு. ஆனா அந்த பொன்னாவது உண்மையா இவரை லவ் பண்ணா நல்லா இருக்கும்.” என்று நினைத்த தினேஷ் விஜயை அந்த அறையில் தனியாக விட்டுவிட்டு டோரை லாக் செய்துவிட்டு வெளியே சென்றான்.
– காதல் மலரும்
***