அத்தியாயம் 26
விஜயின் வாழ்க்கையில் இப்போது என்ன நடக்கிறது? என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்த அமுதா இதனால் தான் ஒருவேளை இன்று ஷூட்டிங் கேன்சல் ஆகி இருக்கலாம் என்று நினைத்தாள். அப்போது அவளை தேடிக் கொண்டு அங்கே வந்த வெற்றி “ஓய் அம்மு.. எனக்கு அந்த அசிஸ்டன்ட் டைரக்டர் கிட்ட இருந்து கால் வந்ததுச்சு. இன்னிக்கி ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டாங்களாம். என்ன பிரச்சனைன்னு தெரியல.” என்று அவளிடம் பதட்டமாக சொன்னான்.
“என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியும். அங்க பாரு டிவில நியூஸ்ல சொல்லிட்டு இருக்காங்க!” என்ற அமுதா டிவியை கை காட்ட, நியூசில் வந்ததை கவனித்த வெற்றி “அடச்ச நீ முதல் நாள் சூட்டிங் போகும்போது தான் இப்படி எல்லாம் நடக்கணுமா? இன்னைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரி நடிக்க போறன்னு நினைச்சு உன்னை விட நான் தான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். இதெல்லாம் சால்வு ஆகி எப்பா அவங்க திரும்ப சூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவாங்களோ தெரியல!” என்று வெற்றி புலம்ப தொடங்கி விட, “இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணா எப்படி வெற்றி? பாவம் விஜய் சார்.. அடுத்தடுத்து ஏதாவது ஒரு கான்ட்ரவர்ஸில மாட்டிகிட்டே இருக்காரு! இந்த தடவை என்ன ஆகுமோ தெரியல. பட் எப்பயும் போல கண்டிப்பா இதை அவர் ஈசியா ஹேண்டில் பண்ணிடுவாரு. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. என் தலைவனால முடியாததுன்னு எதுவுமே இல்ல.” என்று பெருமையாக சொன்னாள் அமுதா.
தான் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து யாருக்கும் தெரியாமல் சீக்ரெட் எக்ஸிட்டை பயன்படுத்தி தன் காரில் சென்று கொண்டு இருந்த விஜய் அதுவரை ஸ்விட்ச் ஆஃப் ஆகிக் கிடந்த தனது மொபைல் ஃபோனை ஆன் செய்தான். அதில் அவனுக்கு அவனுடைய பிசினஸ் ஃபிரண்ட்ஸ், திரை வட்டாரத்தில் இருப்பவர்கள், அவனது குடும்பத்தினர்கள் என்று ஏராளமானவர்கள் கால் செய்து அவன் எடுக்காததால் இப்போது அவை மிஸ்டு காலாக காட்டியது.
அதைப் பார்த்து விஜய் பெருமூச்சு விடுவதற்குள் அவனுக்கு அவன் அப்பாவிடம் இருந்து கால் வந்தது. கூடவே செகண்ட் லைனில் அவன் அம்மாவும் வர, “சப்பா.. என்ன இது எல்லாரும் எனக்கு மாத்தி மாத்தி கால் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! மத்தவங்க கிட்ட இருந்து கூட தப்பு சொல்லலாம்.. பட் மம்மி டாடி ரெண்டு பேரும் என்னை என்னென்ன கேட்க போறாங்களோ தெரியல!” என்று நினைத்தவன் அப்படியே ஃபோனை பார்த்தபடி அமைதியாக இருக்க, வந்த அழைப்பு கட்டானது.
ஆனால் விடாமல் தொடர்ந்து அவன் அப்பா குருமூர்த்தி மட்டும் அவனுக்கு கால் செய்து கொண்டே இருக்க, தன் கண்களை மூடி திறந்த விஜய் அவன் அப்பா என்னவெல்லாம் அவனிடம் கேட்கப் போகிறார் என்று முன்கூட்டியே யோசித்து காலை அட்டென்ட் செய்தவுடன் ஒரே மூச்சாக,
“இங்க பாருங்க டாடி.. சோசியல் மீடியாவிலயும், நியூஸ்லையும் வந்ததை பார்த்துட்டு நீங்களா மறுபடியும் எனக்கும் அனாமிக்காவுக்கும் நடுவுல இருந்த பிராப்ளம் எல்லாம் சரியாயிடுச்சுன்னு டிசைட் பண்ணிக்காதீங்க. அவள மாதிரி ஒருத்தி கூட என்னால எப்பவும் வாழவே முடியாது.
உங்க ஃபிரண்டு மறுபடியும் உங்க கிட்ட பேசி அவரோட so called beauty queen daughterஐ என் தலையில கட்டணும்னு நினைச்சா, அது நடக்கவே நடக்காது. எவளாவது படிக்காத பட்டிக்காட்டு பொண்ண கூட நான் கல்யாணம் பண்ணிக்குவேன். பட் என்னால மறுபடியும் அந்த அனாமிகா கூட எல்லாம் சேர்ந்து வாழ முடியாது. அவளே எனக்கு தெரியாம என் ரூமுக்கு வந்து அப்படி எல்லாம் ஃபோட்டோ எடுத்துட்டு போயிருக்கா. சோ நானே அவளை கொல வெறியில் தேடிட்டு இருக்கேன். நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணி என் கிட்ட பேசி என்னை நிஜமான கொலைகாரன் ஆக்கிராதீங்க!” என்று ஆத்திரம் பொங்க சொன்னான் விஜய்.
இருக்கமான முகத்துடன் இருந்த குருமூர்த்தி “டேய் போதும்டா கொஞ்சம் கேப் விடு.. மூவில லென்தி டயலாக் பேசுற மாதிரி இப்ப எதுக்கு மூச்சு புடிச்சு பேசிட்டு இருக்க? நான் என்ன சொன்னாலும் நீ எப்படி கேக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் உன் மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் கால் பண்ணேன். ஒருவேளை உங்களுக்குள்ள எல்லாம் சரியாகி மறுபடியும் நீயும் அனாமிக்காவும் சேர்ந்து வந்தா, நானும் உங்க அம்மாவும் ரொம்ப சந்தோஷப்படுவோம். அவ்ளோ தான். மத்தபடி உன்ன கண்ணின்ஸ் பண்ணி பேசுறதுக்கு எல்லாம் எங்களுக்கு ஸ்ட்ரென்த் இல்ல.” என்று சொல்ல,
“ரொம்ப நல்லது அப்ப என் கிட்ட எதுவும் பேசாதீங்க. இப்போதைக்கு நான் கேட்கிற மூடுல இல்ல. மம்மி கிட்டயும் நான் சொன்னத சொல்லிருங்க. எனக்கு நிறைய பேர் கால் பண்ணி என்ன ஏதுன்னு கேட்டு டார்ச்சர் பண்றாங்க. சோ நான் என் மொபைல் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ண போறேன். எதுவா இருந்தாலும் நீங்க என் பாடிகாட் சபரி நம்பருக்கு கால் பண்ணுங்க. நான் மறுபடியும் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ண போறேன், பாய் டாடி!” என்று சொன்ன விஜய் தன் அப்பாவின் அழைப்பை துண்டித்து விட்டு ஃபோனை சுவிட்ச் ஆப் செய்ய முயன்றான்.
அப்போது சரியாக அவனுக்கு அனாமிகாவிடம் இருந்து கால் வந்தது. மொபைல் ஸ்கிரீனில் மோகினி பிசாசு என்று அவன் சேவ் செய்து வைத்திருந்த அவள் பெயரை பார்த்தவுடனேயே அவன் முகம் கோபத்தில் சிவக்க, “பண்றதையும் பண்ணிட்டு எவ்ளோ தைரியம் இருந்தா இவ எனக்கு டைரக்ட்டா கால் பண்ணி பேசவா? இன்னைக்கு இவளுக்கு இருக்கு.” என்று நினைத்த விஜய் அவள் காலை அட்டென்ட் செய்து எடுத்த எடுப்பில் “உனக்கு மேல போய் நரகம் எப்படி இருக்கணும்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்கோ? அதான் நான் உன்ன சீக்கிரமா அங்க அனுப்பி வைக்கணும்னு பிளான் பண்ணி இப்படி எல்லாம் பண்றியா?” என்று கடுப்பாகி கேட்டான்.
அதற்கு சத்தமாக கலகலவென்று சிரித்த அனாமிகா, “பேபி நீயே நினைச்சாலும் இப்ப உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது. நமக்குள்ள இருக்கிற பிராப்ளம் என்னன்னு எல்லாருக்கும் தெரியும்.. இப்போ உன்னால எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, ஒருவேளை உனக்கு எதிரா என் கிட்ட எந்த எவிடன்ஸும் இல்லை நான் கூட, உன்னோட fans-ஏ கண்டிப்பா அதையெல்லாம் நீ தான் பண்ணி இருப்பேன்னு நம்புவாங்க. உனக்கு உன்னோட நேம் ரொம்ப முக்கியமாச்சே! அப்புறம் எப்படி நீ யோசிக்காம அப்படி எல்லாம் பண்ணுவ? நீ அந்த அளவுக்கு முட்டாள் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்.” என்று திமிருடன் சொல்ல,
“ஏய்.. வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கணுமே நீ ஆசைப்பட்டா நான் என்னடி பண்றது? சரி போனா போகுது உன் கூடையும் நான் வாழ்ந்து இருக்கேனே.. என்ன இருந்தாலும் நீயும் எனக்கு பொண்டாட்டியா இருந்தவ தானே.. சோ உன்னை யாவது கொடும படுத்தாம இருக்கலாமேன்னு பாத்தா, அடங்க மாட்ட கிரியே டி. நீ! நானும் எப்பயாவது கொஞ்சமா நல்லவனா நடந்துக்கலாம்னு நினைச்சா, இப்படி திடீர்னு உன்னை மாதிரி யாராவது வந்து இப்படி ஏதாவது பண்ணி என்ன டென்ஷன் பண்ணி விடுறாங்க! பண்றது எல்லாம் நீங்க பண்ணிட்டு கடைசில என்னைய குறை சொல்ல வேண்டியது!” என்று ஃபோனில் அனாமிகாவிடம் பேசிக் கொண்டிருந்த விஜய் தன் அருகில் அமர்ந்திருந்த சபரியின் மொபைல் ஃபோனை பிடுங்கி அதில் இருந்து தினேஷுற்க்கு “இப்பவே அந்த அனாமிகாவோட நம்பரை டிராக் பண்ணி அவ லொகேஷன் கண்டுபிடிச்சு எனக்கு அனுப்பு.” என்று மெசேஜ் அனுப்பினான்.
ஏற்கனவே அனாமிகாவிடம் பேசும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தினேஷ் அவனும் இப்போது தான் வெகு நேரத்திற்கு பிறகு அனாமிக்காவின் மொபைல் ஃபோன் ஆன் ஆகி இருப்பதை கவனித்து இருந்தான். இப்போது விஜய்யிடம் இருந்து வந்த மெசேஜ் அவனை இன்னும் பரபரப்புடன் வேலை செய்ய வைத்தது. ஒரு பக்கம் விஜயின் பப்ளிக் ரிலேஷன்ஷிப் டீம் உடன் சேர்ந்து சோசியல் மீடியாவில் அவனையும் அனாமிக்காவையும் சேர்த்து வைத்து வரும் போஸ்ட்களை எல்லாம் அழிக்கும் வேலையை செய்து கொண்டிருந்த தினேஷ், இன்னொரு பக்கம் டெக்னாலஜி டிபார்ட்மென்ட் உதவியுடன் அனாமிகாவின் லொகேஷனை டிராக் செய்யும் முயற்சியில் இறங்கினான்.
“நான் உன்னோட ஒய்ஃப் பேபி.. அதை நீதான் மறந்துட்டு என்ன விட்டு பிரிஞ்சு போகணும்னு நினைக்கிற. பட் என்னால உன்ன மாதிரி எல்லாம் heartlessஆ இருக்க முடியாது பேபி. என் heart fullஆ நீதான் இருக்க.. நீ என்ன விட்டுட்டு தூரமா போகணும்னு நினைச்சா, என்னால எப்படி அதை அக்சப்ட் பண்ண முடியும் சொல்லு?” என்று அனாமிகா ஹக்கி வாய்ஸில் அவனிடம் கேட்க, “ச்சீ.. ச்சீ.. கருமம் கருமம்.. என்ன எழவு வாய்ஸ் டி இது? நீ என்ன வேணாலும் பேசித் தொலை. பட் இப்படி ரொமான்டிக்கா பேசுறேன்னு 11 மணி டாக்டர் ப்ரோக்ராம்ல வர்ற அங்கர் மாதிரி பேசி கேவலமா என்னை இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணாத. நீ இப்படி எல்லாம் பேசினா என்னை கரெக்ட் பண்ண முடியும்னு உனக்கு எவன் டி சொல்லிக் கொடுக்கிறது? அந்த நாய் மட்டும் என் கையில கிடைச்சான்னா, நான் அவன் வாயில மிதிச்சே அவனுக்கு சொல்லுவேன்.” என்று எரிச்சலுடன் சொன்னான் விஜய்.
“haha, சரி அத விடு. How was your last night with me? நீ என் கூட டிஃபரண்ட் டிஃபரண்டா என்ஜாய் பண்ணது எல்லாம் எனக்கு இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கு. ஆஆஆஆ.. அது என்ன ஒரு ஃபீல் தெரியுமா? கண்டிப்பா அந்த ஃபீல் உன் கூட இருக்கும்போது மட்டும் தான் கிடைக்கும். எனக்கு தெரிஞ்சு எனக்கு கிடைச்ச அதே heavenly feel உனக்கும் நேத்து கிடைத்திருக்கும்.
நான் கிளம்பும்போது என்ன விடாமல் என் மேல படுத்துகிட்டு என்ன டைட்டா கட்டிப்பிடிச்சு ப்ளீஸ் பேபி என்ன விட்டு போகாத.. உன் பெர்ஃபியூம் ஸ்மில் என்ன மேக்னட் மாதிரி இருக்குதுன்னு சொல்லி நீ என்ன படிச்சுக்கிட்டு விடவே இல்ல தெரியுமா? நான் தான் உன்ன விட்டுட்டு வர மனசு இல்லாம அங்க இருந்து கிளம்பி வந்தேன்.
உனக்கு என்னை இந்த அளவுக்கு பிடிச்சிருக்கும் போது, ஏன் பேபி என்ன டிவோர்ஸ் பண்ணனும்னு நினைக்கிற? Do you know how much I love you? என்ன மாதிரி உன்ன லவ் பண்ண இன்னொருத்தி கிடைப்பாளா உனக்கு? மறுபடியும் நீயா என் கிட்ட உன் ஈகோவை விட்டுட்டு வரமாட்டேன்னு தான், உன் கிட்ட பர்மிஷன் கூட கேட்காம நேற்று எடுத்த ஃபோட்டோஸ் எல்லாத்தையும் சோசியல் மீடியால போட்டேன். இப்போ எல்லாரும் நம்ம மறுபடியும் patch up ஆகிட்டோம்னு நினைச்சுட்டு இருக்காங்க. சோ நீ பப்ளிக்கா கூட எதுவும் சொல்லனும்னு அவசியமே இல்ல! ஜஸ்ட் கோர்ட்ல இருக்கிற நம்ம டிவோர்ஸ் கேஸ வாபஸ் வாங்கிரு. நீயும் நானும் ஹாப்பியா ஒரு divorce cancellation celebration ட்ரிப் போய் என்ஜாய் பண்ணலாம்.” என்று அப்படியே காதல் பொங்க பொங்க அனாமிகா வசனங்கள் பேச,
இறுக்கமான முகத்துடன் அதை கேட்டுக் கொண்டிருந்த விஜய் “ஆமா உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? நான் உன்னை எத்தனை தடவை தாண்டி பிடிக்கல பிடிக்கலைன்னு சொல்லி துரத்தி விடுறது? எத்தனை தடவை அசிங்கப்படுத்தி அனுப்பினாலும் கொஞ்சம் கூட வெக்கம் மனமே இல்லாம எப்படி உன்னால மட்டும் அகைன் அண்ட் அகைன் என் முன்னாடி வந்து நிக்க முடியுது?” என்று கேட்டான்.
உடனே கள்ளத்தனமாக புன்னகைத்த அனாமிகா “இதுதான் பேபி எனக்கு உன் மேல இருக்க லவ். நீ எத்தனை தடவை என்னை இக்னோர் பண்ணாலும் இந்த லவ் தான் என்ன மறுபடியும் மறுபடியும் உன் கிட்ட வர வைக்குது. நீ என் ஃபீலிங்ஸ ஒரு தடவை புரிஞ்சுகிட்டா கூட என் கிட்ட இனிமே இப்படி எல்லாம் பிஹேவ் பண்ண மாட்ட. நான் என்ன உனக்கு புரிய வைக்கிறதுக்கு எனக்கு ஒரே ஒரு சான்ஸ் மட்டும் கொடு! நம்ம ஒரு 10 டேஸ் அவுட்டிங் போயிட்டு வரலாம். அதுக்கு அப்புறம் உனக்கு என் கூட வாழ வேண்டாம்னு தோணுச்சுன்னா நீ எனக்கு டிவர்ஸ் கொடுத்துரு. அதுக்கு அப்புறம் நான் உன்னை எதுவுமே கேட்க மாட்டேன் ப்ராமிஸ்!” என்று கெஞ்சும் குரலில் கேட்க, அப்போது சபரியின் மொபைல் ஃபோனிற்க்கு தினேஷிடம் இருந்து அனாமிகாவின் லொகேஷனை கண்டுபிடித்து விட்டதாக மெசேஜ் வந்தது.
அதை பார்த்தவுடன் வில்லத்தனமாக புன்னகைத்த விஜய் “உனக்கு என்ன பாக்கணும்னு அவளோ ஆசையா இருக்கா? அப்போ கண்டிப்பா நான் உனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கணும்.” என்று அர்த்தத்துடன் சொன்னான்.
– காதல் மலரும்