Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 14

சாபமாய் வந்த என் உயிரே CH 14

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 14: அய்யய்யோ ஆள விடுங்க

விஜய் தானும் டைரக்டரும் அமுதாவிடம் அடுத்து எடுக்கவிருக்கும் சீன் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி பிரசிடென்ட் ஜ வெளியில் அனுப்பி வைத்து விட்டார்கள். வெளியில் சென்ற பிரசிடெண்ட் தன் மகளிடம் விஷயத்தை சொல்லி அவளை ஒழுங்காக பிராக்டிஸ் செய்யச் சொல்ல சென்று கொண்டு இருக்க, கையில் இளநீர் உடன் அவரைத் தேடிக் கொண்டு இருந்த வெற்றி அவரை கண்டவுடன் வேகமாக அவர் அருகில் வந்து “ஐயா நீங்க எங்க போனீங்க? நான் உங்கள தான் ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன்.” என்று அவசரமான குரலில் சொன்னான்.

அவன் உண்மையில் இவ்வளவு நேரமாக அமுதாவை தான் தேடிக் கொண்டு இருந்தான். கையில் அவன் செய்து முடிக்க வேண்டிய கடமையாக அந்த இளநீர் இருந்து அவனை டிஸ்டர்ப் செய்து கொண்டே இருக்க, இதை பிரசிடெண்ட் இடம் கொடுத்துவிட்டு அமுதாவை சென்று தேட வேண்டும் என்று வெற்றி நினைத்த நொடி அவன் முன்னே வந்துவிட்டார் பிரசிடெண்ட். அவர்களுக்குள் அவ்வளவு கெமிஸ்ட்ரி.

இப்போது அவனைப் பார்த்து அதிர்ந்த பிரசிடெண்ட் “அட இந்த பையனும் இங்க தான் சுத்திக்கிட்டு இருக்கான்னு நான் மறந்துட்டேனே! ஆனா இவனுக்கு அமுதா இங்க இருக்கிறது தெரியுமா தெரியாதான்னு தெரியவில்லையே!” என்று நினைத்து “ஏய் வெற்றி நீ மட்டும் தான் இங்க வந்தியா இல்ல உன் கூட வேற யாராவது வந்தாங்களா?” என்று அவர் கேட்டார். 

“அச்சச்சோ என்ன இவர் இப்படி கேட்கிறாரு? அப்ப நான் மலரையும் அமுதாவையும் கூட்டிட்டு வந்தது இவருக்கு தெரிஞ்சிருச்சா? இல்ல வேணும்னே போட்டு வாங்குறாரா? எதா இருந்தாலும் சமாளிப்போம்.” என்று நினைத்த வெற்றி “நான் போய் யார் கூட வர போறேன் ஐயா? வழக்கம்போல வயலுக்கு தண்ணி பாய்ச்சிட்டு இந்த பக்கம் வந்தேன். அப்படியே நீங்க இங்க இருக்கீங்கன்னு கேள்விப்பட்ட உங்களை பார்த்துட்டு போலாம்னு உள்ள வந்தேன்.” என்று சொல்லி சமாளித்தான்.

“ஓஹோ அப்ப இவனுக்கு அமுதா இங்க வந்ததை பத்தி தெரியல போல. அதுவும் நல்லதுக்கு தான்.” என்று நினைத்த பிரசிடெண்ட் “சரி சரி. இப்ப தான் மழை பெஞ்சு ஓஞ்சு இருக்கு. எல்லாரும் பாரு குளிர்ல நடுங்கிக்கிட்டு சிரமப்படுறாங்க. போய் சூடா எல்லாருக்கும் நீயே உன் கையால சுக்கு மல்லி காப்பி போட்டு கொண்டு வா போ.” என்றார். 

அதனால் கடுப்பான வெற்றி “என்ன இந்த ஆளு இன்னைக்கு ஓவரா வேலை சொல்லி கொல்லுறான்?” என்று நினைத்தவன், “ஐயா நான் எப்படி காப்பி போடுறது? எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க யாராவது பொம்பளை ஆளுங்களை கூப்பிட்டு காப்பி போட சொல்லுங்க.” என்று வெற்றி சொல்ல, “நடிக்காத டா வெற்றி. உனக்கு வேலை செய்ய என்ன நான்டத்தனம்? எந்த வேலையா இருந்தாலும் நீ பொறுப்பா செய்வேனு தான் நான் உன்னை செய்ய சொல்றேன். இங்கே வந்திருக்கிறவர்கள் எல்லாரும் பெரிய ஆளுங்க.  நம்ப தானே அவங்கள நல்லா கவனிச்சு அனுப்பனும்! நீ போய் செல்வியை காப்பி போட சொல்லி அவ கூடைக்கு இருந்து எல்லாத்தையும் ஒழுங்கா செய்றானு பாரு. போடா போ.” என்ற பிரசிடெண்ட் அவனை நிற்க விடாமல் விரட்டி விட, வேறு வழி இல்லாமல் அமுதாவை நினைத்து புலம்பியபடி செல்வியை தேடி சென்றான் வெற்றி.

இன்னும் ஒரு மரத்திற்கு மறைந்து நின்று அமுதாவையும் வெற்றியையும் தேடிக் கொண்டு இருந்த கலைச்செல்வி “அட கடவுளே அந்த முட்டாப் பையன் எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலையே! விஜய் சார பாக்குறேன்னு ஆடிக்கிட்டு போன இவ்ளையும் காணோம். இன்னும் கொஞ்ச நேரத்துல பொழுதே சாய்ந்துரும். நான் வீட்டை விட்டு வந்து எவ்வளவு நேரம் ஆச்சு. நான் லேட்டா போனா வீட்ல வேற தாய்க்கிழவி வையுமே! அடியே அமுதா நீயாவது சீக்கிரம் வந்து தொலை டி. ஒரே இடத்தில நின்னு நின்னு கால் வலிக்குது.” என்று நினைத்து புலம்பி கொண்டு இருந்தாள். 

தன்னை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த அமுதாவின் அருகே சென்று அமர்ந்த விஜய் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முன்னே நீட்டி “இந்தா, தண்ணி குடி. நீ என்ன பார்த்து ரொம்ப பயப்படுகிறேன்னு நினைக்கிறேன். உன்ன மாதிரி நானும் ஒரு சாதாரண ஹியூமன் பீயிங் தான். சோ நீ என்ன பார்த்து இவ்ளோ எக்சைட் ஆக தேவை இல்லை.” என்று அமுதாவிடம் சொன்ன விஜய், தன்னைப் பார்த்த ஒருத்தி ஆச்சரியத்தில் அதை நம்ப முடியாமல் மயங்கி விழுகிறாள் என்றால், மக்கள் மனதில் தனக்கு எவ்வளவு பெரிய இடம் இருக்கிறது என்று நினைத்து உள்ளுக்குள் பெருமிதப்படடான்.

ம்ம்.. என்ற அமுதா நடுங்கிய கைகளுடன் அவன் கொடுத்த தண்ணீரை வாங்கி மடமடவென குடிக்க, ஏற்கனவே ஈரமாக இருந்த அவளது தாவனியின் மீது மீண்டும் தண்ணீர் சிந்தியது. அதனால் அவள் உடலோடு ஒட்டி இருந்த அவளது ஆடைகள் இன்னும் அவளது அழகிய மலர் மேனியை கவர்ச்சியாக படம் போட்டு காட்ட, தன் கண்களை அவள் மீது மேய விட்ட விஜய் “உன் பெயர் அமுதாவா?” என்று கேட்க, திக்கி திணறி “எஸ் சார்” என்றாள் அவள். 

அவள் தன்னை பார்த்து பயப்படும் போது அவளது கண்கள் படப்பட என அடித்துக் கொள்வதும், அவளது தனங்கள் மேலே ஏறி இறங்குவதையும், அவள் பேச்சு வராமல் தவிப்பதையும் கண்டு ரசித்த விஜய் “லுக் அமுதா நான் உன்கிட்ட நிறைய பேசணும். நீ இப்படி என்னை பார்த்து பயந்துக்கிட்டே இருந்தா நான் எப்படி உன் கிட்ட பேசுறது?” என்று கேட்க, ஒரு பெருமூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்திய அமுதா “சாெ… சொல்லுங்க சார்.” என்று திக்கி திணறி சொன்னாள்.

“உன் ஏஜ் என்ன? ஏதாவது படிச்சிருக்கியா நீ?” என்று விஜய் கேட்க, “எனக்கு 19 ஆகுது சார், இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல 20 ஆயிடும். நான் இப்ப தான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு முடிச்சேன்.” என்று சிறு குழந்தை போல அவன் எந்த வரிசையில் கேள்வி கேட்கிறானோ அதே வரிசையில் பதில் சொன்னாள் அமுதா. 

அவளிடம் இயல்பாகவே இருக்கும் அப்பாவித்தனம் இப்போது அபிநயா நடிக்க இருக்கும் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்த விஜய் டைரக்டரை அழைத்து அவரது காதுகளில் ஏதோ கிசுகிஸ்தான். அதைக் கேட்டு தன் மண்டையை சரி சரி என்று ஆட்டிய டைரக்டர் ஸ்ரீகாந்த் விஜயின் கேரவனை விட்டு வெளியே சென்றார். அதனால் இப்போது அந்த இடத்தில் அவனும் அமுதாவும் மட்டும் தான் இருந்தார்கள். அதனால் பயத்தில் அமுதாவின் இதயம் படபடவென வேகமாக துடித்தது. ♥️

அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்த விஜய் “உனக்கு என்னை பிடிக்குமா?” என்று கேட்க, அவள் தான் அவனது தீவிர ரசிகை ஆச்சே! அவளும் வெற்றியும் மதுரை மாவட்ட விஜய் ரசிகர் சங்கத்தில் கூட சேர்ந்து இருக்கிறார்கள். அவனே கேட்கும் போது இது எல்லாம் தன் வாயை திறந்து அவனிடம் வெளிப்படையாக சொல்ல சங்கடமாக உணர்ந்த அமுதா “பிடிக்கும் சார்.” என்று இரண்டே வார்த்தைகளில் பதில் சொன்னாள்.  

அவள் ஏதோ ஆஹா ஓஹோ என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்து இருந்த விஜய்க்கு ஏமாற்றம் தான்.  ஆனால் அவள் தன் வாயால் சொல்லாததை அவளது கண்கள் அவனுக்கு ஆயிரம் முறை சொல்லி  கொண்டே இருந்தது. தான் ஒரு நொடி தன் கண் இமைகளை அசைத்தால் கூட அந்த கணப்பொழுதில் விஜய் தன் முன்னே இருந்து மறைந்து சென்று விடுவான் என்று நினைத்தாள் போல அமுதா தன் விழி விரிய அவனையே மெய் மறந்து பார்த்து கொண்டு இருந்தாள். 😍  🥰

அதை கவனித்து தானும் ஒரு நொடி அவளது கண்களை பார்த்த விஜய் திடீரென தன் மீது ஏதோ மின்சாரம் பாய்ந்ததைப் போல உணர்ந்தான். இத்தனை உணர்ச்சிமிக்க  கண்களை தன் எப்போதும் பார்த்தது இல்லை என்று நினைத்த விஜய் “எப்பா என்ன பொண்ணு டா இவ!  ஒரு சாதாரண வில்லேஜ் கேர்ள் எனவே ஒரு செகண்ட் மயக்கிட்டா. அதுவும் அந்த கண்ணு இருக்கே கண்ணு… அதை என்ன சொல்றது? அதை நேருக்கு நேரா பார்க்க முடியலையே  டா விஜய்!” என்று நினைத்து தனக்குள் புலம்பியவன் அவளை பார்ப்பதை விட்டுவிட்டு வேறு புறமாக பார்த்து தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக வேண்டுமென்றே சத்தமாக இரும்பினான்.

ஆனால் மழையில் நனைந்ததில் அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது போல என்று நினைத்து பதரிய அமுதா “சார் சார் என்ன ஆச்சு உங்களுக்கு? இந்தாங்க தண்ணி குடிங்க.” என்றவள் அவன் தன்னிடம் கொடுத்த தண்ணீர் பாட்டிலை அவனிடமே  கொடுத்தாள். அதை வாங்கி அவள் குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த தண்ணீரை குடித்த விஜய் “ஆமா அமுதா என்ற நேம் ரொம்ப ஓல்ட் ஆ இருக்கே! எப்படி இந்த பேரோட வாழ்ற நீ? யாரும் உன்னை கிண்டல் பண்ண மாட்டாங்களா!” என்று கேட்க,

“எங்க அம்மா பேரு தான் சார் அமுதா. அவங்க நான்  பிறந்த உடனே இறந்துட்டாங்க. அதனால எங்கள் அம்மா ஞாபகமா எனக்கு எங்க பெரிய அண்ணன் அமுதா என்று பெயர் வச்சாரு. அதனால மோஸ்ட்லி அந்த பேரை சொல்லி என்னை யாரும் கூப்பிட மாட்டாங்க. வீட்ல என் நிக் நேம் அம்மு தான்.” என்று சொல்லிவிட்டு லேசாக சிரித்தாள் அமுதா. அவளுக்கு இப்போது விஜய் தன் அருகில் தனக்கு சரிசமமாக அமர்ந்து சாதாரணமாக பேசுவது எல்லாம் ஏதோ கனவு போல இருந்தது. 

அதனால் உள்ளுக்குள் அவள் இறக்கை கட்டி வானில் சந்தோஷமாக சிறகடித்து பறந்து கொண்டு இருக்க, சிரமப்பட்டு வெளியில் தன்னை அவள் சாதாரணமாக காட்டிக்கொள்ள முயற்சித்தாள். மீண்டும் விஜய் அமுதாவிடம் ஏதோ கேட்க தன் வாயை திறக்க, அப்போது வேகமாக அங்கே வந்த ஸ்ரீகாந்த் “சார் நீங்க கேட்டது ரெடியா இருக்கு.” என்று சொல்லி தன் மொபைல் போனில் ஏதோ ஒரு வீடியோவை ப்ளே செய்து விஜய் இடம் நீட்டினார். “நான் தான் லைவ் பர்ஃபாமென்ஸ் ஏ பாத்துட்டேனே! இத அவகிட்ட காட்டுங்க.” என்று விஜய் சொல்ல, ஸ்ரீகாந்த் தன் மொபைல் ஃபோனை அமுதாவிடம் கொடுத்தார். 

அதில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த வீடியோவை அமுதா பார்க்க, அவளது கண்கள் ஆச்சரியத்தில் சாசர் போல விரிந்தது. அந்த வீடியோவில் இருப்பது அவள் தானா? என்று நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்தால  அமுதா. தன்னை தானே அவள் ஸ்கிரீனில் பார்க்கும்போது அவளது கண்களில் தெரியும் ஆர்வத்தையும் ஆசையையும் கண்டு கொண்ட விஜய்  “ஹே அமுதா பேசாம இந்த ரோல்ல நீயே நடிக்கிறியா?” என்று பட்டென கேட்டு விட, தன் கையில் இருந்த போனை கீழே போட்டுவிட்ட அமுதா தன் குடும்பத்தின் மீது இருக்கும் பயத்தில் தன் முன்னே யார் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்காமல் “ஐயோ எங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போட்டுடுவாங்க. ஆள விடுங்க டா சாமி.” என்று தன்னை அறியாமல் சத்தமாக சொல்லி விட்டாள். 

– காதல் மலரும் 🌹

You may also like

Leave a Comment

About Me

Featured