Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 13

சாபமாய் வந்த என் உயிரே CH 13

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 13: இது தான் அழகுல மயங்குறதா??

மழையில் மயில் போல ஆடி கொண்டு இருந்தாள் அமுதா. அங்கே எதிர்பாராத விதமாக வந்த விஜய் “யார் இந்த பொண்ணு? இப்படி இருக்கா? இப்ப இண்டஸ்ட்ரில இருக்கிற ஹீரோயின்ஸை கூட இவ்ளோ அழகா இருக்க மாட்டாங்க!” என்று நினைத்து அவளை தன் வாயை பிளந்து கொண்டு பார்க்க, அதை அறியாமல் தனக்கான உலகில் சஞ்சலித்து ஆடி கொண்டு இருந்த அமுதா திடீரென பாடல் நின்றவுடன் ஆடுவதை நிறுத்திவிட்டு மூச்சு வாங்க நின்றாள். அப்போது எதைச்சையாக அவள் நேராக பார்க்க, அவள் முன்னே நின்று கொண்டு இருந்தான் விஜய்.

அமுதா தன்னை கவனித்துவிட்டதை உணர்ந்து அவள் அருகில் சென்ற விஜய் “யார் நீ? You’re so beautiful.” என்றான். குசேலன் படத்தில் தன் கனவு நாயகன் ரஜினிகாந்தை நேரில் கண்ட சந்தோஷத்தில் வடிவேலு “இது நான் தானா நான் தானா? நான் பார்த்தது நீதானா நீதானா?” என்று நம்ப முடியாமல் உளறி கொண்டு இருப்பதைப் போல, அவள் யாரைக் காண வந்தாளாே அவனே நேரில் அவளிடம் வந்து பேசுகிறான் என்பதை அமுதாவால் துளியும் நம்ப முடியவில்லை.

அவளுக்கு இருந்த சந்தோஷத்தில் அவளால் வாயை திறந்து பேச முடியாமல் அவளது உதடுகள் துடித்துக் கொண்டு இருக்க, அதற்கு மேல் அவளது இதயம் ஓட்ட பந்தயத்தில் ஓடும் குதிரையை போல வேகமாக குதித்து ஓடி கொண்டு இருந்தது. ♥️ அதனால் கலவையான உணர்ச்சிகளால் தாக்கப்பட்ட அமுதா, விஜய் தன்னிடம் பேசி விட்டான் என்ற சந்தோஷத்தையும் அதற்கு மேலாக அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் மயங்கி சரிய போனாள். 

அதனால் சுதாரித்துக் கொண்டு கை தாங்கலாக அவளை கீழே விழாமல் பிடித்துக் கொண்ட விஜய் அவளது முகத்தில் தட்டி “ஓய் பொன்னே! யார் நீ இந்த ஊர்க்காரியா? இப்ப எதுக்கு மயக்கம் போட்டு விழுந்த? இப்படி கொட்டுற மழையல உனக்கு எப்படி மயக்கம் தெளியாம  இருக்கு?” என்றெல்லாம் மயக்கத்தில் இருந்தவளிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான். ஆனால் அமுதாவிடம் ஒரு அசைவும் இல்லை. அதனால் அவளுக்கு ஏதோ ஆகிவிட்டதாே என்று நினைத்து பயந்த விஜய் அவளை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனம் இல்லாமல் அவளை தூக்கி கொண்டு தனது கேரவனுக்கு சென்றான்.

விஜய் யாரோ ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு தனது கேரவனுக்குள் செல்வதை ஏராளமானவர்கள் கவனித்தார்கள். ஆனால் யாராலும் அமுதாவின் முகத்தை காண முடியவில்லை. தன்னுடன் ஒரு பெண் இருந்தால் அந்த செய்தி எப்படி எல்லாம் வைரல் ஆகும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்த விஜய் அமுதா அணிந்திருந்த தாவணியின் முந்தானையை வைத்து அவளது முகத்தை மூடி விட்டான். 

இப்போது விஜய்க்கு சொந்தமான பிரைவேட் கேரவனில் அவனது மெத்தையில் அமுதா படுத்து இருக்க, வெளியில் ஏராளமான பாடிகார்டுகள் பாதுகாப்பிற்காக நின்று கொண்டு இருந்தார்கள். இரண்டு மூன்று முறை அமுதாவின் கன்னத்தில் தட்டிய விஜய் “இந்த மா! இப்ப எந்திரிக்கிரியா இல்லையா நீ?” என்று கேட்டு மிரட்டி கூட பார்த்து விட்டான். அப்போதும் அமுதாவிடம் ஒரு அசைவும் இல்லை. அதனால் தினேஷுக்கு கால் செய்த விஜய் “டேய் அந்த ஸ்ரீகாந்த் நாய இழுத்துகிட்டு என் கேரவனுக்கு வா.” என்றான்.

மயக்கத்தில் கிடந்த அமுதாவின் முகத்தை பார்த்த விஜயின் மனதின் ஓரத்தில் அவளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற எண்ணம் வந்தது. அதே சமயம் அவனது கண்கள் அவளது உடலை ஸ்கேன் செய்ய, இறுதியில் அவனது பார்வை ஈரமாக இருந்த அவளது செவ்விதழின் மீது நிலை கொத்தி நின்றது. 💋 Fresh ஆக மழையில் நனைந்த செர்ரி பழம் போல இருந்த அவளது இதழ்களை பார்த்த உடனேயே இதுவரை அதை அழகாக்க அவள் லிப்ஸ்டிக் போன்ற எதையும் அதில் பூசியது இல்லை என்று அவனுக்கு தோன்றியது. 

ஆனால் அவளது இயற்கையான அழகை பார்த்த விஜய்க்கு, அது மாதிரியான செயற்கை காஸ்மெட்டிக்ஸ் ஐட்டங்கள் எல்லாம் இவளுக்கு தேவை இல்லை என்று தோன்றியது. அதனால் அமுதாவின் அருகே சென்று அவள் முகத்தை குளோசப்பில் பார்த்த விஜய் அவள் கன்னத்தில் தட்டி “Hey..!! Wake up Girl.” என்றான். அப்போதும் அவளிடம் ஒரு அசைவும் தெரியவில்லை. 

ஆனால் அவன் அவளது உடலை தொட்டுப் பார்க்கும்போது அது மிகவும் சிலுசிலுவென இருக்க, அவள் மீது ஒரு போர்வையை போர்த்தி விட்டு ஏசியை ஆஃப் செய்த விஜய் வெளியில் வந்து தனது பாடிகார்ட்டுகளிடம் “டைரக்டர் எங்க?” என்று கேட்க, தினேஷுடன் சரியாக அந்த நேரத்தில் அங்கே வந்த ஸ்ரீகாந்த் “இதோ இதோ வந்துட்டேன் சார். யார் சார் அந்த பொண்ணு எங்க இருக்கா?” என்று கேட்டபடி அவன் அருகில் சென்றான்.

ஸ்ரீகாந்த் உடன் தனது கேரவனுக்குள் நுழைந்த விஜய் மயக்கத்தில் இருந்த அமுதாவை காட்டி “இந்த பொண்ணு யாரு? எப்படி உள்ள வந்தா?” என்று கேட்க, அவள் முகத்தை உற்றுப் பார்த்த ஸ்ரீகாந்த் “இவ யாருன்னு தெரியல சார். நம்ம கூட வந்த ஆள் மாதிரி தெரியல. ஒருவேளை இந்த ஊர்க்காரப் பொண்ணா இருக்கலாம். ஷூட்டிங் பார்க்க வந்திருப்பா.” என்றான். “ம்ம்.. இவ ரொம்ப அழகா இருக்கால்ல..!!” என்று விஜய் தன்னுடைய ஆழமான குரலில் கேட்க, “ஆமா சார் அந்த பிரசிடெண்ட் பொண்ணு அபிநயாவை விட இவ நல்லாவே இருக்கா. முன்னாடியே இவளை பார்த்து இருந்தா இவளை வச்சு ஷூட்டிங் பிளான் பண்ணி இருக்கலாம்.” என்றான் ஸ்ரீகாந்த்.

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல டாக்டர வரவச்சு இவளுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க. என்ன பார்த்த உடனே மயங்கி விழுந்துட்டா. அண்ட் அந்த பிரசிடெண்ட்டை இங்க வர சொல்லி இந்த பொண்ணு யாரு என்னனு விசாரிங்க.” என்ற விஜய் ஈரமாக இருந்த தனது உடையை மாற்றுவதற்காக அந்த கேரவனுக்குள் இருந்த ஒரு தனி அறைக்கு சென்று விட்டான். மெடிக்கல் டிமீல் இருந்தவர்கள் வந்து அமுதாவை செக் செய்துவிட்டு அவள் அதிர்ச்சியில் பிபி ரைஸ் ஆகி மயங்கி விழுந்திருக்கிறாள். மற்றபடி அவளுக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி அவளுக்கு ஒரு ஊசி போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.

அவர்கள் சென்ற பின் பிரசிடெண்டை அங்கே வரச் சொல்லி அமுதாவை சுட்டிக்காட்டி “இந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று ஸ்ரீகாந்த் கேட்க, “அட இந்த பொன்னா! இவ எப்படி இங்க வந்தா? அதுவும் மயக்கமா வேற இருக்கா! இவளுக்கு என்ன ஆச்சு சார்?” என்று பிரசிடெண்ட் பதட்டமான குரலில் கேட்டார்.‌ “இவ எப்படி வந்தான்னு எல்லாம் எங்களுக்கு தெரியாது சார். இவ விஜய் சார பார்த்து ஷாக்காகி மயங்கி விழுந்து இருக்கா. அவர் தான் இவளை இங்க தூக்கிட்டு வந்திருக்காரு.” என்று சாதாரணமாக சொன்னான் ஸ்ரீகாந்த்.

அவன் சொன்னதைக் கேட்டு பயந்துப்போன பிரசிடெண்ட் “அய்யோ என்ன சார் சொல்றீங்க! அப்போ இவ ரொம்ப நேரமா மயக்கத்துல தான் இருக்காளா? இவளுக்கு இப்படி ஆனது மட்டும் இவ அண்ணங்களுக்கு தெரிஞ்சதுன்னா அவ்ளோ தான். உடனே குபுகுபுனு வண்டி கட்டி இங்க வந்து இறங்கி பிரச்சனை பண்ணி சூட்டிங்கையே நடக்க விடமா பண்ணிடுவானுங்க. அவங்க எல்லாம் வில்லங்கம் புடிச்ச ஆளுங்க சார்.” என்று அவசரமான குரலில் சொல்லிவிட்டு அமுதாவின் அருகே சென்று அவள் கன்னத்தில் தட்டி “ஏம்மா அமுதா..!!! கண்ண தொறந்து பாரு புள்ள. உனக்கு என்ன கண்ணு ஆச்சு?” என்று சத்தமாக கத்தி கேட்க, அவன் அவளது பெயரை சொல்லி அழைத்ததாளாே என்னவோ தெரியவில்லை. தன் கண்களை திறந்தாள் அமுதா.

அந்த பிரசிடெண்ட் சொன்னதை வைத்து அவள் பெயர் அமுதா என்று தெரிந்து கொண்ட விஜய் அவள் முகத்தை பார்த்து தன் மனதிற்குள் அவள் பெயரை “அமுதா” என்று சொல்லிப் பார்க்க, மயக்கத்தில் இருந்து கண் விழித்திருந்த அமுதா குழப்பத்துடன் பிரசிடெண்ட்டின் முகத்தை பார்த்துவிட்டு தன்னை விஜய் அழைப்பதை போல இருந்ததால் தன் கண்களை அந்த கேரவன் முழுவதும் சுழலவிட்டு அவனை தேடினாள்.

அதைப் புரிந்து கொண்டு அவள் அருகில் சென்ற விஜய் “Are you ok?” என்று அவளிடம் கேட்க, “நிஜமாவே விஜய் சார் என் கிட்ட தான் பேசிட்டு இருக்காரு. அவர் நான் நல்லா இருக்கனான்னு என்ன  கேட்கிறாரு! ஐயோ கடவுளே.. இதை என்னால நம்பவே முடியலையே.” என்று நினைத்த அமுதா அவளது வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதால் தன் வாயை திறந்து பேச முடியாமல் அதிர்ச்சியில் விரிந்த கண்களுடன் விஜயை மௌனித்து பார்த்தாள். 😍 🥰 ♥️

அவளிடம் விஜய்க்கு நிறைய பேச வேண்டும் என்று இருந்தது. அதனால் பிரசிடென்ட்டை பார்த்து “இந்த பொண்ணு இதே ஊரு தானே!” என்று விஜய் கேட்க, “ஆமா சார். இதே ஊரு தான். நம்ம குடும்பத்தை மாதிரியே இவங்க குடும்பமும் இங்க பெரிய தலைக்கட்டு. எனக்கு முன்னாடி அமுதாவோட அப்பா தான் இந்த ஊரு பிரசிடெண்ட்டா இருந்தாரு. பாவம் நல்ல மனுஷன் ஹார்ட் அட்டாக் வந்து செத்து போயிட்டாரு.” என்றார் பிரசிடெண்ட். அவர்கள் அனைவரையும் பார்த்து திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல திரு திருவென விழித்துக் கொண்டு இருந்தாள் அமுதா. 🙄

அவர் சொன்னதை கேட்டுவிட்டு சரி என்று தலை ஆட்டிய விஜய் “ஓகே, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. இவ இந்த ஊரிலேயே இருக்கிறதுனால இந்த பொண்ணு கிட்ட நானும் டைரக்டரும் அடுத்தடுத்து வைக்கப் போற சீன்ஸை பத்தி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு.” என்று சொல்ல, “நல்லவேளை அமுதா வந்ததுனால அபி ஒழுங்கா நடிக்காததை பத்தி யாரும் என்கிட்ட எதுவும் கேட்கவில்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும். அதுவரைக்கும் இப்படியே இவங்க பேசி நேரத்தை ஓட்டிட்டா, இன்னைக்கு சூட்டிங் முடிஞ்சுரும். விடியறதுக்குள்ள அபிய டான்ஸ் ஆடி ப்ராக்டிஸ் பண்ணி பார்க்க சொல்லணும்.” என்று நினைத்த பிரசிடெண்ட் “ஓ அப்படியா? பரவால்ல சார். நீங்க எவ்ளோ நேரம் வேணாலும் பேசுங்க. அந்த புள்ள வீட்ல இருந்து வந்து ஏதாவது யாராவது கேட்டாங்கன்னா அவங்க கிட்ட நான் பேசிக்கறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.‌

“இவர் என் கிட்ட என்ன பேச போறாருன்னு தெரியலையே! எனக்கு அவர பார்த்தாலே சும்மா எனக்கு ஹாய்ன்னு சொல்ல கூட வாய் வரமாட்டேங்குது. இதுல நான் இவர்கிட்ட என்ன பேசுறது? ஐயோ கடவுளே ஒரே tensions of India-வா இருக்கே! இத்தனை நாளா இவரை பாக்க முடியாதா, பேச முடியாதான்னு இருந்தேன். இப்ப இவரே என்னை தூக்கிட்டு வந்து இங்க உட்கார வச்சு என் கிட்ட பேசிட்டு இருக்காரு. பட் என்னால பேச முடியலையே! இவர பார்த்தாலே பயமா இருக்கு.” என்று நினைத்த அமுதா பாவமாக விஜயை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

– காதல் மலரும் 🌹

You may also like

Leave a Comment

About Me

Featured