Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 12

சாபமாய் வந்த என் உயிரே CH 12

by Thenaruvi Tamil Novels
326 views

அத்தியாயம் 12: மழையில் மயில் ஆட..!!

அமுதாவையும் கலைச் செல்வியையும் அழைத்துக் கொண்டு ஒரு குறுக்கு பாதை வழியாக சென்ற வெற்றி நேராக பிரசிடெண்ட்டின் காட்டுப் பகுதியில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்த இடத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான பங்களா வீட்டின் பின் பகுதிக்கு சென்றான். அங்கே ஒரு சிறிய கதவு மட்டும் இருக்க, வெற்றி எட்டி ஒரு உதை உதைத்த உடனேயே அந்த கதவு உடைந்து போய் இரண்டடி முன்னே சென்று விழுந்தது. சூட்டிங் நடப்பதால் அனைவரும் அங்கே பிஸியாக இருந்ததால் அவர்கள் ஈசியாக உள்ளே நுழைந்து விட்டார்கள்.

யாரேனும் தங்களை கவனிக்கிறார்களா என்று அங்கும் இங்கும் பார்த்தபடி அமுதாவின் கையை பிடித்துக் கொண்டு வெற்றி முன்னே செல்ல, தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கலைச்செல்வி அவர்கள் பின்னே வேறு வழியில்லாமல் நடந்து சென்று கொண்டு இருந்தாள். 

பிரசிடெண்ட்டின் கையாலாக வெற்றி அவரிடம் வேலை செய்வதால் அந்த இடம் முழுவதும் அவனுக்கு அத்துபடியாக இருந்தது. அதனால் ஈசியாக யார் கண்ணிலும் படாமல் வெற்றி அமுதாவையும், கலைச்செல்வியையும் கூட்டி கொண்டு அந்த பண்ணை வீட்டு வழியாக அப்படியே ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குள் நுழைந்து விட்டான். 

ஆனால் திடீரென இப்போது அவர்கள் அந்த இடத்தில் சுற்றிக் கொண்டு இருந்தால் அவர்கள் ஏன் இப்போது இங்கே வந்தார்கள்? என்ற கேள்வி வரும் என்று நினைத்த வெற்றி ஒரு இடத்தில் அமுதாவையும், கலைச்செல்வியையும் ஒளிந்துகொள்ள சொல்லிவிட்டு விஜய் அவனது கேரவனில் இருந்து வெளியே வந்து விட்டானா என்று பார்ப்பதற்காக தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு ஏதோ போருக்கு செல்பவனைப் போல வேகமாக சென்றான்.

தனது மகள் ஆடப்போகும் அழகை காண்பதற்காக ஆர்வமுடன் அமர்ந்திருந்த பிரசிடெண்ட் அவள் ஒழுங்காக டான்ஸ் ஆட தெரியாமல் இருந்ததால் கடுப்பாகி தன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அந்நேரம் சரியாக வெற்றி அவர் கண்ணில் பட, “ஏலே வெற்றி இங்க வாடா” என்று சத்தமாக அவனை அழைத்தான். அமுதாவிற்காக விஜயை தேடி சென்ற வெற்றி பாதி வழியில் பிரசிடெண்ட்டிடம் சிக்கிக் கொண்டதால் “அட கடவுளே இந்த ஆளு எதுக்கு இந்த நேரத்துல நம்மள கூப்பிடுறாரு?” என்று நினைத்து நொந்து கொண்டு “சொல்லுங்க ஐயா!!” என்றவன் மடித்து விடப்பட்டு இருந்த தன் வேட்டியை கீழே இறக்கி விட்டபடி பிரசிடெண்டின் அருகே சென்றான்.

வெற்றியை பார்த்தவுடன் தன் சொட்டை மண்டையை சொரிந்த பிரசிடெண்ட் சிதம்பரம் “எலே வெற்றி.. அடிக்கிற வெயிலுக்கு மண்டை காயுதுலே. போய் 2 இளநீர் வெட்டி எடுத்துட்டு வா. அப்படியே  அங்க பாரு.. பாப்பா ஆடி ஆடி களைச்சு போய் ஒழுங்காவே ஆட மாட்டேங்குது. அதுக்கும் என்ன வேணும்னு கேட்டு கொண்டு வந்து கொடு.” என்றான். 

ஒரு மரத்திற்கு பின்னே மறைந்திருந்த அமுதாவை பாவமாக திரும்பிப் பார்த்த வெற்றி பிரசிடெண்ட்டின் பேச்சை தட்ட முடியாது என்பதால் “சரிங்க ஐயா. இந்தா இப்பவே போய் இளநீர் வெட்டி கொண்டு வரேன்.” என்றவன், “இளநீர் தானே! சீக்கிரமா வெட்டி கொண்டு வந்து இந்த ஆள் கிட்ட கொடுத்துட்டு அமுதாவை கூட்டிக்கிட்டு விஜய் சாரை பார்க்க போகணும். அதுவரைக்கும் இங்க அவ யார் கண்ணுலையும் படாம இருந்தா நல்லா இருக்கும். எப்படி உள்ள வந்த? ஏன் உள்ள வந்தேன்னு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க.” என்று புலம்பி கொண்டே சென்றான் வெற்றி.

தூரத்தில் தனது கேரவனில் அமர்ந்து இருந்த விஜய் எழுந்து வெளியில் வருவதைப் போல இருக்க, தன்னுடன் இருந்த கலைச்செல்வியை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அவள் மீது இருந்த பாசத்தை மறந்துவிட்டு விஜயை காண ஓடினாள் அமுதா. அதனால் அவர்கள் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து “ஏய்.. நில்லு டி! எங்க ஓடுறவ?” என்று கத்தினாள் கலை. 

ஆனால் அது தான் அமுதாவின் காதுகளில் கேட்கவே இல்லையே! அவளாலும் அதற்கு மேல் சத்தமாக கத்தி தன்னை தானே காட்டிக் கொடுக்க முடியாது என்பதால் “ஐயோ இதுக்குள்ள போய் எந்த பிரச்சனையிலயும் மாட்டிக்க கூடாது. அந்த விஜய் சார பாக்குற ஆர்வத்துல இவ பைத்தியக்காரி மாதிரி என்னென்னமோ பண்ணிட்டு இருக்கா. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ” என்று நினைத்து வருத்தப்பட்டாள் கலைச்செல்வி.

விஜய் ஒரு ஃபார்மல் பேண்ட் சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலிஷாக நடந்து வர, அவன் பின்னே குடையை பிடித்தபடி இருவர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டு இருந்தார்கள். கருப்பு சீருடை அணிந்த பாடி கார்டுகள் அவனது இரு பக்கங்களிலும் இருக்க, சினிமாவில் வருவதைவிட அவனது இந்த என்ட்ரி சீன் மிகவும் மாசாக இருப்பதாக நினைத்தாள் அமுதா.

அதனால் அவள் தன் வாயில் கை வைத்து ஆச்சரியமாக விஜயை பார்த்து “ஐயோ சார் எப்படி நீங்க நேரிலயே இவ்வளவு அழகா இருக்கீங்க! நீங்க எல்லாம் எனக்கு தெய்வம் மாதிரி. உங்க தரிசனம் தியேட்டர்ல மட்டும் தான் கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா நீங்க எங்க ஊருக்கு வந்து என் கண்ணால இப்படி உங்களை இவ்வளவு பக்கத்துல பாக்குறதுக்கு எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று நினைத்து பூரித்து போனவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அங்கிருந்து ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்ற விஜய் ஒரு சேரில் அமர்ந்து அபிநயா நடிக்கும் அழகை பார்க்க தொடங்கினான். தாவணி பாவாடை அணிந்திருந்த அபிநயா மழையில் ஸ்ரேயா சரணை போல விண்ணோடு மேளச்சத்தம் என்ன? என்ற பாடலுக்கு செயற்கை மழைக்கு கீழே  ஆட வேண்டும். ஆனால் அவளோ தரையில் இருக்கும் சேர் தன் கால்களில் பட்டுவிட்டால் இருக்க என்ன செய்வது, தன் மீது கொட்டும் தண்ணீரால் தனது மேக்கப் போய் அவை பார்க்க படு கேவலமாக மாறிவிட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் யோசித்து குழம்பிக் கொண்டு இருந்தாள்.  அபிநயா ஐந்து டேக்குகளுக்கு மேல் சென்றும் சரியாக performance செய்யவில்லை.

சரி புதுமுகம் என்பதால் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே என்று நினைத்த விஜய் ஒரு அரை மணி நேரம் பொறுத்து பார்த்தான். ஆனால் டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதை தனது மறை மண்டையை வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள முடியாமல் தொடர்ந்து சொதப்பிக் கொண்டே இருந்தாள் அபிநயா. 

அதனால் கடுப்பான விஜய் தன் அருகில் அமர்ந்திருந்த டைரக்டரிடம் “இவள தான் ஆடிஷன் வைச்சு செலக்ட் பண்ணிங்களா நீங்க? இந்த மூவில மெயினே இந்த சாங் தான். இது ஹிட் ஆனா தான் மூவி ஹிட் ஆகும். இவளை மாதிரி ஆளை எல்லாம் போட்டு நான் படம் எடுத்தேன்னா எனக்குன்னு இருக்கிற மரியாதையே போயிடும். இவ எல்லாம் ஒரு ஆளுன்னு இவளை எப்படி மெயின் ரோல்ல போட்டீங்க? வயசானதுனால உங்களுக்கு கண்ணு தெரியாம போயிடுச்சா?” என்று கோபமாக கேட்டான். 😡

“சார் அந்த பொண்ணு பிரசிடென்ட்டோட பெண்ணு சார். அவளோட பர்பாமென்ஸ் தான் கொஞ்சம் சரியில்ல. பட் பார்க்க ஆள் அழகா தான் இருக்கா. அதான் எப்படியாவது அதை வச்சு மேட்ச் பண்ணி சீனை ஒப்பேத்தி எடுத்துடலாம்னு நெனச்சேன். ஆனா இவ ஃபர்ஸ்ட் சீன்லையே இவ்வளாே சொதப்புவான்னு நான் எதிர்பார்க்கல. நீங்க கோபப்படாதீங்க சார். நான் போய் அவ கிட்ட ஏதாவது பேசி பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு சென்றார் டைரக்டர் ஸ்ரீகாந்த்.

அவரே தானாக சென்று சொல்லிக் கொடுத்தும், டான்ஸ் மாஸ்டர் தன் உயிரைக் கொடுத்து எக்ஸ்பிரஸ் செய்தும் அபிநயாவிற்கு டான்ஸ் வரவில்லை. சரி அதுவாவது போய் தொலைகிறது எக்ஸ்பிரஷன்களாவது ஒழுங்காக வந்தால் அதை வைத்து ஓட்டிக் கொள்ளலாம் என்று நினைத்து டைரக்டர் அவளுக்கு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதைப் போல எவ்வளவோ சொல்லிக் கொடுத்தார். ஆனால் அப்போதும் அபி அதை புரிந்து கொண்டு சரியாக செய்யவில்லை. இதையெல்லாம் பார்த்து கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்த விஜய் எழுந்து எங்கேயோ செல்ல போக, அவனது பாடிகார்டுகளும் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள்.

ஆனால் விஜய்க்கு இப்போது தனியாக எங்கேயாவது சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, “நீங்க யாரும் என் கூட வர வேண்டாம்” என்று  சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து அதைப் பற்ற வைத்தபடி நடக்க தொடங்கினான். 

அபிநயாவின் மட்டமான நடிப்பை பார்த்து உள்ளுக்குள் சிரித்த அமுதா “அடியே அபி.. நீ விஜய் சார் கூட நடிக்கிறியா? நீ சும்மாவே சீன் போட்டுகிட்டு மினிகிட்டு திரியுவ. இதுல அவர் கூட வேற நடிச்சுட்டா உன்ன கையில பிடிக்க முடியுமா? அதான் கடவுள் உனக்கு கரெக்ட்டா ஆப்பு வச்சிருக்கான். ஆடுடி.. ஆடு.. நீ நல்லா ஆடு.” என்று நினைத்தாள்.

அவள் மைண்ட் வாய்ஸுல் பேசிவிட்டு தன்னை அறியாமல் சற்று சத்தமாக சிரித்து விட, அந்த சிரிப்பு சத்தம் தனக்கு பரிச்சயமாக இருந்ததால் சுற்றி முற்றி பார்க்க தொடங்கினாள் அபி. “அடியாத்தி! இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சுக்குறதா!” என்று நினைத்த அமுதா வேகமாக கூட்டத்தோடு கூட்டமாக கலந்து அந்த இடத்தை விட்டு வெளியேற தொடங்கினாள்.

அப்போது உண்மையாகவே மழை துளி துளியாக பொழிய தொடங்கியது. அதனால் மகிழ்ந்த அமுதா தன் இரு கைகளையும் நீட்டி அதில் மழை துளிகளை ஏந்தியவள், தூரத்தில் அபி ஆடுவதற்காக ஓடி கொண்டு இருந்த விண்ணோடு மேளச்சத்தம் என்ன? என்ற பாடலைக் கேட்டுவிட்டு அவள் தான் அந்த படத்தின் ஹீரோயின் என்று கற்பனை செய்தக் கொண்ட அமுதா அப்படியே மழையில் நினைந்தபடி அந்த கூட்டத்தில் இருந்து விலகி ஆள் அரவமற்ற ஒரு வயல் பகுதிக்கு சென்றாள்.

அவள் அங்கே செல்வதற்குள் மழை வேகமாக பேயை தொடங்கி விட்டதால், அவளது உடல் முழுவதும் மழையில் நனைந்து விட்டது. ஆனால் மழை என்றால் பொதுவாகவே குசியாகி அதை ரசித்து மழை நீரில் இறங்கி ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ள அமுதா இப்போது தூரத்தில் கேட்கும் பாடலை தன் மனதில் ஏற்றி, விஜயின் அருகே செகண்ட் ஹீரோயினாக தான் இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து கற்பனை உலகில் சிறகின்றி பறந்தவள், அந்த ரமியமான மாலை நேரத்தில் மழை பொழியும் தருணத்தில் அங்கே மயில் என ப்ளூ மற்றும் பச்சை நிறம் கலந்த தாவணி பாவாடையில் தன்னை அறியாமல் சந்தோஷமாக ஆடி கொண்டு இருந்தாள்.

மயிலுக்கு யாராவது நடனமாட சொல்லித் தர வேண்டுமா என்ன? இல்லை நேச்சுரலாக நடனமாடும் அந்த மயிலின் நடனத்திற்கு ஈடு இன்னை உண்டா?

அம்மையிலைப் போல இந்த மயிலும் தன் கைகளையும் கால்களையும் அசைத்து, தன் மெல்லிடையை வளைத்து மழையில் நனைந்த மயிலாய் ஆடி கொண்டு இருந்தாள். அவளது நீண்ட கூந்தல் அவளோடு சேர்ந்து ஆடிக் கொண்டு இருக்க, ஒப்பனை இல்லா அவளது அழகிய முகத்தில் முத்து முத்தாக பூத்த மழை துளிகள் எல்லாம் அவள் உடல் மீது வாசம் செய்யும் வரம் கிடைக்காததால் அவள் மேலே வடிந்து ஓடின.‌

அபிநயாவின் தரமட்டமான ஆக்டிங் ஸ்கில்ஸை பார்த்து கடுப்பாகி வெளியில் வந்த விஜய்க்கு ஏதோ குளுகுளுவென மழையில் நினைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் அவன் தனிமையை தேடி யாரும் இல்லா அந்த வயல்வெளியின் பக்கம் தானும் மழையில் நனைந்தவாறு நடந்து வர, சரியாக அந்த பாடலின் “நீ வரும்போது நான் மறைவேனா!” என்ற வரிகள் ஓடி கொண்டு இருக்க, தன் மெல்லிடையை ஒரு பக்கமாக வளைத்து தன் கைகளை மயில் போல விரித்து அதை முன்னும் பின்னும் அசைத்து அழகாக ஆடி கொண்டு இருந்தாள் அமுதா. 

அவளது பால் போன்ற நிறமும், கச்சிதமான உடலும், மழையில் நினைந்து இன்னும் அதிக அழகுடன் ஜொலித்துக் கொண்டு இருக்க, அவளது எலுமிச்சை நிற இடுப்பிலும், முதுகிலும், கழுத்திலும் வழிந்தோடிய நீர் துளிகள் அவளை இன்னும் பேரழகியாக காட்டியது.

அங்கே வந்த விஜய் “யார் இந்த பொண்ணு? இப்படி இருக்கா? இப்ப இண்டஸ்ட்ரில இருக்கிற ஹீரோயின்ஸ் கூட இவ்ளோ அழகா இருக்க மாட்டாங்க!” என்று நினைத்து அவளை தன் வாயை பிளந்து கொண்டு பார்க்க, அதை அறியாமல் தனக்கான உலகில் சஞ்சலித்து ஆடி கொண்டு இருந்த அமுதா திடீரென பாடல் நின்றவுடன் ஆடுவதை நிறுத்திவிட்டு மூச்சு வாங்க நின்றாள். அப்போது எதைச்சையாக அவள் நேராக பார்க்க, அவள் முன்னே நின்று கொண்டு இருந்தான் விஜய்.

– காதல் மலரும் 🌹

You may also like

Leave a Comment

About Me

Featured