அத்தியாயம் 1: இவன் ஹீரோவா வில்லனா?
பிரபல நிறுவனம் நடத்திய விருது வழங்கும் விழாவில் அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருது மற்றும் மக்களுக்கு பிடித்த நாயகன் என இரண்டு விருதுகளையும் தன் கைகளில் வாங்கி கொண்டு கம்பீரமான தோரணையில் தனக்கே உரிய அழகிய புன்னகையுடன், மேடையில் நின்று pose கொடுத்து கொண்டு இருந்தான் விஜய் குருமூர்த்தி.
அவன் அணிந்து இருந்த விலை உயர்ந்த கருப்பு நிற கோட் சூட் அவனது கம்பீரத்தையும், பணக்கார தோரணையையும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்க, அவன் கையில் இருந்த வைர கற்கள் பொருத்தப்பட்ட பிரபல brand இன் costly ஆன watch மற்றும் அவனது இதயத்திற்கு மேலே முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்ட கழுகு உருவத்தில் இருந்த brooch அவனை இன்னும் நேர்த்தியானவனாக, யாரும் தொட முடியாத உயரத்தில் அவன் இருக்கிறான் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இருந்தது.
அந்த இரவு நேரத்திலும் மேடையின் நடுவே பளிச்சிடும் சூரியனாய் அவன் பிரகாசித்துக் கொண்டு இருக்க, தன் கையில் இருந்த விருதுகளுடன் அந்த மேடையை விட்டு அவன் கீழே இறங்க இருக்க, அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்,
“சார் நீங்க எப்பயும் ரொம்ப கொஞ்சமா தான் பேசுவீங்கன்னு எங்க எல்லாருக்குமே தெரியும். இருந்தாலும் எங்களுக்காக, உங்களோட கோடான கோடி ரசிகர்களுக்காகவும் ஒரு நாலு வார்த்தை பேசுங்களேன் ப்ளீஸ்! உங்க வாய்ஸை கேக்குறதுக்காக நாங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.” என்று மிகவும் மரியாதையுடன் அமைதியான குரலில் கேட்க,
இன்னொருத்தர் ஓடி வந்து அவன் முன்னே ஒரு மைக்கை நீட்ட, அதை வாங்கி கொண்டு, அவன் முன்னே அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்த மைதானத்தின் மறு முனையில் தூரத்தில் இருந்து,
“விஜய்..!! விஜய்..!! தலைவா..!! தலைவா..!!” என்று கத்தி ஆரவாரம் செய்து கொண்டு இருந்த தன் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து சிறு தலை அசைவுடன் பேசத் தொடங்கினான் அவன்.
“இந்த உலகத்துல நான் பெருசா நினைக்கிறது ரொம்ப மதிக்கிறது என்னோட fans உங்களை மட்டும் தான். I Love all” என்றவன், தன் கையில் இருந்த மைக்கை அருகில் இருந்தவனிடம் கொடுத்துவிட்டு தூரத்தில் தெரிந்த தன் ரசிகர் கூட்டத்தை பார்த்து ஒரு flying kiss கொடுத்துவிட்டு, படிகளில் வேகமாக அவன் இறங்கத் தொடங்கினான்.
இப்போது தான் பத்து நிமிடத்திற்கு முன் அந்த அரங்கிற்குள் நுழைந்தான் அவன். விருதை வாங்கினான், தொகுப்பாளர் கேட்டதற்காக இரண்டு வார்த்தைகள் பேசினான்.
அவ்வளவு தான். இப்போது தனக்கென தனியாக அவன் வைத்திருக்கும் ஸ்பெஷல் trained professional பாடி கார்டுகளுடன் அங்கிருந்து சென்று விட்டான்.
இது தான் அவன். அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வருவது அரிது, அந்த அளவிற்கு குறைவாக தான் பேசுவன். அதனால் அவனை முன்னே விட்டு பலர் அவனை திமிரு பிடித்தவன், கொடூரமானவன், இரக்கமற்றவன், இதயம் இல்லாதவன் என்று பேசுபவர்கள் ஏராளமான இருந்தாலும், “எங்க தல அப்படி இருக்கிறது தான் கெத்து.” என்று சொல்லும் அவன் கேட்டால் உயிரையும் கூட எடுத்துக் கொடுக்க தயாராக இருக்கும் ஏராளமான வெறித்தனமான இளைஞர்கள் அவனுக்கு ரசிகர்களாக இருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியை காண வந்த பெரும்பாலான மக்களில் அனைவருமே விஜய் ரசிகர்கள் தான் என்பதால், அவன் அங்கிருந்து சென்ற பின்பு தங்களுக்கு இங்கே என்ன வேலை? என்று நினைத்து பாதி கூட்டம் கலைய தொடங்கியிருந்தது.
அப்படி அவனை ரசிக்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாலோ என்னவோ, நாளுக்கு நாள் அவனுடைய திமிரும் ego-வும் கூட அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அவனுக்கு இப்போது 28 வயது ஆகிறது. அதற்குள் இரண்டு திருமணம் செய்து விட்டான். அவனை யார் கேள்வி கேட்கப் போகிறார்கள்? இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளில் அவன் நடிக்காத மொழியே இல்லை. இதில் இன்னும் சில நாட்களில் அவன் நடித்த Hollywood திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த பேர், புகழ், இவை அனைத்தும் அவனது சொந்த உழைப்பாலும், அவனது நடிப்பு திறமையாலும், அனைவரையும் வசீகரிக்கும் அவனது அழகிய கட்டடலாலும் அவனுக்கு மேலும் அழகு சேர்த்தது , அவனுக்கு இருக்கும் பணக்கார பின்புலம்மும் இதற்கு ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது.
அவனுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்த உடனே தன் அப்பாவின் பெயரில் குரு meida ஹவுஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தன்னை தானே நடிகனாக அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் நடித்த பெரும்பாலான படங்கள் அவனது சொந்த தயாரிப்பில் வந்தவை. மக்களின் மனதில் எப்போதும் தான் ஒரு ஹீரோவாக வாழ ஆசைப்படும் நம் Vijay, அவனை அவ்வாறு உயர்த்தி காட்டும் படி mass hero subject உடன் வேற ஏதாவது ஒரு தயாரிப்பு நிறுவனம் அல்லது புதுமுக இயக்குனராக இருந்தாலும் அவனை அணுகி தங்கள் கதையை சொல்லி அவனை impress செய்து விட்டால் குறைவான சம்பளத்தையோ அல்லது அவர்கள் கேட்கும் சம்பளத்தையோ வாங்கி கொண்டு நடித்துக் கொடுத்து விடுவான்.
பணத்திலே பிறந்து, பணத்திலே புரண்டு, பணத்தை பார்த்து பார்த்து சலித்து போனவனுக்கு அந்த காகிதத்தின் மீது பெரிதாக ஒன்றும் ஆசை கிடையாது.
ஆனால் அவனுக்கு அதிகாரம் செய்வதும், மற்றவர்களை அடக்கி ஆள்வதும், தன்னை ராஜா போல அனைவரும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு ஆடுவதையும், தன்னை அனைவரும் அவர்களுடைய ஹீரோவாக நினைத்து கொண்டாடுவதும் அவனுக்கு போதை போன்றது.
அந்த போதைக்கு அவன் அடிமை. விஜய் விஜய், எங்கள் தலைவன் விஜய் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் அவனது ரசிகர்கள் அவனை அழைக்கும் போது, அப்படியே அவனுக்கு தன் காதில் இன்பத் தேன் வந்து பாய்வதைப் போல மிதப்பாகவும் கர்மமாகவும் இருக்கும்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது போன்ற Rugged boys ஐ தானே இந்த கால Dolis -க்கு அதிகம் பிடிக்கிறது!! அதனால் 13, 14 வயது சிறிய பெண்களின் இருந்து இளம் பெண்கள், ஆண்டிகள் என அனைவரும் அவனுக்கு வெறித்தனமான ரசிகைகளாக இருந்தார்கள். ஏன் அவனுடன் நடித்து அவனிடம் காதல் வயப்படாத நடிகைகள் மிகவும் குறைவு. திரைத்துறையில் இருக்கும் பல top ஹீரோயின்களுக்கு கூட அவனுடைய மனைவியாக முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை, சிறிது காலம் அவனது காதலியாக வளம் வந்து விட்டால் கூட போதும், பிறகு அவன் தன்னை விட்டு பிரிந்து சென்றால் கூட அவனால் தங்களுக்கு கிடைக்கும் பெரும் புகழும் இந்த ஜென்மத்தில் திரை உலகில் பிரபலமாக கொடிகட்டி பறக்க போதுமானது என்று நினைத்து தானாக விரும்பி வந்து அவன் மடியில் விழ தவம் கிடக்கிறார்கள்.
விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து தன் காரில் கிளம்பி இருந்தான் விஜய். அப்போது அவன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் டைரக்டர் இடம் இருந்து அவனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் அவர் ஏற்கனவே அந்த கிராம பின்னணி கொண்ட கதையின் ஹீரோயின் டைரக்டரின் மகள் தான் என்று அவர்கள் முடிவு செய்து இருந்த நிலையில்,
அடுத்து நடக்க இருக்கும் ஷூட்டிங்கை எப்போது shedule செய்வது என்பது பற்றியும், ஒரு producer ஆக அவனிடம் அந்த திரைப்படம் தொடர்பான location மற்றும் பிற முக்கியமான விஷயங்களையும் பேச வேண்டி இருப்பதாக சொல்லி ஒரு ஹோட்டலின் பெயரையும் ரூம் என்னையும் அனுப்பி அவனை இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே வந்து தன்னை சந்திக்குமாறு போட்டிருந்தது.
இப்போது மணி இரவு 7:15 ஆகியிருந்தது. அவனுக்கு விருது கிடைத்ததை விட, அவனது ரசிகர்கள் கூட்டம் செய்த ஆரவாரத்தில் திளைத்து மேகத்தில் பறந்து கொண்டிருந்த விஜய்க்கு எங்கேயாவது கிளப்பிற்கு சென்று விடிய விடிய பார்ட்டி செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது டைரக்டர் பணம் சம்பந்தமாக பேச வேண்டும் என்று சொல்வதால் சில நொடிகள் யோசித்தவன், அவன் நல்ல மனநிலையில் இருந்ததால் “ஓகே வரேன்.” என்று ரிப்ளை அனுப்பினான்.
சில நிமிடங்களில் அவனது கார் ஒரு உயர்தர பிரபல ஏழு நட்சத்திர ஹோட்டலின் வாசலில் வந்து நின்றது. அங்கே அவன் அடிக்கடி வருவான் என்பதால் அங்கிருந்த செக்யூரிட்டி அவனது கார் டிரைவரை கூட மரியாதையாக நடத்தி பார்க்கிங் -க்கு உதவி கொண்டு இருக்க, அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காரில் இருந்து இறங்கி தன் கோட் ஐ அட்ஜஸ்ட் செய்து கொண்டே அவன் உள்ளே செல்ல, அவனை கடந்து செல்லும் ஒருவரும் நின்று அவனை ஆச்சரியத்துடனும், அவனை தரிசிக்க தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து மகிழ்ந்தும் திரும்பிப் பார்த்துவிட்டு சென்றார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் அவனுடன் வந்த பாடி கார்ட்டுகளை பார்த்த பிறகு மற்ற நடிகர்களிடம் அவர்கள் நடந்து கொள்வதைப் போல அவனிடம் பேச முயல்வதோ அல்லது அவனுடன் selfie எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பதற்கான துணிவோ யாருக்கும் வரவில்லை.
அவன் பின்னே துப்பாக்கி ஏந்திய அவனது பாடி கார்டுகளின் பூட்ஸ் சத்த்ம் பின்னணி இசையாக ஒழிக்க, ராஜா போல கம்பீரமான தோரணையில் லிப்ட் -க்குள் நுழைந்தான் அவன். சில நொடிகளில் அவனது கால்கள் அறை எண் 206 இன் முன் வந்து நின்றது.
அவனது பாடி கார்ட்டுங்கள் அந்த அறையின் அருகே வெளியே நின்று கொள்ள, அவன் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். அந்த அறை முழுவதும் இதய வடிவிலான ♥️ பலூன்களால் நிரம்பி இருந்தது. அங்கிருந்த bed முழுவதும் ரோஜா பூ இதழ்கள் தூவப்பட்டு இருந்தது. குறிப்பாக அந்த இடத்தில் அவனுக்கு பிடித்த பிராண்ட்டின் ரூம் ஸ்பிரே அடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இல்லை 100% அடித்து சொல்லும் அளவிற்கு அந்த அறை first நைட்டிற்கு தயார் செய்யப்பட்டதை போல இருந்தது.
அங்கே இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த பளபளவென வெண்ணிற மேனி உடைய shining ஆன blue நிற short top அணிந்து கொண்டு ஒருவித பதற்றத்துடன் நின்று கொண்டு இருந்தாள் மோனிஷா. அவளது அந்த சிறிய உடை அவளது அழகை அவன் கண்களுக்கு விருந்து படைத்து கொண்டு இருக்க, இந்த அறை எந்த நோக்கத்திற்காக தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று அவனுக்கு தெளிவாக புரிந்து விட அவளைப் பார்த்து தன் உதட்டை கோணலாக வளைத்து விஜய் புன்னகைத்து விட்டு, அந்த அறையின் கதவை சாற்றி விட, திக் திக் இதயத்துடன் அங்கே நின்று கொண்டு இருந்த மோனிஷா தன் இரு கைகளையும் பயத்தில் போட்டு பிசைந்து கொண்டு இருந்தாள்.
பின் “அது வந்து… அது வந்து சார்.. அப்பா தான் உங்க கூட இங்க ஒரு மீட்டிங் இருக்குன்னு சொல்லி என்னை அனுப்பி வச்சாரு.” என்று திக்கி திணறிச் சொன்னாள் மோனிஷா.
விஜய்க்கு மெசேஜ் அனுப்பி இருந்த அந்த டைரக்டரின் மகள் தான் இவள். இவள் தான் விஜயின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து டைரக்டர் ஸ்ரீகாந்த் எடுக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறாள்.
அங்கிருந்த சோபாவில் சென்று வசதியாக சாய்ந்து அமர்ந்த விஜய் கால் மேல் கால் போட்டு, “உங்க அப்பா இங்க மீட்டிங் நடக்கும்ன்னு மட்டும் தான் சொன்னாரா? இந்த மீட்டிங்ல என்னென்ன நடக்கும், மீட்டிங்ல நீ எப்படி நடந்துக்கணும்னு எல்லாத்தையும் சொல்லி அனுப்புனாரா?” என்று நக்கலாக ஓர் இரண்டு வார்த்தைகளை அழுத்தி கேட்க, “எங்க அப்பா எல்லாத்தையும் டீடைலா சொல்லி தான் சார் என்ன அனுப்பினாரு.” என்று ஒருவித பயத்துடனே சொன்னாள் மோனிஷா.
– காதல் மலரும் 🌹