Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 80

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 80

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 80 

அர்ஜுன் அனுப்பிய ஃபோட்டோவை பார்த்துவிட்டு தேன்மொழி தனது மொபைல் ஃபோனை நெஞ்சோடு சேர்த்து அனைத்து பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டாள். அவளுக்குள் அவனிடம் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தாலும் கூட, அவளுக்குள் இருந்த காதலும், இந்த பிரிவு அர்ஜுன் தன் முடிவை ஏற்றுக் கொள்ளாமல் சண்டையை வளர்த்துக் கொண்டே செல்வதனால் தான். அதனால் ஏற்பட்ட கோபமும் பிரிவு ஏற்படுத்திய சோகமும் அவனிடம் பேச அவள் மனம் அனுமதிக்கவில்லை. 

அவளுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தனது மொபைல் ஃபோனை பார்த்த அர்ஜுன் “என்ன மெசேஜ் டபுள் டிக் காட்டுது.. இன்னும் தூங்கலையா அவ? என் மெசேஜ் எப்ப வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்து இருப்பாளோ! நான் ஃபோட்டோ சென்ட் பண்ண உடனே பாத்துட்டா!” என்று நினைத்து ஆச்சரியப்பட்டவன் அவளுக்கு உடனே “ஓய்.. நீ இன்னும் தூங்கலையா டி?” என்று கேட்டு மெசேஜ் அனுப்பினான். 

அர்ஜுனை‌ நினைத்து சோகமாக இருந்த தேன்மொழி மொபைல் ஃபோனில் இருந்த அவனுடைய போட்டோவையே பார்த்துக் கொண்டிருக்க, டிங் என்ற நோட்டிபிகேஷன் சவுண்டுடன் அவன் அனுப்பிய மெசேஜ் அவளுக்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த தேன்மொழி உடனே வந்த கோபத்தில் “இல்ல தூங்கிட்டேன் 😏” என்று ரிப்ளை அனுப்பினாள். 

அதைப் பார்த்து சிரித்த அர்ஜுன் “இவ என்ன விட சின்ன பொண்ணு தான்.. அதுக்காக என்ன இப்படி எல்லாம் குழந்தைகள் மாதிரி விளையாடிட்டு இருக்கா! ஹைய்யோ இவளை வச்சு எப்படித் தான் நான் சமாளிக்க போறேனோ தெரியல!” என்று நினைத்தவன், “தூங்கிட்டு இருந்தா எப்படி நான் அனுப்புற மெசேஜை எல்லாம் உடனே பார்க்கிற நீ? உண்மையை சொல்லு டி.. ஃபோட்டோல நான் ஹாட்டா இருக்கேன்னு என்ன பாத்து சைட் அடிச்சிட்டு இருக்க தானே? இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் உன் ஹஸ்பண்ட் கிட்ட நீ சொல்றதுக்கு கூச்சப்படணும்னு அவசியம் இல்ல ஹனி பேபி 😌 ☺️‌ நான் ஒன்னும் உன்னை தப்பா நினைச்சுக்க மாட்டேன். எனக்கு சந்தோஷமா தான் இருக்கு.” என்று வேகவேகமாக டைப் செய்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினான். 

தன் நகத்தை கடித்துக் கொண்டு அவனுடைய மெசேஜை எதிர்பார்த்து காத்திருந்த தேன்மொழி அது வந்தவுடன் ஆர்வமுடன் அதை வேகமாக படித்துவிட்டு, “இந்த பேச்சுக்கெல்லாம் உனக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.‌ ஆமாயா உன் ஹாட்டான  physic-ஐ தான் நான் அப்படியே வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்கேன். அதுக்கு இப்ப என்ன பண்ண போற நீ? 

ஐயோ நம்ம பொண்டாட்டி நம்மளை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்காளே.. நமக்கே இப்ப தான் மேரேஜ் ஆகியிருக்கு. அதுக்குள்ள அவளை பிரிஞ்சு இருக்கிறதெல்லாம் நல்லாவா இருக்கு? அவ என்ன சொன்னாலும் நம்மளோட நல்லதுக்காக தானே சொல்றான்னு நினைச்சு நீ எனக்காக இங்க கிளம்பி வந்தியா? இல்லை என்ன பத்தி தான் யோசிச்சியா? சரியான செல்பிஷ் அர்ஜுன் நீ. 

அன்னைக்கு நீ பக்கம் பக்கமா என்ன லவ் பண்றேன்னு டயலாக் பேசினது எல்லாம் நம்பி நானும் உன் கிட்ட விழுந்துட்டேன். அப்பவே எனக்கு நீ ஒரு ஈகோ பிடிச்ச monkey-ன்னு தெரிஞ்சு இருந்திருந்தா கண்டிப்பா நான் கடைசி வரைக்கும் உன் கிட்ட இருந்து டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணிட்டே இருந்திருப்பேன். என் தலையெழுத்து உன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டு இப்படி எல்லாம் கஷ்டப்படணும்னு இருக்கு.” என்று சரசரவென டைப் செய்து பக்கம் பக்கமாக அவனுக்கு அனுப்பினாள். 

அவள் அனுப்பிய மெசேஜ் பார்த்து வாய் அடைத்து போய் விட்டான் அர்ஜுன். “என்ன டா இவ நம்ம என்ன பேசினாலும் நாக்க புடிங்கிக்கிட்டு சாகுற மாதிரி சுருக்கு சுருக்குன்னு கொஸ்டின் பண்றா! கொஞ்சம் ஜாலியா பேசலாம்னு நினைச்சு வார்த்தையை விட்டது ஒரு தப்பா?” என்று நினைத்தவன், “உன்ன அங்க விட்டுட்டு தனியா இருக்கணும்னு எனக்கு என்ன  வேண்டுதலா டி? நீ இல்லாம இருக்க முடியாம தானே இது எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன்.. இங்க கிளம்பி வர சொன்னா நீ தான் வர மாட்டேங்குற. நான் சொல்றதையும் கேட்காம நீ தான் கிளம்பி போன. இப்ப எல்லாத்துக்கும் என்னையவே குறை சொன்னா நான் என்ன பண்றது?” என்று அவளிடமே கேள்வி கேட்டான் அர்ஜுன்.

‌“enough அர்ஜுன்.‌ அப்படியே ஒண்ணும் தெரியாத மாதிரி உருட்டாத. உன்ன மாதிரி எனக்கு மடக்கி மடக்கி எல்லாம் பேச தெரியாது. உனக்கு நான் வேணும்னு தோணுச்சுன்னா, நீ பண்ணிட்டு இருக்குற தேவை இல்லாத வேலை எல்லாத்தையும் விட்டுட்டு எனக்காக என்ன தேடி வா. நான் நீ எங்க கூப்பிட்டாலும் உன் கூட வரேன். அதுவரைக்கும் இப்படி எல்லாம் பேசி பேசி என்ன டென்ஷன் பண்ணிட்டு இருக்காத. Goodbye!” என்று‌ அவனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தேன்மொழி உடனே டேட்டா கனெக்சனை ஆஃப் செய்து விட்டாள்.‌

அவள் அனுப்பிய மெசேஜை பார்த்து விட்டு மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட அர்ஜுன் “இதுக்கு மெசேஜ் பண்ணி அவ கிட்ட பேசாமயே இருந்திருக்கலாம். அவளாவது நான் எப்படி இருக்கேன்.. என்ன பண்ணிட்டு இருக்கேன்னு கேக்குறதுக்கு எனக்கு கால் பண்ணி பேசி இருப்பா. ச்சே.. நான் ஒன்னு பண்ணா லாஸ்ட்ல எல்லாம் எனக்கு against-ஆவே நடக்குது. 

என் மேல இவ்வளவு கோவமா இருக்குறவள வெறும் ரெண்டு நாள்ல என்னால என்ன பண்ணி சமாதானப்படுத்த முடியும்?” என்று எழுந்த அமர்ந்து யோசிக்க தொடங்கினான்.  டாக்டர் கொடுத்த மருந்துகளால் இப்போது அவனுக்கு நன்றாக தூக்கம் வந்தது. ஆனால் அதையும் தாண்டி தேன்மொழியை மீண்டும் தன்னிடம் சேர்த்துக் கொள்வது தான் அவனுக்கு முக்கியமானதாக இருந்ததால், வலுக்கட்டாயமாக தூங்காமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அர்ஜுன் தேன்மொழியை எப்படி சமாளிப்பது? என யோசிக்க தொடங்கினான். 

அவளுக்கு மட்டும் அவன் அப்பாவின் சப்போர்ட் இல்லை என்றால் தேன்மொழி இந்த அளவிற்கு எல்லாம் சுயமாக யோசித்து செய்திருக்க மாட்டாள் என்பதால் “எல்லாம் இந்த டாடியால தான். மிஸ்டர் பிரதாப்க்கு வயசானதுனால மூளை வேலை செய்யறது குறைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் இப்படி ஏடா கூடமா யோசிக்கிறாரு. அவருக்கு ஒரு ஆப்பு வைக்கணும்னு நினைச்சு அவரை ‌மம்மியை விட்டு பிரிச்சு France-ல இருக்கிற மீட்டிங்கை எல்லாம் அட்டென்ட் பண்ணிட்டு வாங்கன்னு அனுப்பி வச்சிட்டேன். ஆனா அப்பயும் அங்க இருந்து கூட அவர் என் லைஃப்ல விளையாடிட்டு தான் இருக்காரு. 

தேன்மொழிக்கு என்ன தான் என் மேல பாசம் அதிகமாக இருந்தாலும் ஓரளவுக்கு பயமும் இருந்துச்சு. அவ என்ன பாத்து பயப்படனும்னு நான் நினைக்கல. ஆனா இந்த மாதிரி situation-ல அப்படி அவளுக்கு பயம் இருந்திருந்தா கூட பரவாயில்லைன்னு தோணுது. அட்லீஸ்ட் நான் சொல்றதை எல்லாத்தையும் கேட்டுட்டு இங்கயே இருந்து இருப்பா. பட் இனிமே அதுக்கெல்லாம் சான்ஸ் இல்ல. அவள பாத்து நான் பயப்பட வேண்டிய நிலைமை வந்துருச்சு.” என்று நினைத்து பெருமூச்சுவிட்ட அர்ஜுன் தேன்மொழியை பற்றியே விடிய விடிய தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தான். 

மருந்தின் விளைவால் விடியற்காலையில் அவனுக்கு அவனையும் மீறி தூக்கம் வந்துவிட, அவன் இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்து தூங்காமல் இருந்ததால் மயக்கம் வருவதை போல உணர்ந்த அர்ஜுன் அப்படியே சென்று வேறு வழியில்லாமல் கட்டிலில் படித்துக் கொண்டான்..

காலையில் தூங்கி எழுந்த தேன்மொழி ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு விஜயாவுடன் வீட்டில் உள்ள வேலைகளை  பார்க்கத் தொடங்கினாள்.  அப்போது அவளுடைய வீட்டு வாசலில் ஏராளமானவர்கள் திடீரென்று படையெடுத்து வந்து நின்றார்கள். அவர்களை உள்ளே விடாமல் வாசலில் இருந்த அர்ஜுனின் ஆட்கள் தடுத்துக் கொண்டிருந்தார்கள். 

அதனால் எழுந்த சலசலப்பை கவனித்து விட்டு விஜயாவும், தேன்மொழியும் வெளியில் சென்று பார்த்தார்கள். இப்போது அர்ஜூன் சென்னையில் கட்டியுள்ள அனாதை ஆசிரமத்தில் குடி பெயர்ந்த சில ஆதரவற்றோர்கள் இதை அனைத்தையும் அர்ஜுன் தேன்மொழிக்காக தான் செய்தான் என்று தெரிந்து கொண்டு ‌ அவளை நேரில் பார்த்து நன்றி சொல்வதற்காக அங்கே வந்திருந்தார்கள். 

அந்த விஷயத்தை தெரிந்து கொண்டு உடனே  பூனை மீன் துண்டை மோப்பம் பிடித்து செல்வதை போல, இங்கே தங்களுக்கு ஒரு இன்ட்ரஸ்டிங்கான பிரேக்கிங் நியூஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்து மீடியாவில் உள்ளவர்கள், நியூஸ் சேனல் ஆட்கள் என அனைவரும் அங்கே தேன்மொழியிடம் பேட்டி எடுக்க படையெடுத்து வந்திருந்தார்கள். 

ஆருத்ராவை டான்ஸ் கிளாஸில் அழைத்துச் சென்று விட வேண்டும் என்பதற்காக ஒரு சாதாரண சுடிதார் மட்டும் அணிந்திருந்த தேன்மொழி எப்போதும் தன் வீட்டில் இருப்பதைப் போல சிம்பிளாகத் ‌தான் இருந்தாள்.  அவள் முகம் கொஞ்சம் வெளியில் தெரிந்தவுடன் அவளை கேமராக்களில் ஜூம் செய்ய தொடங்கிய மீடியா ஆட்கள் “மிஸ்டர் அர்ஜுன் பிரதாப் அவரோட ஒய்ஃப் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னையில கிட்டத்தட்ட 2000 பேர் தங்குற அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான அனாதை ஆசிரமத்தை உருவாக்கி இருக்காரு. 

ஆனா இன்னும் அவரோட ஒய்ஃப் தேன்மொழி பழசை மறக்காமல் இதுக்கு முன்னாடி இருந்த அவங்களோட பரம்பரை வீட்டுல ஒரு சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதனால இப்ப அவங்க தன்னோட குடும்பத்தை பார்க்க வந்திருக்காங்கன்னு நமக்கு நியூஸ் கிடைச்சிருக்கு. 

கடல் கடந்து மிஸ்டர் அர்ஜுனுக்கும், சாதாரண குடும்பத்தை சேர்ந்த தேன்மொழிக்கும் நடுவுல எப்படி காதல் வந்துச்சுன்னு ‌ உங்கள மாதிரியே தெரிஞ்சுக்கிறதுக்கு நாங்களும் ரொம்ப ஆவலா தான் இருக்கும். ஆனா இங்க வெளிய நிக்கிற மிஸ்டர் அர்ஜுன் அரேஞ்ச் பண்ணி இருக்கிற பாடிகார்ட்ஸ் ‌ நம்மள தேன்மொழி மேடம் கிட்ட நெருங்கவே விட மாட்டேங்கிறாங்க. 

அர்ஜுன் சாரால நன்மை அடைஞ்ச அந்த ஆதரவற்றோர் ஆசிரமத்துல இப்ப தங்கிட்டு இருக்கிற மக்கள் தேன்மொழி மேடம்க்கு நன்றி சொல்ல வந்திருக்கிற நிலையில, அடுத்து இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காக எங்க சேனல் கூட நீங்க எப்பவும் connected-ஆ இருங்க.” என்று மைக்கை பிடித்து லைவில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  

இது மாதிரியான புகழ் வெளிச்சத்தின் நடுவில் இருப்பது எல்லாம் தேன்மொழிக்கு புதிதாக இருப்பதனால் அவள் என்ன நடக்கிறது என புரியாமல் திகைத்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது லைவில் ஓடிக் கொண்டிருந்த நியூஸை ‌ அவளது மொபைல் ஃபோனில் பார்த்துவிட்டு அதை கொண்டு சென்று அவளிடம் காட்டிய ஆதவன் “இன்னைக்கு உன் கிட்ட இன்டர்வியூ எடுக்காம இவங்க எல்லாரும் போக மாட்டாங்க நினைக்கிறேன். 

நம்ம ஏரியாவே ரொம்ப சின்னது. இதுல இப்படி கும்பல் கும்பலா இத்தனை பேர் நம்ம வீட்ட சுத்தி நின்னுட்டு இருந்தாங்கன்னா, இந்த பக்கம் யாரும் ரோட்டை கிராஸ் பண்ணி போகவே முடியாது. Full area block‌ ஆயிடும். இவங்க உன் கிட்ட பேசாம கிளம்பி போக மாட்டாங்கன்னு நினைக்கிறேன். சீக்கிரம் ஏதாச்சு பண்ணு தேனு‌. இது எல்லாரும் கிளம்பி வேலைக்கு போற நேரம். நம்மளால இப்ப அவங்க வேலையும் சேர்த்து கெடுக்கிற மாதிரி இருக்கும்.”  என்றான். 

அதனால் அவனைப் பார்த்து திருவென்று முழித்த தேன்மொழி “டேய் எனக்கு ஸ்கூல்ல எல்லாரும் முன்னாடி பேச சொன்னாலே சம்டைம்ஸ் பேச வராது டா. என்ன போய் இத்தனை பேர் முன்னாடி அதுவும் மைக்க புடிச்சு பேச சொன்னா நான் எப்படி டா பேசுறது? எனக்கு பயமா இருக்காதா? எல்லாம் உங்க மாமாவ சொல்லணும். அந்த ஆளு வேணும்னே இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காரு. அவன் மட்டும் கைல கிடைக்கட்டும். இருக்கு அவனுக்கு.” என்றாள். 

– மீண்டும் வருவாள் 💕 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured