அத்தியாயம் 67
சித்தார்த் அர்ஜுன் உடன் சேர்ந்து வீடியோ கால் செய்து தேன்மொழியிடம் பேசிக் கொண்டிருந்தான். தேன்மொழியின் கணவன் ஹான்ட்சமாக இருக்கிறான் என்று நினைத்த உதயா அவர்கள் மூவரும் குடும்பமாக வீடியோ கால் செய்து பேசிக் கொண்டு இருக்கும்போது அங்கே இடைஞ்சலாக நாம் ஏன் இருக்க வேண்டும்? என்று நினைத்து எழுந்து சென்று விட்டான்.
அவன் சென்ற பிறகு தேன்மொழி அர்ஜுனை வெறுப்பேற்றுவதற்காக தொடர்ந்து சித்தார்த்திடவே பேசிக் கொண்டிருக்க, அப்போது அவனை சாப்பிட அழைப்பதற்காக அவனது ரூம்பிற்கு வந்த ஜானகி சித்தார்த்தை போல தேன் மொழியுடன் அர்ஜுனும் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு, “இவன் கூட சண்டை போட்டுட்டு தான் அவ இந்தியா போறேன்னு போனா. எப்படியோ இப்ப தான் ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க.. மனசு விட்டு பேசி இவங்களுக்குள்ள இருக்கிற பிராப்ளமை இவங்களே சால்வ் பண்ணிக்கிட்டும். இவங்களுக்கு நடுவுல சித்து டிஸ்டர்பன்ஸா இருக்க வேண்டாம்.” என்று நினைத்து அவனை சாப்பிட வரச் சொல்லி அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அவனும் தன் மொபைல் ஃபோனை அப்படியே வைத்துவிட்டு சென்று விட, இப்போது அர்ஜுனும் தேன்மொழியும் மட்டும் லைனில் இருந்தார்கள். அவன் தன்னை புறக்கணித்துவிட்டு வீட்டிற்கு கூட வராமல் இருந்ததால் இன்னும் அவன் மீது கோபமாக இருந்த தேன்மொழி அவனிடம் தானாக இருக்கும் பேச விரும்பாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க, இவள் என்ன தான் செய்கிறாள் பார்க்கலாம் என்று நினைத்த அர்ஜுன் தானும் வீம்பிற்கு அவனது மொபைல் ஃபோனை ஸ்டாண்டில் வைத்து ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு தனது வேலைகளை பார்க்க தொடங்கினான்.
ஐந்து நிமிடங்கள் வரை பொறுத்து பொறுத்து பார்த்த தேன்மொழி “இந்த ஆளுக்கு ஆனாலும் திமிரு ரொம்ப அதிகம். இவர் மேல தான் தப்பு ஆனாலும் இவர் பேச மாட்டாராமா.. உனக்கே அவ்ளோ இருந்துச்சுன்னா, உன் பொண்டாட்டி எனக்கு மட்டும் திமிர் இருக்காதா? எனக்கு அது எல்லாம் இல்லைனாலும் நீயே வர வச்சிருவ போல! எவ்வளவு நேரம் தான் நீ இப்படியே பேசாம இருக்கேன் நானும் பார்க்கிறேன். இன்னைக்கு உங்க பொறுமையை நான் டெஸ்ட் பண்ண போறேன் மிஸ்டர் அர்ஜுன்!” என்று நினைத்து தனக்குள் வில்லத்தனமாக சிரித்துக் கொண்ட தேன்மொழி அவளது மொபைல் ஃபோனை தூக்கிக் கொண்டு நேராக அவளது ரூமிற்கு சென்றாள்.
மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடாமல் அவள் என்னவோ அர்ஜூனுடன் தனியாக வீடியோ கால் பேச விரும்புவதாக மற்றவர்களிடம் சொல்லி ஆதவனை தனக்கு ரூமில் சாப்பாட்டைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லிவிட்டு ஏதோ டிவி பார்ப்பதைப் போல கேமராவில் தெரிந்த அவன் முகத்தை பார்த்தபடி அவள் பாட்டிற்கு சாப்பிட தொடங்கினாள்.
அதனால் எரிச்சல் அடைந்த அர்ஜூன் “என் மூஞ்சில என்ன படமாடி ஓடுது? அப்படியே என்னமோ ஃப்ரீ ஷோ பார்க்குற மாதிரி பார்த்துக்கிட்டே ஜாலியா சாப்பிடற! இப்ப கூட நீ பண்ணது தப்புதான்னு சொல்லி என் கிட்ட சாரி கேக்கணும்னு உனக்கு தோன மாட்டேங்குது இல்ல! நீயா இறங்கி வர்ற வரைக்கும் என்ன ஆனாலும் சரி நானும் இறங்கி வர மாட்டேன். உனக்கு மட்டும் தான் சாப்பிட தெரியுமா? இரு டி நானும் உன்ன மாதிரியே பண்ணி உன்னை வெறுப்பேத்துறேன்.” என்று நினைத்து உடனே தனது சர்வன்ட் பெல் அடித்து உள்ளே வரச் சொல்லி தனக்கான உணவுகளை கொண்டு வரச் சொன்னான்.
அவனும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அனைத்தையும் கொண்டு வந்து அவன் டேபிளில் அடுக்கி வைத்து விட, சிஸ்டமை ஓரமாக தள்ளி வைத்த அர்ஜுன் ஸ்பூனில் அந்த உணவுகளை தேன்மொழியை பார்த்தபடி சாப்பிட தொடங்கினான். ஓரக் கண்ணால் அதை கவனித்த தேன்மொழி “என்ன பழிக்கு பலியா? என் கூட இந்த ரிவென்ச் கேம் ஆடி பாக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க இல்ல மிஸ்டர் அர்ஜுன்.. அப்போ தேன்மொழி எவ்ளோ பெஸ்ட்டா ப்ளே பண்றான்னு வெயிட் பண்ணி பாருங்க. கண்டிப்பா இதுல நான் தான் ஜெயிப்பேன். உங்களை கதற விடுவேன்.” என்று நினைத்து “காதல் தர நெஞ்சம் காத்திருக்கு.. காதலிக்க அங்க நேரம் இல்லையா? இலையைப் போலே என் இதயம் தவறி விழுதே!” என்ற பாடலை பாடியபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
அதை கவனித்த அர்ஜுன் “ஓஹோ இவளுக்கு பாட்டு பாட எல்லாம் தெரியுமா? இவ வாய்ஸ் ஸ்வீட்டா தானே இருக்கு.. அதான் கரெக்டா பாடறாளோ இல்லையோ ஏதோ கேக்குற மாதிரி இருக்கு.” என்று நினைக்க, அப்போது தேன்மொழிக்கு திடீரென்று பொறை ஏறியது. உடனே அவள் தன் தலையை தட்டியபடி “அம்மா.. அம்மா தண்ணி கொண்டு வாங்க மா..!!” என்று குரல் கொடுக்க, மற்றவர்கள் அனைவரும் பிசியாக இருந்ததால் சாப்பிட்டு முடித்திருந்த உதயா தான் ஒரு கிளாஸில் தண்ணீரை எடுத்துக் கொண்டு தேன் மொழியின் ரூமிற்குள் நுழைந்தான்.
அவன் கொண்டு வந்த தண்ணீரை வாங்கிக் கொண்ட தென்மொழி அவனுக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு அதை குடிக்க, “அவங்க அம்மாவை கூப்பிட்டு இவன் தண்ணி கேட்டா இவன் எதுக்கு இவளுக்கு தண்ணி கொண்டு வந்து குடுக்கிறான்? இந்தியால இப்ப கிட்டத்தட்ட மணி பத்துக்கு மேல ஆகி இருக்கும். இப்ப வரைக்கும் என் பொண்டாட்டி வீட்ல இவனுக்கு என்ன வேலை? ஃப்ரெண்ட்ன்னா நைட்டு என் பொண்டாட்டி ரூமுக்கு வருவானா இவன்? நான் மட்டும் இப்ப அங்க இருந்திருக்கணும்.. அப்படியே அவளுக்கு தண்ணி கொடுத்து இவன் கைய புடிச்சு ஒடச்சு உடைச்சு விட்டுருப்பேன்.” என்று நினைத்த அர்ஜுன் தன் பற்களை கடித்துக் கொண்டு வந்த கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தான்.
அவன் கரித்துக் கொட்டியதில் உதயாவிற்கு இரும்பல் வர, தான் குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை அவனிடம் நீட்டிய தேன்மொழி “இந்தா.. தண்ணி குடி!” என்றாள். உடனே உதயாவும் அவள் குடித்த அதே கிளாசில் தண்ணீரை வாங்கி குடிக்க, அங்கே கோபத்தில் சிவந்து இருந்த அர்ஜுனனின் மூக்கு காதுகளில் இருந்து எல்லாம் கண்ணுக்கு தெரியாத புகை அதிக உஷ்ணத்துடன் சென்று கொண்டிருந்தது.
இன்று தேன்மொழியிடம் அவள் வாழ்க்கையை பற்றி முழுவதாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு நேரம் அவள் வீட்டிலேயே டேரா போட்டு இருந்த உதயா தேவை இல்லாமல் நடுவில் நந்தியைப் போல இப்போது அர்ஜுன் தூரத்தில் இருந்தாலும் கூட வீடியோ காலில் வந்து ஆஜராகி விட்டதால், ” அப்படி என்ன தான் இவ்ளோ நேரமா இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்களோ தெரியல! பிடிக்காம தானே இவ அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா? அப்புறம் இப்படி வீடியோ கால்ல எல்லாம் இருக்கிற வேலையை விட்டுட்டு இவ கூட பேசுற அளவுக்கு அவருக்கு இவ மேல ஃபிலிம்ஸ் இருக்கா என்ன? இவளும் சாப்பிட கூட வெளியே வராம இவர் கிட்டையே பேசிட்டு உட்கார்ந்து இருக்கா..
ஒரு பக்கம் நான் நெனச்சு பயந்த மாதிரி தேன்மொழி வாழ்க்கை வீணாகலைன்னு நினைச்சு சந்தோஷப்படுறதா, இல்ல இப்படி ஒரு வயசானவனா கட்டிக்கிட்டாலும் அவர் கூட இவ சந்தோஷமா தான் இருக்கான்னு நினைச்சு சந்தோஷப்படுறதான்னு எனக்கு ஒன்னும் புரியல. நெஜமாவே யுவர் ஹாப்பியா இருக்காளா இல்ல மத்தவங்களுக்காக நடிக்கிறாளான்னு முதல்ல கண்டுபிடிக்கணும்.” என்று நினைத்த உதயா இதற்கு மேல் அவன் அங்கே இருந்தால் நன்றாக இருக்காது என நினைத்து வெளியில் சென்று விட்டான்.
அதன் பிறகு தேன்மொழி என்னமோ சாப்பிடுவது ஒரு அரிய வகை கலை. அதை மிகுந்த சிரத்தையுடன் பொறுமையாக செய்ய வேண்டும் என்பதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக வேண்டுமென்றே அர்ஜுனை வெறுப்பேற்றுவதற்காக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவளை வெறுப்பேற்றுவதற்காக என்றாலும் கூட அவ்வளவு நேரம் எல்லாம் இழுத்து இழுத்து அவனால் சாப்பிட முடியவில்லை.
அதனால் சீக்கிரம் சாப்பிட்டு முடித்த அர்ஜுன் தனது சிஸ்டமை எடுத்து வைத்து மானிட்டரை பார்த்தான். அவனுக்கு இப்போது வேலை செய்யும் எண்ணமே வரவில்லை. அதனால் spotify-யில் டைலமோ டைலமோ பாடலை ப்ளே செய்து விட்டு அவனும் அந்த பாடலோடு சேர்ந்து பாடத் தொடங்கினான்.
அதை கவனிக்காததை போல நடித்த தேன்மொழி “இந்த வயசுல உங்களுக்கு தைரியம் டயலாக் கேக்குதா? அது சரி உங்க வயசுக்கு எல்லாம் அந்த பாட்டு தான் பிடிக்கும்.. அது பழைய பாட்டு ஆச்சே..!!” என்று நினைத்து தனக்கு சிரித்துக் கொண்டு, அந்த சாப்பாட்டு தட்டிலேயே கை கழுவி விட்டு “முத்தமலை இங்கு கொட்டி தீராதோ..!!” என்று தனது இனிமையான குரலில் பாடியபடி அந்தத் தட்டை ஓரமாக இருந்த டேபிளில் வைக்கப்பட்டு தனது தலைமுடியை தூக்கி கொண்டை போட தொடங்கினாள்.
அவளது இனிமையான குரலில் ஏதோ ஒரு புதிய பாடலை கேட்ட அர்ஜுனுக்கு தொடர்ந்து அந்த பாடலை கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அதனால் தனது சிஸ்டமின் வால்யூமை குறைத்து வைத்துவிட்டு அவள் பாடுவதை கூர்ந்து கவனிக்க தொடங்கினான். அது எந்த படத்தில் வரும் பாடல் என்று அவனுக்கு தெரியவில்லை. பிஸியாக பிசினஸ்மேன் அவனுக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும் புதிய பாடல் தெரிய வாய்ப்பில்லை..
அந்த பாடலை பாடியபடி தேன்மொழி தனது ரூமின் டோரை சென்று லாக் செய்துவிட்டு வந்து அவளது கபோர்ட்டில் இருந்த ஆடைகளை தேடி இரவு நேரத்தில் அணிவதற்காக ஒரு பேன்டையும், டி-ஷர்டையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தாள். பின்பு அவள் தனது புடவையின் கொசுவத்தை எடுத்து அதில் உள்ள ஊக்கை கழட்ட தொடங்கி விட, நடக்கும் அனைத்தையும் வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் இவள் இப்படி தன்னை காலில் வைத்துக் கொண்டு டிரஸ் சேஞ்ச் செய்யப் போகிறாளா? என்று நினைத்து ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பதை போல ஆ என்று தன் வாயை திறந்து கொண்டு பார்த்தான்.
அதை கவனித்த தேன்மொழி “ஆளையும் மூஞ்சியையும் பாரு… கட்டுன பொண்டாட்டியையே ஆஆன்னு பொறுக்கி பையன் மாதிரி பார்க்கிறான்..!!” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டு அவளுடைய புடவை முந்தானையின் ஊக்கே கழட்டினாள். ஆனால் அந்த முந்தானை அவளது தோள்களில் இருந்து சரியவும், சட்டென்று ஒரே நொடியில் தனது புடவையை உறுவி அவளுடைய மொபைல் ஃபோனின் மீது தூக்கி எறிந்தாள்.
அது அழகாக சென்று ஃபோனின் கேமராவை மூடிக்கொள்ள, அதன் வழியாக அரைகுறையாக வடை போச்சே என்ற ரீதியில் தனது ஃபோனை கையில் எடுத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு உற்று உற்று பார்த்துக் கொண்டு இருந்தான் அர்ஜுன். அவனுக்கு இப்போதே அந்த மொபைல் ஃபோன் வழியாக உள்ளே குதித்து நேராக தேன்மொழியின் ரூமிற்கு சென்று விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
-மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)