அத்தியாயம் 64
“நான் உங்க ஆபிஸ்க்கு கீழே வெயிட் பண்ணிட்டு இருக்கேன். உடனே சீக்கிரம் கிளம்பி கீழே வா.” என்று தேன்மொழி உடைந்த குரலில் ஃபோனில் சொல்ல, மறுமுனையில் லைனில் இருந்த உதயா தன்னிடம் பேசிக் கொண்டு இருப்பது அவள் தானா என்று நம்ப முடியாமல் திடுக்கிட்டு நின்றிருந்தான்.
அவனது இதழ்கள் தன்னையும் மீறி “தேனு.. இது நீதானா? இல்ல வேற யாரோ பேசுறது எனக்கு தான் உன் வாய்ஸ் மாதிரி கேக்குதா?” என்று கண்கள் குளமாக கேட்க, “டேய் எரும.. கொஞ்ச நாள் தானே நான் இங்க இல்ல.. அதுக்குள்ள என் வாய்ஸ் இப்படித் தான் இருக்குமா இல்லையான்னு உனக்கு டவுட் வந்துருச்சா? நான் தான் தேன்மொழி.. இப்ப தான் நான் இந்தியா வந்தேன். வந்ததும், முதல் வேலையா உன்ன பாக்கணும்னு உன் ஆபீஸ் கிளம்பி வந்துட்டேன். கீழ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. வந்து தொல.” என்றாள் தேன்மொழி.
அவள் அப்படி சொன்னவுடன் தான் உண்மையாகவே தன்னிடம் பேசிக் கொண்டு இருப்பது தேன்மொழி தான் அவள் தனக்காக இங்கே வந்து கீழே காத்திருக்கிறாள் என்று உதயாவின் மூளைக்கு உரைத்தது. அதனால் உடனே தனது மொபைல் ஃபோனை இறுக்கமாக பிடித்துக் கொண்டு லிஃப்டை நோக்கி ஓடினான் உதயா.
அது லஞ்ச் டைம் என்பதால் ஏராளமானவர்கள் லிஃப்ட் முன்னே காத்திருந்தார்கள். அதனால் “இப்போ என்னால லிஃப்ட்காக எல்லாம் வெயிட் பண்ண முடியாது. இப்பவே நான் என் தேன் மொழியை பாக்கணும்.” என்று நினைத்து வேக எட்டு வைத்து மாடிகளில் உள்ள படிக்கட்டில் மூச்சு வாங்க கீழே ஓடிச் சென்ற உதயா தன் முன்னே கூட்டமாகவும் விசாலமாகவும் இருந்த தார் சாலையில் தேன்மொழி எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சுற்றி முற்றி கண்களாலேயே அவளை தேடிக் கொண்டிருந்தான்.
அவனை கண்டுபிடித்து அவன் அருகில் சென்ற தேன்மொழி அவனது தோள்களில் தட்டி “நான் இங்க இருக்கேன் டா!” என்றாள். உடனே உதயா கலங்கிய கண்களுடன் சட்டென்று அவளை திரும்பி பார்க்க, அவனைப் பார்த்து கண்ணீருடன் புன்னகைத்த தேன்மொழி “நான் இங்க இல்லாம இருந்த இந்த கொஞ்ச நாள்ல சார் என்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்க போல! வெயிட் ரொம்ப கம்மி ஆகிட்டீங்க!” என்று கிண்டலாக கேட்டாள்.
அவள் முகத்தை பார்த்தவுடன் மீண்டும் தனது கனவிலாவது இவள் வர மாட்டாளா? என்று நினைத்துக் கொண்டிருந்த உதயாவிற்கு கடவுளே இப்போது தனக்காக நேரில் இறங்கி பூமிக்கு வந்ததைப் போல அப்படி ஒரு பேரானந்தம் ஏற்பட, உடனே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட உதயா “ஏண்டி திடீர்னு எங்கேயோ என்ன தனியா விட்டுட்டு போன? நீ இல்லாம நான் என்ன ஆவேன்னு யோசிச்சு பாத்தியா நீ? நான் இல்லாம இருக்க உன்னால எப்படித்தான் முடிஞ்சதோ தெரியல! பட் சத்தியமா நீ இல்லாம நான் செத்துட்டேன்.. இப்ப வரைக்கும் உன்னை தேடுவதற்காகவே தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன். இன்னைக்கு கூட ஈவினிங் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் உங்க ஃபேமிலி பத்தி என்ன ஆச்சுன்னு கேட்கலாம்ன்னு நினைத்தேன். இப்ப தான் என்னை வந்து பாக்குறதுக்கு உனக்கு மனசு வந்துச்சா?” என்று உடைந்த குரலில் கேட்டான்.
இதுவரை அவர்கள் இருவரும் இதுபோல எப்போதும் அணைத்துக் கொண்டதில்லை. ஆனால் இன்று சுச்சுவேஷன் எமோஷனாக இருந்ததால், நட்பு ரீதியாக அவன் அனைப்பை சாதாரணமாக எடுத்துக் கொண்ட தேன்மொழி அவளும் அவனை அதிகம் மிஸ் செய்து இருந்ததால் தானும் அவனை அனைத்து கொண்டு “இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு மட்டும் என்ன தெரியும்? நான் என்ன நடக்குதுன்னு யோசிச்சு புரிஞ்சுக்கறதுக்குள்ள எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு உதயா. அப்புறம் நான் என்ன பண்றது சொல்லு?” என்று அவனிடமே கேட்டாள்.
அவள் அப்படி சொன்ன பிறகு தான் தேன்மொழி வெளிநாட்டில் இருக்கும்போது அவனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் மட்டும் ஃபோட்டோ பற்றிய ஞாபகமே அவனுக்கு வந்தது. அதனால் சற்று அவளை விட்டு விலகி இப்போது தான் அவன் அவளை முழுவதாக பார்த்தான். தேன்மொழி ஒரு அழகிய சிம்பிளான ஃபேன்சி டிசைனர் சேரி கட்டி இருந்தாள். அவள் தன்னுடைய நீண்ட கூந்தலை ஸ்ட்ரைட்டனிங் செய்து அதன் இறுதியில் மட்டும் கர்லிங் செய்து இருந்தாள். லேசான மேக்அப் போட்டு அவள் தனது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து இருக்க, அவளது கழுத்தில் அர்ஜுன் கட்டிய புது மஞ்சள் தாலி அழகாக மின்னிக் கொண்டிருந்தது.
அதை தாண்டி தேன்மொழி ஒரு சிம்பிளான கோல்ட் செயின் மற்றும் பிரேஸ்லெட், அவளுடைய லெஃப்ட் ஹேண்டில் விலை உயர்ந்த வாட்ச் அணிந்து பார்ப்பதற்கு ஒரே பார்வையில் இவள் பணக்கார வீட்டுப் பெண் என்று சொல்லும் தோரணையில் அனைத்து அம்சங்களுடனும் கச்சிதமாக இருந்தாள்.
அதனால் இவள் தனக்கு தெரிந்த தேன்மொழி தானா? என்று யோசித்த உதயா அவளை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தான். இன்ஸ்பெக்டர் சொன்னதைப் போலவே யாரோ ஒருவருடன் அவளுக்கு உண்மையாகவே திருமணம் நடந்து இருக்கும் என்று அவனால் நம்பவே முடியவில்லை. ஏற்கனவே அவன் அந்த அதிர்ச்சியில் அவளை பார்த்துக் கொண்டு இருக்க, தங்களது காருக்குள் அமர்ந்து தேன் மொழியை பார்த்துக் கொண்டு இருந்த ஆருத்ரா “மம்மி கிளம்பி போய் எவ்வளோ நேரம் ஆகுது.. நான் அவங்க கிட்ட போறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டிற்கு கார் கதவை திறந்து மம்மி என்று கத்திக் கொண்டு தேன் மொழியை நோக்கி ஓடினாள்.
உடனே “ஹே ருத்ரா.. இங்க ட்ராபிக் அதிகமா இருக்கும். நீ தனியா போகாத நில்லு!” என்று சத்தமாக சொன்ன ஆதவன் அவளை பின் தொடர்ந்து ஓடிச் சென்றான். ஆருத்ராவின் குரல் கேட்டு தேன்மொழி அவள் பக்கம் திரும்ப, ஓடி வந்த ஆருத்ராவை பாதியில் தடுத்து நிறுத்திய ஆதவன் அவள் கையை பிடித்து அவர்கள் அருகில் அழைத்து வந்தான்.
வந்ததும் தேன்மொழியின் கையைப் பிடித்துக் கொண்ட ஆருத்ரா “ஏன் மாமி என்ன தனியா விட்டுட்டு வந்தீங்க? இந்த அங்கிள் யாரு? உங்க ஃபிரண்டா?” என்று கேட்க, “ஆமா இவர் என் ஃபிரண்டு தான். உன்னை பாட்டி கூட தானே இருக்க சொல்லிட்டு வந்தேன்.. இது இந்தியா ஆருத்ரா. அங்க ரஷ்யாவுல இருக்கிற மாதிரி இங்க ரோட்ஸ் இருக்காது. திடீர்னு ஏதாவது கார் வந்துட்டா என்ன பண்ணுவ? இப்படி எல்லாம் உன் கூட யாரும் வராம நீ ரோட்ல நடக்கவே கூடாது. அதுவும் இல்லாம இங்க பாரு எவ்ளோ வெயில் அடிக்குது சென்னையில.. உனக்கு இந்த ஊர் வெயில் செட் ஆகறதுக்கே டைம் ஆகும். ம்மா நீ கார்ல போய் வெயிட் பண்ணு நான் வரேன்.” என்றாள் தேன்மொழி.
உதயாவை பார்த்து நட்புடன் புன்னகைத்த ஆதவன் “ஹாய் அண்ணா! நல்லா இருக்கீங்களா? நாங்க காணமா போன உடனே நீங்க டென்ஷன் ஆகி இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்.. அதான் நாங்க உங்கள பாக்க வந்தோம்.” என்று சொல்ல அவன் பேசியதை கூட கவனிக்காமல் உதயா தேன்மொழியையே பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஆருத்ராவை ஆதவன் தன்னுடன் மீண்டும் காருக்கு அழைத்து சென்றுவிட, தன்னையே மிரர்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்த உதயாவை கவனித்த தேன்மொழி “என்ன டா புதுசா பாக்குற மாதிரி அப்படி பார்க்கிற?” என்று கேட்க, “எனக்கு உன்ன புதுசா பாக்குற மாதிரி தான் இருக்கு. நீ ரொம்ப மாறிட்ட தேனு. அதான் எனக்கு தெரிந்த தேன்மொழியை எங்க காணோம்னு தேடிட்டு இருக்கேன்.” என்று சோகமாக சொன்னான் உதயா.
முழுவதாக என்ன நடக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை என்றாலும் கூட, தேன்மொழிக்கு திருமணமாகி விட்டது என்று இன்றும் கூட அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்த தேன்மொழி “நான் அதே தேன்மொழி தான். பட் எனக்கு மேரேஜ் ஆனதுனால கொஞ்சம் சேன்ஜ் ஆன மாதிரி உனக்கு தெரியுது. ஓகே உன் ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டு வரியா? நம்ம எங்கேயாவது வெளியே போகலாம்? மறுபடியும் இந்தியாவுக்கு என்னால வர முடியும்னு நான் நினைச்சு கூட பாக்கல. இப்ப எப்படியோ வந்துட்டேன். உங்க எல்லார் கூடயும் எனக்கு டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசையா இருக்கு. அம்மாவும் கார்ல தான் வெயிட் பண்றாங்க. நீ ஆபீஸ்ல சொல்லிட்டு வா நம்ம கிளம்பலாம்.” என்றாள்.
“அது எல்லாம் ஒன்னு சொல்ல தேவையில்லை. எவனாவது கேட்டா நான் பாத்துக்குறேன்.” என்ற உதயா அவளுடன் சென்று காரில் அமர்ந்தான். அந்த விலை உயர்ந்த சொகுசு கார்களை பார்த்தவுடனேயே உதயாவிற்கு தேன் மொழியின் கணவன் கண்டிப்பாக இன்ஸ்பெக்டர் சொன்னதைப் போல பணக்காரன் ஆகத்தான் இருப்பான் என்று தோன்றியது. இப்படி அவன் தொடர்ந்து அவளது ஹஸ்பண்ட் யார் என்று யோசிக்கும்போது, அவனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்குள் ஏற்பட்டது.
“உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு சொல்ற! ஆனா அது எப்படி நடந்துச்சு? சரி, உனக்கு மேரேஜ் ஆயிடுச்சின்னாலும் உன் ஹஸ்பண்ட் எங்கே? நீ மட்டும் தான் வந்திருக்கியா?” என்று உதயா கேட்க, “அவர் வர்க்ல பிஸியா இருக்காரு. திடீர்னு அம்மாவும், ஆதவனும் அங்க கிளம்பி வந்துட்டாங்க. அதான் அவங்க இந்தியா போகலாமான்னு கேட்ட உடனே நானும் அவங்க கூட கிளம்பி வந்துட்டேன். என் பொண்ணு தான் நான் சொல்றத கேட்காம என் கூட தான் இருப்பேன்னு கிளம்பி வந்துட்டா.” என்ற தேன்மொழி ஆருத்ராவின் கன்னத்தை பிடித்து கிள்ளி விளையாடினாள்.
பார்ப்பதற்கு கூட ஆருத்ராவின் முகமும் தேன்மொழியின் முகமும் ஒரே மாதிரி இருந்ததால், அவர்கள் ஒரு குடும்பமாகவே அவன் கண்ணுக்கு தெரிந்தார்கள். மேலும் இங்கிருந்து யாராலோ கடத்தப்பட்டு சென்ற தேன்மொழி இப்போது சாதாரணமாக தனக்கு கணவன் இருக்கிறார், குடும்பம் இருக்கிறது என்று சொல்லி இந்தியாவிற்கு என்னவோ டூர் வந்ததைப் போல பேசிக் கொண்டிருக்கிறாள் என நினைத்த உதயாவிற்கு ஒரே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
அப்போது திடீரென்று விஜயா “இவளை காணோம்னு நம்ம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தோம்ல தம்பி.. அது இன்னும் அப்படியே தான் இருக்கா? இப்ப நாங்க வீட்டுக்கு போனா வேற எல்லாரும் உடனே இவ எங்க போனா என்ன ஆச்சுன்னு தான் கேப்பாங்க. எல்லாரையும் என்ன சொல்லி சமாளிக்க போறோமோ தெரியல!” என்று சொல்ல, முதலில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும் என்று நினைத்த தேன்மொழி நேராக பிரிட்டோவை போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லச் சொன்னாள்.
-மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)