Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 63

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 63

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 63 

ஜெட் விமானத்தில் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வந்து இறங்கினாள் தேன்மொழி. அவர்கள் தங்களுக்கான காரில் ஏறி அமர, அதை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான் பிரிட்டோ. “ஏண்டி நம்ம ஊருக்கு வந்து இந்த பையன் பாட்டுக்கு டிரைவர் சீட்ல உக்காந்து காரம் ஓட்டிட்டு இருக்கான்.. இவனுக்கு நம்ம வீட்டுக்கு போறதுக்கு வழி தெரியுமா? என்னை ஏதுன்னு கேளு!” என்று விஜயா சொல்ல, “ரூட் தெரியாம தான் நம்மள எல்லாம் இங்க இருந்து கொஞ்சம் கூட யாருக்குமே சந்தேகமே வராம ரஷ்யா வரைக்கும் இவங்க எல்லாம் கருத்திட்டு போயிருப்பார்களா? அவங்க எங்க போறாங்கன்னு பார்க்கலாம்.” என்றாள் தேன்மொழி. 

“நாம மறுபடியும் இந்தியா பக்கமே வர மாட்டோம்னு நினைச்சேன். இப்ப வீட்டுக்கு போறத நினைச்சாலும் கொஞ்சம் எக்சைட்டடா இருக்கு. மாமாவும் நம்ம கூட வந்திருக்கலாம். அவர் இல்லாதது தான் குறையா இருக்கு.” என்று ஆதவன் சொல்ல, அவனை முறைத்து பார்க்க தேன்மொழி “இந்த அர்ஜுன் என்னை மயக்கினது இல்லாம ஈஸியா ஃபேமிலில இருக்கிற எல்லாரையும் மயக்கிட்டாரு. இதோட இவன் இரண்டு மூன்று தடவை ஏன் மாமா வரலைன்னு கேட்டுட்டான்.” என்று நினைத்தவள், அவளுக்கு தெரிந்தவர்களில் உதயாவின் ஃபோன் நம்பரை தவிர வேறு யாருடைய நம்பரும் அவளுக்கு ஞாபகம் இல்லை என்பதால் மீண்டும் உதயாவிற்கு கால் செய்தாள். 

வேண்டா வெறுப்பாக தனது ஆபிஸ் கேண்டினில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த உதயா ஏதோ ஃபாரின் நம்பரில் இருந்து கால் வந்ததால் “நானே வாழ்க்கையை வெறுத்துப் போய் சுத்திக்கிட்டு இருக்கேன். இதுல எவனோ ஒருத்தன் எனக்கு கால் பண்ணி ஸ்கேம் பண்ண பார்க்கிறான். என்னை கிரியேட் பண்ணும் போது கடவுள் என் லைஃப்ல எந்த நல்லது நடக்க கூடாதுன்னு ஸ்ட்ராங்கா எழுதி வச்சிட்டால் போல..!!” என்று நினைத்து தன் வாழ்க்கையை நொந்து கொண்டு அந்த அழைப்பை துண்டித்தான். 

அதனால் எரிச்சல் அடைந்த தேன்மொழி “இந்த உதயாவுக்கு என்ன ஆச்சு? எப்பயுமே நான் கால் பண்ணா ஃபர்ஸ்ட் எரிங்களயே எடுத்துடுவான்.. இன்னைக்கு என்ன நாள் இத்தனை தடவை கூப்பிட்டோம் எடுக்க மாட்டேங்கறான்.. கட் பண்ணி வேற  விடுறான் லூசு பையன்!” என்று வெளிப்படையாகவே புலம்ப, இந்தியாவில் இருந்து சென்ற பிறகு இப்போது தான் தேன்மொழியின் குடும்பத்தினர்கள் உதயாவை பற்றி யோசிக்க தொடங்கினார்கள். 

அதனால் உடனே அவர்கள் இருவரும் தேன்மொழி காணாமல் போனதில் இருந்து அவளை நினைத்துப் போன உதயா அவளுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் அலைந்தது, அதன் பிறகு விஜயா ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருக்கும்போது கூட அவளை கவனித்துக் கொண்டது என அனைத்தையும் அவளிடம் உணர்ச்சிகள் தெரிவித்தார்கள். 

“அந்த தம்பி மட்டும் இல்லைனா மறுபடியும் என்னால உன்னை பார்க்கவே முடியாதுன்னு நினைத்து நான் அப்பவே ஏதாவது பண்ணி செத்துப் போயிருந்தாலும் போய் இருப்பேன் டி. காவல் காக்கிற அய்யனார் சாமி மாதிரி நீ காணாமல் போனதுல இருந்து அந்த தம்பி தான் எங்க கூடயே துணையா இருந்துச்சு. காலத்துக்கும் அந்த தம்பிக்கு நாம கடமைப்பட்டு இருக்கிறோம். 

முதல்ல நீ உயிரோட தான் இருக்க.. உனக்கு எதுவும் ஆகலைன்னு அந்த தம்பி கிட்ட தான் சொல்லணும். எனக்கு நல்லா தெரியும் தேனு.. இப்ப வரைக்கும் கூட, அந்த தம்பி நம்மள நிமண்ணிற்குனைச்சு கண்டிப்பா கவலைப்பட்டுட்டு தான் இருப்போம். நீ காணாம போனதுக்கு அப்புறம் நாங்களும் திடீர்னு எங்கேயோ போனதுனால கண்டிப்பா எங்களையும் தேடிக்கிட்டு அந்த தம்பி அலஞ்சு இருக்கும்.  உதயா தங்கமான பையன்.” என்று விஜயா சொல்ல, 

உடனே ஆதவன் தன் பங்கிற்கு “நீ ஆருத்ரா கூட சேர்ந்து எடுத்த ஃபோட்டோவை உதயா அண்ணாவுக்கு ஃபேஸ்புக்ல சென்ட் பண்ணில.. உன் வாய்ஸ் மெசேஜை எல்லாம் கேட்டுட்டு அன்னைக்கு நாங்க ரொம்ப பயந்துட்டோம். இன்ஸ்பெக்டர் சார் கூட இனிமே உன்ன நெனச்சு கவலைப்பட வேண்டாம்னு ஈசியா சொல்லிட்டாரு. ஆனா உதயா அண்ணா அப்ப கூட விடாம உன்னை நெனச்சு அழுதுகிட்டே இருந்தாரு. அம்மா அப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்டார்ஜ் ஆனாங்க. அதான் இதை எப்படி சொல்றதுன்னு தெரியாம நான் யோசிச்சிட்டு இருந்தேன். 

சரி, பொழுது விடியட்டும் அம்மாவோட மைண்ட் செட் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லிக்கலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ள இவங்க எங்களையே ரஷ்யாவுக்கு கடத்திட்டு போயிட்டாங்க. கொஞ்ச நாள்ல எவ்ளோ நடந்துச்சு பாரு! எத்தனை பேர் திடீர்னு நம்ம ஃபேமிலியோட காணாம போனதுனால நம்மள பத்தி யோசிச்சிட்டு கவலைப்பட்டு இருப்பாங்க இல்ல!” ‌ என்று சொல்ல, 

அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த தேன்மொழிக்கு தன் குடும்பத்தினர் இவ்வளவு துயரங்களை அனுபவித்து இருக்கிறார்கள், தனக்கு தெரிந்தவர்கள், தனது நண்பர்கள் உட்பட அனைவரும் இத்தனை துயரங்களை அனுபவித்ததற்கு அர்ஜுனும் அவன் குடும்பமும் தானே காரணம் என்று நினைக்கும்போது, கொஞ்சம் காணாமல் போயிருந்த அவளுடைய கோபம் மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 

அதனால் உடனே ஆங்கிலத்தில் தன் கண்கள் ஒருமாக வழிந்த நீரை துடைத்துவிட்டு, “இப்போ நீங்க எங்க போயிட்டு இருக்கீங்க?” என்று தேன்மொழி கேட்க, “ECR  பக்கத்துல உங்க பேர்ல பிரசாத் சார் ஒரு பங்களா வாங்கி இருக்காரு மேடம். அங்க தான் நம்ம போயிட்டு இருக்கோம். ஆல்ரெடி எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும்  பண்ணி  அங்க நம்ம ஸ்டே பண்ண எல்லாமே பக்கவா ரெடியா இருக்கு. So nothing to worry.” என்றான் பிரிட்டோ. 

அதைக் கேட்டு கடுப்பான தேன்மொழி “நான் இந்தியாவுக்கு வந்ததுக்கு அப்புறம் கூட அவங்க சொல்றத தான் கேட்கணுமா? நான் மறுபடியும் என் வீட்டுக்கு போகணும்னு தான் ஆசையா கிளம்பி இங்க வந்தேன். அங்க போறதுக்கு முன்னாடி நான் என் ஃபிரண்ட்ட பாக்கணும். அவன் வொர்க் பண்ற ஆபீஸ் எங்க இருக்குன்னு சொல்றேன். இப்போ அவன் அங்க தான் இருப்பான். அந்த ஆபீஸ் வாசல்ல காரை கொண்டு போய் நிறுத்துங்க. நான் இப்பவே அவன பார்த்தாலும்.” என்று பிடிவாதமாக கட்டளையிடும் தோரணையில் சொன்னாள். 

இவள் இப்படி சொல்வாள் என்று எதிர்பார்த்து இருக்காதால் உடனே கிளாரா “எங்களால உங்க எமோஷன்சை புரிஞ்சுக்க முடியுது மிஸ்ஸஸ் அர்ஜுன். பட் நீங்க இங்க இருக்குற வரைக்கும் உங்களோட பாதுகாப்புக்கு நாங்க தான் responsible. சோ மிஸ்டர் பிரதாப் கிட்ட கேட்காம எங்களால எதுவும் பண்ண முடியாது. நீங்க உங்க ஃபிரண்டை பாக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா தாராளமா பாக்கலாம். 

அதுல எந்த பிரச்சனையும் இல்ல. பட் நீங்க உங்க வீட்டிலேயே தங்கறதுக்கு அவங்க கிட்ட பர்மிஷன் கேட்டதாகணும். நான் இப்படி சொல்றதுக்காக நீங்க எங்க மேல கோவப்படாதீங்க ப்ளீஸ்! எங்களோட ரூல்ஸை நாங்க ஃபாலோ பண்ண வேண்டிய கட்டாயத்தில இருக்கோம். சார் பர்மிஷன் கொடுத்தாருன்னா, கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரியே பண்ணலாம்.”  என்று தனது மென்மையான குரலில் சொல்ல, 

அனைவரின் மீதும் கோபத்தில் இருந்த தேன்மொழி அவளையும் முறைத்து பார்த்துவிட்டு “நானே அத்தை கிட்ட கால் பண்ணி கேட்கிறேன். அவங்க எங்க வீட்ல என்ன தங்கக் கூடாதுன்னு சொல்றாங்கள நான் பாக்குறேன்.” என்று சொல்லிவிட்டு இறுகிய முகத்துடன் தனது மொபைல் ஃபோனில் ஜானகியின் நம்பரை தேடினாள். 

“ஏய்.. எல்லாத்துக்கும் கோபப்பட்டு உன் புகுந்த வீட்டுக்காரங்களை பகைச்சுக்காத. அவங்க எல்லாரும் பெரிய ஆளுங்க தேனு. அவங்களை கோபப்படுத்திட்டு நம்மளால நிம்மதியா வாழ முடியாது அதை மனசுல வச்சுக்கோ.” என்று உடனே விஜயா அவளுக்கு அட்வைஸ் செய்ய, “என் அத்தை கிட்ட எப்படி பேசணும்னு எனக்கு தெரியும். நான் பாத்துக்குறேன்.” என்ற தேன்மொழி ஜானகியின் நம்பருக்கு கால் செய்து அவளிடம் இந்த வீட்டு விஷயத்தை பற்றி கேட்டாள். 

“உங்க வீடு எப்படி இருக்கும்னு நான் பார்த்திருக்கேன் மா. மறுபடியும் நீங்க எதுக்கு அங்க போய் கஷ்டப்படணும்னு தான் நாங்க புதுசா உனக்கு வீடு வாங்கி கொடுத்தோம். உனக்கு அங்க இருக்க பிடிக்கலைன்னா பரவால்ல. உங்க வீட்ல தங்கணும்னு நீ ஆசைப்படுறதுல ஒன்னும் தப்பு இல்ல. நான் கிளாரா கிட்ட பேசிக்கிறேன்.  நீ உன் ஃபிரண்டை பாக்கணும்னா போய் முதல்ல பாரு.‌ எப்பயுமே டென்ஷனாவே இருக்காத தேன்மொழி. ‌ இது எல்லாம் ஒரு விஷயமே இல்ல. நீ ஹாப்பியா இரு. உன் சந்தோஷமும் எங்களுக்கு முக்கியம் தான்.” என்ற ஜானகி அவள் அழைப்பை துடித்து விட்டாள். 

பின் தேன்மொழி உதயா வேலை பார்க்கும் ஆபீஸின் அட்ரஸை பிரிட்டோபிடம் சொல்ல, google மேப்பில் உதவியை நாடி அந்த ஆபீஸின் வாசலில் சென்று தங்களது உயர்தர காரை நிறுத்தினான் பிரிட்டோ. உடனே அந்த காரில் இருந்து முதல் ஆளாக கீழே இறங்கிய தேன்மொழி வேகமாக உள்ளே செல்ல பார்த்தாள். அப்போது “அவன் இப்போ எங்க இருப்பான்.. எந்த டிபார்ட்மெண்ட்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கான்னு தெரியாம இவ்ளோ பெரிய ஆபீஸ்ல என்னால போய் எப்படி அவனை கண்டுபிடிக்க முடியும்?” என்று அவளுக்கு தோன்றியதால் தனது மொபைல் ஃபோனில் இருந்து மீண்டும் மீண்டும் அவனுக்கு கால் செய்தாள். 

சாப்பிட்டு முடித்து இருந்த உதயா விடாமல் அதே ஃபாரின் நம்பரில் இருந்து மீண்டும் மீண்டும் கால் வந்து கொண்டே இருந்ததால் “ச்சை.. நம்ம காலை எடுக்கலைன்னா கூட இவனுங்க விட மாட்டானுங்க போல!” என்று நினைத்து அந்த நம்பரை பிலாக்கில் போட சென்றான். அப்போது இன்னும் இழப்பதற்கு தன்னிடம் என்ன இருக்கிறது? தன் வாழ்க்கையில் எத்தனையோ நடந்த பிறகு இந்த spam call பற்றி எல்லாம் யோசித்து தவளை பற்றி என்ன ஆகப்போகிறது என்று அவனுக்கு தோன்றியதால் அந்த காலை அட்டென்ட் செய்து ஹலோ என்றான். 

அதுவரை அவன் தன் அழைப்பை ஏற்காததால் டென்ஷனாக மொட்டை வெயிலில் ஆபீஸ் வாசலில் நின்று கொண்டு இருந்த தேன்மொழி அவனது குரலை கேட்ட பிறகு எமோஷனலாகி கலங்கிய கண்களுடன் “உதயா.. எப்படி டா இருக்க? நான் எத்தனை தடவை உனக்கு கால் பண்றது? என் மேல கோவமா? ஏன் என் காலை எடுக்க மாட்டேங்கற? நான் உன் ஆபீஸ் வாசல்ல தான் நிக்கிறேன். ப்ளீஸ் சீக்கிரம் கீழ வா!” என்று குரல் தழுதழுக்க சொல்ல, தன் காதுகளில் விழுந்தது உண்மையாகவே தேன்மொழியும் குரல் தானா? அவள் தனக்காக தன்னை தேடி இவ்வளவு தூரம் உண்மையாகவே வந்திருக்கிறாளா? என்று எல்லாம் யோசித்து ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் இருந்த உதயா அப்படியே ஸ்தம்பித்து போய் தன் காதில் இருந்த மொபைல் ஃபோனை இருக்கி பிடித்தபடி சிலை போல நின்று கொண்டிருந்தான்.

– மீண்டும் வருவாள் 💕 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured