Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 62

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 62

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 62 

முதலில் அந்த ஜெட்டில் இருந்து கீழே இறங்கிய பிரிட்டோ அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சோதித்து பார்த்துவிட்டு கிளாராவிற்கு கால் செய்து “எல்லாமே கரெக்டா இருக்கு. மத்தவங்கள கூட்டிட்டு வெளியே வா.” என்று ஆங்கிலத்தில் சொல்ல, “Okay Done.” என்ற கிளாரா அவன் அழைப்பை துண்டித்துவிட்டு ‌ மற்றவர்களுடன் அந்த ஜெட் விமானத்தில் இருந்து கீழே இறங்கினாள். 

தேன்மொழி வந்து அமர்வதற்காக காரின் கதவை திறந்து வைத்த பிரிட்டோ அந்த விமானத்தின் பக்கமாக திரும்பிப் பார்க்க, அங்கே இந்திய பெண்களைப் போல சாதாரணமாக ஒரு குர்தாவும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்த கிளாரா வெறும் தோள்பட்டை வரை மட்டுமே இருந்த அவளுடைய கூந்தலை மேலே தூக்கி போனி ட்டைல் போட்டிருந்தாள்.    இதுவரை பிரிட்டோ அவளை பெரும்பாலான நேரத்தில் கருப்பு நிற யூனிபார்மில் தான் பார்த்திருக்கிறான். 

அதனால் இன்று அவன் கண்களுக்கு அவள் புதிதாக தெரிய, இமைக்க மறந்து பிரிட்டோ அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த தேன்மொழி “உங்க ஆளு உங்களை தான் சைட் அடிக்கிறார் கிளாரா மேடம்! நீங்க இனிமே சும்மா துப்பாக்கி, சண்டை, மத்தவங்கள நோட் பண்ணிக்கிட்டு இருக்கணும் அப்படி இப்படின்னு யோசிச்சு எப்பயும் வெறப்பாவே இல்லாம ஜாலியா வெக்கேஷன் வந்து தான் நினைச்சு இனிமேலாவது உங்க லவ்வை டெவலப் பண்ணுங்க.” என்று அவளிடம் கிண்டலாக ஆங்கிலத்தில் சொல்ல, 

“நோ மிஸ்ஸஸ் அர்ஜுன். இங்கேயும் நாங்க உங்களை பாதுகாக்குறதுக்காக தான் வந்திருக்கோம்.. மிஸ்ஸஸ் பிரசாத் நாங்க உங்க கூட இருக்கும்போது பாக்குறவங்களுக்கு டிஃபரண்டா தெரியக்கூடாது என்பதற்காக என்னை இந்த மாதிரி டிரஸ் பண்ண சொன்னாங்க. அதனால தான் இந்த சேஞ்ச். நாங்க எங்க எப்படி இருந்தாலும், எங்க வேலையை செய்ய மறக்க மாட்டோம்.” என்று விரைப்பாக தன் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் கிளாரா. 

“உங்களையும் சரி, உங்க பாஷையும் சரி, யாராலயும் திருத்த முடியாது. இந்த ஒரு விஷயத்துல மட்டும் உங்கள பார்த்தாலே எனக்கு இருட்டேட் ஆகுது. அவர் எப்படியோ இருந்துட்டு போறாரு. அட்லீஸ்ட் எங்க கூட இங்க இருக்கிற வரைக்குமாவது அத்தை சொன்ன மாதிரி நார்மலா இருக்க ட்ரை பண்ணுங்க. இது ரஷ்யா இல்ல இந்தியா.. புரிஞ்சுதா?” என்று தேன்மொழி அவளிடம் கேட்க, அப்போதும் மரியாதையுடன் கிளாரா அவளைப் பார்த்து தலை குனிந்து “yes. எனக்கு புரியுது மேம்.” என்றாள். 

அதனால் மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட தேன்மொழி “இவங்க கிட்ட எல்லாம் பேசுறதே வேஸ்ட்.” என்று நினைத்து ஆருத்ராவின் கையைப் பிடித்து அவளை அழைத்துக் கொண்டு சென்று  காரில் ஏறி அமர்ந்தாள். பின் விஜயாவும், ஆதவனும் அவள் அருகில் வந்து அமர்ந்தார்கள். கிளாரா டிரைவர் சீட்டிற்கு அருகில் உள்ள சீட்டில் அமர, பிரிட்டோ டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனை வெளியில் அனுப்பிவிட்டு அங்கே சென்று அமர்ந்து கொண்டான். 

அவன் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்ப, தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்த தேன்மொழி “என் கிட்ட சண்டை போட்டுட்டு போனதோட சரி.. அதுக்கப்புறம் அவர நான் பாக்கவே இல்ல. நான் இந்தியா கிளம்பி போறேன்னு தெரிஞ்சும் கூட அவர் எதுவுமே பேசல. இப்போ நான் இங்க கிளம்பி வந்துட்டேன். அப்ப கூட எனக்கு கால் பண்ணி அவருக்கு பேசணும்னு தோணாதா?” என்று நினைத்து சோகமாக இந்த பயண நேரத்தில் அவள் ஜனனி இடம் கேட்டு வாங்கிய அவர்களது திருமண புகைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அங்கே 20 மாடி அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட அலுவலகத்தில் உள்ள 17 வது தளத்தில் இருக்கும் தனது ஆபீஸ் ரூமில் சிஸ்டமின் முன்னே அமர்ந்து தன் கையில் அடிபட்டு இருப்பதால் ஏற்பட்ட வலியை கூட பொருட்படுத்தாமல் மும்மரமாக வேலை செய்து கொண்டு இருந்தான் அர்ஜுன். பிரிட்டோ கிலாராவுடன் இந்தியா சென்று விட்டதால் தன்னுடைய சேர்மன் ஆபீசில் வேலை பார்க்கும் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஒருவனை தனக்கு அசிஸ்டன்டாக நியமித்து இருந்தான் அர்ஜுன். 

அவனும் தனது பல வருட எக்ஸ்பீரியன்ஸை பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்தான். இருப்பினும் அர்ஜுன் இருக்கு பிரிட்டோவின் மீது இருந்த நம்பிக்கை இந்த புதியவனின் மீது இல்லை என்பதால் யார் என்ன வேலை செய்து கொடுத்தாலும் அது சரியாக இருக்கிறதா? என்று தன் பங்கிற்கு அனைத்தையும் சரிபார்த்து எக்ஸ்ட்ரா ஒர்க் செய்து கொண்டிருந்தான். 

அப்போது திடீரென்று அவனுக்கு விக்கல் எடுத்தது. முதலில் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சிஸ்டமில் இருந்து தன் பார்வையை விளக்காமல் தொடர்ந்து அவர் வேலை செய்து கொண்டே இருந்தான்.. ஆனால் நேரம் செல்ல செல்ல, ஓயாமல் அவனுக்கு விக்கல் வந்து கொண்டே இருந்தது. 

அதனால் தனது டேபிளில் இருந்த பெல்லை அடித்து தனக்கென பிரத்யோகமாக வேலை பார்க்கும் சர்வன்டை உள்ளே வரவழைத்து அவனிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னான். அவனும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அந்த ஒரு கிளாஸ் தண்ணீரையும் குடித்து முடித்த அர்ஜுன் அப்போதும் அந்த விக்கல் தீராமல் எரிச்சல் அடைந்து “போய் இன்னொரு கிளாஸ்ல தண்ணி கொண்டு வா..!!” என்று சொல்லி சர்வன்ட்டை அனுப்பினான்.

அவனும் உடனே வேகமாக வெளியில் சென்று ஒரு கிளாஸ் தண்ணீருடன் உள்ளே வந்தான். அதையும் வாங்கி மடமடவென்று குடித்தான் அர்ஜுன். அப்போதும் அந்த பாலாய் போன நீக்கவில்லை.‌ அதனால் வந்த கோபத்தில் தன் கையில் இருந்த கண்ணாடி கிளாசை அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்த அர்ஜுன் “போய் இன்னொரு கிளாஸ் தண்ணி கொண்டு வா.. இல்ல இல்ல கிளாஸ்ல வேணாம்.. ஜக்ல கொண்டு வா.” என்று தனது சர்வன்ட்டிடம் எரிந்து விழுந்தான். 

அவனும் உடனே பயந்த குரலில் “ஓகே சரி.. ஓகே சார்.. இப்பவே போய் கொண்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக வெளியில் சென்று அடுத்த இரண்டு நிமிடத்தில் ஒரு ஜக் நிறைய தண்ணீரையும் அதை ஊற்றிக் கொடுக்க ஒரு கிளாஸையும் கொண்டு வந்து அவன் முன்னே வைத்தான். 

இன்னும் தனக்கு விக்கல் நிக்காததால் கோபமாக இருந்த அர்ஜூன் தண்ணீரை கிளாசில் கூட ஊற்றி குடிக்காமல் நேரடியாக கிட்டதட்ட இரண்டு லிட்டர் தண்ணீர் பிடிக்கக் கூடிய அந்த வாட்டர் ஜக்கை தன் கை வலித்தாலும் பரவாயில்லை என்று நினைத்து ஒரே கையில் தூக்கி மட மடவென்று அதில் இருந்த தண்ணீர் மொத்தத்தையும் ஒரே மூச்சாக குடித்தான். 

அவன் அப்படி குடித்ததில் காலையில் இருந்து அவன் சாப்பிடாததால் காலியாக இருந்த அவன் வயிறு நிரம்பி ஏப்பம் வந்ததே தவிர, அப்போதும் அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு வந்த விக்கல் மட்டும் நிற்கவேயில்லை. இதற்கு மேல் தண்ணீர் குடிக்க அவன் வயிற்றில் இடமும் இல்லை‌. அதனால் சோர்வாக தன் கையில் இருந்த ஜக்கை கீழே வைத்த அர்ஜுன் பெருமூச்சு விட்டுவிட்டு தன் சேரில் சாய்ந்து அமர்ந்தான். 

அப்போது அவனை தயக்கத்துடன் பார்த்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்த அவனுடைய சர்வன்ட் “சார் நான் உங்க கிட்ட ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே!” என்று ஆங்கிலத்தில் மென்மையான குரலில் கேட்க, அந்த வயதான சர்வன்டை நிமிர்ந்து பார்த்த அர்ஜுனுக்கு என்னவோ அவனிடம் இம்முறை கோபப்பட மனம் வரவில்லை. அதனால் எதுவும் பேசாமல் அவன் ம்ம்.. என்று மட்டும் சொல்ல, 

“இப்படி விடாம விக்கல் வந்துகிட்டே இருந்தா யாரோ ஒருத்தவங்க உங்களையே நினைச்சுட்டு இருக்காங்கன்னு அர்த்தம். நீங்க ரெண்டு மூணு நாளாவே வீட்டுக்கு போகாம ஆபீஸ்லயே இருந்து வேலை பார்த்துட்டு இருக்கீங்க. அதான் உங்க ஃபேமிலில இருக்கிறவங்க உங்களை நினைக்கிறாங்க நினைக்கிறேன். நீங்க வேணா அவங்களுக்கு கால் பண்ணியாவது பேசி பாருங்களேன்.. இந்த விக்கல் உடனே நின்னிரும்.” என்று அந்த முதியவர் ஆர்வமான குரலில் அவனுக்கு அட்வைஸ் செய்தார். 

உடனே அர்ஜுன் அவரை முறைத்து பார்க்க, “சாரி சார்.. நான் ரொம்ப அதிகமா பேசிட்டேன் நினைக்கிறேன். இன்னொரு ஜக்ல உங்களுக்கு தண்ணி கொண்டு வரவா?” என்று உடனே அவர் பயத்துடன் கேட்டார். “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க வெளியே போங்க!” என்று சொல்லி அவரை வெளியில் அனுப்பிய அர்ஜுன், ” என் வீட்டில இருக்கிறவங்க என்ன பத்தி யோசிப்பாங்க தான்.. ஆனா அதுக்காக இத்தனை வருஷத்துல எனக்கு இப்படி எல்லாம் விக்கல் வந்ததே இல்லையே..!! ஒருவேளை அவ தான் என்ன பத்தி யோசிக்கிறாளா? 

அப்படி என்ன பத்தி யோசிக்கிறவளா இருந்தா எதுக்கு என்னை விட்டுட்டு இந்தியா கிளம்பி போனா? அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது.” என்று நினைத்தான். அப்போது மீண்டும் அவனுக்கு விக்கல் வர தொடங்கியது. 

இன்று அந்த விக்கல் இவனை ஒரு வழி செய்யாமல் ஓயக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதைப் போல மீண்டும் மீண்டும் அவனையே சுற்றி வர, சலிப்புடன் பெருமூச்சு விட்ட அர்ஜுன் அவனது ஆபீஸ் டேபிளின் ஓரமாக இருந்த அவன் மற்றும் சியாவின் ஃபோட்டோ ஃபிரேம் ஒன்றை கையில் எடுத்து பார்த்தான். 

அந்த ஃபோட்டோவில் அவனுடன் இருந்தது என்னமோ சியா தான். ஆனால் அவனுக்கு அந்த முகத்தை பார்க்க பார்க்க தேன்மொழியின் ஞாபகம் அதிகமாக வந்தது. உடனே தனது மொபைல் ஃபோனில் இருந்த தங்களுடைய திருமணத்தின்போது எடுத்த ஃபோட்டோக்களை எடுத்து பார்த்த அர்ஜுன் “அவளுக்கு கால் பண்ணி ஏண்டி உனக்கு அவ்வளவு திமிரா? எதுக்கு டி இந்தியா கிளம்பி போனன்னு கேட்டு திடிரலாமா?” என்று சில நொடிகள் யோசித்தான். 

பின் அவனது ஈகோ அதற்கு கூட இடம் கொடுக்காததால் “எதுவா இருந்தாலும் அவளே முதல்ல நம்ம கிட்ட பேசட்டும். இப்ப போய் நம்ம பேசினா வேணும்னே சண்டை போட்டு அவ கூட அப்படியே பேசி மறுபடியும் செட்டாக நானே ட்ரை பண்ற மாதிரி இருக்கும்.” என்று நினைத்து அவளுக்கு கால் செய்யும் எண்ணத்தை விட்டு விட்டான். 

அங்கே காரில் சென்று கொண்டிருந்த தேன்மொழிக்கு திடீரென்று விக்கியது. உடனே அவள் தலையில் 4 தட்டு தட்டி காரில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவள் கையில் கொடுத்து விஜயா அவளை தண்ணீர் குடிக்க வைத்தவுடன் வந்தவிக்கல் அப்படியே கார் ஜன்னல் வழியாக வெளியில் சென்று விட்டது. 

– மீண்டும் வருவாள் 💕 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏) 

You may also like

Leave a Comment

About Me

Featured