Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 61

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 61

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 61 

தனது மாமியார் வீட்டில் வாங்கிக் கொடுத்த சாட்டிலைட் ஃபோன் மூலம் உதையாவிடம் பேசலாம் என்று நினைத்த தேன்மொழி அவனுக்கு கால் செய்தாள். 

தான் வேலை பார்க்கும் ஆபீஸில் ஒரு முக்கியமான மீட்டிங்கில் அவனது டீமில் உள்ளவர்களுடன் அமர்ந்திருந்த உதையா தன் ஃபோனை சைலண்டில் போட்டு இருந்ததால் அவனுக்கு தேன்மொழி கால் செய்தது தெரியவில்லை. 

“இவன் ஆபீஸ்ல இருப்பான் போல.. அதான் நம்ம கால் பண்ணா எடுக்க மாட்டேங்கறான்.” என்று நினைத்த தேன்மொழி தனது மொபைல் போனை பார்த்தபடி அமர்ந்திருக்க, அவளது புது ஃபோனை ஆசையுடன் கையில் வாங்கிப் பார்த்த ஆதவன், “அக்கா இது தான் சாட்டிலைட் ஃபோனா? பாக்கவே சூப்பரா இருக்கே! இத வச்சு நம்ம வேல்டுல இருக்கிற யாரை வேணாலும் காண்டாக்ட் பண்ணலாம் தானே! உன் கிட்ட இதே மாதிரி இன்னொரு போன் கூட கொடுத்தாங்களே..  

உனக்கு எதுக்கு ரெண்டு ஃபோன்? எனக்கு ஒன்னு குடுக்கலாம் இல்ல? இல்லைனா மாமா கிட்ட கேட்டு எனக்கு ஒரு ஃபோன் வாங்கி தாவேன்.. நானே அவரைப் பார்த்தா அவர் கிட்ட நேர்ல கேட்கலாம்ன்னு நினைத்தேன். பட் அவர் தான் நம்ம கிளம்புற வரைக்கும் வீட்டுக்கே வரல.” என்று சோகமாக சொன்னான்.

அவன் அர்ஜுனின் பெயரை சொன்னவுடன் இருந்த கடுப்பில் அவன் கையில் இருந்த தன் மொபைல் ஃபோனை போனை பிடுங்கி தேன்மொழி, “இது தூரத்தில் இருக்கிறவங்கள காண்டாக்ட் பண்றதுக்காகவே இருக்கிற ஃபோன். நம்ம போற பக்கம் எல்லாம் இதவே எடுத்துட்டு போக முடியாதுல்ல! அதனால தான் எனக்கு தனியா ஒரு நார்மல் ஸ்மார்ட் ஃபோன் வாங்கி கொடுத்திருக்காங்க. அதுவும் நம்ம பிராண்ட் தானாம். 

அதுக்காக உனக்கு உடனே ஃபோன் எல்லாம் வாங்கி தர முடியாது. நீங்க உங்க மாமா கிட்ட ஒன்னு கேட்க தேவை இல்லை. காலேஜ் படிக்கிற பையனுக்கு இவ்ளோ சீக்கிரம் ஃபோன் பண்ணு அவசியம் இல்லை.” என்றாள்‌. 

உடனே தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்ட ஆதவன் “நான் என்ன சித்தார்த் மாதிரி ஸ்கூல் படிக்கிற பையனா? அவன் கிட்டயே iPhone, tablet, PC, Play Station-ன்னு எல்லாமே தனித்தனியா இருக்கு. என் காலேஜ் ஃபிரண்ட்ஸ் எல்லார் கிட்டயும் மொபைல் போன் இருக்கு.‌ 

நீதான் என்ன கஷ்டப்பட்டு காலேஜ் பீஸ் கட்டி படிக்க வச்ச..‌ அதான் உன் கிட்ட எக்ஸ்ட்ரா போன் எல்லாம் வாங்கி தர சொல்லி செலவு வைக்க கூடாது நான் கேட்கல. இப்ப தான் எனக்கு மாமா வந்துட்டாரே!  முதல்ல அவர் கிட்ட பேசவே எனக்கு பயமா இருந்துச்சு. பட் அவரு என் கிட்ட ஃப்ரெண்ட் மாதிரி நல்லா தான் பேசினாரு.‌ எனக்கு என்ன வேணும்னாலும் அவர் கிட்ட கேட்க சொன்னாரு. 

அவர் அப்படி சொன்னாலும் நான் போய் டைரக்டா அவர் கிட்ட கேட்டா நல்லா இருக்காது இல்ல..‌ அதான் உன் கிட்ட கேக்குறேன்.‌ அவங்க தான் ‌ownஆ cell phone brandஏ வச்சிருக்காங்களே! எனக்கு ஒரு ஃபோன் கேட்டு வாங்கி தர மாட்டியா நீ? உனக்கு மட்டும் நீ கேட்டு வாங்கி கிட்ட! 

நான் ரொம்ப நாளா வெளிய போகும்போது மட்டும் அம்மாவோட பழைய ஃபோன் தானே எடுத்துட்டு போனேன்..‌ இப்ப அதுவும் காணாம போச்சு. ஃபோன் இல்லாம நான் என்ன பண்றது?” என்று கேட்டு உரிமையுடன் கோபித்துக் கொள்ள, 

அவனை முறைத்து பார்த்த தேன்மொழி “நான் ஆருத்ராவை கூட்டிக்கிட்டு இந்தியா போகும்போது என் கிட்ட ஃபோன் இல்லாம நான் எப்படி ரஷ்யாவில் இருக்கிற அவங்கள காண்டாக்ட் பண்ணுவேன்? அதனால தான் எங்க அத்தை கிட்ட போன் வாங்கி தர சொல்லி கேட்டேன். அதுக்குன்னு உனக்கும் அரேஞ்ச் பண்ணி குடுக்க சொல்லி கேட்டா நல்லா இருக்குமா? இதெல்லாம் நான் போய் கேட்டுட்டு நிக்க முடியாது ஆதி. என் பேங்க் அக்கவுண்ட்ல காசு இருக்கு. 

நம்ம ஊருக்கு போன உடனே உனக்கு நான் புது ஃபோன் வாங்கி தரேன் போதுமா? பட் எனக்கு தெரியாம நீ உங்க மாமா கிட்ட எதுவுமே கேட்கக்கூடாது. புரிஞ்சுதா?” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்க, இதற்கு மேல் இவளிடம் பேசி வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்த ஆதவன் தன் வாயை மூடிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றான். 

மறுபடியும் அவன் எப்போது ரஷ்யா செல்வான் என்று அவனுக்கு தெரியவில்லை. அதனால் இந்த பிரம்மாண்டமான ஆடம்பர ஜெட்டை அவர்களது டிராவல் டைம் முடிவதற்குள் சுற்றி பார்த்து அங்கிருக்கும் அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தான். 

அவன் அனைத்தையும் வியப்புடன் பார்ப்பதை கவனித்த ஆருத்ரா தானும் அவனுடன் செல்வதாக சொல்லி சென்று விட்டாள். பின் தேன் மொழியிடம் அவன் மொபைல் ஃபோன் போன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது அவளுக்கு ஞாபகம் வர, “மாமா இந்தாங்க.. இது என்னோட ஃபோண் தான். பாட்டி நான் ஊருக்கு கிளம்பும்போது குடுத்தாங்க.‌ உங்களுக்கு வேணும்னா நம்ம இந்தியா போற வரைக்கும் நீங்க இதை யூஸ் பண்ணுனீங்களேன்!” என்று சொல்லி தனது நியூ மாடல் ஸ்மார்ட் ஃபோனை அவனிடம் நீட்டினாள்.

“ஏற்கனவே தேனு‌க் கிட்ட போன் கேட்டு அசிங்கப்பட்டது இல்லாம.. இந்த குட்டி பாப்பா கிட்ட எல்லாம் ஃபோன் வாங்கி யூஸ் பண்ணி அசிங்கப்படணுமா?” என்று முதலில் யோசித்த ஆதவன் பின் “இந்த இடத்துல போட்டோஸ் எடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும்! எப்படியும் இத்தனை நாளா நான் எங்க போனேன்னு எல்லாரும் கேட்பாங்க. நான் தேனுக்கு இப்படி ஒரு Russian businessman கூட மேரேஜ் ஆயிடுச்சின்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. 

சோ அவங்க கிட்ட எல்லாம் சொல்லி சீன் போடுறதுக்காவது நான் இங்க இருந்து கொஞ்சம் போட்டோஸ் எடுத்துட்டு போகணும். ச்சே.. இந்த ஐடியா முன்னாடியே வந்து இருந்தா, தேனு மேரேஜ் நடக்கும்போதே நிறைய போட்டோ எடுத்திருக்கலாம்.. எப்படியும் அவங்க அரேஞ்ச் பண்ண போட்டோகிராபர் டீம்ல இருக்கிறவங்க போட்டோஸ் வீடியோஸ் எல்லாம் எடுத்து இருப்பாங்க. இவ கிட்ட சொல்லி அதையாவது மாமா கிட்ட கேட்டு வாங்க சொல்லணும்.” என்று நினைத்து ஆருத்ராவிடம் ஃபோனை வாங்கி முதலில் அவளுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டான்.

பின் அந்த கிட்டத்தட்ட 200 300 பேர் பயணிக்க கூடிய பெரிய ஜெட் விமானத்தின் ஒவ்வொரு பகுதியையும் சென்று சுற்றி பார்த்து அனைத்து இடங்களிலும் போட்டோ எடுத்துக் கொண்டான் ஆதவன். சித்தார்த் பெரும்பாலான நேரத்தில் தன்னுடன் சேர்ந்து விளையாட மாட்டான் என்பதால் தான் என்ன சொன்னாலும் கேட்டு தன்னுடன் சேர்ந்து விளையாடும் இந்த புதிய ஆதி மாமாவை ஆருத்ராவிற்கு மிகவும் பிடித்திருந்தது. 

தேன்மொழி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருப்பதை கவனித்த விஜயா “என்ன டி உன் புருஷன் கூட ஏதாவது பிரச்சனையா? அதான் அவரை விட்டுவிட்டு கோவத்துல எங்க கூட தனியா இந்தியா கிளம்புறியா?” என்று சரியாக கேட்க, தன் அம்மாவை ஆச்சரியமாக பார்த்து தேன்மொழி “இவங்களுக்கு எப்படி தெரியும்? கரெக்டா கேக்குறாங்க!” என்று யோசித்து விட்டு “அப்படி எல்லாம் இல்லையே! நான் எதுக்காக அவர் கூட சண்டை போட போறேன்? அப்படியே நான் சண்டை போட்டுட்டு கிளம்புறேன்னு சொன்னாலும் அவர் என்னை விடுவாரா? 

எனக்கு இந்தியா போகணும்னு ஆசையா இருந்துச்சு. நான் அங்க இருந்து வந்து ரொம்ப நாளாச்சுல்ல.. அதான் அவர் கிட்ட சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். அது ஒரு குத்தமா? அந்த வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் சேர்ந்து தானே என்னை அனுப்பி விட்டாங்க! அப்புறம் கூட உங்களுக்கு என்ன டவுட்?” என்று கேட்டாள். 

“அதுதான் டி எனக்கு டவுட்டே‌. உங்க மாமியார் உன் வீட்டுக்காரர் வீட்ல இருந்தா கொஞ்ச நேரம் கூட உன்னை அங்கேயும் இங்கேயும் வெளியே சுத்த விடாம போய் அர்ஜுன் கூட இருமான்னு அனுப்பிவிடுவாங்க. அவர் ஆஃபீஸ்க்கு கிளம்பி போகும்போதே அவர் கைகால்ல இருந்த காயம் எல்லாத்தையும் நான் பார்த்தேன்.

அவருக்கு உடம்பு சரி இல்லாத இந்த சமயத்துல அவர் வீட்டு பக்கமே வராம இருக்காரு. அவர் வீட்டு ஆளுங்களே நம்மளை பேக் பண்ணி இந்தியா அனுப்புறாங்க.. இது எல்லாம் சும்மா நடக்குதுன்னு நீ சொன்னா நம்பறதுக்கு நான் என்ன லூசா?” என்று விஜயா பாயிண்டாக பேச, “இந்த அம்மா கிட்ட மட்டும் என்ன சொல்லியும் சமாளிக்கவே முடியாது.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட தேன்மொழி “நான் என்ன சொன்னாலும் நீங்க நினைக்கிறது தான் கரெக்ட்ன்னு நினைக்க போறீங்க! அப்புறம் என்ன நடந்துச்சுன்னு என் கிட்ட எதுக்கு கேக்குறீங்க? உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியே வச்சுக்கோங்க.” என்று சலிப்புடன் சொன்னாள். 

“சும்மா இப்படி எல்லாம் பேசி மழுப்பாத. எது எப்படி இருந்தாலும் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. உன் வாழ்க்கை அவர் கூட தான்னு ஆனதுக்கு அப்புறம், நீ அவர விட்டு பிரிஞ்சு இருக்கிறதெல்லாம் எனக்கு சரியா படல. இருந்தாலும், மாப்பிள்ளை எப்படிப்பட்டவர்.. உனக்காக யோசிக்கிறாரா? 

நம்ம இந்தியா போனா உனக்காக நம்மளை தேடி இந்தியா பக்கம் வருவாரான்னு பாக்கலாம்னு தான் நானும் சரின்னு எதுவும் பேசாம உன் கூட கிளம்பி இந்தியா போயிட்டு இருக்கேன். அவங்க குடும்பமே இந்தியா பக்கம் எல்லாம் போய் 20 வருஷத்துக்கு மேல ஆகுதாம். அப்படி இருக்கும்போது, உனக்காக அவர் வந்தா பெரிய விஷயம் தானே! அப்படி அவர் வந்தா நல்லா இருக்கும். 

என் புள்ள மேல மருமகனுக்கு பாசம் இருக்குன்னு நினைச்சு சந்தோஷப்படுவேன். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!” என்று விஜயா சொல்ல, “அவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே பிடிக்காத மாதிரி பேசிட்டு எப்படிம்மா அதுக்குள்ள அப்படியே இப்படி உல்டாவா பேசுறீங்க!” என்று ஆச்சரியமாக கேட்டாள் தேன்மொழி. 

“அதான் உனக்கு கல்யாணம் ஆகி நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியாவே வாழ ஆரம்பிச்சிட்டீங்களே.. இதுக்கு அப்புறம் உங்களுக்கு கல்யாணம் ஆன கதையை எல்லாம் பேசி என்ன ஆகப்போகுது? இப்ப எனக்கு இருக்கிற ஒரே கவலை, நீ உன் புருஷன் கூட சேர்ந்து நல்லா வாழணும்ன்றது மட்டும் தான். இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு பேரணையோ பேத்தியையோ பெற்று என் கையில குடுத்துட்டேனா, அங்க இருந்தாலும் சரி நம்ம வீட்ல இருந்தாலும் சரி நான் நிம்மதியா இருப்பேன்.” என்றாள் விஜயா.‌

சில மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்களது ஜெட் விமானம் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஆள் அரவமற்ற பகுதியில்  தரை இறங்கியது. ஏற்கனவே பிரிட்டோ அவர்களை அங்கிருந்து அழைத்து செல்வதற்காக ஆட்களை எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தான். அதனால் அவர்கள் விமானத்தை விட்டு கீழே இறங்கியவுடன், அவர்களுக்காக தயாராக கார்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. 

– மீண்டும் வருவான் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured