அத்தியாயம் 59
ஜானகியும், பிரதாப்பும் அவர்களது அறையில் இருந்தார்கள். அர்ஜுனிடம் சண்டை போட்டுவிட்டு நேராக அங்கே சென்ற தேன்மொழி “எனக்கு உங்க ஹெல்ப் வேணும். எனக்காக பண்ணுவீங்களா?” என்று கேட்க, அவர்கள் இருவரும் இவளை குழப்பமாக பார்த்தார்கள்.
அவளிடம் என்ன பிரச்சனை என்று தெளிவாக கேட்க வேண்டும் என்று நினைத்த ஜானகி அவள் அருகில் சென்று “என்னாச்சு அம்மா? உனக்கும் அர்ஜுனுக்கும் நடுவுல எதாவது பிராப்ளமா? என்ன வேணும்னு கேட்டாலும் அர்ஜுன் உனக்காக செய்வானே! நீ எங்க கிட்ட வந்து ஹெல்ப் கேட்கிறதுல தப்பில்ல. நீ கேட்டா நாங்க கண்டிப்பா செய்வோம். பட் அர்ஜுன் இப்பதான் திரும்பி வந்து இருக்கான். இந்த டைம்ல நீ வந்து இப்படி கேட்கிறதா எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு. நீ எதுவா இருந்தாலும் மனசு விட்டு எங்க கிட்ட பேசலாம் மா. என்னனு அத்தை கிட்ட சொல்லு.” என்று அன்புடன் கேட்க,
ஜானகியை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுத தேன்மொழி நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட்டு, “இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது அத்தை. மனசு ரொம்ப பாரமா இருக்கு. அவரை நினைச்சு நினைச்சு எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. அவருக்காகவே வாழனும்னு நினைக்கிற என்ன பத்தி அவர் கொஞ்சமாவது யோசிக்கணும் இல்ல? அது தானே நியாயம்! பட் அவர் அதை எல்லாம் நினைச்சு பார்க்க மாட்டேங்கிறாரு.
நான் தான் பைத்தியக்காரி மாதிரி அவர் கிட்ட ஒன்னொன்னுக்கும் அழுது கெஞ்சி பேசிக்கிட்டு இருக்க வேண்டியதாயிருக்கு. நான் இந்தியா போகணும்னு நினைக்கிறேன் அத்தை. அதுக்கு நீங்களும் மாமாவும் தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். நான் கோவத்துல இனி இங்க இருக்க மாட்டேன்னு சொல்லி கூட, அவர் எனக்காக மனசு இறங்கல.
ஒருவேளை இவ ஏதோ பூச்சாண்டி கட்டறதுக்கு சும்மா சொல்லிட்டு இருக்கா.. இவள தான் கல்யாணம் பண்ணி இந்த வீட்ல நம்ம அடிமை மாதிரி வச்சிருக்கோமே.. ball மாதிரி நம்ப எத்தன தட தூக்கி போட்டாலும் இவ நம்ம கிட்ட தான் வருவான்னு மெதப்புல இருக்காருன்னு நினைக்கிறேன். நான் இந்த தடவை இந்த பிரச்சனையை எப்படியோ விடாம கோச்சிக்கிட்டு இந்தியா போனா அவர் எனக்காக அப்பையாவது இதெல்லாம் வேண்டாம் விடுறாரான்னு நான் பாக்கணும். இந்த லைஃப்ல அவருக்கு எது இம்பார்டன்ட்னு எனக்கு தெரியணும்.” என்று உடைந்த குரலில் சொன்னாள்.
அவள் அப்படி சொல்லும்போது அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஜானகி திரு திருவென்று முழிக்க, “நீ உன் டெசிசன்ல ஸ்ட்ராங்கா இருக்கியாமா?” என்று அவளிடம் கேட்டார் பிரதாப். உடனே அவரை திரும்பி பார்த்த தேன்மொழி “எஸ் அங்கிள், என்னால எப்படியோ போகட்டும்னு அவரை விட முடியாது. எனக்கு இருக்கிறது ஒரு லைஃப் தான். அதை நான் அவர் கூட நிம்மதியா வாழனும்னு நினைக்கிறதுல ஒன்னும் தப்பில்லையே! உங்களுக்கும் as a parents, அவருக்கு ஏதாவது ஆகிவிட்டா என்ன பண்றதுன்னு பயம் இருக்கும் தானே! அவரை கை கால்ல கட்டோட அப்படி பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்துச்சுன்னு என்னால எக்ஸ்பிளைன் பண்ணி சொல்லக் கூட முடியல.” என்று உடைந்த குரலில் சொன்னாள் அவள்.
“நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது மா. நாங்களும் இந்த விஷயத்துல அர்ஜுன் கிட்ட பல வருஷமா போராடிட்டு தான் இருக்கோம். ஆனா அவன் நாங்க சொல்றத கேட்க மாட்டேங்கிறானே.. என்ன பண்றது சொல்லு? நீ இப்ப தானே வந்திருக்க.. அவன் உன் பேச்சைக் கேட்குறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்.
இனிமே இப்படி நடக்காம நம்ம பாத்துக்கலாம். நாங்களும் அவனை கூப்பிட்டு பேசி பார்க்கிறோம். இந்த ஒரு தடவை எங்களுக்காக அவனை மன்னிச்சிரு மா. எங்க எல்லாரையும் விட அவனுக்கு உன் மேல பாசம் அதிகம். அவனால உன் கிட்ட பேசாம இருக்க முடியாது. அவன் எத்தனை நாள் இப்படியே இருந்திடப் போகிறான்? நீ கொஞ்சம் வெயிட் பண்ணி பாரு. அவசரப்பட்டு என்ன முடிவும் எடுக்காத. நீ திடீர்னு கிளம்பி இந்தியா போனா, சித்தார்த்தும் ஆருத்ராவும் நீ இல்லாம எப்படி இருப்பாங்க சொல்லு?” என்று ஜானகி அவளிடம் கேட்க,
“இல்ல அத்தை நான் சொல்றது உங்களுக்கு புரியல.. இப்படி ஒவ்வொரு தடவையும் அவர் இஷ்டத்துக்கு அவர் ஏதாவது செய்யும்போது, மத்தவங்க அவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறதுனால தான் அவர் இப்படியே இருக்காரு. என்னால ஒரு பயத்தோடயே வாழ்ந்துட்டு இருக்க முடியாது. சித்தார்த்தும், ஆருத்ராவும் நான் இல்லாம இருக்க முடியாதுன்னு ஃபீல் பண்ணாங்கன்னா அவங்களும் கூட கிளம்பி இந்தியா வரட்டும்.
இங்க அவங்க என்ன கத்துக்குறாங்க சொல்லுங்க? போன் டியூஷன் இருந்தாலே வெளிய போறதுக்கு பாதி சான்ஸ் குறைந்துவிடும். இதுல இவங்க ஹோம் ஸ்கூலிங் பண்றாங்க. பேபி அவங்க நிறைய விஷயங்கள் கத்துக்கலாம். பட் அவங்களோட சோசியல் ஸ்கில்ஸ் எப்படி டெவலப் ஆகும்? பொத்தி பொத்தி அவங்கள இங்க வச்சு வளக்குறதுக்கு இந்தியா போனா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவங்கள நல்ல ஸ்கூலா பார்த்து சேர்த்து படிக்க வைக்கலாம். குழந்தைங்க விஷயத்துல கூட அவர் என்னமோ முடிவு பண்ணட்டும். பட் அவர் என்ன அப்படி பேசுனதுக்கு அப்புறமா என்னால கண்டிப்பா இங்க இருக்க முடியாது. நான் வேணும்னு நினைச்சா, நான் சொல்றத கேக்குறதுக்கு ரெடியா இருந்தா, அவர கிளம்பி இந்தியாவுக்கு வந்து என்னை கூட்டிட்டு போக சொல்லுங்க.” என்று உறுதியாக சொல்லி விட்டாள் தேன்மொழி.
என்ன தான் அவள் பிடிவாதமாக பேசினாலும் எப்படியாவது அவள் மனதை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜானகி அவளிடம் ஏதோ பேச வர, “நீ சொல்றது தான் கரெக்ட் தேன்மொழி. எதையுமே அர்ஜுன் டிசைட் பண்றத தெரிஞ்சோ தெரியாமலோ நாங்க எல்லாரும் அக்சப்ட் பண்ணிக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி இருக்க பழகிக்குவோம். மத்த விஷயங்கள்ல அவன் சொல்றது கரெக்டா தான் இருக்கும். சோ அது பிரச்சனை இல்ல. பட் இந்த விஷயத்துல நீ சொல்றது தான் கரெக்ட். இது வீடு.. ஹோட்டல் இல்ல.
அவன் இஷ்டத்துக்கு அவன் எங்கயோ போயிட்டு என்ன என்னமோ பண்ணிட்டு வந்து இங்க தங்க முடியாது. நீயும் உன் ஃபேமிலில இருக்குறவங்களும் இந்தியா போறதுக்கு நான் அரேஞ்ச் பண்றேன். அர்ஜுன் என்ன எதுவும் சொல்ல முடியாது. அவனை நான் பார்த்துக்கிறேன்.” என்றார் பிரதாப்.
உடனே டென்ஷனான ஜானகி “என்னங்க சொல்றீங்க? அவ தான் சின்ன பொண்ணு ஏதோ புரியாம பேசுறா.
அதுக்குன்னு நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க? இந்த விஷயம் தெரிஞ்சா அர்ஜுன் நம்ம எல்லார் மேலேயும் கோபப்படுவான். இப்ப தான் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள இவ்வளவு பெரிய முடிவு எடுக்குறது எல்லாம் சரி இல்லைன்னு எனக்கு தோணுது.” என்று சொல்ல,
“ஏன் அவனுக்கு மட்டும் தான் இந்த world-ல கோவப்படுறதுக்கு ரைட்ஸ் இருக்கா? நான் அவன் அப்பன். கோவப்பட்டு அப்படி அவன் என்ன பண்ணி கிழிக்கிறான்னு நான் பார்க்கிறேன்.” என்று உறுதியாக சொல்லி விட்டார் பிரதாப். உடனே அவரை நன்றியுடன் பார்த்த தேன்மொழி “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். இந்த சுச்சுவேஷன்ல உங்களால மட்டும் தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும். எது எப்படியோ கடைசில அவர் என் பேச்சைக் கேட்டு மாறுனா எல்லாருக்கும் சந்தோஷம் தான். நான் போய் என் திங்ஸ் பேக் பண்றேன். இந்த விஷயத்தை பத்தி எங்க அம்மா கிட்டயும், தம்பி கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். நான் திடீர்னு இந்தியால இருந்து வந்ததுனால மறுபடியும் அங்க போனும்னு ஆசைப்படறதா மட்டும் சொல்ல போறேன்.” என்றாள்.
அதற்கு சரி என்ற பிரதாப் தேன்மொழி அவளது குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு செல்வதற்கான வேலைகளை தனது அசிஸ்டன்ட்டிற்க்கு கால் செய்து பார்க்கச் சொன்னார். Study room-ற்க்கு சென்றிருந்த அர்ஜுன் இன்னும் தங்களது ரூமிற்கு திரும்பி இருக்காததை கவனித்தபடி தங்களது அறைக்கு சென்ற தேன்மொழி “உங்களுக்கு இந்த விஷயத்துல அவ்ளோ பிடிவாதம் இருந்தா, உங்க வைஃப் என்னோட பிடிவாதம் எப்படி இருக்கும்னு நீங்க பாத்து தெரிஞ்சுக்கோங்க அர்ஜூன். உங்களுக்கு நான் முக்கியமா இருந்தா நீங்க என்ன சூஸ் பண்ணி தான் ஆகணும்.” என்று நினைத்து அழுது கொண்டே தனது பொருட்களை பெரிய பெரிய ட்ராலியில் பேக் செய்தாள்.
பின் தனது குடும்பத்தினரிடம் சென்று அவர்கள் விரைவில் இந்தியா கிளம்ப வைப்பதாகச் சொன்னாள். திடீரென்று இங்கே வரவழைக்கப்பட்டதால் அவர்களுக்குமே இந்தியா சென்றால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது. இருப்பினும் ஆதவன் மட்டும் குழப்பமாக தேன்மொழியை பார்த்து “மாமாவும் நம்ம கூட வராரா?” என்று கேட்க, “ஏன் உங்க மாமா இல்லைனா உன்னால இருக்க முடியாதா?” என்று எரிச்சலுடன் கேட்டாள் அவள்.
“அப்படி இல்ல.. நான் பார்த்த வரைக்கும் மாமா என்னமோ காலேஜ் பையன் மாதிரி உன் பின்னாடியே சுத்திட்டு இருப்பாரு. நீ இல்லாம எப்படி அவர் இருப்பாரு? அதான் கேட்டேன். அப்புறம் இப்போ கல்யாணம் ஆகி நீ first time ஊருக்கு போக போற.
இன்னும் நீ காணாமல் போன கேசே போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கு. திருமா போனா உனக்கு கல்யாணமான விஷயத்தை எல்லாம் சொல்ல வேண்டியது இருக்கும். அத பத்தி எல்லாரும் கொஸ்டின் பண்ணுவாங்களே! அட்லீஸ்ட் மாமா கூட வந்தாலாவது அதுக்கெல்லாம் பதில் சொல்ல ஈசியா இருக்கும்!” என்று ஆதவன் சொல்ல,
“அது எல்லாம் எந்த பிராப்ளம் வந்தாலும் நான் பாத்துக்குறேன். இந்த வீட்ல இத்தனை மாசமா இருந்த எக்ஸ்பீரியன்சை வச்சு இனிமே எங்க போனாலும் என்னால என்ன வேணாலும் பண்ண முடியும். அந்த அளவுக்கு நான் தைரியசாலி ஆகிட்டேன். நீங்க உங்க திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு கிளம்ப ரெடியா இருங்க. அத சொல்றதுக்கு தான் வந்தேன்.” என்ற தேன்மொழி அவர்களது ரூமை விட்டு வெளியேறி மீண்டும் தனது ரூமிற்கு சென்றாள்.
கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரம் ஆகியும் இன்னும் அர்ஜுன் ரூமிற்கு வந்திருக்கவில்லை. அது அவளது கோபத்தை அதிகரிக்க, “நான் இங்கே இருந்து போக போறேன்னு சொல்லிட்டேன். நான் கோபமா இருக்கேன்னு நல்லா தெரியும். பட் எல்லாமே தெரிஞ்சிருந்தும் இந்த ஆளு எப்படி தான் கல்லு மாதிரி இருக்கானு தெரியல! விடு தேன்மொழி, இவனுக்கு உன் அருமை தெரியலன்னா என்ன பண்றது? என்னவோ அவன் உன்னையே நினைச்சுட்டு இருந்ததா சொன்னான்ல.. அது உண்மையா இருந்தா அவனே உன்ன தேடி வரட்டும். அவனுக்கு அவ்வளவு திமிர் இருக்கும் போது நீயும் உன் கெத்த விட்டு கொடுக்க கூடாது.” என்று நினைத்த தேன்மொழி அந்த வீட்டில் உள்ள மற்றவர்களிடத்திலும் அவள் இந்தியா செல்லும் தகவலை தெரிவித்தாள்.
மீண்டும் இந்தியா செல்வாளா தேன்மொழி? தன் மனதை மாற்றிக் கொள்வானா அர்ஜுன்?
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)