Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 50

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 50

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 50 

திருமணம் முடிந்த பிறகு அர்ஜுனும், தேன்மொழியும் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். 

அங்கே வீல் சாரில் அமர்ந்திருந்த தாத்தா கூட  பாட்டியுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்க, 

அர்ஜுனின் தோள்களில் கை போட்ட பிரதாப் “இந்த பொண்ணுக்கும், உனக்கும் முன்னாடி மேரேஜ் ஆகும்போது இவ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தா. 

இப்ப சந்தோஷமா அவ உன் கையால தாலி கட்டிக்கிறான்னா அந்த அளவுக்கு இப்ப அவ உன்ன நம்ப ஆரம்பிச்சிட்டா.. 

உன்ன மனசார ஏத்துக்கிட்டானு அர்த்தம். இனிமே நீ அவளை கஷ்டப்படாம சந்தோஷமா பாத்துக்கணும்.  

அவ ஃபேமிலில இருக்கிறவங்க இப்பதான் இங்க வந்திருக்காங்க. 

அவங்க மனசுலயும் நீ தேன்மொழிக்கு நல்ல ஹஸ்பண்டா இருப்பன்னு நெனப்பு வர்ற மாதிரி நடந்துக்கோ. 

நம்ம எத்தனையோ விஷயத்துல successfulஆ இருந்தாலும், மேரேஜ் லைஃப்ல ப்ராப்ளம் வந்தா, 

எல்லாமே முடிஞ்சிடும் அர்ஜுன். நீ ஆல்ரெடி நிறைய விஷயத்தை கடந்து வந்திருக்க. 

உன் வயசுக்கு உனக்கு ஒரு மெச்சூரிட்டி இருக்கும். அது அந்த பொண்ணு கிட்ட இருக்கணும்னு எதிர்பார்க்க கூடாது. 

உனக்கே எல்லாமே தெரியும். இருந்தாலும் சொல்ற கடமைக்கு சொல்கிறேன். பார்த்திருந்துக்கோ! 

Happy married life my dear son!” என்று சொல்லிவிட்டு அவர்களது திருமணத்திற்கு அவரின் சார்பாக ஒரு ஆயில் நிறுவனத்தை அர்ஜுன் தேன்மொழியின் பெயரில் எழுதி வைத்து பரிசாக கொடுத்தார். 

அதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த ஆதவன் தன் அம்மாவிடம் “அங்க பாருமா அவர்தான் தேன்மொழியோட மாமனாருன்னு நினைக்கிறேன். 

இவங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு கிஃப்ட்டா சவுத் ஆப்பிரிக்காவுல இருக்கிற அவங்க குடும்பத்துக்கு சொந்தமான ஆயில் கம்பெனிய எழுதி வச்சிருக்காரு.” என்று சொல்ல, 

வில்சாரில் அமர்ந்திருந்த விஜயா நம்ப முடியாமல் விழிகள் விரிய‌ அவனைப் பார்த்துவிட்டு “அப்ப நெஜமாவே இவங்க அந்த அளவுக்கு பெரிய பணக்காரங்களாடா?

நான் கூட முதல்ல இந்த கோயில் சும்மா தங்க கலர்ல இருக்கு ஆனா பித்தளையில தான் கட்டியிருப்பாங்கன்னு நினைச்சேன். 

ஆனா இதெல்லாம் நிஜமாவே தங்கமா இருக்குமோ? வீட்டுக்குள்ளேயே இவ்ளோ பெரிய தங்க கோயில் கட்டிருக்காங்கன்னா.. 

இவங்க எவ்வளவு பெரிய பணக்கார குடும்பமா இருக்கணும்? 

இந்த குடும்பத்துல இருக்கிறவங்க நம்ம பொண்ண ஏண்டா அவங்க பையனுக்கு கட்டி வச்சிருக்காங்க?

அதான் எனக்கு ஒன்னும் புரியல. அந்த பையன் பாக்குறதுக்கு நல்லா அழகா தான் இருக்கான். 

ஆனா இவன் உடம்பில வேற ஏதாவது பிரச்சனை இருக்குமோ? 

அதான் என் பொண்ணை இளிச்சவாயின்னு நினைச்சு இவனுக்கு கட்டி வச்சிருக்காங்களா? 

எனக்கு இதை எல்லாம் பார்க்கவே பயமா இருக்குடா.” என்று பதட்டத்துடன் சொன்னாள்‌. 

அப்போது ஜானகி தன் பங்கிற்கு “நானும் இன்னும் உங்களுக்கு மேரேஜ் கிஃப்ட் குடுக்கல. வெயிட் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு கிளாராவை பார்த்து, 

“நம்ம என் மருமகளுக்கு ரெடி பண்ண கிஃப்ட்டை போய் கொண்டு வா மா.” என்று சொல்லி அனுப்ப,

“ஓகே மிஸ்ஸஸ் பிரசாத்” என்று சொல்லிவிட்டு சென்ற கிளாரா ஒரு பெரிய அழகிய மரப்பெட்டியை ட்ராலி ஒன்றில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தாள். 

அதை தேன்மொழியிடம் திறந்து காட்டிய ஜானகி ‌“இதுல இருக்கிற பாதி நம்ம குடும்பத்தோட பரம்பரை நகை. 

உன்ன மாதிரி நான் இங்க கல்யாணமாகி வரும்போது என் அத்தை எனக்கு குடுத்தாங்க.

அது‌ கூட என் மருமகளுக்காக வாங்கின சில jewelsஓட சேர்த்து எல்லாமே இருக்கு. 

இது எல்லாத்தையும் நீ அப்புறமா பொறுமையா பாரு. உனக்கு ஏதாவது டிசைன் பிடிக்கலைன்னா சொல்லு மாத்திக்கலாம்.” என்றாள். 

அந்த பெட்டிக்குள் எட்டிப் பார்த்த தேன்மொழியின் கண்களை கூசும் அளவிற்கு தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவளம் என்று சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு ஏராளமான நகைகள் அதற்குள் இருந்தன. 

கண்டிப்பாக அதில் இருக்கும் ஒரு குட்டி ஆபரணத்தை எடுத்து வெளியில் விட்றாளே பல கோடிகளுக்கு செல்லும். 

இதில் இவர்கள் அதை சாதாரணமாக உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்வதை நினைத்து ஆச்சரியப்பட்ட தேன்மொழி,

இதுவரை மேடம் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்த ஜானகியை அன்புடன் பார்த்து, 

“நான் மோஸ்ட்லி வீட்டிலேயே தான் இருக்கேன். எனக்கு எதுக்கு அத்தை இவ்வளவு நகை? 

அண்ட் எனக்கு பெருசா இதுல எல்லாம் இன்டெரெஸ்ட் இல்ல. இத நீங்க அப்படியே வச்சுருந்து ஆருத்ராவுக்கு குடுத்துடுங்க.

நான் இப்ப போட்டிருக்கிற jewelsஏ எனக்கு நீங்க குடுத்தது தான்.

இதுவே எனக்கு அதிகம் தான். மேரேஜ் முடிஞ்ச உடனே நான் உங்ககிட்ட திருப்பிக் குடுத்திடலாம்னு நெனச்சேன்.

நீங்க என்னனா மறுபடியும் இவ்ளோ பெரிய பாக்ஸ் ஃபுல்லா ஜுவல்ஸ் கொண்டு வந்து குடுக்குறீங்க.”  என்று சொல்ல, 

“நீ இப்ப போட்டிருக்கிற ஜுவல்ஸ் எல்லாம் உன்கிட்ட கொண்டு வந்து குடுத்தது மட்டும் தான்மா நானு. 

இதெல்லாம் உனக்காக பார்த்து பார்த்து‌ ஆர்டர் பண்ணி வாங்குனது உன் புருஷன்தான். 

இந்த பாக்ஸ்ல இருக்கிறது நான் உனக்காக குடுக்கிறது. அது வேற இது வேற. 

என் பேத்திக்காக நாங்க தனியா நிறைய ஜுவல்லரிஸ் வாங்கி வச்சிருக்கோம். 

இது ஸ்பெஷலா உனக்காக பண்ணது. 

சோ உன் அத்தை ஆசையா குடுக்கும்போது அதை நீ வேணான்னு சொல்லக்கூடாது.” என்று உறுதியாக சொல்லிவிட்டாள் ஜானகி. 

உடனே தேன்மொழி கேள்வியாக அர்ஜுனை பார்க்க, “இப்ப எதுக்கு என்ன பாக்குற நீ? 

இப்ப நீங்க மிஸஸ் அர்ஜுன் மேடம். சோ உங்களுக்கு உங்க மாமியார் குடுத்தா நீங்க வாங்கிக்கோங்க.

இதுக்கெல்லாம் என் பர்மிஷன் தேவை இல்லை!” என்று கிண்டலாக சொன்னான் அவன். 

சரி என்ற தேன்மொழி ஜானகியிடம் நன்றி சொல்லிவிட்டு அந்த நகைகள் இருந்த ட்ராலியை கிளாராவிடம் தள்ளி,

“இத கொண்டு போய் எங்க ரூம்ல வெச்சிருங்க சிஸ்டர்.” என்றாள். 

பிறகு சந்தோஷ் ஜனனி, ஆகாஷ் லிண்டா, தாத்தா பாட்டி என்று அடுத்தடுத்து அனைவரும் அவர்களுக்கு கிஃப்ட் கொடுத்தார்கள். 

நடக்கும் அனைத்தையும் விஜயாவும், ஆதவனும் ஏதோ தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது போல ஆர்வமான முகத்துடன் பார்த்தபடி ஒரு ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்திருந்தார்கள். 

ஈவினிங்‌ அவர்களது மேரேஜ் செலிப்ரேஷன் ஃபங்ஷன் இருந்ததால் அதை ஆர்கனைஸ் செய்வதில் ஆகாஷ் உடன் பிஸியாக இருந்த அர்ஜுன், 

தனக்கு வந்த அடுத்தடுத்த  அழைப்புகளை அட்டென்ட் செய்து பேசுவதில் பிசியாக இருந்தான். 

அதனால் தேன்மொழி தன் குடும்பத்தினர்கள் அமர்ந்திருந்த டேபிளில் சென்று ஒரு சாரை எடுத்து போட்டு அமர்ந்தாள். 

அவள் கையை பிடித்துக் கொண்ட ஆதவன் “இங்க நடக்கிறது எல்லாமே உண்மைதானா இல்ல சினிமா சூட்டிங் எதுவும் பண்றாங்களா? 

என்னால எதையுமே நம்ப முடியல தேனு. யார் இவங்க எல்லாரும்? 

இது என்ன இடம்.. ரொம்ப வித்தியாசமா இருக்கு? 

நெஜமாவே இங்க இருக்குறவங்க எல்லாரும் பணக்காரங்க தானா? 

அவரை நீ எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட?

இவங்கதான் உன்னை கடத்திட்டு வந்தாங்களா?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான். 

“ஆமா, இப்ப ஒரு பொண்ணு பிளாக் யூனிபார்ம்ல எங்க அத்தை குடுத்த ஜுவல்லரி பாக்ஸை எடுத்துட்டு போறாங்கல்ல அவங்க பேரு கிளாரா.‌ 

அவங்கதான் என்ன இந்தியாவுல இருந்து கடத்திட்டு வந்தாங்க. முன்னாடி எல்லாம் எனக்கு அவங்களை பார்த்தாலே பிடிக்காது. 

அவங்கள ரொம்ப கெட்டவங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன்‌. 

பட் இப்ப இங்க இருக்கிற எல்லாரும் எனக்கு செட் ஆயிட்டாங்க. 

அந்த பொண்ணும் எனக்கு ஃபிரண்டு மாதிரி தான்.” என்ற தேன்மொழி அவள் இங்கே வந்த நாளில் இருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் கதை போல அவர்களிடம் மறைக்காமல் சொன்னாள். 

“என்னடி சொல்ற இப்படி எல்லாம் நடக்குமா என்ன? 

இப்படி எல்லாம் படத்தில கூட நடந்து நான் பார்த்ததில்லையே.. 

அப்ப அவருக்கு இரண்டாந்தரமா உன்ன கட்டி வச்சிருக்காங்களா? 

இங்க இரண்டு சின்ன பசங்க அவர் கூட அப்பப்ப போய் பேசிட்டு இருந்தாங்களே.. அதுங்க தான் அவரோட புள்ளைங்கலா?” என்று ஆச்சரியம் கலந்த கோபத்துடன் விஜயா கேட்க, 

ஃபோன் பேசிக் கொண்டிருந்த அர்ஜுனை தொந்தரவு செய்தபடி விளையாடிக் கொண்டிருந்த சித்தார்த்தையும், ஆருத்ராவையும் திரும்பி பார்த்த தேன்மொழி,

“அவரோட குழந்தைங்க இல்லம்மா. எங்க குழந்தைங்க.” என்றாள் பெருமையாக‌.

அதனால் முகம் சுளித்த விஜயா “ஓஹோ.. அப்ப அந்த பிள்ளைங்க அதுக்குள்ள உன் புள்ளைங்க ஆயிடுச்சா?” என்று கேட்க, 

“ஆமா அவங்க என்னதானே மம்மினு கூப்பிடுறாங்க.. 

அப்ப அவங்க என் பிள்ளைங்க தான். அதுல உங்களுக்கு என்னமா டவுட்டு? 

இனிமே இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட பேசாதீங்க. நீங்க பேசறது யார் காதுலயாவது விழுந்தா கஷ்டப்படுவாங்க.” என்றாள் தேன்மொழி.

‌ தன் மகளை மேலும் கீழும் பார்த்த விஜயா “நீ ரொம்ப மாறிட்டடி தேனு. 

இந்த வீட்டுக்காரங்க உன்னை கடத்திக் கொண்டு வந்து மந்திரம் தந்திரம் மாதிரி ஏதோ பண்ணி உன்ன இந்த வீட்டு பொண்ணாவே மாத்திட்டாங்க. 

அதான் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க நீ. 

இதுவே அவங்க வீட்டு பொண்ணா இருந்தா, 

இப்படி கல்யாணமான 40 வயசு ஆளுக்கு அவங்க பொண்ண கட்டி குடுப்பாங்களா? 

என் பொண்ணை பார்த்தா மட்டும் இவங்களுக்கு எப்படி தெரியுதாம்?

எனக்கு மாப்பிள்ளை வயச பத்தி நினைச்சாலே எவ்ளோ மன வேதனையா இருக்கு தெரியுமா?” என்று கண்ணீருடன் கேட்க, 

“ஐயோ ப்ளீஸ்மா போதும், இனிமே யாரும் இத பத்தி பேச வேண்டாம். 

என் ஹஸ்பண்டுக்கு என்ன குறைச்சல்? அவரை மாதிரி ஒருத்தர எங்கயும் உங்களால பாக்கவே முடியாது. 

அவரோட வயச பத்தி நானே கவலை படல. உங்களுக்கு என்ன பிரச்சனை?

அவர் எவ்ளோ அழகா இருக்காருன்னு பாரு! அவர மாதிரி ஒருத்தர நீங்க எத்தனை வருஷம் எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க முடியாது.

என் அர்ஜுன் எல்லாவிதத்திலயும் பெஸ்ட் தான். 

அவர குறை சொல்ற மாதிரி என்கிட்ட எதுவும் யாரும் பேசாதீங்க ப்ளீஸ். 

உங்க கண்ணு முன்னாடி தானே எனக்கு அவர் கூட கல்யாணமாச்சு!

இப்ப அவர் என் வீட்டுக்காரர். அவர் கூட தான் நான் வாழப் போறேன். 

அவரும் சரி, இந்த வீட்ல இருக்குறவங்களும் சரி, என்னை மகாராணி மாதிரி வச்சிருக்காங்க. 

அத மட்டும் மனசுல வச்சுக்கோங்க.” என்று சொல்லி தன் அம்மாவின் வாயை அடைத்துவிட்டாள் தேன்மொழி. 

அப்போதும் விஜயா ஆற்றாமையில் ஏதோ சொல்ல வர, 

தன் அம்மாவின் கையை பிடித்து தடுத்த ஆதவன் “வேண்டாம் அம்மா எதுவும் சொல்லாதீங்க. 

அக்கா சொல்றது கரெக்ட் தானே.. இது அவளோட வாழ்க்கை!  

அவங்க அக்காவ கடத்திட்டு வந்து இப்படி கல்யாணம் பண்ணி வச்சதெல்லாம் தப்புதான். 

அதுக்கு அவங்க ஏற்கனவே நம்ம கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்க. 

அதுவும் இல்லாம அவளை கூட்டிட்டு வந்து இங்க வச்சு யாரும் கொடுமை ஒண்ணும் படுத்தலையே! 

அவளுக்கே இங்க வாழ பிடிச்சிருக்குன்னா, நமக்கு என்ன பிரச்சனை? 

அவளுக்காக மாமா யோசிச்சதுனால தான் நம்மள இங்க வர வச்சிருக்காரு.

தேனு சொன்ன மாதிரி நம்மளே நினைச்சிருந்தாலும் இந்த மாதிரி ஒரு குடும்பத்துக்கு நம்மளால அவளை கல்யாணம் பண்ணி அனுப்பி இருக்க முடியாது. 

அண்ட் இங்க நடக்கிறத பார்த்தாலே நம்ம தேனுக்கும் மாமாவ பிடிச்சிருக்குற மாதிரி தான் தெரியுது. 

அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா நமக்கு அதுவே போதும் தானே!” என்று சொல்ல, 

“அது சரி, நீயும் உங்க அக்காவும் நல்லா வளர்ந்துட்டீங்க!

இனிமே நான் சொல்லி நீங்க ஏதாவது கேட்க போறிங்களா? 

உங்க இஷ்டத்துக்கு என்னமோ பண்ணுங்க. எனக்கு என் பிள்ளைங்க நல்லா இருந்தா போதும்.” என்று இறுதியில் சொல்லிவிட்டாள் விஜயா.  

அப்போது அங்கே தேன்மொழியை தேடி ஓடி வந்த ஆருத்ரா அவள் மடியில் அமர்ந்து கொண்டு ஆதவனை பார்த்து, 

“மம்மி இந்த ஹாண்ட்சம் அங்கிள் யாரு?” என்று சிரித்த முகமாக கேட்க, 

“இவனா.. இவன் என் தம்பி ஆதவன். இவன நீ மாமானு கூப்பிடு. 

தெரியாதவங்க கிட்ட பேசுற மாதிரி அங்கிள்ன்னு எல்லாம் சொல்லக்கூடாது.” என்றாள் தேன்மொழி. 

‌ ஆருத்ராவை உதையா கொண்டு வந்து காட்டிய போட்டோவில் பார்த்த ஞாபகம் ஆதவனுக்கு இருந்தது. 

அதனால் அவன் அன்புடன் அவளை பார்த்து சிரித்தபடி, “ஹாய் பாப்பா!” என்று சொல்ல, 

அவன் முன்னே தன் ஒற்றை கையை நீட்டிய ஆருத்ரா “ஹாய் மாமா! I am arudra. How are you?” என்று  அமெரிக்கன் அக்செண்ட்டில் ஆங்கிலத்தில் சொன்னாள். 

தன் முன்னே இருக்கும் அந்த அழகிய 10 வயது சிறுமி தன் அக்காவின் மகள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. 

இருப்பினும் அந்த க்யூட்டான பாப்பாவை அவனுக்கு பார்த்த உடனே பிடித்து விட்டது. 

உடனே அவள் கையுடன் தன் கையை கோர்த்து கைகுலுக்கிய ஆதவன், 

“Hai, Nice to meet you Arudra. நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்று கேட்க, 

“நானும் நல்லா இருக்கேன் மாமா. உங்கள மீட் பண்ணதுனால இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள் ஆருத்ரா. 

இதுவரை யாரும் ஆதவனை மாமா என்று அழைத்ததில்லை என்பதால், 

அந்த க்யூட்டான குட்டி பெண் தன்னை வாய்க்கு வாய் மாமா மாமா என்று அழைப்பது அவனுக்கு ஒரு புதுவித உணர்வாக இருந்தது. 

அதனால் உள்ளுக்குள் அதை ரசித்தபடி அவன் ஆருத்ராவிடம் பேசிக் கொண்டிருக்க, 

அங்கே வந்த சித்தார்த் “மம்மி.. லஞ்ச் ரெடியா இருக்காம். டாடி உங்க எல்லாரையும் சாப்பிட கூட்டிட்டு வர சொன்னாரு.” என்றான். 

“என் பொண்ணுக்கு கல்யாணமாகி அவ பேரன் பேத்தி பெத்து குடுத்தா அத கொஞ்சி சந்தோஷமா வளர்க்கலாம்னு பார்த்தேன். 

ஆனா இங்க வந்து பாத்தா இவ்ளோ பெரிய புள்ளைங்க அவளை அம்மா அம்மானு கூப்பிடுது. எல்லாம் என் நேரம்.” என்று நினைத்து சலித்துக் கொண்ட விஜயா அவர்களுடன் சாப்பிட சென்றாள். 

-மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured