அத்தியாயம் 26
ஆகாஷ் அர்ஜுனின் காரை பார்க்கிங் ஏரியாவில் இருந்து கொண்டு வந்து அவன் முன்னே நிறுத்த,
அதில் ஏறி முன் சீட்டில் ஆகாஷின் அருகே அமர்ந்தான் அவன்.
பிரிட்டோ பின் சீட்டில் சென்று அமர்ந்து கொள்ள, அவர்கள் வருவதற்குள் அர்ஜூன் சொன்ன வேலையை முடித்துவிட்டு வந்திருந்த கிளாரா காரில் ஏறி அவன் அருகில் அமர்ந்தாள்.
அவர்களது கார் என்ட்ரன்ஸை நோக்கி பயணிக்க, அந்த பேலஸுன் பிரம்மாண்ட கேட் அவர்களுக்காக திறக்கப்பட்டது.
அர்ஜுனின் காருக்கு முன்னேயும் பின்னையும் பல கருப்பு உடை அணிந்திருந்த பாடிகார்டுகள் துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்களோடு தனித்தனி காரில் அணிவகுத்து சென்றார்கள்.
அர்ஜூனின் காரை இப்போது ஆகாஷ் ஓட்டி சென்றதால்,
ஃப்ரீயாக வீட்டில் இருந்த மகேஷ் தேன்மொழியை நினைத்து கவலைப்பட்டு அவளை காண தேன்மொழி இப்போது தங்கி இருக்கும் அறைக்கு சென்றான்.
கிளாரா வெளியில் செல்வதற்கு முன் அர்ஜுன் இனி தேன்மொழியை அவனுடைய அறையிலேயே தங்கச் சொன்னதை அவளிடம் சொல்லிவிட்டு தான் சென்று இருந்தாள்.
அவள் அணிந்து கொள்வதற்கான ஆடைகளையும் கொண்டு வந்து கொடுத்திருந்தாள்.
ஆனால் நடந்த விஷயத்தை நினைத்து மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த தேன்மொழி,
என்றும் தனக்கு விடிவு காலமே வராது என்று நினைத்து விரக்தியின் உச்சத்திற்கு சென்று அப்படியே அந்த கட்டிலில் அர்ஜுன் தூக்கி எறிந்த போர்வையை எடுத்து சுற்றிக் கொண்டு,
தனது சிறிய உடலை இன்னும் சிறிதாக குறுக்கிக் கொண்டு கால்களுக்கு நடுவில் தன் முகத்தை புதைத்து சத்தம் இன்றி அழுது கொண்டிருந்தாள்.
அங்கே வந்த மகேஷ் அவள் இருந்த நிலையை கண்டு ஆடிப் போய்விட்டான்.
அவள் அப்படி தன் உடலை போர்வையால் இழுத்து போர்த்திக் கொண்டு அழுதபடி அமர்ந்திருந்ததால்,
தேன் மொழியை தேடி வந்த அர்ஜுன் அவளிடம் தவறாக நடந்து கொண்டான்.
அதனால் தான் இவள் இப்படி அழுகிறாள் என்று இவன் தவறாக புரிந்து கொண்டு வேகமாக அவள் அருகில் சென்றான்.
யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு அது அர்ஜுன் தான் என்று நினைத்து மீண்டும் பயந்து போன தேன்மொழி திடுக்கிட்டு தன் தலையை தூக்கி பார்த்தாள்.
இன்னும் அவளது உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க,
“நான் தான் நான் தான் பயப்படாத..
நீ எப்படி இருக்கன்னு பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன்.
உன்ன பார்த்தாலே நீ நல்லா இல்லைன்னு தெரியுது.
பட் என்னால உனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண முடியல தேன்மொழி.
ஐ அம் சோ சாரி..!!” என்று கலங்கிய கண்களுடன் சொன்னான் மகேஷ்.
தன் அருகில் கட்டிலில் அமர்ந்து இருந்த மகேஷின் மீது சாய்ந்து கொண்ட தேன்மொழி,
“என் தலையெழுத்து சரியில்ல மகேஷ்.
நீ மட்டும் இல்ல யார் நெனச்சாலும் என்ன இங்க இருந்து காப்பாத்த முடியாது.
இன்னைக்கு எனக்கு அது நல்லா தெரிஞ்சிருச்சு.
அர்ஜுன் அவரோட வைஃப் இறந்து போனத நினைச்சு ஃபீல் பண்றாரு.
ஆனா அவரே சியாவ கொன்னுட்டுதா சொல்றாரு.
இது ரெண்டுல எது உண்மைன்னு எனக்கு தெரியல.
பட் அவர் லைஃப்ல இனி சியா இல்லை என்றதனால,
என்ன வச்சு அந்த எம்ப்டி பிளேஸை fill பண்ணனும்னு நினைக்கிறாரு.
நான் இங்க ஜஸ்ட் ரீபிளேஸ்மெண்ட் மட்டும் தான்.
இதுல எங்களுக்கு ஆனதுக்கு பேர் கல்யாணமாம்.
அதை நான் எப்பவும் மறந்திடக் கூடாதுன்னு அவர் சொல்லி என்னை மிரட்டிட்டு போறாரு.” என்று உடைந்த குரலில் சொன்னாள்.
அவள் பேசிய அனைத்தையும் கூர்ந்து கேட்ட மகேஷ்,
“அவர் தப்பா நடந்துக்கிட்ட மாதிரி இவ எதுவுமே சொல்லலையே…
அப்ப இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவும் நடக்கலையா?
எதுவும் இல்லைனா, இவ ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கா?” என்று யோசித்து குழம்பியவன்,
நேரடியாக அவளிடமே “அவர் உன் கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணறா?” என்று கேட்டான்.
தன் கண்ணீரை துடைத்துவிட்டு அவனைப் பார்த்த தேன்மொழிக்கு ஆமாம் என்று சொல்வதா இல்லை என்று சொல்வதா என்று ஒன்றும் புரியவில்லை.
அவன் நினைத்து இருந்தால், அவளை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம் தான்.
அவன் உனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்.
ஆனால் இங்கிருந்து உன்னை அனுப்பவும் முடியாது என்று மட்டும் சொல்லிவிட்டு வாய்ப்பு கிடைத்தும்,
எல்லை மீறி எதுவும் செய்யாமல் தானே சென்றான்!
அப்படி இருக்கும்போது மொத்தமாக அவன் மீது குற்றம் சுமத்தவும் அவளுக்கு மனம் வரவில்லை.
அதனால் இல்லை என்று தலையாட்டினாள் அவள்.
மகேஷுக்கு ஒருவேளை அவள் அர்ஜுனின் மீது இருக்கும் பயத்தில் பொய் சொல்கிறாளா? என்று கூட தோன்றியது.
ஆனால் தேன்மொழியை பார்க்கும்போது அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்றும் அவனுக்கு தோன்ற,
கட்டிலில் கிடந்த ஆடைகளை கண்ட மகேஷ்,
“ஓகே நீ முதல்ல டிரஸ் பண்ணு.
நான் எங்க அம்மா கிட்ட உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வந்து கொடுக்க சொல்றேன்.
நான் தான் முன்னாடியே சொன்னனே தென்மொழி..
இது ஒன் வே. உன்னால உள்ள மட்டும் தான் வர முடியும்.
இங்க இருந்து வெளிய போக முடியாது.
இத சொல்றதுக்கு எனக்கும் கஷ்டமா தான் இருக்கு.
இருந்தாலும் சொல்றேன்..
இதுதான் ரியாலிட்டி. இத புரிஞ்சுகிட்டு வாழப்பழகிக்கோ.” என்று சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே சென்றான்.
இப்படியே ஆடைகள் அணியாமல் எவ்வளவு நேரம் இருப்பது? என்று நினைத்த தேன்மொழி கிளாரா வைத்துவிட்டு சென்ற ஆடைகளை விருப்பம் இல்லாமல் எடுத்து அணிந்து கொண்டாள்.
அப்படியே ஜன்னல் கதவை திறந்து வெளியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட அவளுக்கு தோன்றியது.
அதனால் ஜன்னலின் அருகே சென்று கதவை திறந்து கீழே அவள் எட்டிப் பார்க்க,
அங்கே மகிழனும் ஆருத்ராவும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
அதனால் ஆருத்ராவுடன் அவள் செலவிட்ட தருணங்கள் எல்லாம் அவள் மனதில் வந்து வந்து செல்ல,
“இவங்க ஃபேமிலில இருக்கிறவங்க தான் எல்லாரும் சரியான சைக்கோவா இருக்காங்க.
ஆனா இந்த குழந்தைங்க என்ன பண்ணாங்க பாவம்!
ஏற்கனவே ஆருத்ராவும் சித்தார்த்தும் அவங்கள பெத்த அம்மாவை இழந்துட்டு ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க.
இப்ப தான் அந்த புள்ளைங்க ரெண்டும் நான் தான் அவங்க அம்மான்னு நம்பி நிம்மதியா சந்தோஷமா முன்ன மாதிரி இருக்காங்க.
இப்ப நானும் இவங்க கண்ணு முன்னாடியே செத்துப் போயிட்டா,
இந்த குழந்தைகளால எப்படி அதை தாங்க முடியும்?
அர்ஜுனுக்கு என்ன பத்தி எந்த கவலையும் இல்ல.
அதே மாதிரி எனக்கும் அவன பத்தி யோசிச்சு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல.
அவனும் சரி அவன் குடும்பத்தில இருக்கிறவங்களும் சரி எப்படி போனா எனக்கு என்ன?
இவங்க எல்லாருமே செல்பிஷ் தான்..
ஆனா இந்த குழந்தைங்க அப்படி இல்ல.
என் மேல உண்மையா அன்பு வச்சிருக்காங்க.
இதுக்கு மேல இந்த வீட்ல நான் இருக்க போறேன்னா, முக்கியமா உயிரோட இருக்க போறேன்னா அதுக்கு ஒரே ஒரு ரீசன் இந்த குழந்தைங்க மட்டும் தான்.
எப்படியோ என் குடும்பத்தை என் தம்பி பாத்துக்குவானு மனச தேத்திக்கிட்டு,
இந்த குழந்தைகளை என் குடும்பமா நினைச்சு இதுதான் என் வாழ்க்கையின்னு நான் வாழ பழகிக்கணும்.
வேற வழி இல்ல.” என்று நினைத்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
கிளாரா சொல்லிவிட்டு சென்றதைப் போல தயாராகி அவள் அர்ஜுனின் அறைக்கு சென்று விட,
மகேஷ் சொன்னதால் தேன்மொழிக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு நேராக அவளது ரூமிற்கே வந்தாள் அவனது அம்மா.
மகேஷின் அம்மாவை பார்க்கும் போதெல்லாம் தேன்மொழிக்கு அவள் அம்மாவின் ஞாபகம் வர,
அவளை கட்டி பிடித்துக் கொண்டு அழுதாள் தேன்மொழி.
தானும் அவளை இறுக்கி அனைத்து ஆறுதல் சொன்ன மகேஷின் அம்மா அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அவளை சாப்பிட வைத்தாள்.
ஆகாஷ் உடன் காரில் சென்ற அர்ஜுன் ஏதோ ஒரு ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தான்.
அவனைக் கண்டவுடன் அங்கே இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்றார்கள்.
அது அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான ரெஸ்டாரண்ட் தான்.
இப்படி உலகம் முழுவதும் அவர்களுக்கு ஏராளமான பிசினஸ்கள் உள்ளன.
ஆனால் அவை உலகம் அறிந்தது. ஆனால் உலகம் அறியாத அர்ஜுனின் மறுபக்கம் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்தது.
தனது ரெஸ்டாரண்டிற்கு சென்ற அர்ஜுன் அங்கே இருந்த அவன் மட்டும் பயன்படுத்தும் ஒரு தனி அறைக்கு சென்றான்.
அவனுடன் ஆகாஷ், கிளாரா, பிரிட்டோ மூவரும் தங்களது ஆட்களுடன் செல்ல,
விசாலமான அந்த அறைக்குள் நுழைந்த அனைவரும் அங்கே இருந்த ஒரு சீக்ரெட் அறைக்கு சென்றார்கள்.
அங்கே அவர்கள் எப்போதும் பயன்படுத்தும் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கும் கருப்பு நிற ஆடையும், மாஸ்க்கும் இருந்தது.
அதை அர்ஜுன் உட்பட அனைவரும் அணிந்து கொண்டு அந்த சீக்ரெட் டோருக்குள் இருந்த சுரங்கப்பாதை வழியாக சில மீட்டர்கள் நடந்து சென்றார்கள்.
அவர்கள் அனைவரிடமும் ஆயுதங்கள் இருந்தன.
அந்த சுரங்கத்தின் முடிவில் ஒரு பெரிய பிரம்மாண்ட ஆட்டோமேட்டிக் டோர் இருந்தது.
இதேபோன்று அந்த இடத்திற்கு செல்ல ஒவ்வொருவருக்கும் அவர்களது பொசிஷனுக்கு தகுந்த மாதிரியான வெவ்வேறு சுரங்கப்பாதைகள் உண்டு.
இப்போது அர்ஜுன் வந்ததைப் போல அவர்களும் வேறு வேறு வழியை பயன்படுத்தி அங்கே வந்து சேர்வார்கள்.
தன் முன்னே இருந்த பிரமாண்ட கதவின் நடுவில் இருந்த கீ ஹோலில் அர்ஜுன் தனது Chiefற்க்கான கார்டை சொருகினான்.
உடனே அங்கே இருந்த ஏ.ஐ தொழில்நுட்பம் அந்த கார்டையும் முன்னே நின்று கொண்டிருந்தவர்களையும் ஸ்கேன் செய்துவிட்டு,
“Welcome back chief and team!” என்று சொல்ல,
அதனிடம் தன் குரலை மாற்றி பேசிய அர்ஜுன் “open the door Renexa” என்றான்.
உடனே அவனது வாய்சையும் கண்டுபிடித்து வந்திருப்பது அர்ஜுன் தான் என்று உறுதி செய்து அந்த ஆட்டோமேட்டிக் கதவு தானாக திறந்து கொண்டது.
உடனே அனைவரும் உள்ளே சென்றார்கள்.
அங்கே இவர்களைப் போல ஏராளமானவர்கள் கருப்பு நிற உடை அணிந்து மாஸ்க் போட்டு தங்கள் முகத்தை மறைத்திருந்தார்கள்.
மற்ற அனைவரின் உடைய போலவே இருந்தாலும், அர்ஜுனுக்கு மட்டும் அவனது உடையில் ரெட் கலரில் Cheifற்க்கான பேட்ச் இருக்கும்.
அதைப் பார்த்தவுடன் அனைவரும் கடந்த இரண்டு வருடங்களாக திடீரென எங்கேயோ மாயமாக சென்றிருந்த தங்களது சீஃப் மீண்டும் வந்துவிட்டார் என்று நினைத்து மகிழ்ந்தார்கள்.
தலைவன் இல்லாத குழு எப்போது வேண்டுமானாலும் தரமட்டமாகிவிடும்.
எதிரிகள் எப்போது இவர்களை அழிக்கலாம் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இத்தனை நாட்களாக ஆகாஷின் உதவியோடு எப்படியோ அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைகளும் இருந்து மீண்டு வந்து விட,
இப்போது அர்ஜுன் வந்துவிட்டதால் தங்களது நம்பிக்கை நட்சத்திரத்தை கண்களால் கண்ட சந்தோஷத்தில் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
– மீண்டும் வருவாள்.. ❤️
(என்னை பிரதிலிப்பியில் ஃபாலோ செய்து சப்போர்ட் செய்யுங்கள். மற்றும் என்னுடைய சொந்த வெப்சைட்டான Thenaruvi Tamil Novelsஇல் நானும் என்னை போல இருக்கும் சில எழுத்தாளர்களும் எழுதிய புத்தகங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
www.thenaruvitamilnovels.com
அதை நீங்கள் இலவசமாக எங்களது தளத்தில் படிக்கலாம். எனவே அதற்கும் சென்று அவற்றையெல்லாம் படித்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள். நன்றி 🙏)
Insta Id: Thenaruvi Tamil Novels
Facebook group: Thenaruvi Tamil Novels