Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 25

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 25

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 25 

அவன் ஏதோ அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் “உனக்கு என்ன வேணும்னாலும் கேளு நான் செய்றேன்.” என்று சொல்லியிருக்க, 

இதுதான் சாக்கு என்று நினைத்த தேன்மொழி ‌“என்ன இங்க இருந்து அனுப்பி விட்டுருங்க. 

நான் இந்தியாவுக்கு போகணும்.‌ 

என் ஃபேமிலில இருக்கிறவங்கள பாக்கணும்.” என்று கேட்டு அவனை நன்றாக கடுப்பேற்றி விட்டாள்.

வந்த கோபத்தில் அவன் அவளைப் பார்த்து முறைக்க, 

“என்ன இதுவரைக்கும் பொறுமையா பேசிட்டு இருந்தவரு உடனே டெரர் மோடுஙக்கு போறாரு.. 

ஆனா அதுக்காக எல்லாம் பயந்து நான் பின் வாங்க மாட்டேன்.

இன்னும் எத்தனை நாள் தான் நான் இந்த ஜெயில்லயே கிடந்தது சாகுறது?

யார் என்ன பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு எல்லாம் எனக்கு கவலை இல்லை.

இங்க இருந்து ரிலீஸ் ஆகி நான் என் வீட்டுக்கு போனா போதும்.” என்று நினைத்த தேன்மொழி தனது ஒட்டுமொத்த தைரியத்தையும் திரட்டி,

“நீங்க தானே நான் என்ன கேட்டாலும் எனக்காக செய்றதா சொன்னீங்க…

எனக்கு என்ன வேணுமோ அதை தானே நான் கேட்க முடியும்..

நான் கேட்டவுடனே நீங்க இப்படி என்னை முறைச்சு பார்த்து பயமுறுத்துனா என்ன அர்த்தம்?” என்று அவனிடமே நேரடியாக தன் மனதில் இருந்ததை கேட்டுவிட்டாள் அவள்.

அவள் அதைச் சொல்லி தன் வாயை மூடுவதற்குள் அவளை கீழே தள்ளி அவள் மீது எரி படுத்துக் கொண்ட அர்ஜுன் அவளது கைகள் இரண்டையும் பிடித்து அவள் தலைக்கு மேலே வைத்தான். 

அவன் என்ன செய்யப் போகிறானோ என்று நினைத்து பயத்துடன் அவள் அவனை பார்க்க, 

அவள் கண்களோடு தன் கண்களை சில நொடிகள் கழக்கவிட்ட அர்ஜூன் ‌ தனது கணீர் குரலில்,

“நீ என் வைஃப். நம்ம ரெண்டு பேருக்கும் அஃபிசியாலா மேரேஜ் ஆனது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று அவளை மிரட்டும் தோரணையில் கேட்டான். 

ஏற்கனவே அவள் உடல் பயத்தில் நடுங்க தொடங்கி இருக்க, 

வார்த்தைகள் தந்தியடிக்க “ம்ம்.. ஞாபகம் இருக்கு.” என்றாள் தேன்மொழி. 

“அப்புறம் ஏன் என்ன விட்டு போகணும்னு நினைக்கிற?” என்று கோபமாக கத்தி கேட்டவனின் கண்களில் தெரிந்து எல்லாம் சோகம்.. சோகம்.. சோகம் மட்டுமே. 

அவளை அப்படி காதல் ஏக்கங்கொளோடு பார்த்துக் கொண்டு இருந்தவனின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து அவனை விட்டு பிரிய வேண்டும் என்று சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

அதனால் தன் தலையை திருப்ப முடியவில்லை என்றாலும் கூட, தன் பார்வையை அவனை விட்டு நகர்த்திய தேன்மொழி,

“நீங்களும் நானும் ஒன்னும் ஆசைப்பட்டு ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கல மிஸ்டர் அர்ஜுன். 

First of all, நமக்கு மேரேஜ் ஆகும்போது, அப்படி ஒரு விஷயம் உங்களுக்கு நடக்கிறது கூட தெரியாத நிலைமையில இருந்தீங்க நீங்க.. 

என் கழுத்துல தொங்குற இந்த தாலி கூட நீங்க கட்டுனது இல்ல. 

முதல்ல நமக்கு நடந்தது கல்யாணமே இல்லை.‌

அப்புறம் எந்த உரிமையில நீங்க என்‌ கிட்ட இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்று அவள் கேட்க, 

அவளது இரண்டு கைகளையும் தனது ஒற்றை கைகளுக்குள் பிடித்து அடக்கிய அர்ஜுன் அவனது மற்றொரு கையால் அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பி, 

“எனக்கு அத பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்லை. 

இந்த முகத்துக்காக.. நான் என்ன வேணாலும் செய்வேன். 

என் சியா மாதிரியே இருக்கிற நீ என் கூட எனக்கு பொண்டாட்டியா இங்க இருந்து தான்‌ ஆகணும். 

புரிஞ்சுதா உனக்கு? 

நான் சொல்றது உனக்கு எங்க புரியப்போகுது? 

ஆல்ரெடி அவள இழந்துட்டு நான் ஒவ்வொரு செகண்டும் உயிரோட செத்துகிட்டு இருக்கேன் டி. 

உன்னையும் இங்கிருந்து அனுப்பிட்டு என்னை முழுசா சாக சொல்றியா? 

தெரிஞ்சோ தெரியாமலோ நான் என் சியாவ இழந்துட்டேன்.

ஆனா யாருக்காகவும் எதுக்காகவும் என்னால தெரிஞ்சே உன்னையும் இழக்க முடியாது.

உனக்கு புடிச்சாலும், பிடிக்கலைனாலும், என் வைஃப் ஆ நீ இங்க‌ தான் இருந்தாகனும். 

அதுக்கு நீ உன்னை மெண்டலி பிரிப்பேர் பண்ணிக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது. 

இன்னொரு தடவை உன் வாயில இருந்து நான் இங்க இருந்து போகணும்..

என்ன விட்ருங்க அப்படி இப்படின்னு ஏதாவது வந்துச்சு…

நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். 

நான் நடந்த எல்லாத்தையும் அக்செப்ட் பண்ணிக்கிட்டு என் குடும்பத்துக்காக நார்மலா வாழ ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.

தேவை இல்லாம ஏதாவது பண்ணி எனக்கு மறுபடியும் வெறி பிடிக்க வச்சிடாத. Mind it..!!” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.‌ 

அவன் கண்கள் தீ பொறிகளைக் கக்க, அந்த அனலில் தான் வெந்து கரைவதை போல உணர்ந்த தேன்மொழி விழிகள் விரிய வாயடைத்து போய் அவனைக் கண்டாள். 

அதுவரை பந்தயத்தில் ஓடும் குதிரையை போல வேகமாக துடித்துக் கொண்டு இருந்த அவளது இதயம் துடிக்க மறந்து அப்படியே நின்றுவிட்டது.

தங்களின் மீது கிடந்த போர்வையை தூக்கி வீசி எறிந்த அர்ஜுன் அதற்குப் பிறகு அவளை ஒரு நொடி கூட திரும்பி பார்க்காமல் கட்டிலை விட்டு கீழே இறங்கி அங்கே இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன் உருவத்தை கண்டான்.‌ 

அவன் சட்டை லேசாக கசங்கி இருந்தது. 

அதை சரி செய்து கொண்டு அவன் ஹேங்கரில் மாட்டி வைத்திருந்த கோட்டை எடுத்து அணிந்து கொண்டு தனது தலை முடியையும் செட் செய்து விட்டு வெளியே சென்றான். 

உள்ளே என்ன நடக்குமோ! அர்ஜுனுக்கு மீண்டும் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? 

என்றெல்லாம் ஏதேதோ நினைத்து பதட்டத்துடன் அவனது குடும்பத்தினர்கள் வெளியே நிற்க, 

கிளாராவின் அருகே சென்ற அர்ஜுன், “அவ ரூம்ல இருக்கிற சிசிடிவி கேமரா‌ புட்டேஜை டெலிட் பண்ணிடு. 

என் ரூம்ல இருக்கிற சிசிடிவி கேமராவையும் ரிமூவ் பண்ணிருங்க. 

I want my privacy. அண்ட் நான் வெளிய போயிட்டு திரும்ப வரும்போது அவள் என் ரூம்ல இருக்கணும்.” என்று சொல்ல, 

“Okay Chief.” என்றாள் அவள்.

அர்ஜுனின் அருகில் சென்ற ஆகாஷ் “எங்கயோ வெளிய போகணும்னு சொன்னீங்க அண்ணா..!!” என்று கேட்க, 

அவன் தோள்களில் கை போட்ட அர்ஜுன், 

“போகலாம், பட் அதுக்கு முன்னாடி சியாவோட டெட் பாடிய நீங்க என்ன பண்ணீங்கன்னு எனக்கு தெரியணும்.” என்றான். 

சுற்றி குழந்தைகள் இருந்ததால் அவன் மெல்லிய குரலில் பேசி இருக்க, 

தானும் அவனைப் போலவே “அண்ணியோட டெட் பாடிய நம்ம கார்டன் ஏரியால ‌ புதைச்சிட்டோம் அண்ணா. 

அங்க அவங்களுக்கு சமாதிக் கட்டி எங்களால முடிஞ்ச அளவுக்கு இப்ப வரைக்கும் அந்த இடத்தை ப்ராப்பரா மெயின்டெயின் பண்ணிட்டு வர்றோம்.” என்றான் ஆகாஷ் மெல்லிய குரலில். 

“நான் அங்க போகணும். அவள பாக்கணும்.” என்று அர்ஜுன் சொல்ல,

“இப்பவேவா அண்ணா?” என்று ஆகாஷ் தயக்கத்துடன் கேட்க, 

அவனை திரும்பி பார்த்த அர்ஜுன் “இன்னும் நான் இருந்து செய்ய வேண்டியது எல்லாம் நிறைய இருக்கு. 

பயப்படாத அதுக்குள்ள போய் சேர்ந்திட மாட்டேன்.” என்றான் உறுதியாக. 

“சாரி அண்ணா, நீங்க வாங்க நம்ம போலாம்.” என்ற ஆகாஷ் அர்ஜுனை அழைத்துக் கொண்டு கார்டன் ஏரியாவிற்கு சென்றான். 

பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த விசாலமான கார்டன் ஏரியாவிற்குள் அவர்கள் இருவரும் தொடர்ந்து சிறிது நேரம் நடக்க, அவர்கள் முன்னே ஒரு பெரிய ஆர்ச் தோன்றியது. 

அதற்குள் இருவரும் நுழைந்தார்கள்.‌ நடுவில் ஒரு பாதை செல்ல, அதன் இரு பக்கமும் பல‌ வண்ண மலர்களால் அந்த இடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அந்த நந்தவனத்திற்குள் அவர்கள் செல்ல, அங்கே இருந்த மூன்று நான்கு படிக்கட்டுகளில் ஏறி அவர்கள் மேடை போல இருந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த சியாவின் சமாதியை சென்றடைந்தார்கள். 

யாருக்கும் தெரியாமல் குழந்தைகள் இங்கே வந்து இந்த இடத்தை பார்த்து விட்டால் சியா இறந்து போன விஷயம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், 

அந்த சமாதியில் அவளது பெயரோ புகைப்படமோ இடம்பெற்று இருக்கவில்லை. 

பார்த்ததும் அதை புரிந்து கொண்ட அர்ஜுன் அங்கே சென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். 

அந்த இடத்தை சுற்றி சியாவிற்கு மிகவும் பிடித்த பன்னீர் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தது. 

அந்த ரோஜாக்களை வைத்து தயாரித்த ஒரு பெரிய ஃபிளவர் பொக்கேவை ‌ பிரிட்டோ கொண்டு வந்து அர்ஜுனிடம் கொடுக்க, 

அதை வாங்கி சியாவின் சமாதியின் மீது வைத்த அர்ஜுன் அதன் மீது சாய்ந்து படுத்து கொண்டு சத்தம் இன்றி கண்ணீர் சிந்தினான்.

சியாவிடம் மன்னிப்பு கேட்பதாக நினைத்துதான் அவன் தேன்மொழி இடம் சியாபின் இறப்பிற்காக மன்னிப்பு கேட்டான். 

இப்போது சியாவின் கல்லறைக்கு வந்தவுடன் அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வர மறுத்து விட, 

தனது கண்ணீரால் அவன் செய்த பாவங்களை சியாவின் காலடியில் கழுவ நினைத்து அங்கே தொடர்ந்து கண்ணீர் சிந்தினான் அர்ஜுன்.

அவனை இப்படி பார்க்க ஆகாஷிற்க்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. 

அவனுக்கு மிகவும் பிடித்த சியா அண்ணியும் அவனுடைய ஒரே அண்ணனும் எத்தனை மகிழ்ச்சியாக ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்டு நிறைவான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் என்று அவன் அருகில் இருந்து பார்த்து பழகியவன்.

ஒரு பக்கம் அவன் தனது அண்ணியை மிஸ் செய்ததால் அவன் கண்கள் கலங்க, 

இதுவரை எதற்காகவும் கலங்கி இருக்காத தன் அண்ணன் இப்போது மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் இப்படி உடைந்து போய் இருக்கிறானே என்று நினைக்கும் போது அவனது இதயம் கனத்தது.

சியாவின் கல்லறையின் மீது சாய்ந்து படுத்திருந்த அர்ஜுனுக்கு என்னவோ அவள் அருகில் இருப்பதைப் போலவே ஒரு உணர்வு ஏற்பட்டது. 

அதனால் மெல்லிய குரலில், “இந்த வேர்ல்டுல உன் அளவுக்கு என்னை புரிஞ்சுகிட்டவங்க வேற யாரும் இல்ல ‌டி. 

இனியும் அப்படி ஒருத்தர் வர 

மாட்டாங்க. 

கண்டிப்பா உன் ஃபிளேசை என் லைஃப்ல வேற யாராலயும் ரீப்பிளேஸ் பண்ண முடியாது. 

உன் டெத் ஒரு ஆக்சிடென்ட். ஆனா அது என் கையால நடந்திருக்கக் கூடாது சியா. 

உன்ன எந்த கையால தொட்டு ரசிச்சு கட்டிப்புடிச்சு அரவணைச்சு சந்தோஷப்பட்டேனோ…

அதே கையால நானே உன்னை கொன்னுட்டேனே டி.. 

நீ சாகும்போது உனக்கு எவ்ளோ வலிச்சு இருக்குமோ,

அதைவிட அதிகமா ‌இதை நினைக்கும்போது எனக்கு வலிக்குது தெரியுமா? 

ஒரே நாள்ல நீ செத்துட்ட.

என்னை விட்டு போயிட்ட. 

ஆனா உன்னை நினைச்சு நினைச்சு நானே உன்னை கொன்னுட்டேன்னு கில்டி ஃபீலிங்ல என்ன எவ்ரி செகண்ட் கொன்னுட்டே இருக்கல்ல டி நீ…

இதுல உன்ன மாதிரியே இன்னொருத்தி என் லைஃப்ல வந்திருக்கா..

இது எல்லாம் எதுக்காக நடக்குது, இத நான் எப்படி எடுத்துக்கணும்னு எனக்கு சத்தியமா தெரியல. 

ஆனா நான் கோமாவுல இருந்த இந்த ரெண்டு வருஷத்துல நானும் நீயும் இல்லாம நம்ம ஃபேமிலில இருக்கிறவங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. 

அவங்களுக்கு நம்ம ரெண்டு பேருமே வேணும். 

முக்கியமா நம்ம குழந்தைகளுக்கு அம்மா வேணும். 

அது மட்டும் எனக்கு நல்லா புரியுது.‌

தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கும் அந்த தேன்மொழிக்கும் மேரேஜ் ஆயிடுச்சு. 

என் லைஃப்ல அவ என்னவா இருப்பா என்று எனக்கு தெரியாது. 

ஆனா நான் அவளை நீயா தான் பார்க்கிறேன். 

நீ இல்லாம நான் கஷ்டப்படுறத தாங்க முடியாம தான் நீ மறுபடியும் அவ உருவத்துல என் கிட்ட வந்திருக்கிறதா நான் நம்புறேன் டி.

அவளுக்குள்ள உன்னை தேடுறது சரியான்னு எனக்கு தெரியல.

ஆனா உன் முகத்தை பார்க்காம என்னால ஒரு செகண்ட் கூட வாழ முடியாதுன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும். 

சோ முழுக்க முழுக்க என்னோட சுயநலத்துக்காக, என் ஃபேமிலில இருக்கிறவங்க சந்தோஷத்துக்காக அவளே இங்க இருந்து போகணும்னு ஆசைப்பட்டாலும் நான் அவள புடிச்சு வச்சிருக்கேன். 

கண்டிப்பா என்ன நீ புரிஞ்சுக்குவன்னு நம்புறேன்.

நான் என்ன சொன்னாலும், உன்னை கொன்னது நான் தான்.  

என்ன சொல்லியும் அந்த தப்பை என்னால நியாயப்படுத்த முடியாது. 

இனிமே ஏதாவது செஞ்சு அதை சரி பண்ண முடியுமான்னு தெரியல. 

ஆனா சத்தியமா ஒன்னு மட்டும் உண்மை டி.. 

என் மூச்சு இந்த உடம்ப விட்டு போகிற வரைக்கும் என் மனசுல நீ இருப்ப. 

உன் கூட நான் வாழ்ந்த ஒவ்வொரு செகண்டும் என் ஹார்ட்ல அப்படியே இருக்கு. 

எப்பயும் இருக்கும்..!! 

ஐ லவ் யூ சியா…‌

ஐ மிஸ் யூ சோ மச்..

அண்ட் தயவு செஞ்சு உன்னால முடிஞ்சா என்ன மன்னிச்சிடு.”

என்றவன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.‌ 

அதனால் ஆகாஷும் தன் கண்ணீரை துடைத்து விட்டு அர்ஜுனை பார்க்க, 

“நம்ம வர்க்கிங் ஸ்பேஸ்க்கு நான் இப்பவே போகணும். 

அதுவும் என் கார்ல.. 

நம்ம அங்க ரீச் ஆகுறதுக்குள்ள.. ‌ எல்லாரும் அங்க அசம்பில் ஆகி இருக்கணும். 

அர்ஜுன் திரும்ப வந்துட்டான்னு எல்லாருக்கும் தெரியணும்.” என்று சொல்லிவிட்டு முன்னோக்கி நடந்தான்.‌

– மீண்டும் வருவாள்.. ❤️

You may also like

Leave a Comment

About Me

Featured