Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 22

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 22

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 22 

தேன்மொழியை பார்க்க வேண்டும் என்று நினைத்த அர்ஜுனனுக்கு இப்போது அவளாலேயே மீண்டும் உடல்நிலை சரி‌ இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்து பயந்த ஆகாஷ் அவளை வெளியில் அழைத்துச் செல்ல சொன்னான்.  

கிளாராவும், பிரிட்டோவும் தேன்மொழியின் இரு பக்கங்களிலும் இருந்து அவள் கைகளைப் பிடித்து இழுத்து செல்ல, 

அவளுக்கு என்ன ஆனது என்று பார்ப்பதற்காக பதட்டத்துடன் கீழே வந்த மகேஷ் அந்த காட்சியை கண்டு மனம் உடைந்தான். 

அவளை இவர்கள் கடத்திக் கொண்டு வந்து இப்படி அடிமை போல நடத்துவது அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. 

அர்ஜுனுக்காக யாரையாவது கொலை செய்ய வேண்டியது வந்தால் கூட, அதை தயங்காமல் அவனுடைய பாடிகார்டுகளுடன் சேர்ந்து தானும் பல முறை செய்திருக்கிறான் மகேஷ்.

ஆனால் இறந்தவர்கள் யாரும் கண்டிப்பாக நல்லவர்களாக இருக்க முடியாது என்று அப்போதெல்லாம் அவன் தன் மனதை தேற்றிக் கொண்டது உண்டு. 

இப்போது தேன்மொழியின் விஷயத்தில் அவனால் அப்படி நினைக்க முடியவில்லை. 

ஒரு அப்பாவி பெண் இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவதாகவே நினைத்த மகேஷ், 

“உனக்காக ஏதாவது பண்ணனும்னு தோணுது. 

என்ன பண்றதுன்னு தெரியல. 

பட் ஒன்னு மட்டும் தெரியும்.. தேவை இல்லாம உன்ன பத்தி யோசிச்சு நான் ஏதாவது பண்ணா, கண்டிப்பா நான் உயிரோட இருக்க முடியாது.” என்று நினைத்து தன் மனதை கல்லாக்கிக் கொண்டு கார்டன் ஏரியாவிற்கு சென்றான். 

அங்கே அவன் அவளை முதன் முதலில் பார்த்த சம்பவம் அவனுக்கு ஞாபகம் வர, 

தொடர்ந்து அவளைப் பற்றி யோசித்தவாறு அங்கேயே அமர்ந்து விட்டான் மகேஷ். 

தேன்மொழியை வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்ற கிளாரா, 

“இத்தனை நாளா நல்லா தானே இருந்தீங்க மேடம்..

அர்ஜுன் சார் கோமாவுல இருந்து சரியாகி இருக்கிற இந்த டைம்ல போய் ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க?

உங்களால மறுபடியும் அவருக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா கண்டிப்பா உங்கள உயிரோடவே விட மாட்டாங்க. 

எது பண்ணாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க ப்ளீஸ்… 

அர்ஜுன் சார் முன்னாடி தேவை இல்லாம எதுவும் பேசாதீங்க.” என்று சொல்ல, 

அவள் கையை தட்டி விட்ட தேன்மொழி, 

“என்னமோ எனக்காக யோசிச்சு என் நல்லதுக்காக பேசுற மாதிரி நடிக்காத கிளாரா. 

நான் அவர் முன்னாடி இப்படி எல்லாம் பேசினா என்ன கொன்றுவாங்களா? 

சரி, நான் எதுவும் பேசாம அவர் முன்னாடி போய் பொம்மை மாதிரி நிக்கிறேன். 

அவர் என்ன சொன்னாலும் அதே மாதிரி செய்யுறேன். 

அப்ப மட்டும் அவர் என்னை எதுவும் பண்ண மாட்டாரா? 

இங்கயே இருக்கிற உனக்கு எப்படியும் எல்லா உண்மையும் தெரிஞ்சு இருக்கும்ல… 

அப்படி இருந்தும் அது எல்லாத்தையும் என் கிட்ட இருந்து மறைச்சு, என்னமோ உங்க அர்ஜுன் சார் ரொம்ப நல்லவர் மாதிரியும்..

அவர் அவரோட வைஃப் சியாவை ரொம்ப லவ் பண்ண மாதிரியும், இத்தனை நாளா பில்டப் பண்ணி என் கிட்ட பொய் சொல்லி இருக்க இல்ல..!!

அத பைத்தியக்காரி மாதிரி நானும் நம்பிட்டு இருந்திருக்கேன். 

நீங்க எல்லாரும் அவருக்காக வேலை செய்றவங்க தானே..

அப்புறம் அவர் பண்ண தப்பை பத்தி நீங்க எப்படி பேசுவீங்க?” என்று கோபமாக கேட்க, 

“மேடம்.. நீங்க நம்பினாலும் இல்லைனாலும் நான் உங்க கிட்ட சொன்ன எதுவும் பொய்யில்லை.  

அர்ஜுன் சார் நெஜமாவே ‌ அவரோட வைஃப் சியா‌வை ரொம்ப லவ் பண்ணாரு. 

அவர் கண்ணு முன்னாடியே தான் அவங்க இறந்து போனாங்க. 

அந்த அதிர்ச்சியில தான் அவர் கோமா ஸ்டேஜ்க்கு போனாரு. 

ப்ளீஸ் மேடம்.. நீங்க என்ன நம்பலைனாலும் பரவால்ல. 

ஆனா அர்ஜுன் சாரை மட்டும் தப்பா நினைக்காதீங்க.” என்று உண்மையை அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில் மென்மையான குரலில் சொன்னாள் கிளாரா. 

“ஓஹோ.. இது நல்ல கதையா இருக்கே.‌.!!

இப்படித் தான் எல்லார் கிட்டயும் சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருக்கீங்களா? 

சும்மா இப்படி அசிங்கமா பொய் சொல்லி நடிக்காத.‌ 

அந்த சியாவை கொன்னதே உங்க அர்ஜூன் சார் தான்னு எனக்கு நல்லா தெரியும். 

எப்படியும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் அவங்களை கொன்ன மாதிரியே இவர் என்னையும் கொன்றுவாரு.

அப்புறம் மறுபடியும் என்ன மாதிரியே இருக்கிற இளிச்சவாய் இன்னொருத்தி எவளாவது கிடைப்பாளான்னு நீங்க வேர்ல்ட் ஃபுல்லா முதல்ல இருந்து தேடுவீங்களா?” என்று தேன்மொழி வந்த கோபத்தில் தனது அடி தொண்டையில் இருந்து கத்தினாள்‌. 

அதனால் ஷாக்கான கிளாரா ‌“இவங்களுக்கு எப்படி இந்த உண்மை தெரிஞ்சது?” என்று யோசித்தவாறு அமைதியாக இருக்க, 

“இவ்வளவு நேரம் உங்க அர்ஜுன் சாருக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கிட்டே இருந்தீல்ல..

‌ இப்ப பேசு டி.. உங்க அர்ஜுன் சார் ரொம்ப நல்லவரு..

பொண்டாட்டி மேல உசுரையே வெச்சிருந்தார் என்று இப்ப சொல்லு..!!” என்று கத்தினாள் தேன்மொழி.‌

அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் கிளாரா பிரிட்டோவை பார்க்க, 

“கோமால இருந்து எழுந்ததுக்கு அப்புறம் chief சியா மேடமை பத்தி இவங்க கிட்ட ‌ஏதாவது சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்.

அதை தப்பா புரிஞ்சுகிட்டு இவங்க அர்ஜுன் சார் வேணும்னே அவரோட வைஃபை கொன்னுட்டதா நினைக்கிறாங்க.” என்றான் அவன். 

அதனால் எரிச்சல் அடைந்த தேன்மொழி “ஓஹோ.. எப்படி உங்களால இப்படி எல்லாம் நடிக்க முடியுது?

இப்பயும் நான் தான் அப்படி நினைச்சுக்கிறேன் இல்ல.. 

ஆனா உண்மை அது இல்லை என்று தானே சொல்ல வரீங்க நீங்க.. 

ஓகே Fine, அப்படியே இருக்கட்டும்.

நடந்த எதையும் நான் கண்ணால பாக்கல. 

சோ நானா எதையும் தப்பா புரிஞ்சுகிட்டு பேச விரும்பல. 

இப்ப நான் பொறுமையா கேட்கிறேன்.‌ நீங்களே என்ன நடந்துச்சுனு சொல்லுங்க. 

சியாவுக்கு என்ன ஆச்சு? அவங்க எப்படி இறந்து போனாங்க? 

உண்மை என்னன்னு எனக்கு தான் தெரியாது.

ஆனா உங்களுக்கு தெரியுமே..‌ நீங்களே மறைக்காம எல்லாத்தையும் சொல்லுங்க.‌ 

நிஜமாவே அர்ஜுன் மேல தப்பு இல்லைன்னா நான் அவரை தப்பா நினைக்க மாட்டேன்.” என்ற தேன்மொழி அவர்களுக்கு எதிரில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு அவர்கள் இருவரையும் குறுகுறுவென பார்த்தாள். 

அவள் கண்கள் கோபத்திலும் சோகத்திலும் சிவந்து காணப்பட்டது. 

அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பிரிட்டோவும், கிளாராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, 

“என்ன.. இவ்வளவு நேரம் நான் ஸ்டாப்பா பேசிட்டு இருந்தீங்க..  

இப்ப ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க? எனக்கு உண்மை என்னன்னு இப்ப தெரிஞ்சே ஆகணும். 

அது தெரியாம என்னால அர்ஜுன் முன்னாடி போய் நிக்க முடியாது.” என்று உறுதியாக சொல்லிவிட்டாள் தேன்மொழி.‌ 

இவளிடம் என்ன பேசியும் பயனில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்ட பிரிட்டோ, 

“சாரி மேடம், நாங்க இங்க ஜஸ்ட் வொர்க் பண்ற ஸ்டாப்ஸ் மட்டும் தான்.

Chief ஓட பர்சனல் லைஃப்ல நடந்த இம்பார்ட்டெண்ட் ஆன விஷயத்தை பத்தி எல்லாம் யார் கிட்டயும் டிஸ்கஸ் பண்றதுக்கு எங்களுக்கு ரைட்ஸ் இல்ல. 

உங்களுக்கு நடந்ததை பத்தி தெரிஞ்சுக்கணும்னா நீங்க டைரக்டா அத பத்தி chief கிட்ட தான் கேட்கணும்.‌

அவரைத் தவிர நீங்க கேட்கிற இந்த மாதிரியான கொஸ்டின்ஸ்க்கு வேற யாரும் ஆன்சர் பண்ண மாட்டாங்க. 

அதான் நாங்க உங்கள கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்றோம்.. 

Chief நார்மல் ஆனதுக்கு அப்புறம் அவரே உங்களை‌‌ பார்க்க இங்க வருவாரு. 

அப்ப பொறுமையா அவரை டென்ஷன் பண்ணாம நீங்களே அவர் கிட்ட கேட்டீங்கன்னா, அவர் உண்மையை சொல்லுவாரு. 

அதுக்கப்புறம் உங்களுக்குள்ள இருக்கிற பிராப்ளம் சால்வ் ஆகிடும். 

இப்போ நீங்க நடந்ததை பத்தி பேசாம இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது மேடம்.” என்றான். 

இவர்கள் இப்படித் தான் பேசுவார்கள் என்று ஏற்கனவே அறிந்திருந்த தேன்மொழி

“அட போங்க டா உங்க கிட்ட பேசுறது வேஸ்ட். 

என்னமோ என் தலையெழுத்துபடி நடக்கட்டும்.” என்று நினைத்து தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். 

மீண்டும் அவள் வேறு எங்கேயாவது சென்று விட்டால் அவளைத் தேடி கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும் என்று நினைத்து அவளை அந்த அறையிலேயே வைத்து பூட்டி விட்டு வெளியில் சென்றார்கள். 

அங்கே இருந்த கட்டிலில் சுருண்டு படித்துக் கொண்டு கையில் கிடைத்த தலையணை ஒன்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டு‌ தனது வாழ்க்கையையும், குடும்பத்தையும் பற்றி யோசித்து அழுத தேன்மொழி அப்படியே நேரம் செல்ல செல்ல தன்னை அறியாமல் உறங்கி விட்டாள். 

அவள் ஏற்கனவே ஒரு முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததால் மீண்டும் அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவளை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டு இருந்தாள் கிளாரா. 

அங்கே அர்ஜூனுடன் இருந்தவர்கள் அவனது உடல் நிலையில் அதிக கவனம் செலுத்தி அவனை முன்பு போல மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். 

இதற்கிடையில் அவன் எத்தனையோ முறை தேன்மொழியை பார்க்க வேண்டும் என்று சொல்லியும் ஆகாஷ் அவனிடம், 

“அண்ணி நிறைய கன்பியுஷன்ல இருக்காங்க அண்ணா. 

நீங்க இந்த கண்டிஷன்ல இருக்கும்போது அவங்கள போய் பார்க்கிறது சரியா இருக்காது. 

நீங்க முதல்ல நார்மல் ஆகணும். 

இனிமே உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு நாங்க கன்ஃபார்ம் பண்ணதுக்கு அப்புறம் தான் நான் உங்கள அவங்கள பார்க்க விடுவேன்.

பட் டிரஸ்ட் மீ, அவங்களுக்கு எதுவும் இல்ல.

அவங்க இங்க தான் இருக்காங்க. நல்லா இருக்காங்க. 

நீங்க வர்ற வரைக்கும் நாங்க உங்க சார்பா அவர்களை நல்லா பாத்துக்குவோம்.” என்று சொல்லி அவன் வாயை அடைத்து விட்டான். 

வெகு நாட்களாக ஒரே இடத்தில் இருந்ததால் மீண்டும் எழுந்து நார்மல் ஆகி மற்றவர்களின் சப்போர்ட் இல்லாமல் சுயமாக நடக்க அர்ஜுனிற்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆனது. 

அந்த இரண்டு நாட்களும் ஒரு நொடி கூட தூங்காமல் அவன் ‌ தன்னுடைய சியாவை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தான். 

இதற்கிடையில் அவனது குழந்தைகள் சித்தார்த், ஆருத்ரா, அவனுடைய பெற்றோர்கள் குடும்பத்தினர்கள் என அனைவரும் அவ்வப்போது அவனை வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். 

ஆனால் ஆகாஷின் கட்டளையின் பேரில் யாரும் தேன்மொழியை மட்டும் அவன் கண்களில் காட்டவே இல்லை. 

‌ அதனால் தானே முழுவதுமாக குணமாகி முன்பு இருந்ததைப் போல ‌ கம்பீரமாக கோட் சூட் எல்லாம் அணிந்து கொண்டு ‌ தனது அறையில் இருந்து லிஃப்டை கூட பயன்படுத்தாமல் ‌ டிப்டாப்பாக  படிகளில் இறங்கி கீழே வந்தான் அர்ஜுன்.‌

இப்போது தெளிவாக இருந்த அவனது கண்கள் இரண்டும் செல்லும் வழியெல்லாம் தேன்மொழி எங்கே இருக்கிறாள் என்று தேடிக் கொண்டிருந்தது. 

– மீண்டும் வருவாள்.. ❤️

Insta Id: Thenaruvi Tamil Novels

Facebook group: Thenaruvi Tamil Novels 

https://facebook.com/groups/927875212152407

You may also like

Leave a Comment

About Me

Featured