அத்தியாயம் 183
அர்ஜுன் தனது நண்பர்களை தேன்மொழிக்கு அறிமுகப்படுத்தினான். நட்புடன் அவர்களைப் பார்த்து புன்னகைத்த தேன்மொழி “இவங்க எல்லாருக்கும் நான் யாரென்று நீ இண்ட்ரடியூஸ் பண்ணிட்ட.. பட் இவங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று அர்ஜுனிடம் கேட்டாள். அதற்கு அர்ஜுன் பதில் சொல்வதற்கு முன்பாக பார்ப்பதற்கு இந்தியன் போல இருந்த ஒருவன் அவள் அருகில் சென்று “விடுங்க சிஸ்டர், நாங்களே எங்களை இன்ட்ரோடுயூஸ் பண்ணிக்கிறோம். I am Karan. இது என் வைஃப் ஜூன். நான் இந்தியன். மேடம் us சிட்டிசன். சோ எங்க மேரேஜ் ஃபாரின் கொலபரேசன்ல நடந்துச்சு. அண்ட் இவங்க ரெண்டு பேரும் என்னோட க்யூட் லிட்டில் சில்ட்ரன். Sandra, Alex. இவங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்.” என்று தன்னையும் தனது குடும்பத்தினரையும் தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.
அவனது மனைவி ஜூன் தேன்மொழியை கட்டிப்பிடித்து “நைஸ் டு மீட் யு டியர். அர்ஜுன் எங்களை அவன் மேரேஜ்க்கு இன்வைட் பண்ணாததுனால நாங்க அவர் மேல கோவமா இருந்தோம். அவன் கிட்ட பேச கூடாதுன்னு நினைச்சோம். பட் உங்க எல்லாரையும் ஒரு ஃபேமிலியா பார்த்த சந்தோஷத்துல எங்களால பேசாம இருக்க முடியல.” என்றாள்.
தானும் அவளை கட்டிப்பிடித்துக் கொண்ட தேன்மொழி “தாராளமா நீங்க உங்க ஃபிரண்டு கிட்ட கோச்சுக்கோங்க. அடிக்கடி சண்டை கூட போடுங்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. எங்களுக்கு இரண்டு தடவை கல்யாணம் ஆயிருக்கு. செகண்ட் டைம் மேரேஜ் நடக்கும்போது இவர் நினைச்சிருந்தா எல்லாரையும் கூப்பிட்டு பண்ணி இருக்கலாமே..
உங்க எல்லாரையும் நேர்ல பார்க்கிற வரைக்கும் அர்ஜுனுக்கு ஃபிரண்ட்ஸ் இருக்காங்கன்னு எனக்கு தெரியாது. இவர் எப்பயும் வேலை வேலைன்னு பிசியாவே இருப்பாரு.. சோ நான் இவருக்கு ஃபிரண்ட்ஸே இல்லைன்னு நினைச்சுக்கிட்டேன்.
எனக்கு மட்டும் உங்கள பத்தி முன்னாடியே தெரிஞ்சி இருந்தா அவர் இன்வைட் பண்ணலைனாலும் நானே உங்க எல்லாரையும் பர்சனலா எல்லா பங்க்ஷனுக்கும் இன்வைட் பண்ணி இருப்பேன். அண்ட் நீங்க எல்லாருமே வேற வேற கண்ட்ரியில இருக்கிறவங்களா இருந்தாலும் உங்க எல்லாருக்கும் தமிழ் தெரிஞ்சிருக்கு பரவால்ல.. சோ நமக்குள்ள கம்யூனிகேஷன் இஸ்யூஸ் இருக்காது.” என்று சொல்லிவிட்டு சிரித்தவள், அவர்களுக்கு அருகில் நின்று கொண்டு இருந்த இரண்டு ஆண்களையும் நீங்கள் யார்? என்று கேட்பது போல பார்த்தாள்.
அவள் தங்களை பார்ப்பதை கவனித்தவுடன் நடுத்தர வயதில் இருந்த அந்த ஆண்கள் இருவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றுக்கொள்ள, உடனே கிரண் அவர்கள் இருவரையும் காட்டி “இவன் யாதவ்.. இது ஜேசன். நாங்க எல்லாருமே இப்ப தான் ரொம்ப வருஷம் கழிச்சு மீட் பண்றோம்.. சோ உள்ளுக்குள்ள எல்லாரும் கொஞ்சம் எமோஷனலா இருக்காங்கன்னு நினைக்கிறேன். அதான் பேசக் கூட யோசிக்கிறாங்க.” என்று சொல்லி சமாளித்தான்.
அவர்கள் இருவருக்கும் அருகில் சென்ற அர்ஜுன் “நீங்க இன்னும் திருந்தவில்லையாடா?” என்று மெல்லிய குரலில் கேட்க, “ப்ளீஸ் மச்சான் அத பத்தி எதுவும் பேசாத.” என்றான் யாதவ் சோகமாக. உடனே அவர்கள் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்ட அர்ஜூன் “ஓகே நானும் எதுவும் பேசல. நீங்களும் எதுவும் பேச வேண்டாம். இந்த ட்ரிப்பை நம்ம எல்லாருமே கம்ப்ளீட்டா என்ஜாய் பண்ணனும். அதேசமயம் நம்ம எதுக்காக இங்க வந்திருக்கோம்னு மறந்துடாதீங்க.” என்றான். தனது லாஸ்ட் செண்டன்சை மட்டும் அவன் அவர்களுக்கு மட்டும் கேட்கும் படியாக மெல்லிய குரலில் சொன்னான்.
இப்படியாக இவர்கள் அனைவரும் மாறி மாறி பேசிக் கொண்டு இருக்க, ஜனனியின் கையில் இருந்த அவளது மகள் வர்ணிகா “ம்மி.. குளு குளு..!!” என்று தனது மழலை குரலில் பேசியபடி அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு லேசாக அழ தொடங்கி விட்டாள். தங்களது இன்னொரு மகளான ஸ்வஸ்திகாவை தன் தோள்களில் போட்டு தூங்க வைத்திருந்த சந்தோஷ் “என்ன சொல்ற இவ?” என்று புரியாமல் கேட்டான்.
தன்னோடு சேர்த்து வர்ணிகாவை அணைத்துக் கொண்ட ஜனனி “ம்ம்.. குளிருது மம்மின்னு சொல்றா.. அது கூட தெரியல.. எப்பயும் குழந்தைங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணி அவங்க பேசுறது எல்லாத்தையும் கேட்டா தானே அவங்க எப்ப என்ன சொல்றாங்கன்னு தெரியும்!” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள்.
குழந்தைகள் குளிரில் நடுங்குவதை கண்ட பிரசாத் “விட்டா இங்கயே நின்னு பேசிக்கிட்டே இருப்பீங்க போல! பாருங்க என் பேத்தி குளிருதுன்னு அழ ஆரம்பிச்சுட்டா.. வாங்க பார்க்கிங் ஏரியாவுக்கு போலாம். கார் ஆல்ரெடி ரெடியா இருக்கு.” என்றார். உடனே அனைவரும் பேசியபடி வெளியில் நடந்து சென்று ஆளுக்கு ஒரு காரில் ஜோடி ஜோடியாக ஏறி அமர்ந்தார்கள்.
சித்தார்த் ஆருத்ரா இருவரும் அர்ஜுனின் காரில் ஏறாமல் சென்று பிரதாபின் காரில் ஏறிக்கொள்ள, கார் ஜன்னல் வழியாக அந்த காட்சியை பார்த்து சோகமான தேன்மொழி “நான் உன் கூட இருந்தா அவங்க உன் பக்கமே வர மாட்டேங்கிறாங்க இல்ல! நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலியா இருக்கணும்னு தானே ஆசைப்படுறேன். இப்ப உங்க மூணு பேருக்கும் நடுவுல நான் ஒரு பிராப்ளமா வந்து நிக்கிற மாதிரி இருக்கு.” என்று உடைந்த குரலில் சொன்னாள்.
ஒரு கையால் ஆதரவாக அவள் கையை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் காரை ஸ்டார்ட் செய்த அர்ஜுன் google மேப்பில் ரூட் பார்த்தபடி காரை கிளப்பினான். கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு அதில் சாய்ந்து அமர்ந்து இருந்த தேன்மொழியின் முகம் இன்னும் வாட்டமாகவே இருக்க, “நீயும் நானும் இந்த விஷயத்தை பற்றி ஆல்ரெடி நிறைய தடவை டிஸ்கஸ் பண்ணிட்டோம் ஹனி. நமக்கே நடக்கிறது எல்லாத்தையும் அக்சப்ட் பண்ண கஷ்டமா இருக்கு. அவங்க ரெண்டு பேரும் இன்னும் சின்ன பசங்க தானே.. அவங்கள சுத்தி என்ன நடக்குதுன்னு முதல்ல அவங்க அண்டர்ஸ்டாண்ட் பண்ணவே டைம் ஆகும். அதுக்கப்புறம் அவங்களுக்கு அக்செப்ட்டென்ஸ் வரணும்னா எவ்வளவு நாள் ஆகும்னு யோசி! எது எப்படியோ முன்னாடி மாதிரி அவங்க சியாவ நினைச்சு அழாம அவ இறந்துட்டான்னு ஏத்துக்கிட்டாங்க. ஆனா இன்னும் உன்ன மட்டும் அவங்களால அம்மாவ பார்க்க முடியல. அதான் பிரச்சனை, எல்லாம் போக போக சரியாயிடும் பாத்துக்கலாம்.” என்றான். அதற்கு சரி என்று தலையாட்டினாள் தேன்மொழி.
அவர்களது கார் சிட்டியின் மத்தியில் நல்ல வியூ உள்ள ஹனிமூனிற்க்கு வரும் கப்புள்ஸ் ரிசார்ட்டை நோக்கி பயணிக்க தொடங்கியது. ஒரு மொத்த ரிசார்ட்டையும் அவர்கள் தங்களுக்காக என்று புக் செய்து வைத்திருந்தார்கள். கார் ஜன்னல் வழியாக வெளியில் தெரியும் பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்களை எல்லாம் ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்தபடி இருந்த மகாலட்சுமி “நிஜத்துல பாரிஸ் இப்படித்தான் இருக்குமா மாமா? நான் எங்கேயும் காதல் படத்துல தான் இந்த ஊரை பார்த்து இருக்கேன். நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா ஹனிமூனுக்கு எல்லாரும் போற மாதிரி ஊட்டி கொடைக்கானல்ன்னு எங்கயாவது போவோம்ன்னு நினைச்சேன்.
ஆனா இவ்வளவு தூரம் நீங்க என்ன கூட்டிட்டு வருவீங்கன்னு நான் கற்பனை கூட பண்ணி பாக்கல. நம்ம ரஷ்யாவுக்கு போனதே எனக்கு பெரிய விஷயமா இருந்துச்சு. இப்ப பாரிஸ் வந்திருக்கோம்னு என்னால நம்பவே முடியல.” என்று கண் கலங்க சொன்னாள். அவளுக்கு தான் தனது தோழிகளின் கனவு வாழ்க்கையை நிஜத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பதாக ஒரு உணர்வு தோன்ற, அது அவளை இறக்கைகள் இன்று சந்தோஷத்தில் வானில் பறக்க வைத்தது.
கார் ஓட்டிக் கொண்டே இருந்த மகேஷ் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு “இது என்னமோ என்ன கல்யாணம் பண்ணதுனால தான் நடக்குதுன்னு நினைச்சு நீ சந்தோஷப்படுற.. பட் மேட்டர் அது இல்ல. அர்ஜுன் சார் ஃபேமிலில எல்லாரும் ரொம்ப நல்லவங்க. அதான் நம்மளையும் ஒரு ஆளா மதிச்சு அவங்க இப்படி அவுட்டிங் வந்திருக்கும்போது நம்மளையும் கூட்டிட்டு வந்துருக்காங்க.
முக்கியமா தேன்மொழிக்கு தான் இதுக்கு எல்லாம் தேங்க்ஸ் சொல்லணும். நமக்கு மேரேஜ் ஆனதுக்கு கிஃப்ட் கொடுக்கிறேன்னு ஏற்கனவே அர்ஜுன் சார் தனியா, ஜானகி மேடம் தனியான்னு காஸ்ட்லியா நமக்கு எவ்வளவோ செஞ்சி இருந்தாலும், 10 டேஸ் நம்ம சுவிட்சர்லாந்து போயிட்டு வருவதற்கு தேன்மொழி ட்ரிப் அரேஞ்ச் பண்ணி கொடுத்தாங்க.
அதுக்குள்ள பெரிய ஐயா இறந்து போனதுனால நம்மளால அங்க போக முடியாம போயிடுச்சு இல்ல.. அத மறக்காம ஞாபகத்துல வச்சிருந்து இந்த ட்ரிப்ல நம்பளும் அவங்க கூட வரணும்னு சொன்னதே தேன்மொழி தான்.” என்று பெருமையாக சொன்னான்.
அவன் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை பேசுவதைப் போல சீரியஸாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த மகா “ஆமா ஆமா தேன்மொழி மேடம் ரொம்ப நல்லவங்க. அவங்க நல்ல மனசுக்கு எப்பயும் அவங்க அர்ஜுன் சார் கூட ஹாப்பியா இருக்கணும். ஆனா மாமா.. நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் கேட்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். அத கேக்குறதுக்கு சந்தர்ப்பமே வாய்க்கால. இப்ப உங்க கிட்ட கேட்கிறேன்.. நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
உடனே அதற்கும் சிரித்த மகேஷ் “அப்படி என்ன கேக்க போறீங்க மேடம்? கேட்கணும்னு முடிவு பண்ணிட்டா கேட்க வேண்டியது தானே… தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு எதுக்கு disclaimer எல்லாம்?” என்று கேட்க, சிறிது தயக்கத்துடன் அவனைப் பார்த்த மகாலட்சுமி “உங்களுக்கு தேன்மொழி மேடமை முன்னாடியே தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் மாதிரி சாதாரணமா பேசுகிறத நான் ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன். அதான் கேட்கிறேன்! தப்பா எடுத்துக்காதீங்க.” என்றாள்.
அவள் பேசப்பேச தனது நினைவலைகளின் முந்தைய பக்கத்திற்கு மெல்ல சென்று திரும்பிய மகேஷ் “அவளை எனக்கு தெரியுமாவா? நியாயமா எனக்கு அவளை எந்த அளவுக்கு பிடிக்கும்னு நீ கேட்டிருக்கணும். அதெல்லாம் ஒரு காலம். இப்ப எல்லாமே மாறிப்போச்சு. அவ ஹாப்பியா இருக்கா. நான் உன் கூட ஹேப்பியா வாழ ட்ரை பண்ணிட்டு இருக்கேன். இதுதான் ரியாலிட்டி.” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அவன் அமைதியாக இருந்ததால் குழப்பமான முகத்துடன் அவனைப் பார்த்த மகாலட்சுமி “என்னாச்சு மாமா இவ்ளோ நேரம் நல்லா பேசிட்டு இருந்தீங்க திடீர்னு சைலன்ட் ஆயிட்டீங்க! இதுக்கு தான் நான் உங்க கிட்ட பேசுறதுக்கு யோசிச்சேன். நான் அப்படி கேட்டிருக்க கூடாதோ?” என்று கேட்க, “சேச்சா இது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்ல. தேன்மொழி ரஷ்யா வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கும் அவளை தெரியும். அந்த டைம்ல இருந்த சிச்சுவேஷன் வேற.. அப்போ தேன்மொழிக்கு அங்க இருக்கவே பிடிக்கல.
அதனால அவங்க எல்லாரையும் பார்த்து பயந்துட்டு இருப்பாங்க. நான் இந்தியாகாரனா இருந்ததினால என் கிட்ட ஃப்ரெண்ட்ல பேசிட்டு இருந்தாங்க. அப்ப நாங்க நல்ல ஃபிரண்ட்ஸா இருந்தோம். அதுக்கப்புறம் அர்ஜுன் சாருக்கும் அவளுக்கும் மேரேஜ் ஆனதுனால எல்லாம் மாறிடுச்சு. இப்ப தேன்மொழி மிஸஸ் அர்ஜுன் ஆகிட்டா.” என்றான்.
அவர்கள் அனைவரும் ஒருவரின் பின் ஒருவராக தங்களது கார்களில் அவர்கள் தங்க வேண்டிய இடத்திற்கு சென்று கொண்டு இருக்க, அவர்களை நிழல் போல தொடர்ந்து சென்று கொண்டிருந்தது ஆபத்து.
மீண்டும் வருவாள் 💕