அத்தியாயம் 181
தன் அம்மாவின் உடல்நிலை இப்போது தான் ஓர் அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதால் இவ்வளவு நாளாக ரெஸ்ட்டில் இருந்த தனது அம்மாவிற்கு ஒரு சேஞ்ச் வேண்டும் என நினைத்த சுனில் அர்ஜுன் கேட்டுக் கொண்டதால் தன் அம்மா அப்பாவுடன் அவர்களுடன் ட்ரிப் செல்ல கிளப்பினான்.
அவர்கள் தங்களுக்கான ரூமில் பிஸியாக இருக்க, வழக்கம்போல தனது காதலியுடன் வீடியோ காலில் கடலை போட்டு கொண்டு இருந்தான் சுனில். அப்போது அவனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதைப் பார்த்தவுடன் அவனது முகம் கொடூரமாக மாறியது. அதுவரை அவளுடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தவன், “நான் உனக்கு அப்புறம் கால் பண்றேன். நானா கூப்பிடுற வரைக்கும் எனக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாத.” என்று சொல்லிவிட்டு அவள் அழைப்பை துண்டித்தான்.
இங்கே மைக்கேல் மீரா இருவரும் கிச்சனில் நின்று கொண்டு இருக்க, அவன் தனக்காக போட்டுக் கொடுத்த சாக்லேட் மில்க் ஷேக்கை குடித்தபடியே அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மீரா. அதை கவனித்த மைக்கேல் “என்னடி அப்படி பாக்குற? நான் எப்பயுமே ஹாண்ட்சம் தான். இன்னிக்கி கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஹண்ட்ஸமா இருக்கேனோ! அதான் மேடம் இப்படி அப்பட்டமா சைட் அடிக்கிறீங்களா?” என்று கிண்டலாக கேட்டான்.
உடனே திடுக்கிட்டு மறுப்பாக இல்லை என்று வேகமாக தலையாட்டிய மீரா “இந்த ட்ரிப்பை நெனச்சு எனக்கு எக்சைட்டிங்கா தான் இருக்கு. பட் இது முடிஞ்ச உடனே அர்ஜுன் சார் ஃபேமிலியோட ரஷ்யால போய் செட்டில் ஆய்டுவாருல.. அவங்க அங்க போயிட்டா, எப்ப அகைன் இந்தியா வருவாங்கன்னு தெரியல. நீங்களும் அவங்க கூட போயிடுவீங்கள்ல! நான் அதான் யோசிச்சிட்டு இருந்தேன்.” என்று கொஞ்சம் வருத்தமாகச் சொன்னாள்.
உடனே தன் கையில் இருந்த கிளாஸை கீழே வைத்துவிட்டு அவளை பார்த்த மைக்கேல் “ஆமா என்ன பண்றது? வந்த வேலை முடிஞ்சிட்டா கிளம்ப வேண்டியது தான்! ஆக்சுவலி எங்களோட ஃபிரண்ட்ஸ் இன்னைக்கு நம்ம கூட ட்ரிபுக்கு வராங்க. அவங்க பாரீஸ்ல நம்மளோட ஜாயின் பண்ணிப்பாங்க. அதுக்கப்புறமா அப்படியே கிளம்பி ரஷ்யா போக வேண்டியது தான். அர்ஜுன் இங்க இல்லைனா எங்களுக்கு இந்தியால என்ன வேலை?” என்று கேட்டான்.
“ம்ம்.. கரெக்ட் தான் சார். அர்ஜுன் சார் இல்லைனா நீங்க எதுக்காக இந்தியா வரப்போறீங்க?” என்று கேட்ட மீரா தன் தலையை கீழே குனிந்து கொண்டாள். அவள் இப்போது வருத்தமாக இருப்பது அவனுக்கும் தெரிந்தது. ஆனால் அதற்கு காரணம் தன் பிரிவா? என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த மைக்கேல் “என்ன உடனே பியூஸ் போன பல்ப் மாதிரி ஆயிட்ட! நான் மறுபடியும் இந்தியா பக்கமே வராம போயிட்டா நீ என்னை மிஸ் பண்ணுவியா?” என்று கேட்டுவிட்டு அவள் தடையில் கை வைத்து அவள் முகத்தை உயர்த்தி அவளை தன்னை பார்க்க செய்தான்..
உடனே லேசாக சிரித்த மீரா “நான் எல்லாரையும் தான் மிஸ் பண்ணுவேன். பட் மத்தவங்க கூட என்னை கண்டுக்க மாட்டாங்க. நீங்க எப்ப பாத்தாலும் சும்மா என் கூட விளையாட்டுக்கு சண்டை போடறது மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பீங்க. அப்படி இருக்கிற ஒரு ஆள் திடீர்னு தூரமா போய்ட்டா எல்லாரும் நேச்சுரலா உங்கள மிஸ் பண்ண தானே செய்வாங்க.. நீங்க என்ன மிஸ் பண்ணுவீங்களா சார்?” என்று கேட்டாள்.
அவளது கண்கள் அவனை ஆசையுடன் பார்க்க, அந்தக் கண்களில் அவன் என்ன கண்டானோ தெரியவில்லை.. மைக்கேல் மொத்தமாக அதில் தொலைந்து போனான். அவளையும் தன்னில் மூழ்கடிக்க அவன் துடித்துக் கொண்டிருந்தான். இதை விட்டால் தன் எண்ணங்களை அவளிடம் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமலே போய்விடுமோ என்ற பயம் அவனுக்குள் இருக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அவள் இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்து தன் மார்போடு சேர்த்து அனைத்து கொண்டு அவளது பின் தலையைப் பற்றி அவளது இதழ்களை தனது இதழ்களால் மூடினான்.
அதில் திடுக்கிட்ட மீரா தன் கையில் இருந்த கிளாசை கீழே போட்டுவிட்டு விழிகள் விரிய அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இது மாதிரியான ரொமான்டிக் தருணங்கள் எல்லாம் அவள் வாழ்க்கையில் வந்ததே இல்லை என்பதால் இவனிடம் அதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அவன் என்னவோ முத்தம் கொடுப்பதில் எக்ஸ்பர்ட் போல அவளது தலையை தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைத்து தன் இதழ்களால் அவளது செவிதழ்களில் வயலின் வாசித்துக் கொண்டு இருந்தான். முதலில் ஷாக் ஆகி நின்று கொண்டு இருந்த மீரா ஒரு கட்டத்திற்கு மேல் அவரது தொடர் முத்தத்தில் சொக்கி கிறங்கி போய் அதில் மூழ்கி தானும் அவனுடன் சேர்ந்து அவர்களுக்கான உலகில் தொலைந்து போனாள்.
மகிழனுக்கு சீக்கிரமாக சாப்பாடு ஊட்டி விட்டு அவனை தங்களது ரூமில் உள்ள கிங் சைஸ் பெட்டில் ஒரு ஓரமாக தூங்க வைத்த ஆகாஷ் ஹெட்போன் மாட்டி கொண்டு பிஸியாக ஃபோன் நோண்டிக் கொண்டு இருந்த லிண்டாவின் அருகில் சென்று அவளை பின்னே இருந்து கட்டி அணைத்தான்.
மும்மரமாக கேம் விளையாடி கொண்டு இருந்த லிண்டா கொஞ்சம் நகர்ந்து “என்ன பண்ணிட்டு இருக்க நீ? நான் எவ்ளோ இன்ட்ரஸ்டிங்கா கேம் விளையாடிட்டு இருக்கேன்.. தெரியலையா உனக்கு? இப்ப தான் கஷ்டப்பட்டு இந்த லெவலை முடிக்க போறேன். என்ன டிஸ்டர்ப் பண்ணாத போ.” என்று சொல்ல,
அவளை விடாமல் பின்ன இருந்து லாக் செய்து பிடித்துக் கொண்ட ஆகாஷ் அவளது தலை முடியை தன் முகத்தாலேயே முன்னே தள்ளிவிட்டு அவளது பின் கழுத்தில் முத்தமிட்டவாரு “உன்னால நான் இங்க டிஸ்டர்ப் ஆகிட்டு இருக்கேன். நீ என்ன விட்டுட்டு ஃபோன நோண்டிட்டு இருக்கியா?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டான்.
அப்போதும் கேம் விளையாடுவதை தொடர்ந்த லிண்டா “அதான் நம்ம இப்ப பாரிஸ்க்கு ட்ரிப் போறோமே.. அங்க போனதுக்கு அப்புறம் உன் கூட விளையாடறதுக்கு நிறைய சான்ஸ் கிடைக்கும். சோ இப்ப என்ன கேம் விளையாட்றியா?” என்று கேட்க, தனக்கு போட்டியாக அவளது மொபைல் ஃபோன் இருப்பது பிடிக்காமல் அதை பிடுங்கி தூக்கி ஓரமாக போட்ட ஆகாஷ் “என்ன டி சொல்ல சொல்ல கேட்காம கேம் விளையாடிகிட்டே இருக்க.. அப்படி என்ன அது உனக்கு என்ன விட இம்பார்டன்ட்டா போச்சு? பாரிஸ் போய் விளையாடுவதற்கு முன்னாடி இங்க கொஞ்சம் டிரயல் பார்க்கலாம். அம்மா வேற நம்ம வீட்ல ரெண்டு பசங்க ஒரு பொண்ணு தான் இருக்காங்க. இன்னொரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. இப்படி நம்ம சும்மாவே இருந்தா எப்படி டி மம்மி கேட்டதை ரெடி பண்றது?” என்று கேட்டான்.
உடனே உருண்டு சென்று அவனை விட்டு விலகிப் படுத்த லிண்டா “அதான் தேன்மொழி இப்ப பிரக்னண்டா இருக்காங்களே.. அவங்களுக்கு பாப்பா பிறக்கும். அத்தை இப்போதைக்கு அந்த பாப்பாவ கொஞ்சட்டும். அதுக்குள்ள போட்டி போட்டு நம்மளும் ரெடி பண்ணா எத்தனை குழந்தைய பாத்துக்குறது? இன்னும் ஜனனியோட குழந்தைகளே வளரல.” என்று சொல்ல,
அவளது நைட் கவுனை பிடித்து இழுத்து அதன் மூலம் அவளை தன் பக்கம் கொண்டு வந்த ஆகாஷ் “ஆளாளுக்கு போட்டி போட்டு ரெண்டு மூணுன்னு பெத்துக்குறாங்க. நமக்கு மட்டும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு மகிழன் மட்டும் தானே இருக்கான்.. சோ எனக்கும் இன்னும் ரெண்டு மூணு வேணும். சும்மா பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணாத.” என்று சொல்லிவிட்டு அவளை கீழே தள்ளி அவளால் சத்தம் வந்து தூங்கிக் கொண்டு இருக்கும் மகிழன் எழுந்தால் காரியம் கெட்டுவிடும் என்பதால் அவளது வாயை தன் ஒரு கையால் பொத்தியபடி அவளது கழுத்தோரம் தன் இதழ்களை பதிக்க தொடங்கினான் ஆகாஷ்.
தூக்கம் வருவதாக சொல்லி படுத்துக் கொண்ட தேன்மொழி தூங்காமல் அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டு இருப்பதை கவனித்த அர்ஜுன் எழுந்து சென்று சுடுநீர் வைத்து கொண்டு வந்து அதன் மூலம் அவளிடம் எதுவும் கேட்காமல் தானாக அவளது கால்களில் ஒத்தடம் கொடுக்க தொடங்கினான். அதில் திடுக்கிட்டு அவனை திரும்பி பார்த்த தேன்மொழி “என்ன பண்ணிட்டு இருக்க நீ தூங்கலையா?” என்று கேட்க, “தூங்குறேன் தூங்குறேன் நீ மொதல்ல தூங்கு.” என்றான் அர்ஜூன்.
முதலில் அவள் கால்களுக்கு ஒத்தடம் கொடுத்த அர்ஜுன் பின் மசாஜ் செய்ய தொடங்கியதை பார்த்தபடி லேசாக சிரித்த தேன்மொழி “நான் எனக்கு கால் வலிக்குதுன்னு உன் கிட்ட சொல்லவே இல்லையே… அப்புறம் எப்படி நீ ஏன் கரெக்டா இதெல்லாம் பண்ற அர்ஜுன்? வர வர நான் மனசுல நினைக்கிறது கூட உனக்கு கேக்குதா?” என்று கிண்டலாக கேட்க, அவளது பாதங்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு லேசாக அங்கே இதழ் பதித்த அர்ஜுன் “ஆமாமா ட்ரூவா லவ் பண்ணா கேக்க தான் செய்யும். உனக்கு தெரியாதா?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
மீண்டும் வருவாள் 💕