அத்தியாயம்: 174
தேன்மொழிக்கு ஒரு பக்கம் ட்ரீட்மென்ட் நடந்து கொண்டு இருக்க, டாக்டர் என்ன சொல்வார்களோ என்று என்னை பதட்டத்துடன் அர்ஜுனும் மற்றவர்களும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தார்கள். மைக்கேல் இதற்கு பின்னணியில் இருக்கும் மர்ம நபரை தேடிக் கொண்டிருக்க, பிரிட்டோ தன் பங்கிற்கு வழக்கமாக தங்களது பாதுகாப்பு பணியின் போது சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் சிக்குகிறார்களா? என்று தேடு தொடங்கினான்.
சில நிமிடங்களுக்கு பிறகு தேன்மொழிக்கு ட்ரீட்மென்ட் செய்த டாக்டர் அர்ஜுனையும், விஜயாவையும், ஜானகியையும் தனது ரூமிற்கு வரச் சொல்லி அழைத்தாள். “என் பொண்ணு எப்படி இருக்கா டாக்டர்? அவ வயித்துல வளர்ற குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லையே!” என்று பதட்டத்துடன் விஜயா கேட்க,
“இப்போதைக்கு அவங்களுக்கு எந்த பிராப்ளமும் இல்லை. பட் ஃபியூச்சர்ல வராம இருக்கணும்னா நாங்க சொல்றத நீங்க இன்னும் ஒரு டூ மன்த்ஸுக்கு ஃபாலோ பண்ணியே ஆகணும் மிஸ்டர் அர்ஜுன்.
நீங்க இந்த விஷயத்துல சின்னதா ஒரு தப்பு பண்ணா கூட, உங்க பேபியை நீங்க இழக்க வேண்டியது இருக்கும். மதர் அண்ட் பேபி இரண்டு பேருமே கொஞ்சம் காம்ப்ளிகேஷன்ஸ் இருந்தாலும், இப்போதைக்கு நல்லா தான் இருக்காங்க. நம்ம Further treatments கொடுக்கும்போது கண்டிப்பா இம்ப்ரூவ்மெண்ட் வரும். சோ நீங்க இத பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.” என்று பீடிகை போட்டாள் டாக்டர்.
“ப்ளீஸ் டாக்டர் இப்படி எல்லாம் சொல்லி எங்களை பயமுறுத்தாதீங்க. எக்ஸாக்டா தேன்மொழிக்கு என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லுங்க. எங்களுக்கு எங்க மருமகளும் அவ வயித்துல வளர்ற குழந்தையையும் ரொம்ப முக்கியம்.” என்று ஜானகி அவசரமாக சொல்ல, “ஓகே ஓகே மேடம் ரிலாக்ஸ்.. நீங்க கேட்ட மாதிரி டீடைலா சொல்லணும்னா, மிஸ்ஸஸ் அர்ஜுன் வயத்துல வளர்ற குழந்தை கொஞ்சம் ஆபத்தான கண்டிஷன்ல தான் இருக்கு.
இப்போதைக்கு அந்த குழந்தைக்கு பிரச்சனை இல்லை. ஆனா நீங்க இதுக்கப்புறமா தேன்மொழியை கொஞ்சம் கூட அசையவே விடாம பாத்துக்கணும். நான் சொன்ன டூ மந்த்ஸ் டைம் பீரியட் முடியுற வரைக்கும் அவங்க கம்ப்ளீட் பெட்ரெஸ்ட்ல இருக்கணும்.
கொஞ்சம் கூட பாடிய மூவ் பண்ணவே கூடாது. கிட்டத்தட்ட அவங்க தன்னோட கருவுல இருக்கிற குழந்தையை ரொம்ப கவனமா தன்னோட கருப்பைக்குள்ள இறுக்கு பிடிச்சு வச்சிருக்கணும். கூடவே இருந்து அவங்க அதை செய்வதற்கு நீங்க எல்லாரும் அவங்களுக்கு மெண்டல் அண்ட் பிசிகல் சப்போர்ட் குடுக்கணும்.
இந்த ரெண்டு மாசத்தை தாண்டிட்டா அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பேபியோட குரோத் அதுக்கப்புறம் ஸ்டேபிளா இருந்தா தேன்மொழி மறுபடியும் நார்மலா இருக்கலாம். இப்ப உங்க எல்லாருக்கும் இருக்கிற ஒரே ஒரு டாஸ்க் தேன்மொழியையும் அவங்க வயித்துல வளர்ற குழந்தையையும் நீங்க காப்பாத்தணும்னா, தேன்மொழிய கொஞ்சம் கூட அசைய விடாம நீங்க பாத்துக்கணும்.” என்றாள்.
டாக்டர் பேசப்பேச நிலைமை தீவிரம் என்னவென்று கேட்டுக் கொண்டு இருந்த அனைவருக்கும் புரிந்தது. இவ்வளவு நேரம் பாசிட்டிவாக டாக்டர் சொன்ன அனைத்திற்கும் அர்த்தம் தேன் மொழியின் குழந்தை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்பது தான் என்று நினைத்த அர்ஜுன் அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் கண்கள் கலங்க எழுந்து வெளியே சென்று விட்டான்.
“அர்ஜுன்!” என்று ஜானகி திரும்பி அவனை அழைக்க, “இதுக்கு மேல டாக்டர் சொல்ற எதையும் கேக்குறதுக்கு எனக்கு ஸ்ட்ரெந்த் இல்ல மாம். அவங்க என்ன சொல்றாங்களோ பக்கத்துல இருந்து நீங்க கிளியரா கேட்டுட்டு வாங்க.
எனக்கு புரிஞ்சதெல்லாம் ஒன்னு மட்டும் தான். நான் என் ஹனி பேபி கூடையை இருந்து அவளையும் அவ வயித்துல வளர்ற என் குழந்தையையும் பார்த்துக்கணும். அவ்ளோ தானே... அத நான் பாத்துக்குறேன்.” என்று உணர்ச்சிகரற்ற குரலில் சொல்லிவிட்டு வேகமாக வெளியில் சென்று விட்டான்.
“இந்த மாதிரி ஒரு நல்ல புருஷன் கிடைச்சும் என் பொண்ணுக்கு அவ வாழ்ற வாழ்க்கையில நிம்மதியே இருக்க மாட்டேங்குதே கடவுளே.. இது என்ன சோதனை? இதுல இருந்து தேனு எப்படி மீண்டு வர போறானே தெரியலையே! மனசே பாரமா இருக்கு!” என்று நினைத்து கண் கலங்கிய விஜயா டாக்டரிடம் தேன்மொழியை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டாள். டாக்டர் சொல்லும் அனைத்தையும் தனது மொபைல் ஃபோனில் நோட்ஸ் எடுத்து வைக்க தொடங்கினாள் ஜானகி.
பெட்டில் படுத்து இருந்த தேன்மொழி தனது வயிற்றின் மீது கையை வைத்துக் கொண்டு “சாரி பாப்பா.. நான் உன்ன அடிக்கடி கஷ்டப்படுத்துற மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கேன். எனக்கு பொறக்க போறதுனால நீயும் இந்த கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கனும்னு உன் தலையில எழுதி இருக்கு போல..
அம்மா ஏதாவது பண்ணி உன்னை கண்டிப்பா காப்பாத்திடுவேன். நீ பயப்படாத சரியா? உனக்கு எதுவும் ஆகாது. நான் ஆகவும் விடமாட்டேன்.” என்று கண் கலங்க பேசிக் கொண்டு இருந்தாள்.
அப்போது வேகமாக அந்த ரூமிற்குள் நுழைந்த அர்ஜுன் தரையில் மண்டியிட்டு அமர்ந்து தேன்மொழி அணிந்திருந்த சில்க் சாரியை கொஞ்சம் விலக்கி லேசாக மேடிட்டு இருந்த அவளது வயிற்றைப் பார்த்தான். உள்ளே இருக்கும் அவன் குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் தன்னிடம் அதைக் காப்பாற்ற சொல்லி கெஞ்சுவதைப் போல அர்ஜுனுக்கு ஒரு மாயை தோன்றியது. அது அவனது இதயத்தை ஆயிரம் துண்டுகளாக உடைத்து அவனை பலவீனமாக்க போதுமானதாக இருந்தது.
அர்ஜுன் அவள் வயிற்றைத் தொட்டுப் பார்க்க, தேன் மொழியும் அவன் கையின் மீது தன் கையை வைத்தாள். அதனால் அவன் கண்களில் வடிந்த கண்ணீர் அவள் கைகளில் மீது விழ, எப்போதும் தைரியமாக இருக்கும் அர்ஜுனே இந்த அளவிற்கு கலங்குகிறான் என்பதால் ஏதோ ஒன்று தவறாக நடந்து இருக்கிறது என்று நினைத்த தேன்மொழி அவன் கையை பிடித்து பதட்டமாக “எல்லாம் ஓகே தானே அர்ஜூன்! டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று குரல் தழுதலுக்க கேட்டாள்.
“டாக்டர் சொன்னத கேட்டு எனக்கே ஒரு மாதிரி தான் இருக்கு. இதுல நான் அதை இவ கிட்ட சொன்னா, இவ என்ன ஆவாளோ தெரியல!” என்று நினைத்த அர்ஜுன் முதலில் அவன் தைரியமாக இருந்தால் தான் இங்கே அனைத்தும் சரியாக நடக்கும் என்று நினைத்து அவளது மிருதுவான கைகளை தனது வலிமையான இரண்டு கரங்களுக்குள்ளும் பாதுகாப்பாக பிடித்து வைத்துக் கொண்ட அர்ஜுன் “உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா ஹனி?” என்று அவளது கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி கேட்டான்.
உள்ளுக்குள் எத்தனை சோகமும் குழப்பங்களும் இருந்தாலும், அவன் அப்படி கேட்கும் போது அவளுக்குள் ஒரு குருட்டு நம்பிக்கை வர, ஆமாம் என்பது போல தலையாட்டினாள் அவள். அவள் கைகளில் மென்மையாக முத்தமிட்ட அர்ஜூன் “வாய தொறந்து சொல்லு.. நீ என்னை நம்புறியா? உன்னையும் நம்ம குழந்தையையும் நான் நல்லபடியா பாத்துக்குவேன்னு உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா?” என்று எமோஷனாகி கேட்டான்.
“நான் உன்ன நம்பாம வேற யாரை நம்புவேன் அர்ஜுன்? நடக்கிறது எல்லாத்தையும் பாக்கும்போது எனக்கு பயமா தான் இருக்கு. வெளியே போகும்போது தான் ஏதாவது பிரச்சனைன்னு பார்த்தா நம்ம வீட்டுக்குள்ளேயே பிரச்சனை வந்துருச்சு.
நம்மள ஏதாவது பண்ணியே ஆகணும்னு யாரு நினைக்கிறாங்கன்னு எனக்கு தெரியல. அவங்க ஏன் அப்படி கங்கண கட்டிட்டு திரிகிறார்கன்னும் எனக்கு புரியல. பட் எனக்கு ஒன்னு மட்டும் தெரியும். உன்னால மட்டும் தான் எல்லாரையுமே ப்ரொடெக்ட் பண்ண முடியும்.
நானும் நம்ம குழந்தையும் மட்டுமில்ல.. நம்ம மொத்த ஃபேமிலியும் உன்ன நம்பி தான் இருக்காங்க. சோ நானே இதுக்கு அப்புறம் எமோஷனலாகி ஏதாவது சொல்லி அழுதாலும், ஏன் உன்னையே குறை சொன்னாலும் கூட நீ எப்பயும் வீக்காக கூடவே அர்ஜுன். என்ன ஆனாலும் நீ ஸ்ட்ராங்கா இருப்பேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணி குடு. நீ நல்லா இருந்தா நாங்க எல்லாருமே நல்லா இருப்போம்..!!” என்று தேன்மொழி சொல்ல,
தன்னை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஜீவன்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்த அர்ஜுன், “எனக்கு என்ன ஆனாலும் எனக்கு அத பத்தி கவலை இல்லை. கடைசி வரைக்கும் என் உசுர கொடுத்தாவது உங்க எல்லாரையும் பத்திரமா நான் பாத்துக்குவேன்.” என்று தன் மனதிற்குள் அவளிடம் சத்தியம் செய்தவன் தான் அதை வெளிப்படையாக சொன்னால் அவள் வருத்தப்படுவாள் என நினைத்து “ப்ராமிஸ்!” என்று மட்டும் சொன்னான்.
அதற்கு மேல் தன்னுடன் அர்ஜுன் இருக்கும்போது தான் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்று நினைத்து தேன்மொழி டாக்டர் என்ன சொன்னார் என்பதைப் பற்றி கூட விசாரிக்கவில்லை. அவள் இப்படியே எதுவும் கேட்காமல் இருந்தால், தானும் எதையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்ட அர்ஜுன் ஒரு நொடி கூட விலகாது தேன்மொழி உடனே இருந்தான்.
இதற்கு இடையில் தனது பழைய ஃபோன் நம்பரிலையே புது சிம் கார்டையும் மொபைல் ஃபோனையும் தயார் செய்துவிட்ட சுனில் அந்த மர்ம நபரிடம் இருந்து மீண்டும் தனக்கு காலோ மெசேஜோ வருவதற்காக காத்திருக்க தொடங்கினான்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)