அத்தியாயம் 170
மீரா மைக்கேலிடம் உணவுகளை பேக் செய்து கொண்டு வந்து தருவதாக சொல்ல, “ஓகே அப்படியே பேக் பண்ணி எடுத்துட்டு வந்துரு. நம்ம கிளம்பலாம் லேட் ஆகுது.” என்றான் அவன். கிச்சனை நோக்கி திரும்பி நடக்க தொடங்கி இருந்த மீரா அவன் சொன்னதைக் கேட்டு ஷாக் ஆகி அவன் பக்கம் திரும்பி “என்னது நானும் உங்க கூட வரணுமா? அங்க வந்து நான் என்ன சார் பண்ண போறேன்?” என்று கேட்டாள்.
“சும்மா சமைச்சு கொடுத்துட்டா உன் வேலை முடிஞ்சிருச்சுன்னு நெனச்சியா? வீட்ல இருக்குறவங்களால சமைச்சு ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரையும் பத்திரமா பாத்துக்க முடியாது என்று தானே உன்ன மாதிரி ஆளுங்கள வேலைக்கு வைக்கிறாங்க..
அப்ப நீ என்ன பண்ணனும்? உன் ஃபேமிலில இருக்கிறவங்க பசிக்குதுன்னு சொன்னா சமைச்சு வச்சுட்டு சாப்பிட்டா சாப்பிடுங்க இல்லைனா போங்கன்னு விட்டுட்டு போக மாட்டில அதே மாதிரி நீ சமச்சதை பத்திரமா கொண்டு வந்து கூடவே இருந்து இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டு அவங்கள டைமுக்கு சாப்பிட வைக்கணும். அது தான் உன் வேலை. அதுவும் ஆருத்ராவையும் வெளியே கூட்டிட்டு போகும்போது கூட ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்.
அதான் உன்னையும் வர சொல்றேன். சும்மா சீன் போட்டுட்டு நிக்காம எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்துட்டு வா.” என்று மைக்கேல் அவளுக்கு ஆர்டர் போட, அவனை முறைத்து பார்த்த மீரா “நீங்க இத முன்னாடியே சொல்லி இருந்தா நான் வெளிய போவதற்கு தகுந்த மாதிரி ப்ராப்பரா ரெடி ஆகி இருப்பேன்ல.. இவ்வளவு நேரம் கிச்சன்ல இருந்து ஒரே ஸ்வர்ட் ஆகி இப் பதான் நான் வெளியே வந்தேன். எப்படி நான் உடனே கிளம்பி உங்க கூட வர முடியும்?” என்று கேட்டாள்.
மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு அவளை மேலும் கீழும் பார்த்த மைக்கேல் “எப்படி இருந்தாலும் பாக்குறதுக்கு நீ நல்லா தான் இருக்க.. அப்புறம் என்ன? மோரோவர் நீ ஒரு பேபி சீட்டர் மாதிரி குழந்தைகளை பார்த்துக்கிறதுக்கு கூட வரப்போற.. அதுக்கு இது போதும். ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு. இப்ப நீ ரெடியாகறதுக்கு எல்லாம் உனக்கு டைம் கொடுத்துட்டு இருக்க முடியாது.” என திமிராக சொன்னான்.
“ச்சே.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ தெரியல.. தெரியாத் தனமா அன்னைக்கு போய் இந்த ஆள் மேல இடிச்சிட்டேன். அன்னைக்கு புடிச்ச சனி இன்னும் விடல. எப்ப பாத்தாலும் என்னை டார்கெட் பண்ணி ஏதாவது சொல்றதையே வேலையா வச்சிருக்கான் இவன்.
வெளிநாட்டு அரக்கன்! பாக்குறதுக்கு மட்டும் நல்லா வெள்ளை வெளேர்னு ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கான்.. ஆனா பண்றது எல்லாம் வில்லன் வேலை. ஏன் இவன் கொடுமைப்படுத்துவதற்கு அங்க ரஷ்யால எந்த இளிச்சவாயும் கிடைக்கலையா? இங்க இந்தியாவுக்கு கிளம்பி வந்து என் உயிரை வாங்கிட்டு இருக்கான்.” என்று கீழே குனிந்து முணுமுணுத்த மீரா “ஓகே சார், நீங்க சொன்னது எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு சார். நான் போய் ஃபுட்டை பேக் பண்ணி எடுத்துட்டு வந்துடறேன் சார்! ஓகேவா சார்?” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்டபடி அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அங்கே இருந்து வந்த கடுப்பில் வேகமாக சென்றாள்.
அவள் நடந்து செல்லும் போது அவளது சின்ன போனி டைல் அப்படியும் இப்படியுமாக ஆட, அவள் சமையல்காரர்களுக்கான வெள்ளை நிற யூனிஃபார்மை அணிந்திருந்ததால் அன்றுபோல இப்போதும் அவன் கண்ணுக்கு அவள் ஒரு குட்டி வாத்தை போல தெரிந்ததால் “quack quack!” என்று தனக்குத் தானே சொல்லிவிட்டு அவளைப் பார்த்து சிரித்தான்.
இந்த காட்சியை எல்லாம் பார்க்க வேண்டும் என தனது தலையில் எழுதி இருக்கிறது என நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட சுனில் சோஃபாவில் அமர்ந்து அவனது கேர்ள் ஃபிரண்ட் பாயளிடம் சாட்டிங் செய்ய தொடங்கினான். அவன் ஆசையாக அவளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, தனக்கு வேலை இருப்பதாக சொல்லி சென்று விட்டாள் பாயல்.
அதனால் எரிச்சல் அடைந்த சுனில் “என்ன ஆச்சு இவளுக்கு? இப்ப எல்லாம் என் கிட்ட சரியாவே பேச மாட்டேங்கிறா. இவ பண்றதை எல்லாம் பார்க்கும்போது என அவாய்ட் பண்ணனும்னு வேணும்னே இப்படி எல்லாம் பண்ற மாதிரி இருக்கு. ரீசண்டா நான் இவளை டென்ஷன் பண்ற மாதிரி எதுவுமே பண்ணலையே.. அப்புறம் ஏன் இப்படி பண்றான்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது.
ஆஆஆ.. பேபி… What’s wrong with you? திடீர்னு எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க? தெரிஞ்சே எப்படி உன்னால என்னை ஹர்ட் பண்ண முடியுது?” என்று யோசித்தவன் இனி அவளே பேசினாலும் கொஞ்ச நாளைக்கு அவளை தவிர்க்க விட வேண்டும். அப்போது தான் அவளுக்கு தனது வலியும் வேதனையும் புரியும் என நினைத்து தனது மொபைல் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்யப் போனான்.
அப்போது அவனுக்கு மீண்டும் அதே அன்நோன் நம்பரில் இருந்து “என்ன மை டியர் ஃப்ரெண்ட்.. ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல இருக்கு! உங்கள கூல் பண்றதுக்காக நான் வேணும்னா ஏதாவது பண்ணவா? நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க எதுவுமே சொல்லலையே!
நான் கூட நீங்க வந்த வேகத்துல சரவெடி மாதிரி படபடன்னு வெடிச்சு தள்ளி எல்லாரையும் ஒரு வழி பண்ணிடுவீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்க என்ன நமத்து போன பட்டாசு மாதிரி போயும் போயும் சின்ன புள்ளைங்கள கரெக்ட் பண்றதுக்கு அவங்க பின்னாடி சுத்திக்கிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க!
நம்மள மாதிரி ஆளுங்க எல்லாம் அப்பப்ப ஏதாவது பெருசா பண்ணனும். அப்ப தான் நமக்கு பிடிக்காதவங்களோட நிம்மதிய கெடுக்க முடியும். ஒரேடியா அடிச்சு கொல்லாம சுத்தி சைலன்ட்டா இருக்கும்போது தலைக்கு மேல ஒவ்வொரு ட்ராப்பா தண்ணியை விட்டா கூட கொஞ்ச நேரத்துக்கு மேல அது ஊசி மாதிரி குத்தும்.
அப்ப தான் நம்மளோட எனிமி ஒவ்வொரு செகண்டும் வலின்னா என்னன்னு அனுபவிச்சு சாவான். அப்பயும் அவன சாக விடாம காப்பாத்தி மறுபடியும் மறுபடியும் மரண பயத்தை காமிச்சிக்கிட்டே இருக்கணும்.
அவனே என்னை கொன்னுடுங்கன்னு நம்ம கிட்ட கெஞ்சினாலும் அவனுக்கு சாவை மட்டும் கொடுக்கக் கூடாது. Death is a escape. சோ வாழும் போதே அவங்களுக்கு நரகத்தை காமிக்கணும். அது தான் என் ஸ்டைல். உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க.. நான் இன்னைக்கே ஒரு டெமோ காட்டுறேன்.” என்று ஆங்கிலத்தில் ஒரு மெசேஜ் வந்தது.
அதை படித்துப் பார்த்து ஆடிப் போன சுனிலுக்கு இது சாதாரணமான மெசேஜ் போல தெரியவில்லை. இது எவ்வளவு தூரம் தான் செல்கிறது என பார்க்க வேண்டும் என்று அவனுக்கும் தோன்றியதால் “சும்மா அதையும் இதையும் சொல்லி பில்டப் பண்ணிட்டு இருக்குறதுக்கு பதிலா உன்னால என்ன முடியும்னு செஞ்சு காட்டு. அப்ப தான் நான் உன்னை நம்புவேன்.” என்று ரிப்ளை அனுப்பினான்.
ஆபீஸில் இருந்த அர்ஜூன் தன் முன்னே இருந்த கம்ப்யூட்டர் ஸ்கிரீனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் தான் அதை பார்த்துக் கொண்டு இருந்ததே தவிர, அவனது மனம் முழுவதும் கலவையான உணர்ச்சிகள். எப்படி முயற்சி செய்தாலும் தங்களை அழிக்கத் துடிக்கும் அந்த ஆள் அல்லது கும்பல் யார் என தெரியாமல் அவனால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை.
இந்த நேரத்தில் குழந்தைகளை வேறு வெளியில் அனுப்புவதால் அவனுக்கு ஒரு பக்கம் பதட்டமாக இருந்தாலும் இன்னொரு பக்கம், “எவனோ ஒருத்தனுக்கு பயந்துட்டு நான் என் புள்ளைங்கள ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வீட்டுக்குள்ளயே வச்சுட்டு இருக்க முடியுமா? அவங்களோட ஹாலிடேஸ் முடிஞ்சிடுச்சுனா ஹோம் ஸ்கூலிங் வைக்காம டைரக்டா அவங்களை தேன்மொழி சொன்ன மாதிரி ஸ்கூலுக்கு அனுப்பினா தான் அவங்களால நார்மல் லைஃபை வாழ முடியும்.
எனக்கு பொறந்த பாவத்துக்கு இந்த சின்ன வயசுலயே அவங்க நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க. இதுல அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சின்ன சின்ன நியாயமான சந்தோஷத்தை கூட நான் கிடைக்க விடாம பண்ணக் கூடாது. என்ன நடந்தாலும், எத்தனை பிரச்சனை வந்தாலும் ஒரு அப்பாவா அவங்கள பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட responsibility.” என்று நினைத்தவன், மைக்கேலுக்கு கால் செய்து அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் எனவே விசாரித்தான்.
“இப்ப தான் நாங்க அனீஸ்மேன்ட் பார்க்குக்கு வந்தோம். சுனில் அவங்க கூட விளையாடிட்டு இருக்கான். நான் அவங்கள வாட்ச் பண்ணிட்டு இருக்கேன். நம்ம ஆளுங்க மஃப்டில இந்த ஏரியா ஃபுல்லா இருக்காங்க. சோ நத்திங் டு வரி அர்ஜுன்.” என்று மைக்கேல் சொன்னதைக் கேட்டவுடன் நான் அர்ஜுனுக்கு கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது.
பின் பிரிட்டோ வந்து வேலை சம்பந்தமாக அவனிடம் பேச தொடங்கியதால் வழக்கம்போல் கண்டதை யோசிக்க வேண்டாம் என நினைத்து வேலையில் மூழ்கினான் அர்ஜுன்.
கோவிலில் தேன்மொழியின் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என நினைத்து சாமி கும்பிட்டு விட்டு தேன்மொழியும், ஜானகியும், சோனியாவும் கோவிலை விட்டு வெளியில் வந்தார்கள்.
அப்போதும் கூட தேன்மொழியின் முகத்தில் அப்பட்டமாக கவலையின் ரேகைகள் தெரிந்ததால் அவள் கையை ஆதரவாக பிடித்துக் கொண்ட சோனியா “வாட் ஹப்பெண்ட் டியர்? இந்த பிரக்னன்சியை நினைக்கும் போது பயமா இருக்கா? ஃபர்ஸ்ட் டைம் கன்சீவ் ஆகும்போது எல்லாருக்கும் இப்படி தான் இருக்கும்.” என்று ஆங்கிலத்தில் சொல்ல,
“அது இல்ல ஆன்ட்டி. எனக்கு என்னமோ நம்மள சுத்தி எல்லாமே தப்பு தப்பா நடக்கிற மாதிரி இருக்கு. நடக்கிற எதுக்கும் நம்ம காரணம் இல்ல. ஆனா என்னமோ தெரியல எல்லாமே நெகடிவ்வா இருக்கு.
கோவிலுக்கு வந்தாளாவது கொஞ்சம் பாசிட்டிவிட்டி கிடைக்கும்னு நினைச்சேன். பட் என்னமோ இன்னும் எனக்கு மனசே சரியில்ல.” என்றாள் தேன்மொழி.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)