அத்தியாயம் 148
மாலை வேளையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள தனது பங்களா வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன். அவனுடன் மைக்கிலும், பிரிட்டோவும் வந்திருந்தார்கள். லாஸ்ட்டாக தேன்மொழி தன்னிடம் எமோஷனாக பேசி இருந்ததால் முதலில் சென்று அவளை சந்திக்க வேண்டும் என நினைத்த அர்ஜுன் தனது ரூமிற்கு சென்றான்.
அங்கே அவளும் இல்லை, அவளது உடமைகளும் இல்லை. அதை பார்த்து ஷாக்கான அர்ஜுன் “அப்ப நிஜமாவே அவ கோச்சிக்கிட்டு கிளம்பி அவங்க அம்மா வீட்டுக்கு போய்டாளா? அவ மட்டும் தான் போனாளா, அத்தையையும், ஆதவனையும் சேர்த்து கூட்டிட்டு போய்ட்டாளான்னு தெரியலையே..!!” என நினைத்தவன் “மம்மி.. மம்மி.. மம்மி! Where are you?” என்று கத்தியபடி வெளியில் சென்றான்.
தேன்மொழிக்காக ஸ்பெஷல் ஆன சாப்பாடுகளை செய்து அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என நினைத்து கிச்சனுக்கு சென்று இருந்த ஜானகி அர்ஜுனின் குரல் கேட்டு அங்கே வந்து “நீ வந்துட்டியா அர்ஜுன்.. நான் உன் மேல கோவமா இருக்கேன். ஏன் இப்படி எல்லாம் பண்ற?” என்று கேட்க, பெருமூச்சு விட்ட அர்ஜுன் “உங்களுக்கும் என் மேல கோபமா மம்மி? இப்படி எல்லாரும் என் மேல கோவப்பட்டா நான் எங்க தான் போறது? தேன்மொழி எங்க? நிஜமாவே கோச்சுட்டு அகைன் அவங்க வீட்டுக்கு கிளம்பி போயிட்டாளா?” என்று உடைந்த குரலில் கேட்டான்.
“பின்ன நீ அவளை கண்டுக்காம எனக்கு என்னனு இருந்தா அவளும் பாவம் என்ன பண்ணுவா? ஸ்டார்டிங்ல இருந்து அவ உன்ன புரிஞ்சுக்கணும் உனக்கு சப்போர்ட்டிவா இருக்கணும்னு தான் நினைச்சா. ஆனா நீ அவ கிட்ட அப்படி இல்ல அர்ஜுன். அதான் அவ கோவப்பட்டு கிளம்பி போயிட்டா.” என்ன ஜானகி சொல்ல, “என்ன மாம் பேசுறீங்க? என்ன சுத்தி எவ்ளோ ப்ராப்ளம்ஸ் நடக்குது.. இது எல்லாத்தையும் தாண்டி இன்னும் எனக்கு பைத்தியம் பிடிக்காம நான் என்னை பார்த்துக்கிறதே பெரிய விஷயம்.
எனக்கு கொஞ்சம் கூட டைம் கொடுக்காம நான் வர வரைக்கும் கூட வெயிட் பண்ணாம அவ தான் கிளம்பி போறேன்னு சொன்னா, நீங்க அவளை ஏதாச்சு சொல்லி ஸ்டாப் பண்ண மாட்டீங்களா? இப்ப அவங்க வீட்டுக்கு போய் நான் அவ கிட்ட பேசி அவளை கன்வின்ஸ் பண்றதுன்னு முதல்ல இருந்து எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணனுமா?” என்று கோபமாக கேட்டான் அர்ஜுன்.
“ஆமா பண்ணு, இப்ப அதனால என்ன? அவ உன் பொண்டாட்டி தானே.. உன் மேல அவ கோச்சுக்கிட்டு கிளம்பி போனா நீ தான் அவள போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரணும். உனக்கும் சரி, உங்க அப்பாவுக்கும் சரி இன்னும் ஒரு விஷயம் சுத்தமா புரிய மாட்டேங்குது. நம்ம பிசினஸ் பண்றது, சம்பாதிக்கிறது எல்லாமே நம்ம சந்தோஷமா வாழ்வதற்காகத் தான். பட் நீங்க எல்லாரும் வாழ்றதுக்காக சம்பாதிக்கிறீர்களா இல்ல சம்பாதிச்சு சொத்து சேர்க்கறதுக்காகவே வாழ்றீங்களானு தெரியல.
தேன்மொழி சின்ன பொண்ணு அர்ஜுன். இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ல நம்ம நிறைய பார்த்திருக்கோம். சோ நமக்கு எல்லாத்தையும் ஒரே டைம்ல ஹாண்டில் பண்ணி பழகிடுச்சு. பட் அவளுக்கு அப்படி இருக்காது. She is just a normal girl. அவ பிரக்னண்டா இருக்குற இந்த டைம்ல அவ ஹஸ்பண்ட் அவ கிட்ட பாசமா பேசணும். அவ கூடவே இருந்து அவளை பாத்துக்கணும்னு நினைக்கிறது இல்ல ஒன்னும் தப்பே இல்லையே.. தோணுச்சு அவ சொன்னதும் எனக்கு சரின்னு பட்டுச்சு. அதான் பத்திரமா போயிட்டு வாமான்னு நான அனுப்பி வச்சிட்டேன். உங்களுக்குள்ள இருக்கிற இஸ்யூவை நீங்க தான் பேசி சால்வ் பண்ணிக்கணும். இதுக்கு நடுவுல என்ன இழுக்காத.” என கோபமாக சொல்லிவிட்டு சென்று விட்டாள் ஜானகி.
அர்ஜூன் உடன் வந்திருந்த மைக்கேல் முதல் வேலையாக இப்போது அவர்கள் தங்கி இருக்கும் வீட்டை சுற்றி பார்த்தான். அவனை அடையாளம் கண்டு கொண்டு அந்த வீட்டில் இருக்கும் ஒரு சிலர் அவனிடம் நலம் விசாரித்தார்கள். இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்தான் ஆகாஷ். இப்போது லிண்டாவின் உடல்நிலை ஓரளவிற்கு சீராகி இருந்தது.
இருப்பினும் அவள் முகத்தில் அங்காகே ஒரு சில இடத்தில் மார்க்ஸ் இருந்தது. தன்னை பிரிந்து ஆகாஷ் மிகவும் கஷ்டப்படுவதால் இதற்கு மேலும் அவனை விலக்கி வைக்க வேண்டாம் என நினைத்து லிண்டா கெஸ்ட் ரூமில் இருந்து தங்களது ரூமிற்கு வந்தாள்.
லிண்டா தன்னை அவாய்டு செய்வதால் வீட்டிற்கு வர பிடிக்காமல் ஆபீஸில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி இருந்த ஆகாஷ் இப்போது தனது ரூமில் லிண்டாவை பார்த்தவுடன் சந்தோஷப்பட்டு ஓடிச் சென்று அவளை கட்டிப்பிடித்துக் கொண்டான். அவளது பளிங்கு போன்று பால் நிறத்தில் இருக்கும் தேகத்தில் இன்னும் அங்கே தழும்புகள் இருக்க, தன்னால் அவளை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை என நினைத்து வருத்தப்பட்ட ஆகாஷ் “I am sorry lin!” என்று துக்கம் தொண்டையை அடைக்க சொன்னான். அவன் கண்கள் லேசாக கலங்கியது.
“இட்ஸ் ஓகே பேபி, ஏதோ தெரியாம சமைக்கும்போது பினட்ஸ் நான் சாப்பிட்ட சாப்பாட்டில வந்து இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? I am alright now. இந்த மார்க்ஸ் கூட இன்னும் கொஞ்சம் நல்லா போயிடும். அப்புறம் எதுக்கு நீ ஃபீல் பண்ற?” என்று கேட்ட லிண்டா தானும் அவனை கட்டி அணைத்து அஙவர் மீது தன் காதலை பொழிந்து கொண்டிருந்தாள்.
அந்த நேரம் அவர்களது ரூமிற்கு வெளியில் நின்று மைக்கேல் காலிங் பெல்லை அடித்தான். அந்த சத்தம் கேட்டு லிண்டாவை விட்டு பிரிந்த ஆகாஷ் வெளியில் சென்று பார்க்க, “hi bro what’s up? நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.” என்றான் மைக்கேல்.
“ஹே ப்ரோ நீங்களா.. இத்தனை வருஷத்துக்கு அப்புறமா உங்களை இந்தியால பாப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல. Nice to see you man!” என்ற ஆகாஷ் மைக்கிலை அணைத்துக்கொள்ள, “அர்ஜுன் என்னை வர சொல்லி கூப்பிட்டான். chief ஆர்டர் போட்டா வந்து தானே ஆகணும்.. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன். ஆக்சுவலி நான் உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. நம்ம எங்கயாவது தனியா போய் பேசலாமா?” என்று கேட்டான் மைக்கேல்.
இவ்வளவு தூரம் அர்ஜுன் அழைத்ததற்காக மைக்கேல் இந்தியா வந்து இருக்கிறான் என்றால் கண்டிப்பாக அதில் முக்கியமான விஷயமாக தான் இருக்கும் என்று நினைத்த ஆகாஷ் தனது ரூமிற்குள் எட்டி பார்த்து ”அர்ஜுனோட ஃபிரண்டு ஒருத்தர் வந்திருக்காரு! நான் அவர் கிட்ட பேசிட்டு வந்துடறேன் லின். Don’t wait for me, have a pleasant sleep baby. Love you, bye.” என லிண்டாவிடம் சொல்லிவிட்டு மைக்கிலுடன் தனியாக சென்றான்.
“first of all, நான் இங்க எதுக்காக வந்திருக்கிறேன்னு அர்ஜுன், பிரிட்டோ, கிளாரா மூணு பேரை தவிர வேற யாருக்கும் தெரியாது. எனக்கு உன் கிட்ட பர்சனலா கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு. அதான் நானே டைரக்டா வந்து உன் கிட்ட பேசுறேன். மத்தவங்கள பொறுத்த வரைக்கும் நான் இங்கே சும்மா அர்ஜுன் கூட இந்தியாவை சுத்தி பார்க்க வந்ததா தான் மெயின்டைன் பண்ண போறேன்.” என சுற்றி தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தபடியே மெல்லிய குரலில் மைக்கேல் ஆகாஷிடம் சொன்னான்.
“புரியுது ப்ரோ, உங்களுக்கு என் கிட்ட இருந்து என்னென்ன டீடைல்ஸ் வேணும்னு கேளுங்க. கண்டிப்பா எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் நான் சொல்றேன். அண்ட் எப்படியோ நீங்க ஃபர்ஸ்ட் டைம் இந்தியா வந்திருக்கீங்க.. எங்கயாவது போய் சுத்தி பாக்கணும்னு நீங்க நினைச்சா கூட சொல்லுங்க. நான் உங்களுக்கு அதுக்கான எல்லா arrangements-ம் பண்ணி தரேன்.” என்ற ஆகாஷ் அவனுடன் மொட்டை மாடிக்கு சென்றான்.
“நான் இங்க வந்த உடனே லிண்டாவுக்கு அலர்ஜி ஆன அன்னைக்கு என்ன ஆச்சுன்னு எல்லார் கிட்டயும் கேஷுவலா கேட்கிற மாதிரி விசாரிச்சு பாத்தேன். அன்னைக்கு சாப்பாட்டுல பீநட்ஸ் ஆட் பண்ணவே இல்லைன்னு கிச்சன்ல ஒர்க் பண்றவங்க எல்லாருமே sure-ஆ சொன்னாங்க.
அர்ஜுனோட wife கிட்ட கூட கால் பண்ணி பேசி பார்த்தேன். அவங்களும் அன்னைக்கு லிண்டா கூட தான் சேர்ந்து சாப்பிட்டு இருக்காங்க. சாப்பாட்டுல பீனட்ஸ் இல்லைன்னு அவங்க உட்பட ஜானகி ஆன்ட்டி, உன் சிஸ்டர் ஜனனி எல்லாரும் அத தான் சொன்னாங்க. எனக்கு அதுதான் இன்னும் டவுட்டா இருக்கு.
தேன்மொழி கேட்கும்போது லிண்டா அன்னைக்கு டே ஃபுல்லா பீனட்ஸ் மாதிரி எதுவும் சாப்பிடலைன்னு சொல்லி இருக்காங்க. அப்புறம் எங்க இருந்து அது அவங்க சாப்பாட்டுக்குள்ள வந்துச்சுன்னு எனக்கே டவுட்டா தான் இருக்குன்னு அவங்க என்கிட்ட சொன்னாங்க. உனக்கு யார் மேலயாவது டவுட்டா இருக்கா? நான் நாளைக்கு சிசிடிவி கேமராவை செக் பண்ணி பார்க்கலாம் என்று இருக்கிறேன்.” என மைக்கில் சொல்ல,
“அண்ணி என் கிட்டயும் அத சொன்னாங்க. நான் அப்பவே சிசிடிவி கேமராவை செக் பண்ணி பார்த்தேன். அதுல எதுவுமே தப்பா இல்ல. கிச்சன்ல கூட இங்க கேமரா இருக்கு. லாரா கிட்ட சொல்லி அதைக் கூட செக் பண்ண சொன்னேன். எங்கயுமே சந்தேகப்படுற மாதிரி எதுவுமே இல்ல ப்ரோ. ஆனா லிண்டாக்கு அலர்ஜி ஆகியிருக்கு. அது தான் என்னோட சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்து. அந்த இன்சிடென்ட் நடந்ததுக்கப்புறமா அடுத்தடுத்து எல்லாமே தப்பு தப்பா நடக்குது.
என்னமோ யாரோ பிளான் பண்ணியே பண்ற மாதிரி இருக்கு. நீங்க தான் இதுல நிஜமாகவே என்ன நடந்திருக்குன்னு கண்டுபிடிக்கணும். ஐ திங்க் அர்ஜுன் அதுக்காக தான் உங்கள இங்க வர வச்சுருப்பானு நினைக்கிறேன்.” என்றான் ஆகாஷ். ஏதோ தீவிர சிந்தனையுடன் அவன் சொன்ன அனைத்தையும் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தான் மைக்கேல்.
உதயா தனக்காக வாங்கி வந்த உணவுப் பொருட்களை எல்லாம் பார்த்தபடி தனது ரூமில் தனியாக அமர்ந்திருந்த தேன்மொழி “அர்ஜுன தவிர மத்த எல்லாருமே என் மேல அக்கறையா இருக்காங்க. நான் பிரக்னண்டா இருக்கேன்னு எனக்காக நிறைய பார்த்து பார்த்து செய்றாங்க. ஆனா இவன் மட்டும் ஏன் தான் இப்படி இருக்கானோ.. ஆருத்ராவும் சித்தார்த்தும் இந்த ஜூலி பிரச்சனை பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க வீட்ல குட்டி பாப்பா வரப்போகுதுன்னு ஜாலியா இருந்தாங்க. இப்ப அவங்க கூட என்ன கண்டுக்கறதில்ல . எல்லாருக்கும் அவங்களுக்கு புடிக்கிற வரைக்கும் தான் நம்ம நல்லவங்க.
ஏதோ ஒரு விதத்துல அவங்க நம்மளை தப்பா புரிஞ்சுகிட்டா, அதுக்கு முன்னாடி நம்ம செஞ்சது எல்லாத்தையும் ஒரே செகண்ட்ல மறந்திடறாங்க. உடனே நம்ம ஆவாதவங்களாகிடுறோம். இந்நேரம் அர்ஜுன் இந்தியா வந்திருப்பானே.. இப்ப வரைக்கும் ஒரு கால் கூட பண்ணி அவன் என் கிட்ட பேசல. நான் இங்க கிளம்பி வந்தது அவனுக்கு தெரிஞ்சு இருக்கும் இல்ல.. அப்புறம் ஏன் பேசாம இருக்கான்? அந்த அளவுக்கு நான் அவனுக்கு வேண்டாதவ ஆகிட்டேனா?” என தனக்குத்தானே கேட்டுக் கொண்டு சோகமாக அவளது மொபைல் ஃபோனை எடுத்து பார்த்தாள்.
அர்ஜுனிடம் இருந்து அவளுக்கு எந்த ஒரு காலோ மெசேஜோ வந்திருக்கவில்லை. ஆனால் அவள் சமூக வலைதளங்களுக்குள் நுழையும்போது அவனைப் பற்றிய ஒரு செய்தி அவள் கண்களில் பட்டது. அதைப் பார்த்தவுடன் சோகமாக இருந்த தேன்மொழியின் முகம் இப்போது பதட்டம் அடைந்தது.
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)