Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 140

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 140

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 140

தாங்கள் ரஷ்யா செல்வதற்கு முன்பாக தேன்மொழியிடம் ஒரு வார்த்தை பேசலாம் என நினைத்து ஜானகியும், பிரதாப்பும் அவளைக் காண சென்றார்கள். “கொஞ்ச நாள் இடம் மாறி இருந்தா தான் குழந்தைகளுக்கு நீ அவங்க மேல வச்சிருக்கற பாசம் புரியும்னு எனக்கு தோணுது மா தேன்மொழி. இருந்தாலும் அவங்கள அந்த தனியா விட முடியாதுல.. அதான் நானும் உங்க மாமாவும் அவங்க கூடயே ரஷ்யா கிளம்புறோம்.” என்று ஜானகி சொல்ல, “ஏன்னு தெரியல அத்தை. எனக்கு என்னமோ எனக்கானவங்க எல்லாரும் என்ன விட்டுட்டு கொஞ்சம் கொஞ்சமா தூரமா போற மாதிரி ஃபீல் ஆகுது. அர்ஜுன் வீட்டுக்கு வந்தாருன்னா அவர் கிட்ட பேசினா பெட்டரா இருக்குன்னு நினைச்சேன். அவர் என்ன பண்றாருன்னு தெரியல. நான் கால் பண்ணா கூட எடுக்க மாட்டேங்கறாரு.” என்று வாடிய முகத்துடன் சொன்ன தேன்மொழி தலை குனிந்தாள்.

“ஆருத்ரா உன் கிட்ட வந்து பேசிட்டு போன உடனே நான் அர்ஜுனுக்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டேனே மா.. அவன் அப்பவே வீட்டுக்கு வந்துட்டான். உனக்கு தெரியாதா? இன்னுமா அவன் உன்ன வந்து பாக்கல?” என்று ஆச்சரியமாக ஜானகி கேட்க, “வீட்டுக்கு வந்தும் நீ ஏன் என்ன வந்து பாக்கல அர்ஜுன்? சித்தார்த் கேட்ட மாதிரி நான் அவனிடமும் ஆருத்ரா கிட்டயும் பாசமா இருக்கிற மாதிரி நடிக்கிறேன்னு நீயும் நினைச்சுட்டியா?” என்று தனக்குள் அர்ஜுனிடம் கேட்டுக் கொண்ட தேன்மொழிக்கு கண்கள் கலங்கியது.

ஒரு ஓரமாக நின்று  நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த விஜயா தன் மகளை காணும்போது வருத்தமாக இருந்தாலும், அவர்களது குடும்ப விவகாரத்திற்குள் தான் நேரடியாக தலையிடுவது நன்றாக இருக்காது என நினைத்து அமைதியாகவே இருந்தாள். “நீ வருத்தப்படாத தேன்மொழி எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும். நீ உன் ஹெல்த்தை பாரு. சீக்கிரமா நாங்க ரஷ்யால இருந்து இங்க வர ட்ரை பண்றோம். இல்லனா இங்க வந்து உன்னை கூட்டிட்டு போறேன் சரியா?” என்று அவள் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு ஜானகி கேட்க, “அர்ஜுனும் எங்க கூட ரஷ்யா வரான். ஆல்ரெடி  அவன் இங்கு பார்க்க வேண்டிய வேலை நிறைய பெண்டிங்  வொர்க் இருந்துச்சு. இப்ப குழந்தைங்க ரெண்டு பேரும் ரஷ்யா போகணும்னு ஆரம்பிக்கிறதுனால வேற வழி இல்லாம உடனே அர்ஜுனும் கிளம்ப ரெடி ஆகிட்டான்.

இந்த stressful situation-ல அவன் ரொம்ப disturbed ஆ இருக்கான் மா. அதான் உன் கிட்ட வந்து என்ன பேசுறதுன்னு யோசிச்சிட்டே பேசாம இருந்து இருப்பான்னு நினைக்கிறேன். நீ பர்சனலா யோசிச்சு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி உனக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆயிடுச்சின்னா அது இன்னும் எல்லாருக்கும் கஷ்டம் தான். சோ சுச்சுவேஷனை புரிஞ்சுக்கிட்டு நீ இப்ப matured-ஆ நடந்துகிட்டா நல்லா இருக்கும்னு நான் எதிர்பார்க்கிறேன். I hope you understand.” என்றார் பிரதாப்.

“எல்லாரையும் நான் தான் புரிஞ்சிக்கணும். ஆனா என்னை மட்டும் யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க.” என நினைத்து உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும் வெளியில் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்ட தேன்மொழி ‌“புரியுது மாமா, என்னை நான் பாத்துக்குறேன். என்னை பத்தி யோசித்து கவலைப்படாதீங்க.‌ சித்தார்த்தையும், ஆருத்ராவையும் பார்த்துக்கோங்க அது போதும்.” என்றாள். பிரசாத் சரி என்று தலையாட்ட, அவரும் ஜானகியும் அனைவருக்கும் பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

தனக்கு இங்கிருக்கும் ஆடைகள் அனைத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இருக்காததால் முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு இறுதி வரையிலும் தேன்மொழியை சென்று பார்க்காமல் தவிர்த்து விட்ட அர்ஜுன் குழந்தைகளுடன் ஜானகி மற்றும் பிரதாப் இருவரையும் அழைத்துக் கொண்டு தங்களுக்கான பிரைவேட் ஜெட்ற விமானத்தில் 8 மணி அளவில் கிளம்பி ரஷ்யா சென்றான். அவர்கள் கிளம்பி விட்டார்கள் என்ற தகவல் மட்டும் தான் தேன்மொழியை சென்றடைந்தது.

“அத்தையும், மாமாவுமாவது வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டு போனாங்க. ஆனா இந்த அர்ஜுனுக்கு என்ன வந்துச்சு? எதுக்கு வேணும்னே என்னை அவாய்ட் பண்றான்? என்ன புரிஞ்சுக்காம சித்தார்த்தும் ஆருத்ராவும் என் மேல கோவப்படுறதுக்கு நான் என்ன பண்ணுவேன்?” என்று நினைத்து தேன்மொழி சோகமே உருவாக அமர்ந்திருக்க, “எனக்கு செமையா பசிக்குது. வா அக்கா சாப்பிட போலாம். நீ வராம நான் சாப்பிட மாட்டேன்.” என்று சொல்லி அடம்பிடித்து தேன்மொழியை சாப்பிட அழைத்து சென்றான் ஆதவன். அவர்களுடன் விஜயாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தாள்.

மற்றவர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, தேன்மொழி மட்டும் ஏதோ காக்கா கொத்துவதை போல பேருக்கு ஏதோ கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளையே கவனித்துக் கொண்டு இருந்த விஜயா “மாப்பிள்ளை உன் கிட்ட ஃபோன் பண்ணி பேசினாரா?” என்று விசாரிக்க, “இல்ல மா, அவரும் எனக்கு கால் பண்ணல. நான் கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறாரு. ஒருவேளை குழந்தைங்க என்னை புரிஞ்சுக்காம என் மேல கோவப்படுற மாதிரி அவரும் என் மேல கோவமா இருக்காரா என்னன்னு தெரியல.” என்று சோகமாக சொன்னாள் தேன்மொழி.

“சேச்சே.. அப்படி எல்லாம் பொண்ணு இருக்காது டி‌. நம்ம மாப்பிள்ளைக்கு உன்ன பத்தி தெரியாதா என்ன? சம்மந்தி சொன்ன மாதிரி அவருக்கு உன்ன பாக்க சங்கடமா இருக்கும்னு தோணுது. அதான் மனுஷன் உன்ன பாக்காம கிளம்பி போயிட்டாரு. அவராவே கால் பண்ணுவாரு நீ கொஞ்ச நேரம் பொறுத்து பாரு. அவர் பேசவே இல்லைனா என் கிட்ட சொல்லு. நானே அவருக்கு ஃபோன போட்டு என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்டு புடுறேன்.  அப்ப தான் என் மனசு நிம்மதியா இருக்கும்.” என்றாள் விஜயா.

“இல்ல மா வேண்டாம். அவரே பாவம் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காரு. நமக்கு நம்ம குடும்ப பிரச்சினை மட்டும் தான் பெருசா தெரியுது.  அவருக்கு அதோட சேர்த்து ஆபீஸுயும் சமாளிக்கணும்.  அவரும் எத்தனைய தான் மேனேஜ் பண்ணுவாரு? பாக்கலாம் என்ன நடக்குதுன்னு. நம்மளா போய் எதுவும் பேச வேண்டாம்.”  என்று சொல்லி தன் அம்மாவை ஆப் செய்து விட்டால் தேன்மொழி.‌ இப்போதும் கணவன், மனைவியின் தனிப்பட்ட விஷயங்களில் வாலண்டீராக சென்று தன் தலையை கொடுக்க வேண்டாம் என்று நினைத்து விஜய் எதுவும் அவளை மறுத்து பேசவில்லை.

அனைவரும் ஒரே ஜெட் விமானத்தில் பயணித்தாலும் கூட, சித்தார்த், ஆருத்ரா இருவரும் அர்ஜுன் இருக்கும் திசை பக்கம் கூட வரவில்லை. அதனால் சோகமே உருவாக தனியாக ஒரு அறையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த கருமையான வானத்தை பார்த்த அர்ஜுனிற்கு தன் வாழ்க்கையும் அப்படித் தான் இருள் பூசி கசப்பானதாக மாறிவிட்டதை தோன்றியது. இப்போது அவனது என்ன ஓட்டங்கள் முழுவதையும் சியா தான் ஆக்கிரமித்து இருந்தாள்.

தொடர்ந்து தன் வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த அர்ஜுன் அவனது மொபைல் ஃபோனில் இருந்த அவன் மற்றும் சியாவின் சில ரொமான்டிக்கான புகைப்படங்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அதில் அவர்கள் இருவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கமாக ஒருவரை ஒருவர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் பொங்கி வழியும் காதல் அந்த ஃபோட்டோவில் கூட அப்பாட்டமாக தெரிந்தது.

வெகு நேரமாக அதையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் “இப்ப யோசிச்சு பார்த்தா நான் என்னமோ உனக்கு துரோகம் பண்ணிட்டனோன்னு எனக்கே ஒரு செகண்ட் தோணுது சியா. என்ன தான் தேன்மொழி பாக்குறதுக்கு உன்ன மாதிரி இருந்தாலும், அவளால நீ ஆகிட முடியாதுல.. அவ வந்ததுக்கு அப்புறமா நான் மொத்தமா உன்னை மறந்துட்டேன்.  போல இருக்கு அதிகமா இப்ப எல்லாம் உன்ன பத்தி நினைக்கிறதே இல்ல.

அதுவும் இப்ப இந்தியாவுக்கு வந்ததுக்கு அப்புறமா இந்த மாதிரி உன் ஃபோட்டோவ நான் லாஸ்ட்டா எப்ப எடுத்து பாத்தேன்னு கூட எனக்கு ஞாபகம் இல்ல. ஒருவேளை சித்தார்த் சொன்ன மாதிரி நெஜமாவே நான் தேன்மொழியை உன்னோட ரீபிளேஸ்மென்ட்டா நெனச்சு அவ வந்ததுக்கு அப்புறமா உன்ன சுத்தமா நினைக்காம இருந்துட்டனா? உன் மேல எனக்கு இருந்த லவ் குறைஞ்சிடுச்சா?” என்று தன் மனதிற்குள் அவளிடம் கேட்டுக் கேட்டான்.

பாவம் அங்கே அவனது ஞாபகங்களிலும், அவனுடன் இருக்கும் புகைப்படங்களிலும் மட்டுமே வாழ்ந்து கொண்டு இருக்கும் அவனது சியாவால்  அவனது கேள்விகளுக்கு பதில் சொல்லி அவன் குற்ற உணர்ச்சியை காணாமல் போக செய்ய வைக்க முடியவில்லை. அப்படியே நேரம் செல்ல செல்ல, சியாவைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்த அர்ஜுன் இத்தனை நாட்களாக தான் அவளை கண்டுக் கொள்ளவில்லை என நினைத்து அவனாகவே தன் மீது குற்றம் சுமத்தி இப்போது தெரிந்தே தன் கண் முன் இருக்கும் தேன்மொழியை கண்டு கொள்ளாமல் இருந்தான்.

விடியற்காலை நேரத்தில் அவர்களது ஜெட் விமானம் ரஷ்யாவை சென்றடைந்தது. பிரிட்டோவும், அர்ஜுனன் ஒரு காரில் ஏறிக்கொள்ள, ஜானகியும், பிரதாப்பும் குழந்தைகளுடன் வேறு ஒரு காரில் ஏறி ஏகே palace-ஐ நோக்கி பயணிக்க தொடங்கினார்கள்.

பிரிட்டோ காரை ஓட்டிக் கொண்டிருக்க, “உனக்கு ட்ரு லவ்னா என்னன்னு தெரியுமா டா?” என்று உடைந்த குரலில் அர்ஜுன் கேட்க, “என்ன chief என் கிட்ட போய் லவ்னா என்னனு கேக்குறீங்க.. நானே உங்கள பாத்து தான் லவ் பண்ண கத்துக்கிட்டேன். உங்களை விடவா எனக்கு இதுல எக்ஸ்பிரியன்ஸ் இருக்க போகுது!” என்று ஆச்சரியமாக கேட்டான் பிரிட்டோ.

“இல்ல எனக்கு தெரிஞ்சு இந்த ட்ரூ லவ் ஃபீலிங்ஸ் எல்லாம் நம்ம வாழ்க்கையில ஒருத்தர் மேல தான் வரும். என்ன நடந்தாலும் நம்ம அந்த ஒருத்தரை மட்டும் தான் கடைசி வரைக்கும் லவ் பண்ணுவோம். அவங்க இருந்தாலும் இல்லைனாளும் அந்த லவ் எப்பயும் மாறாது. அது தானே ட்ரு லவ்..

இத்தனை நாளா நானும் சியாவை அப்படி லவ் பண்ணிட்டு இருக்கேன்னு தான் நினைச்சேன். ஆனா இப்ப அப்படி இல்லையோன்னு தோணுது டா. Of course எனக்கு ‌தேன்மொழி இம்பார்டன்ட் தான். எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். அதுக்காக அவளுக்கு முன்னாடியே என் லைஃப்ல வந்து, இத்தனை வருஷங்கள் என் கூட வாழ்ந்து கடைசில என் கையாலேயே எனக்காக செத்துப்போன என் சியா அவளை விட எனக்கு முக்கியம் தானே.. அப்ப நான் தேன் மொழிய லவ் பண்ணி தப்பு பண்ணிட்டேனா?

எனக்கு தேன்மொழி மேல இருக்கிற ஃபீலிங்ஸ் உண்மையானதுன்னா, சியா மேல இருந்த ஃபீலிங்ஸ் போயிருச்சா? இல்ல இன்னும் உண்மையா எனக்கு தேன்மொழி மேல ஃபீலிங்ஸ் வரவே இல்லையா என்னன்னு ஒன்னும் புரியல.” என்று ஏதோ பைத்தியம் பிடித்தவனை போல என்ன நடக்கிறது என்று புரியாமல் பிரிட்டோவிடம் புலம்பி கொண்டிருந்தான் அர்ஜூன்.

  • மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured