பிரிட்டோ ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அர்ஜுனிடம் சொல்கிறான். “என்னன்னு சொல்லு.” என்று அவன் கேட்க, “chief நீங்க முன்னாடி உங்களுக்கு அடிபட்டு இருக்கும்போது தேன்மொழி மேடம் கிட்ட நைட் கிளப் ஒன்னு வாங்க போறதா ஃபர்ஸ்ட் பொய் சொல்லிட்டு அப்புறமா அதை உண்மையாக்கனும்னு என்னை ஒரு கிளப் பார்க்க சொன்னீங்கள்ல.. நான் சூஸ் பண்ணது உங்களுக்கு கூட புடிச்சிருந்துச்சே..
அந்த கிளப் ஓனர் ராகவேந்திர குமாரன் நம்ம கேட்ட பிரைஸ்க்கு அதை சேல் பண்ண ஒத்துக்கிட்டாரு. ஆனா அவரோட பையன் நல்லா போயிட்டு இருக்குற கிளப்பை நாங்க எதுக்கு உங்களுக்கு கொடுக்கணும்னு ப்ராப்ளம் பண்ணிக்கிட்டு இருக்கான். இப்ப என்ன பண்றது? நம்ம கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாக்கலாமா? இல்லைனா ராகவேந்திரார் சார் நம்ம டாக்குமெண்ட்ல சைன் பண்ணி கொடுத்துட்டா அடுத்து ரிஜிஸ்ட்ரேஷன் பிராசஸை ப்ரோசீட் பண்ணலாமா chief?” என்று அவனிடம் கேட்டான் பிரிட்டோ.
தேன்மொழியிடம் தான் சொன்ன பொய்யை உண்மையாக்க வேண்டும் என்று அன்றே அர்ஜுன் முடிவு செய்திருந்தான். இப்போது அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் நிலையில் அவன் இல்லை. “அந்த ஆளோட பையனை பத்தி எல்லாம் கவலைப்படுற mind செட்டில நான் இல்ல. அவன் என்ன பண்ணா என்ன? அந்த கிளப் அந்த ஆளோட பேருல தானே இருக்கு.. அவன் ஒத்துக்கிட்டு நமக்கு ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி கொடுத்தா போதும். அவன் ஃபேமிலி issues-ஐ எல்லாம் அவனேயே பாத்துக்க சொல்லு.
சித்தார்த்தும், ஆருத்ராவும் உடனே ரஷ்யா போகணும். சியாவை பாக்கணும்னு ரொம்ப அடம் பிடிச்சிட்டு இருக்காங்க. அவங்க பண்ண ப்ராப்ளம்ல எனக்கும் mood upset ஆகி இப்ப ரஷ்யா போகணும் போல தோணுது. சோ நானும் அவங்க கூட கிளம்பி போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். நமக்கு ஒரு கவர்மெண்ட் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் ப்ராஜெக்ட் கிடைத்ததுல்ல.. அதை பர்சனலா ஆகாஷை சூப்பர்வைஸ் பண்ண சொல்லு. வேற ஏதாவது இம்பார்டன்ட்டா நம்ம செய்ய வேண்டியது ஏதாவது இருந்துச்சுன்னா இப்பயே சொல்லிடு. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ரஷ்யா கிளம்பிடுவேன்.” என்றான் அர்ஜுன்.
“yearly auditing எந்த ப்ராப்ளமும் இல்லாம முடிஞ்சிருச்சு chief. அதை தாண்டி உடனே செஞ்சு முடிக்கிற அளவுக்கு இம்பார்டன்ட்டா நமக்கு இப்ப வேற எந்த வர்க்கமும் இல்லை. இன்னைக்கே நம்ம ரஷ்யா கிளம்பனும்னா கூட நோ ப்ராப்ளம் கிளம்பலாம். பட் அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும். அதைக் கேட்டு நீங்க எமோஷனல் ஆகக் கூடாது. நீங்க கோவத்துல ஏதாவது பண்ணிட்டீங்கன்னா, அப்புறம் இன்னும் சுச்சுவேஷன் worse ஆகிடும்.” என்று பிரிட்டோ பீடிகை போட, “டேய் இழுக்காம என்னன்னு சொல்லு டா.” என பொறுமை இல்லாமல் சொன்னான் அர்ஜுன்.
“நான் வீட்டுக்குள்ள வரும்போதே இங்க என்ன இஸ்யூ போயிட்டு இருக்குன்னு மிஸ்ஸஸ் பிரசாத் என்னை கூப்பிட்டு சொன்னாங்க. சித்தார்த், ஆருத்ரா கிட்ட உண்மையை சொன்னது யாருன்னு கண்டுபிடிக்க சொன்னாங்க. நானும் என்ன நடந்ததுன்னு விசாரிச்சு பார்த்தேன்.” என்று பிரிட்டோ சொல்லிக் கொண்டிருக்கும்போது, சந்தோசமாக இருந்த தன் குடும்பத்தில் கும்மி அடித்தது யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவனது தோள்களை இறுக்கிப் பிடித்த அர்ஜூன் “யார் அது? நேத்து வரைக்கும் தேன்மொழி மேல பாசமா இருந்த என் பையனையும் பொண்ணையும் குழப்பி விட்டது யாரு?” என்று ஆத்திரத்தில் தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்டான்.
“இந்த வீட்ல ஜூலி மேடமை தவிர வேற யார் அப்படி செய்யப் போறாங்க chief? குழந்தைங்க இரண்டு பேரும் அவங்க உங்களை காப்பாத்துறதுக்காக தேங்க்ஸ் சொல்றதுக்கு அவங்கள பாக்க போயிருக்காங்க. அந்த டைம்மை யூஸ் பண்ணி எப்படி எப்படியோ பேசி நடந்தது எல்லாத்தையும் அவங்க கிட்ட போட்டு கொடுத்தது ஜூலி தான்.
நான் விசாரிக்கும் போது அவங்கள பாத்துக்கிறதுக்காக வந்திருக்க நர்ஸ் தான் நடந்ததை என் கிட்ட சொன்னாங்க. பட் ஜூலி இதை வேணும்னு பண்ணாங்களா, இல்ல தெரியாம பண்ணாங்களானு அவங்களுக்கும் தெரியல எனக்கும் தெரியல chief.” என்று பிரிட்டோ சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “இன்னைக்கு அவளுக்கு இருக்கு. அவள கொன்னு குழிக்குள்ள இறக்கிட்டு தான் நான் திரும்ப ரஷ்யாவுக்கு போவேன்.” என்று சிவபேரிய கண்களுடன் சொன்ன அர்ஜுன் வேக எட்டுக்கள் வைத்து லிஃப்ட்டை கூட பயன்படுத்தாமல் படிகளில் இறங்கி கீழே சென்றான்.
“chief.. ப்ளீஸ்.. அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதீங்க. ஆல்ரெடி நம்ம என்ன சொன்னாலும் எல்லாத்தையும் நம்ம தேன்மொழி மேடம்க்காக தான் பண்றோம்னு சித்தார்த்தும், ஆருத்ராவும் நினைச்சுட்டு இருக்காங்க. இந்த டைம்ல இன்னொரு சீன் கிரியேட் பண்ண வேண்டாம். நம்ம குழந்தைங்க கூட ரஷ்யா கிளம்பி போகலாம். கிளாரா இங்க இருந்து ஜூலியை கவனிச்சுக்கவா. நீங்க எதுவும் பண்ணிடாதீங்க chief!” என்ற பிரிட்டோ ஓட்டமும் நடையுமாக அர்ஜுனை பின் தொடர்ந்து சென்றான்.
அவன் பேசியதை எல்லாம் காதில் வாங்காமல் நேரடியாக ஜூலியின் ரூமிற்கு சென்ற அர்ஜுன் அங்கே ஒரு டாக்டர், இரண்டு நர்சிம் என யார் இருப்பதையும் கண்டுகொள்ளாமல் நேராக அவள் அருகில் சென்று அவளது கழுத்தைப் பிடித்து நெறித்தபடி “வேணும்னே பிளான் பண்ணி என் குடும்பத்தை பிரிக்க பாக்குறியா? இன்னிக்கு நான் உன்ன கொல்லாம விட மாட்டேன் டி.” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தி சொன்னபடி அவளை கொல்லும் வெறியில் துடித்துக் கொண்டிருந்தான்.
“ஏய் அர்ஜுன்.. என்ன பண்ற? என்னால மூச்சு விட முடியல. ப்ளீஸ் என்ன விடு! எதுக்கு இப்படி லூசுத் தனமா பண்ணிட்டு இருக்க?” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு திக்கி தினரி மூச்சு வாங்க சொல்லிக் கொண்டு இருந்தாள் ஜூலி. “பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிறியா? சாவு டி! எப்ப எனக்கு எதிரா நீ வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டியோ அப்பவே உன் டைம் முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம். இதுக்கு மேல நான் உன்ன ஒரு செகண்ட் கூட விட்டு வைக்க மாட்டேன்.” என்ற அர்ஜுன் வெறித்தனமாக ஜூலியின் கழுத்தை பிடித்து நெறித்து கொண்டிருக்க,
“விடு அர்ஜூன்.. நான் என்ன பண்ணுனேன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க நீ? அர்ஜுன்… Please leave me! நான் தான் உன் உயிரை காப்பாத்தினேன். அதுக்குள்ள அதை மறந்துட்டு ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க நீ?” என்று ஜூலி சிரமப்பட்டு சொன்னபடி தன் உயிரை அவனிடம் இருந்து காத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள்.
ஒரு நோயாளியை காப்பது தான் டாக்டர் மற்றும் நர்சின் கடமை. இதே சீன் தங்களுடைய ஹாஸ்பிட்டலில் நடந்திருந்தால் கண்டிப்பாக போலீஸுற்க்கு கால் செய்து அவர்கள் தங்களது பேஷண்டை காப்பாற்ற முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் இங்கே நிலைமையே வேறு. அவர்களுக்கு எதிரில் நின்று கொண்டிருப்பவன், இந்த இந்தியாவில் உள்ள யாராலும் தொட முடியாத உயரத்தில் இருப்பவன். ஏற்கனவே தங்கள் கண் முன்னே அவன் உயிரை காப்பாற்றிய ஒருத்தியையே சிறிதும் இரக்கம் இன்றி கொன்று குவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இதில் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்! என நினைத்து அவர்கள் தங்களுக்கும் நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல ஓரமாக நின்று அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நல்ல வேலையாக ஜூலியின் உயிர் எமலோகம் சென்று சேர்வதற்கு முன் அங்கே வந்து சேர்ந்த பிரிட்டோ “ஐயோ சீஃப் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நான் தான் அவசரப்படாதீங்கன்னு சொல்றேன்ல.. சொன்னா கேளுங்க chief! இவங்க இப்ப செத்துப்போன பெரிய ப்ராப்ளம் ஆயிடும். கிளம்பி போறதுக்கு முன்னாடி குழந்தைங்க இவங்கள பாக்கணும்னு வந்தாங்கன்னா எப்படி சமாளிக்கிறது?” என்று ஏதோ சொல்லி அர்ஜுனை சமாளிக்கும் முயற்சியில் இறங்கியவன், தன் பலம் கொண்டு அவனை பின்னே இருந்து அணைத்துக் கொண்டு ஜூலியை விட்டு அவனை பிரிக்க முயற்சி செய்தான்.
பிரிட்டோ குழந்தைகளைப் பற்றி பேசியதால் தன்னை ஓர் அளவிற்கு சமாதானப்படுத்திக் கொண்ட அர்ஜூன் ஜூலியை விட்டு விலக, தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு ம்ஹும்.. ம்ஹும்... என்று இரும்பிய ஜூலி இப்போது ஆத்திரம் பொங்க அர்ஜூனை பார்த்து “are you mad or what Arjun? எப்படி உன்னால என் கிட்ட இப்படி எல்லாம் பிகேவ் பண்ண முடியுது? நான் மட்டும் அன்னைக்கு உன் உயிரை காப்பாத்தலைனானா, இப்ப நான் இருக்கிறதை விட மோசமான சுச்சுவேஷன்ல நீ ஹாஸ்பிடல்ல படுத்துட்டு இருந்திருப்ப.
கொஞ்சம் கூட அந்த எண்ணமே இல்லாம என்ன பண்ணிட்டு இருக்க நீ? நீ இப்படி பண்ற அளவுக்கு நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்? எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணிட்டு இருக்க?” என்று எதுவும் தெரியாதவளை போல கேட்டாள்.
அவள் பேச பேச மீண்டும் அர்ஜுனனின் கோபம் அதிகரித்தது. அவள் அருகில் சென்று அவள் தலை முடியை கொத்தாக பிடித்து அர்ஜுன் “எது.. நான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டு இருக்கனா? நீதான் டி என்ன பத்தி முழுசா தெரியாம தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்க.. எனக்கு வேண்டியவங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்றவன் தான். அதுக்காக என்னோட அந்த சைடை மட்டும் பாத்துட்டு நீ என்ன பண்ணாலும் நீ என் உயிரை காப்பாத்திட்டன்ற ஒரே காரணத்துக்காக உன்னை அப்படியே விட்டுடுவேன்னு நினச்சியா?
யாரா இருந்தாலும் அவங்க எனக்கு நல்லவங்களா இருக்கிற வரைக்கும் தான் நானும் அவங்களுக்கு நல்லவனா இருப்பேன். நீ என்னையே போட்டு பாக்கணும்னு நினைச்ச, நீ நினைக்கிறத விட நான் மோசமானவனா மாற வேண்டியது இருக்கும். ஏதோ என் பொண்டாட்டி சொன்னதுனால கொஞ்ச நாள் வெளிய தெரயுற மாதிரி எதுவும் பண்ணாம அடங்கி இருக்கலாமேன்னு அமைதியா இருக்கேன்.
அதுக்குன்னு உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்காத. உன்னால என் ஃபேமிலில மறுபடியும் இன்னொரு issue வந்துச்சுன்னா, உனக்கும் எனக்கும் நடுவுல இருக்கிறது எல்லாத்தையும் மறந்துட்டு கொஞ்சம் கூட யோசிக்காம உன்னை போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன். உயிரோட இருக்கணும்னு ஆசை இருந்துச்சுன்னா ஒழுங்கா இருந்துக்கோ!” என்று சினம் கொண்ட சிங்கமாய் கர்ஜித்தவன், ரஷ்யா செல்ல வேண்டியது இருந்ததால் அங்கிருந்து அவசரமாக வெளியேறினான்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)