சித்தார்த் எல்லை மீறி பேசியதால் அவனுக்கு வந்த கோபத்தில் சித்தார்த்தை அடித்து விட்டான் அர்ஜுன். அதை பார்த்து மிரண்டு போன ஆருத்ரா அவனை விட்டு விலகி சென்று ஒரு ஓரமாக நின்று தன் அண்ணனை பார்த்து அழுது கொண்டிருக்க, சித்தார்த் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சிவந்த கண்களுடன் கோபமாக தரையில் அமர்ந்து அர்ஜுனை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது அழகிய சிறிய முகம் லேசாக அவன் அறைந்ததில் வீங்கி இருக்க, தகப்பனாக தன் மகனை அந்த நொடியில் என் கோபப்பட்டு அடித்து விட்டோம் என்று நினைத்து வருத்தப்பட்ட அர்ஜூன் எதுவும் பேச முடியாமல் சித்தார்த்தை பார்க்க, “யாரோ ஒரு லேடிக்காக நீங்க என்ன அடிச்சுட்டீங்க இல்ல டாடி!” என்று கண்கள் கலங்க ஆத்திரம் பொங்க கேட்டான் சித்தார்த்.
மீண்டும் மீண்டும் தேன்மொழியை சித்தார்த் யாரோ ஒருத்தி போல நடத்துவதை கண்டு அர்ஜுனின் கோபம் அதன் எல்லையை கடந்து கொண்டிருந்தது. “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? என் பையனா இருந்துகிட்டு எப்படி இப்படி இருக்க நீ? நான் இவ்வளவு தூரம் சொல்லிட்டு இருக்கேன்.. உனக்கு புரியவே புரியாதா சித்தார்த்? ஆருத்ரா தான் சின்ன பொண்ணு. இந்த மாதிரி எல்லாம் அவ பண்ணா கூட அவளுக்கு தெரியலைன்னு சொல்லலாம்.
நீதான் நடக்கிறது எல்லாத்தையும் பாக்குற இல்ல.. கொஞ்சம் கூட எது சரி தப்புன்னு யோசிச்சு பாக்க மாட்டியா? இன்னொரு தடவை தேன்மொழியை உனக்கு யாரோன்ற மாதிரி நீ பேசினேனா அதை கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.. பாத்துக்கோ!” என்று அர்ஜுன் தனது அடி தொண்டையில் இருந்து சித்தார்த்தை பார்த்து கத்தினான்.
இது மாதிரியான சம்பவம் எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் இதற்கு முன் நடந்ததே இல்லை என்பதால் இப்போது அர்ஜுனின் மீதும் கடும் கோபத்தில் இருந்த சித்தார்த் தன் கன்னத்தைப் பிடித்தபடி தரையில் இருந்து எழுந்து நின்று “enough daddy! அவங்கள பத்தி வந்து எங்க கிட்ட பேசுங்கன்னு நானா வந்து உங்க கிட்ட கேட்டேன்? உங்களுக்கு அவங்க ரொம்ப இம்போர்ட்டண்டா இருந்தா, நீங்க எங்க மம்மியை மறந்துட்டு அவங்கள லவ் பண்ணுங்க.
நான் உங்கள எதுவுமே சொல்லலையே.. நீங்க என்ன மட்டும் எதுக்கு இப்படி கொஸ்டின் பண்ணிட்டு இருக்கீங்க? யாராவது சின்ன பசங்களோட mother திடீர்னு இறந்து போயிட்டாங்கனா, அவங்களோட step mother வந்து அவர்களை அடிச்சு டார்ச்சர் பண்ணுவாங்கன்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.
பட் தேன்மொழி ஆன்ட்டி ரொம்ப ஸ்மார்ட். ஸ்வீட்டா இருக்கிற மாதிரி எங்க கிட்ட நடிச்சு எங்களோட ரியல் மதர் ஆக பாக்கிறாங்க. நீங்க அப்படியே டோட்டலா மாறிட்டீங்க. அவங்களுக்காக என்னையே அடிக்கிறீங்க.. இதே மாதிரி டெய்லியும் இனிமே அடிச்சு என்னை டார்ச்சர் பண்ண போறீங்களா? இதுக்கு எல்லாம் ரீசன் அந்த ஆன்ட்டி தானே.. அவங்க சொல்லி தானே நீங்க இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க! உங்களுக்கு எங்களை விட அவங்க தான் இம்பார்டன்ட் ஆயிட்டாங்க.
எனக்கு இப்ப இங்க இருக்க இந்த டாடியை சுத்தமா பிடிக்கல. எனக்கு என் மம்மி தான் வேணும். நான் யார் என் கூட வந்தாலும் வரலைனாலும், என் மம்மிய பாக்க தான் போறேன். இனிமே இந்தியாவுக்கு வரவே மாட்டேன்.” என்று அர்ஜுனுக்கு இணையாக கோபத்தில் பொங்கிய சித்தார்த் ஆருத்ராவின் கையில் பிடித்து அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு நேராக ஜானகியின் ரூமிற்கு சென்றான்.
“இந்த சித்தார்த் என்ன இப்படி இருக்கான்.. இவன் கிட்ட என்ன சொல்றது.. இவனை எப்படி ஹாண்டில் பண்றதுனே தெரியலையே!” என்று நினைத்த அர்ஜுன் அவனையும், ஆருத்ராவையும் பின் தொடர்ந்து வந்து ஒரு ஓரமாக நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தான். ஜானகி பிரசாதையும் கால் செய்து வீட்டிற்கு வர சொல்லி இருந்ததால் மிஸ்டர் பிரசாத் அப்போது தான் தனது ரூமில் நுழைந்தார்.
யார் தங்களை கைவிட்டாலும் கண்டிப்பாக தனது தாத்தா அப்படி செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை சித்தார்த்துக்கு இருந்தது. அதனால் ஓடிச்சென்று தன் தாத்தாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுத சித்தார்த் “எனக்கு இங்க இருக்கவே புடிக்கல தாத்தா. ப்ளீஸ் என்ன உங்க கூட ரஷ்யா கூட்டிட்டு போயிருங்க. எனக்கு இப்பவே மம்மியை பாக்கணும் போல இருக்கு. I really miss her so much.” என்று குரல் நடுங்க சொன்னான்.
நடந்த அனைத்தையும் ஜானகி சொல்லி அவர் கேள்விப்பட்டு இந்ததால் தானும் ஏதேனும் சொல்லி சித்தார்த்தை வருத்தப்பட வைக்க கூடாது என்று நினைத்த பிரதாப் “எனக்கு உன் ஃபீலிங்ஸ் புரியுது சித்தார்த். இப்ப என்ன உனக்கு.. ரஷ்யாவுக்கு போய் அங்க இருக்க உங்க அம்மாவோட சமாதிய பாக்கணும். அவ்ளோ தானே.. நீ வா நான் உன்னை கூட்டிட்டு போறேன். இன்னைக்கு நைட்டே நம்ம கிளம்பலாம். நான் ஆகாஷை எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸையும் பண்ண சொல்றேன். பட் என்னோட ஒரே ரெக்குவஸ்ட்டை நீ கேட்கணும் ஓகேவா?” என்று மென்மையான குரலில் கேட்டார்.
எப்படியாவது ரஷ்யா சென்றால் போதும் என்ற எண்ணத்தில் இருந்த சித்தார்த் அதற்கு சரி என்று தலையாட்ட, அவன் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்ட பிரதாப் “பெரியவங்க எடுக்கிற டெசிஷனை உடனே புரிஞ்சுக்கிற அளவுக்கு உனக்கு இன்னும் மெச்சூரிட்டி வரல. பரவால்ல, நாங்க உனக்கு டைம் குடுக்க ரெடியா இருக்கோம். பட் அதுவரைக்கும், நீ யாரையும் தப்பா புரிஞ்சுக்க கூடாது. அவங்க பண்ணது தப்புன்னு பேசி அவங்களை ஹர்ட் பண்ண கூடாது. எல்லார் சைடுலையும் அவங்களோட நியாயம்ன்னு ஒரு ரீசன் இருக்கும். அன்னைக்கு சிச்சுவேஷன்ல எது கரெக்ட்னு அவங்களுக்கு தோணிச்சு. சோ அதை செஞ்சாங்க. இது எல்லாமே நம்ம ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் ஹாப்பியா இருக்கணும் அப்படிங்கிறதுக்காக தான். அட்லீஸ்ட் அதை மட்டுமாவது நீ புரிஞ்சுக்க ட்ரை பண்ணனும்.” என்று நிதானமாக அவனிடம் தெளிவாகச் சொன்னார்.
தாத்தாவின் மீது இருந்த பாசத்திலும் மரியாதையிலும் அவரை எதிர்த்துப் பேச முடியாமல் அமைதியாக இருந்த சித்தார்த் சரி என்று தன் தலையை மட்டும் ஆட்டினான். “Ok then, நீ போய் உன் திங்ஸை பேக் பண்ணு. நம்ம இன்னிக்கே ரஷ்யா கிளம்புறோம்.” என்று பிரதாப் சொல்ல, அனைத்தையும் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ரா “நானும் வரேன். என்னையும் கூட்டிட்டு போங்க. நானும் மம்மிய பாக்கணும்.” என்றாள்.
நடக்கும் அனைத்தையும் அர்ஜுன் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த பிரசாத் அவனிடம் பர்மிஷன் கேட்பதைப் போல ஓரக்கண்ணால் அர்ஜுனை பார்த்தார். இப்போதைக்கு குழந்தைகள் இருவரும் ரஷ்யா செல்வது தான் நல்லது என்று நினைத்த அர்ஜுன் “கூட்டிட்டு போங்க டாடி.” என்று தன் கண்களாலேயே சைகை செய்து சொன்னான். அதை பார்த்தவுடன் ஆருத்ரா, சித்தார்த் இருவருக்கும் ரஷ்யா செல்லலாம் என்று வாக்கு கொடுத்தார் பிரசாத்.
குழந்தைகள் கிளம்புவதற்காக ஜானகி அவர்களுக்கு உதவ சென்றுவிட, ஓரமாக நின்று கொண்டிருந்த அர்ஜூன் திரும்பி தனது ரூமை பார்த்தான். ஏனோ அவனுக்கு தேன்மொழியை சென்று பார்க்க சங்கடமாக இருந்தது. இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை வரும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் சோகமே உருவாக அந்த பிரம்மாண்ட மாளிகையின் மொட்டை மாடிக்கு சென்று சர்வன்ட்டிற்க்கு கால் செய்து குறிப்பிட்ட மதுபானங்களின் பெயரைச் சொல்லி அதை மேலே கொண்டு வரும்படி கட்டளையிட்டான்.
பின் வானில் தனியாக இருந்த நிலவை கண்டான். அந்த மதியின் இருப்பு அவனுக்கு அவனது சியாவை ஞாபகப்படுத்தியது. அதனால் அவள் இறப்பிற்கு தான் தான் காரணம் என்று நினைத்து இத்தனை நாட்களுக்கு பிறகு மீண்டும் சோகத்திலும் குற்ற உணர்ச்சியிலும் ஆழ்ந்த அர்ஜுன் அந்த நிலாவை பார்த்து சியா என நினைத்து “நீ ஏண்டி என்ன விட்டுட்டு போன? அன்னைக்கு மட்டும் நான் சொன்னதை கேட்டு நீ சித்தார்த்தை கூட்டிக்கிட்டு போய் கார்ல உக்காந்து நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி இருந்தா, நான் உன்ன இழந்திருக்க மாட்டேன்.
என் பிள்ளைகளும் அம்மா இல்லாம ரெண்டு வருஷமா தவிச்சு போய் நின்னு இருக்க மாட்டாங்க. ஏதோ தேன்மொழி வந்ததுக்கு அப்புறமா நடந்தது எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு இதுதான் வாழ்க்கையின் நெனச்சு நம்ம பிள்ளைகளுக்காகவும், இந்த ஃபேமிலிக்காகவும் தானே நான் ராப்பகலா ஓடிக்கிட்டு இருக்கேன்! இன்னைக்கு சித்தார்த் தேன்மொழி உங்களுக்கு எங்க மம்மியோட சப்ஸ்டியுஷனான்னு என்னை பார்த்து கேட்கிறான்.
அந்த செகண்ட் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? நான் என்ன அப்படியா நினைச்சு அவ கூட சேர்ந்து வாழ்ந்தேன்? நான் கோமால இருந்து ரெக்கவர் ஆகும்போதே தேன்மொழி என் பொண்டாட்டியா தான் இருந்தா. நம்ம பிள்ளைகளுக்கும் சரி, இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு சரி அவள புடிச்சிருந்துச்சு. நம்ம வீட்ல ஒரு ஆளா அவ மாறினா. போற போக்குல எனக்கும் அவ மேல லவ் வந்துருச்சு. அதான் அவ கூட சேர்ந்து வாழனும்னு டிசைட் பண்ணேன்.
அது தப்பா சியா? நீயே சொல்லு.. உனக்கு நான் செஞ்சது தப்புன்னு தோணுதா? இல்ல சித்தார்த் மாதிரி தான் நீயும் நான் தேன்மொழியை ஆல்டர்நேட்டிவ் அப்ஸனா யூஸ் பண்ணிக்கிட்டேன்னு நினைக்கிறியா? நான் உன்னை மொத்தமா மறந்துட்டேன்னு உனக்கு தோணுதா? என்னால எப்படி டி அது முடியும்?” என்று தனக்குள்ளேயே சியாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனது சிவந்த கண்களின் ஓரமாக அவனையும் மீறி கண்ணீர் வர, கனத்த இதயத்துடன் அந்த நிலவையே பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அப்போது அவனை தேடிக் கொண்டு அங்கே வந்த பிரிட்டோ “சீஃப், நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.” என்றான்.
அவன் குரல் கேட்ட உடன் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு பிரிட்டோவை திரும்பி பார்த்தான் அர்ஜூன். “சாரி சீஃப், நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணனும்னு நினைக்கல. இந்த விஷயம் தெரிஞ்ச உடனே உங்ககிட்ட வந்து இன்ஃபார்ம் பண்றது தான் கரெக்ட்ன்னு தோன்றுச்சு. அதான் உங்கள பாக்க வந்தேன்.” என்று பிரிட்டோ தயக்கத்துடன் சொல்ல, தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு இருக்கமாட முகத்துடன் அவனைப் பார்த்த அர்ஜுன் “பரவால்ல என்னன்னு சொல்லு.” என்றான்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)