அத்தியாயம் 134
தனக்கென்று கொடுக்கப்பட்டிருந்த கெஸ்ட் ரூமில் படுத்திருந்த ஜூலிக்கு தேன்மொழி பேசிவிட்டு சென்றது தான் மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. வாலண்டியராக தன்னை தேடி வந்து அவள் அசிங்கப்படுத்திவிட்டு சென்றதாக நினைத்த ஜூலி “நீ அர்ஜுனோட பொண்டாட்டியா இருக்கிறதுனால உனக்கு தான் எல்லா பவரும் இருக்குன்னு நெனச்சு ஓவரா பேசுறியா தேன்மொழி? இப்போ நீ இருக்கிற இடத்தில ஷியாவுக்கு முன்னாடியே இருக்க வேண்டிய ஆள் நான் தான்.
நடுவுல அர்ஜுன் என்ன என்னமோ சொல்லி கன்ப்யூஸ் பண்ணி நானே அவனை விட்டு போகிற மாதிரி பண்ணிட்டான். இல்லைன்னா கண்டிப்பாக எனக்கும் அவனுக்கும் தான் மேரேஜ் நடந்து இருக்கும். என்னை விட சின்ன பொண்ணு நீ. உனக்கு என் கிட்ட பேசும் போது அவளை திமிர் இருக்கக் கூடாது. இங்க இருந்து திரும்பி போறதுக்குள்ள என்னால அர்ஜூன் கூட மறுபடியும் சேர முடியுதோ இல்லையோ உங்க ரெண்டு பேரையும் நான் பிரிக்காம விட மாட்டேன்.
ஏதோ நீ பாக்குறதுக்கு ஷியா மாதிரி இருக்கிறதுனால அவன் உன்ன லவ் பண்றேன்னு சொல்லி உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான். உனக்கு அந்த ஒரு அட்வான்டேஜ் மட்டும் இல்லைனா நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல. பரவால்ல இருக்கட்டும். சியா மாதிரி இருக்கிறவ எல்லாம் சியா ஆயிட முடியாது. இந்த தேன்மொழிக்கு நம்ம கூட வாழ தகுதி இல்லைன்னு அவனே நினைக்கிற மாதிரி நான் பண்றேன். அப்ப தான் உன் பிளேஸ் உனக்கு தெரியும்.” என்று நினைத்து அர்ஜுன், தேன்மொழி இருவரையும் எப்படி பிரிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்படியே யோசித்ததில் அர்ஜுனிடம் பேச வேண்டும் என்று அவளுக்கு தோன்ற, தனது மொபைல் ஃபோனை கேட்டு வாங்கி அவனுக்கு கால் செய்தாள். ஆபீஸில் அங்கும் இங்கும் பிசியாக சுற்றிக் கொண்டு இருந்த அர்ஜுன் தனது மொபைல் ஃபோன் எங்கே இருக்கிறது என்று கூட கவனிக்காமல் இருந்தான். மீண்டும் மீண்டும் அவனுக்கு கால் செய்து பார்த்து அவன் அதை எடுக்காததால் எரிச்சல் அடைந்த ஜூலி “உனக்காக நான் எவ்ளோ பெரிய விஷயம் பண்ணி இருக்கேன்! இந்த மாதிரி சிச்சுவேஷன்ல கூட நீ என் கிட்ட ரெண்டு வார்த்தை பேச மாட்டியா அர்ஜூன்? நான் மட்டும் குறுக்க வரலைனா உனக்கு இப்ப என்ன வேணாலும் நடந்திருக்கும். உன் பொண்டாட்டிய பார்த்ததுக்கு அப்புறமா அத பத்தி நீ யோசிக்க மறந்துட்டியா? இந்த அளவுக்கு நீ மாறி இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அர்ஜுன். அந்த தேன்மொழி மேல மட்டும் இல்ல, எனக்கு உன் மேல கூட கோபம் வருது.” என்று நினைத்து தன் பற்களை கடித்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது சித்தார்த் ஆருத்ரா இருவரும் கையில் ஆளுக்கு ஒரு தேங்க்யூ காரை எடுத்துக் கொண்டு அந்த ரூமிற்கு ஓடி வந்து ஜூலி இடம் கோரசாக “thanks for saving our dad aunty! Get well soon!” என்றார்கள். அதுவரை இஞ்சி தின்ன குரங்கை போல தன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு படுத்திருந்த ஜூலி அவர்களை பார்த்தவுடன் போலி புன்னகையை வரவழைத்து “you are welcome my dear kiddos! Julie aunty loves you so much!” என்று சொல்லிவிட்டு அடிபட்டிருந்த தன் கையை லேசாக தூக்கி அவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தாள்.
அவள் அருகில் சென்று அமர்ந்த ஆருத்ரா “டோன்ட் வாரி, ஆன்ட்டி உங்களுக்கு சீக்கிரம் சரியாயிடும். உங்களுக்கு இங்க தனியா இருக்க போர் அடிச்சதுன்னா சொல்லுங்க. நானும், சித்தார்த்தும் இங்கே வர்றோம். நம்ம மூணு பேரும் சேர்ந்து கார்ட்டூன் பாக்கலாம்.” என்று சொல்ல, அவள் தலையை வருடிய ஜூலி “Oh sweety! You are really so sweet. நீ எப்ப ஃப்ரீயா இருக்கியா உங்க அண்ணாவ கூட்டிட்டு இங்க வந்துரு. நம்ம மூணு பேரும் சேர்ந்து ஜாலியா fum பண்ணலாம்.” என்றாள்.
அதற்கு ஆருத்ரா சரி என்று சொல்லிக் கொண்டிருக்க, “உங்களுக்கு வலிக்குதா ஆன்ட்டி?” என்று அக்கறையுடன் விசாரித்தான் சித்தார்த். “of course sometimes என்னால தாங்கவே முடியாத அளவுக்கு பெயிண் இருக்குதான் செய்து. பட் இது எல்லாத்தையும் உங்க அப்பாவை காப்பாற்றுவதற்காக தானே நான் பண்ணினேன்! அத நினைக்கும்போது எனக்கு ஹேப்பியா இருக்கிறதுனால இந்த பெயின் எல்லாம் ஒரு விஷயமாக எனக்கு தெரியறது இல்ல சித்தார்த். You know what, எனக்கு உங்க அப்பாவ ரொம்ப பிடிக்கும். அவருக்கும் தான்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் ஜூலி.
அவன் கொஞ்சம் பெரிய பையனாக இருந்ததால் அவள் எந்த அர்த்தத்தில் அதை சொல்கிறாள் என்று ஓர் அளவிற்கு புரிந்து கொண்ட சித்தார்த் “அப்ப நீங்களும் டாடியும் டேட்டிங் பண்ணி இருக்கீங்களா ஆன்ட்டி?” என்று நேரடியாகவே கேட்க, “Oh.. Sid, you are so sharp! நான் உங்க அப்பாவை பிடிக்கும்னு சொன்னத வச்சே நாங்க டேட்டிங் பண்ணதை கண்டுபிடிச்சியா நீ? நாங்க ரெண்டு பேரும் ஒரே யூனிவர்சிட்டில தான் படிச்சோம். அப்ப உங்க அப்பாவுக்கு இருந்த ஒரே ஒரு கேர்ள் ஃபிரண்ட் நான் மட்டும் தான். சோ அவருக்கும் என்ன அந்த டைம்ல ரொம்ப பிடிக்கும்.” என்று ஃபீல் செய்து சொல்லிக் கொண்டிருந்தாள் ஜூலி.
சித்தார்த் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், அவள் அப்படி பேசுவதே ஆருத்ராவிற்கு பிடிக்கவில்லை. அதனால் தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு “பட் இப்போ டாடிக்கு எங்க மம்மியை தான் ரொம்ப பிடிக்கும். அவங்கள மட்டும் தான் அவர் லவ் பண்றாரு.” என்றாள். “Little b**** இப்ப தானே இவளை ஸ்வீட்ன்னு சொன்னேன்.. அதுக்குள்ள எப்படி பேசுது பாரு! அந்த தேன்மொழி பெரிய இவ.. அவளை மட்டும் தான் உங்க டாடிக்கு பிடிக்குமோ! மம்மிக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்துட்டா அப்படியே!” என்று தன் மனதிற்குள் ஆருத்ராவை திட்டிக் கொண்டு இருந்த ஜூலிக்கு அப்போது தான் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.
“Wait.. first of all, தேன்மொழி இவங்களோட ஒரிஜினல் மதர் இல்ல. ஆனா இவங்க இரண்டு பேரும் ஏன் அவளை மம்மி மம்மின்னு கூப்டு ஓவரா அவ மேல பாசமா இருக்காங்க? ஒருவேளை அவ பாக்குறதுக்கு சியா மாதிரி இருக்கிறதுனால அப்படி அம்மா பாசத்துல பழகுறாங்களா?
இல்ல இன்னும் சியா செத்துப் போனதே இவங்களுக்கு தெரியலையா! வாவ் இது நல்ல மேட்டரா இருக்கும் போல இருக்கே! இந்த ரெண்டு குழந்தைகளையும் வச்சு தானே ஈஸியா தேன்மொழி அர்ஜுன் லைஃப்ல வந்தா! நம்ப நினைக்கிறது மட்டும் கரெக்டா இருந்தா, இவங்க ரெண்டு பேரையும் வெச்சு அவளை இந்த வீட்டை விட்டு துரத்த முடியும். இந்த ஆங்கில்ல நான் ஏன் இத்தனை நாளா யோசிக்காமல் இருந்தேன்?” என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட ஜூலி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
தன் அப்பாவுடன் இந்த ஜூலி ஒரு காலத்தில் டேட்டிங் எல்லாம் சென்றிருக்கிறாள் என்று கேள்விப்பட்ட உடனேயே அவளுடன் பேசக் கூட ஆருத்ராவிற்கு பிடிக்கவில்லை. அதனால் சித்தார்த்தின் கையை பிடித்துக் கொண்டு “இன்னும் கொஞ்ச நேரத்துல டாடி வீட்டுக்கு வந்துருவாரு. மம்மி stomach-ல குட்டி பாப்பா இருக்குல்ல.. அவங்க டைமுக்கு சீக்கிரமா சாப்பிடணும்னு பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க. நீ வா, நம்ப போய் மம்மி கூட சேர்ந்து சாப்பிடலாம் எனக்கு பசிக்குது!” என்று சொல்லி அவனுடன் வெளியில் செல்ல முயற்சி செய்தாள்.
அவள் பேசியதை கேட்டு ஷாக் ஆகி அவர்கள் இருவரையும் வெளியில் செல்ல விடாமல் ஆருத்ராவின் கையை பிடித்து தடுத்த ஜூலி “இப்ப நீ என்ன சொன்ன? உன் மம்மியோட ஸ்டொமக்ல குட்டி பாப்பா இருக்கா? அப்டினா தேன்மொழி ப்ரெகனட்டா இருக்காங்களா?” என்று ஆச்சரியமாக கேட்க, “ஆமா, மம்மி பிரக்னண்டா இருக்காங்க. சீக்கிரம் எங்க வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போகுது.” என்று உற்சாகமான குரலில் சொன்ன சித்தார்த் அவளை பார்த்து சிரித்தான்.
தன் சந்தேகத்தை சித்தார்த் உறுதி செய்தவுடன் என்னவோ தனது கப்பல் கவிழ்ந்ததை போல உடனே சோகத்தில் ஆழ்ந்தாள் ஜூலி. இவ்வளவு விரைவாக அர்ஜுனனின் குழந்தைக்கு தேன்மொழி தாயாவாள் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. இப்போது அவளுக்கு தேன்மொழியின் மீதும் அர்ஜுனியின் மீதும் இருக்கும் கோபத்திற்கு கண்டிப்பாக இப்படி ஒரு விஷயம் நடக்கவே கூடாது என்று அவளுக்கு தோன்றியது.
பாதி இடிந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பில்டிங்கில் தனியாக சந்தோஷ் அமர்ந்திருக்க, முகமூடி அணிந்திருந்த ஒருவன் அவன் அருகில் சென்று நின்றான். அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்ற சந்தோஷ் “பரவாயில்லையே.. நீங்க இந்தியா பக்கமே வர மாட்டீங்கன்னு நினைச்சேன். அர்ஜுன் இங்க தான் இருக்கான்னு தெரிஞ்சிருந்தும், இப்படி சென்னையிலேயே சுத்திட்டு இருக்கீங்கன்னா உங்களுக்கு நிஜமாவே தைரியம் அதிகம் தான்.” என்று கிண்டலாக சொன்னான்.
“போதும் வாய மூடு சந்தோஷ். உன்ன மாதிரி உதவாக்கரைய வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாதுன்னு தான் டைரக்ட்டா நானே இவ்ளோ ரிஸ்க் எடுத்து இங்க கிளம்பி வந்து இருக்கேன். அந்த வீட்லயே இருந்துகிட்டு அப்படி நீ என்ன தான் பண்றியோ.. நீயாவும் எதுவும் பிளான் பண்ணி ஒழுங்கா பண்ண மாட்டேங்குற..
நான் சொல்றதையும் கேக்க மாட்டேங்கற. உன் மைண்ட்ல என்ன தான் இருக்குன்னு கேட்கத் தான் நான் நேர்ல உன்னை வர சொன்னேன். இத்தனை நாள் நல்ல பையன் வேஷம் போட்டு அந்த வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி இப்ப ஃபேமிலி மேன் ஆனதனால நீ டோட்டலா சேஞ்ச் ஆகிடியா என்ன? பழைய பகை, மனசுக்குள்ள இருந்த கோபம் எல்லாம் காணாம போயிருச்சா? இல்ல இவன் இவ்ளோ பெரிய பணக்காரனா இருக்கான். இவனை அழிக்கிறேன்னு தேவையில்லாம ஏதாவது பண்ணி பிரச்சினையில மாட்டிகிறதுக்கு பதிலா இப்படியே வீட்டோட மருமகனா செட்டில் ஆயிட்டா லைஃப் ஜாலியா இருக்கும்னு நினைக்கிறியா?” என்று அந்த முகமூடி அணிந்திருந்தவன் சந்தோஷை பார்த்து கிண்டலாக கேட்டான்.
அவன் பேசிய பேச்சில் கோபத்தில் பொங்கிய சந்தோஷ் சட்டென்று அவன் யார் எனக் கூட பார்க்காமல் அவன் கழுத்தை கை வைத்து அழுத்தினான். “டேய் விடு டா!” என்று மூச்சுவிட சிரமப்பட்ட படி அவன் பேச, “வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசுறதுக்கு முன்னாடி நீ இதையெல்லாம் யோசிச்சிருக்கணும்.” என்ற சந்தோஷ் அவன் குரல்வலையைப் பிடித்து நெறித்தான்.
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)