Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 133

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 133

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 133

ஆபீஸில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது தேன்மொழிக்கு கால் செய்து “ஓய் என்ன டி பண்ற சாப்டியா? தூங்குறதுல பிஸியா இருந்து சாப்பிடுறதை மறந்துடாத.‌” என்று கேட்க, “இப்ப தானே 10 மினிட்ஸ்க்கு முன்னா டி நீ கால் பண்ணும் போது நான் சாப்பிட்டேன்னு சொன்னேன். சும்மா சும்மா ஒரே கொஸ்டினை கேட்பியா நீ? பேசுறதுக்கு வேற எதுவும் இல்லைனா இப்படித் தான் சமாளிப்பாங்க.” என்று கடுப்பாகி சொன்னாள் தேன்மொழி.

“ஏய் சாரி பேபி! இப்ப தான் ஒரு நியூ ப்ராஜெக்ட்டுக்கு நான் அப்ரூவல் குடுத்தேன். அதை பத்தியே யோசிச்சிட்டு இருந்தனா, அதான் உன் கிட்ட லாஸ்ட்டா என்ன பேசினேன்னு மறந்துடுச்சு.” என்று அர்ஜுன் சொல்ல, “பாவம் பையன்..
ரொம்ப பிசியா எப்பயும் வேலை பார்த்துகிட்டு இருக்கான். அவனுக்கும் இது எல்லாத்துல இருந்தும் கொஞ்சம் பிரேக்  கிடைச்சா நல்லா இருக்கும். நாங்க ரெண்டு பேரும் தனியா டைம் ஸ்பென்ட் பண்ண மாதிரியும் இருக்கும்.” என்று நினைத்த தேன்மொழி,  “அது சரி, நானும் உன் கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.. எனக்கு இப்ப தான் நியாபகம் வருது. நமக்கு மேரேஜ் ஆகி எத்தனை மாசம் ஆகுது! இப்ப வரைக்கும் நீயும், நானும் ஹனிமூன் கூட எங்கயும் போகல.

லிண்டாவும் ஆகாஷ் ஒரு ட்ரிப் பிளான் பண்றேன்னு சொல்லிட்டு இருக்காருன்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க. ஆனா அந்த பிளான் என்ன ஆச்சுன்னு தான் தெரியல. சரி இப்ப பிரிட்டோ அண்ணாவுக்கும், கிளாராவுக்கும் மேரேஜ் ஆகியிருக்கு. அவங்களாவது எங்கேயாவது போவாங்கன்னு பார்த்தா அவங்களும் இங்கயே தான் சுத்திகிட்டு இருக்காங்க.

நீங்க எல்லாரும் பிஸியா ஒர்க் பண்றதெல்லாம் சரி தான்.  பட் எனக்கு என்ன டவுட்டா இருக்குன்னா, நீங்க எல்லாரும் வாழ்றதுக்காக வொர்க் பண்றீங்களா? இல்ல வொர்க் பண்றதுக்காகவே வாழறீங்களா?” என்று கேட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த அர்ஜுன் “sometimes same question-ஐ நானே என் கிட்ட கேட்டுக்குவேன். பட் ஸ்டில் எனக்கு ஆன்சர் தான் கிடைக்கல. வாழ்க்கை சந்தோஷமா வாழறதுக்காக தான். அதுக்காக எப்பையுமே ஹாப்பியா இருக்கிறத பத்தி மட்டுமே யோசிக்க முடியுமா என்ன? இந்த வாழ்க்கையில நம்ம வாழ்ந்ததுக்கு அடையாளமா ஏதாவது சாதிக்கணும்ல? ஏதாவது ஒன்னு பின்னாடி நம்ம ஓடிக்கிட்டே இருக்கிற வரைக்கும் தான் நம்ம உயிரோட இருக்கிறோம்னே அர்த்தம். இந்த ஓட்டம் ஸ்டாப் ஆயிடுச்சின்னா நம்ம லைஃப் முடிஞ்சிடுச்சுன்னு அர்த்தம்.” என்று பதிலுக்கு என்னென்னமோ சொன்னான்.

“இது எல்லாம் நல்லா பேசு. பட் வைஃப் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு மட்டும் யோசிச்சுடாத. நீயும் எங்கயும் வெளியே போக மாட்டேங்குற. உன் கூட இருக்கிற மத்தவங்களையும் அவங்க லைஃபை வெளிய போய் என்ஜாய் பண்ண விட மாட்டேங்குற. நான் மட்டும் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா, கல்யாணத்துக்கு முன்னாடி அட்லீஸ்ட் டேட்டிங் சாட்டிங் மீட்டிங்ன்னு ஒரு நாலு, அஞ்சு வருஷமாவது உன்னை என் பின்னாடியே சுத்த விட்டிருப்பேன். போதும் போதும்ன்னு நீயா கதறும் போது தான் சரி பரவால்லைன்னு கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி யோசிச்சிருப்பேன்.” என்று தேன்மொழி சொல்ல,

“நீ என்ன சொல்றது கூட பரவால்ல.. அதன நான் என் கூட இருக்கிற மத்தவங்களையும் அவர்கள் வாழ்க்கையை வாழ விட மாட்டேங்குறேன்னு சொல்ற? ஆகாஷ் ஒரு நியூ ப்ராஜெக்ட்ல கம்மிட் ஆகியிருக்கான். சோ அவன் எங்கேயும் வெளியே போக வேண்டாம் என்று நினைத்து ட்ரிப்பை postpone  பண்ணி இருக்கலாம். அண்ட் கிளாரா, பிரிட்டோப்க்கு லீவ் கொடுத்து ஹனிமூன்  போறதுக்கு டிக்கெட் கூட புக் பண்ணி கொடுத்தாச்சு.  அவங்க ரெண்டு பேரும் கிளம்பி போகாம இங்கயே சுத்திக்கிட்டு இருந்தா அதுக்கு நான் என்ன பண்றது?” என்று கேட்டான் அர்ஜுன்.

“சும்மா எதாவது சொல்லி சமாளிக்காத அர்ஜுன். நீ சொன்னா அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா கேட்பாங்க. நீதான் சொல்லி அவங்கள அனுப்பி வைக்கணும்.”  என்று தேன்மொழி சொல்ல, பதிலுக்கு அர்ஜுன் அவளிடம் ஏதோ பேச வரும்போது “May I come in chief?” என்று கேட்டபடி அந்த ரூமிற்குள் நுழைந்த பிரிட்டோ “சார் video conference-க்கு டைம் ஆச்சு.” என்றான். அதனால் “எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு. நான் உன் கிட்ட அப்புறம் பேசுறேன் பாய்.” என்று சொல்லிவிட்டு தேன்மொழியின் அழைப்பை துண்டித்தான் அர்ஜுன்.

மாலை ஆறு மணியளவில் தான் வேலை பார்க்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் இருந்து வெளியில் வந்த மகாலட்சுமி மகேஷுக்கு கால் செய்து “நான்  இங்க ஷாப்புக்கு வெளிய தான் நிக்குறேன். நீங்க கண்டிப்பா எனக்காக வருவீங்களா மாமா?” என்று ஆர்வம் கலந்த வருத்தத்துடன் கேட்க, “இன்னுமாங்க உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரல? நான் தான் நேத்தே வரேன்னு  சொன்னேன்ல! உங்கள வர சொல்லிட்டு அப்புறம் நான் எப்படி வராம இருப்பேன்? உங்களுக்கு லெஃப்ட் சைடுல பாருங்க!” என்றான் மகேஷ்.

ஆசையாக உடனே மகாலட்சுமி அவன் சொன்ன பக்கம் திரும்பி பார்க்க, ஒரு ஆட்டோவில் வந்து அவள் அருகில் இறங்கினான் மகேஷ். அவனை பார்த்தவுடன் அவள் புன்னகைக்க, அவனும் பதிலுக்கு அவளை பார்த்து புன்னகைத்தான். ஆட்டோவிற்கு காசு கொடுத்துவிட்டு அவள் அருகில் சென்ற மகேஷ் “ஃபோட்டோல பாத்ததை விட  இந்த பொண்ணு நேர்ல இன்னும் ரொம்ப அழகா இருக்க.” என்று நினைத்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.‌

அவன் கண்கள் தன்னை ரசிக்கிறது என்று உணர்ந்தவுடன் அவளையும் அறியாமல் அவள் முகத்தில் வெட்கம் அப்பிக் கொள்ள, சிவந்த தன் முகத்தை அவனுக்கு காட்ட விரும்பாமல் தலைகுனிந்த மகாலட்சுமி “தேங்க்ஸ் மாமா! என்ன ஆனாலும் நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. இருந்தாலும் என் மனசை உடைக்காம நீங்க  இங்க வந்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றாள்.

அவள் பேசிய பிறகு தான் சுயநினைவிற்கு வந்த மகேஷ் அவனது பேன் பாக்கெட்டில் இருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து அவளிடம் நீட்டி, “பெண்களை பார்க்க போகும்போது அவங்களுக்கு என்ன வாங்கிட்டு போகணும்னு எனக்கு தெரியாது. உங்க கிட்டையும் நான் உங்களுக்கு என்ன வேணும்னு கேட்க மறந்துட்டேன். அதான் பொதுவா எல்லாருக்கும் சாக்லேட் பிடிக்குமேன்னு இதை வாங்கிட்டு வந்தேன்.”  என்று மெல்லிய குரலில் சொல்ல, “பார்றா.. மகேஷ் மாமா நமக்காக இந்த அளவுக்கு யோசிக்கிறாரா?” என்று நினைத்து சந்தோஷப்பட்ட மகா அவன் கையில் இருந்த சாக்லேட்டை வாங்கிக் கொண்டு “நீங்க எனக்காக என்ன பண்ணாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா. அதுவும் இந்த சாக்லேட் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க ஏதோ ஒன்னு ‌எனக்காக செய்யணும்னு நினைச்சீங்களே அதுவே பெரிய விஷயம். எனக்கு இது போதும். தேங்க்ஸ் மாமா!” என்றாள்.

“என்னங்க எதுக்கெடுத்தாலும் நீங்க தேங்க்ஸ் சொல்லிக்கிட்டே இருக்கீங்க! இந்த சாக்லேட் எல்லாம் ஒரு விஷயமா என்ன? உங்களுக்கு வேற என்ன வேணும்னே சொல்லுங்க. நான் வாங்கித் தரேன்.” என்று மகேஷ் சொல்ல, “எனக்கு இப்ப எதுவும் கேட்கத் தோணல மாமா. நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா எனக்கு எல்லாமே நீங்க தானே! உங்களுக்கு வேற ஏதாவது எனக்கு வாங்கி கொடுக்கணும்னு தோணுச்சுன்னா நீங்களா வாங்கி கொடுங்க. அது எதுவா இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நானே உங்களுக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன்.

என்னால விலை அதிகமா போட்டு எல்லாம் எதுவும் வாங்க முடியாது. ஏதோ என்னால முடிஞ்சது. அது உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல. உங்க கூட பீச்சுக்கு போக சான்ஸ் கிடைச்சதுனா அங்க வச்சு குடுக்கலாம்னு நினைச்சேன். எனக்கு இப்போ இங்கயே அத கொடுக்கணும்னு தோணுது.” என்று சொல்லிவிட்டு மகா அவன் கையில் ஒரு சிறிய கிஃப்ட் பாக்ஸை கொடுத்தாள்.

அதை கையில் வாங்கிய மகேஷ் தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்க போக, “அதுல என்ன இருக்குன்னு பாக்க மாட்டீங்களா மாமா?” என்று ஏக்கமாக கேட்டாள் மகாலட்சுமி. அவள் ஆசையை எதற்காக கெடுக்க வேண்டும் என்று நினைத்த மகேஷ் அவள் கண் முன்னேயே அதை கிஃப்ட் பாக்ஸை பிரித்து பார்த்தான். அதில் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்த படி ஒரு பென்சில்  அமர்ந்திருக்க, அவர்கள் கையில் ஒரு குழந்தை இருப்பதைப் போல க்யூட்டான சிறிய பொம்மை ஒன்று இருந்தது.

அதை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த மகேஷ் அவளை பார்க்க “நாம் இருவர். நமக்கு ஒருவர். கிஃப்ட் நல்லா இருக்கா மாமா? உங்களுக்கு புடிச்சிருக்கா?” என்று வெட்கத்துடன் கேட்டாள் மகாலட்சுமி. அவளுடன் தான் தனக்கு திருமணம் ஆகப்போகிறது. அவள் தான் இனி தன் வாழ்க்கை என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த மகேஷ் திருமணத்திற்கு பிறகு இதெல்லாம் நடக்க வேண்டியதுதானே என நினைத்து “நல்லா இருக்குங்க எனக்கு பிடிச்சிருக்கு.” என்றான்.

அவன் பேசியது அந்த பொம்மையை பற்றியதாக இருந்தாலும் கூட அவன் தன்னையே பிடித்திருக்கிறது. தன்னுடன் சேர்ந்து அவன் வாழ ஆசைப்படுகிறான் என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொண்ட மகாலட்சுமி திருப்தியுடன் அவனைப் பார்த்து புன்னகைத்து “தேங்க்ஸ் மாமா!” என்றாள். “போச்சு டா மறுபடியும் நீங்க தேங்க்ஸ் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கேட்ட மகேஷ் தன்னை அறியாமல் அவளை பார்த்து சிரிக்க, அவன் முதல் முறையாக தன்னை பார்த்து சிரிக்கிறான் என்பதால் இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி.

“சிரிச்சது போதும். அடுத்து நம்ம எங்க போகலாம்னு சொல்லுங்க. நீங்க தான் பீச்க்கு போகணும்னு ஆசைப்பட்டதா சொன்னிங்களே! நம்ம அங்கயே போகலாமா? இன்னைக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணி உங்களுக்கு பிடிச்சது எல்லாத்தையும் வாங்கி கொடுத்து உங்களை ஹேப்பியா வச்சுக்கணும்னு எங்க அம்மா சொல்லி அனுப்புனாங்க.” என்று மகேஷ் சொல்ல, “அப்ப அத்தை சொன்னதுனால தான் நீங்க வந்தீங்களா? அப்பயும் நீங்க எனக்காக வரலையா மாமா?” என்று உடனே மகாலட்சுமி தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அட உங்களுக்காகவும் தான்!” என்ற மகேஷ் பின் “இல்ல இல்ல நமக்காக போதுமா? வாங்க போகலாம்.” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் மெரினா பீச்சை நோக்கி பயணித்தான்.

  • மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured